Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

79. M and V - வான் தழுவிடிலோ வெண்ணிலவேவிழாக் காணுமே வானம்

விக்ரம் பார்த்தசாரதி 03 (02)

விக்ரம் பார்த்தசாரதி 03 – 02

கண்களை மூடி, தலையை இடம் வலமாக அசைத்துக் கொண்டேன். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று எனது  மூளை படபடவென திட்டமிட்டது.

அம்மாவுடன் பேசிய அடுத்த சில நிமிடங்களில், ஆராதனாவின் முன்னால் நின்றேன் நான்.

“ஆன்டி இவர் தான் விக்ரம்”  சிறிது நேரத்திற்கு முன் எனது  ஆராதனாவை எட்வர்டுடன் ஜோடி சேர்த்து வைத்த அந்த பெண்மணியிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தாள் ஆராதனா.



Advertisement

மரியாதை நிமித்தம் நான் அவருக்கு தலை அசைக்க,

“இவங்க சுபி ஆன்ட்டி. என் ஃபேவரைட் ஆன்டி” என்று சொல்ல ஆரம்பித்தவளை  இடைமறித்தேன்.

“உன்கிட்டே பேசணும் வா”

Advertisement

அவளிடம் தயக்கம். “உன்கிட்டே நான் பேசணும்” நான் மறுபடியும் அழுத்தமாக சொல்ல அவளது சுபி ஆன்ட்டியிடம்

Advertisement

 ‘”இதோ வரேன் ஆன்டி’ என்று சொல்லிக் கொண்டே “என்னாச்சு விக்ரம் இஸ் எவ்ரிதிங் ஒகே” என்று கேட்டு வைத்தாள்.

“நத்திங் இஸ் ஒகே ஆரா,” என்று பட்டென்று சொன்னேன். “எனக்கு இப்போ உன்னோட பேசணும். தனியா பேசணும். கம்… லெட்ஸ் கோ அவுட் சம்வேர்.”

“அச்சோ விக்ரம்… இப்போ எட்வர்ட் கிளம்பணும். அவன் எனக்காக யூ.எஸ்லேர்ந்து ட்ராவல் பண்ணி வந்திருக்கான். அவன் உடனே ரிடர்ன் ஆகணும்”

Advertisement

“தட்ஸ் ஒகே ஆரா” என்றேன் அவளது விழிகளுக்குள் பார்த்தபடியே. “நீ அவரை நல்லபடியா வழி அனுப்பிட்டு வா. நான் வெயிட் பண்றேன். ஆனா இன்னைக்கு நாம பேசியே ஆகணும்.”

அவள் எட்வர்டை அனுப்பி விட்டு வந்த போது, நேரம் இரவு பத்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது.

“ஸாரி விக்ரம். இட்ஸ் வெரி லேட். அப்பா அம்மா வீட்டுக்கு கிளம்பலாம்ன்னு  சொன்னாங்க…”

“இன்னைக்கு அவங்களை இங்கே பீச் ஹவுசிலேயே தங்கச் சொல்லு. நாளைக்கு வீட்டுக்கு போய்க்கலாம்,”
எனது  குரலில் ஆணை இருந்தது.

“பட் விக்ரம்….”

“டூ யூ டிரைவ்?”

“விக்ரம்?”

“நீ கார் ஓட்டுவேதானே?”

“எஸ்”

“வந்து கார் எடு வா,” என்று சொல்லிக் கொண்டே நடந்தேன் நான். சற்று நேரம் திகைத்துப் போய் நின்றாள் ஆராதனா.

அடுத்த சில நிமிடங்களில், அவள் தனது காரை நான் சொன்ன திசையில் செலுத்திக் கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் கார் ஒரு இருள் நிறைந்த பகுதியில் சென்று நின்றது.

அங்கேதான் அவளுக்கென நான் வாங்கி  வைத்திருக்கும் கடற்கரை வீடு காத்திருந்தது.

கண்ணுக்கெட்டும் தூரத்தில் கடல் அலைகள் அசைந்தாடிக் கொண்டிருந்தன. மற்றபடி, எந்தச் சலசலப்பும் இல்லை அங்கே .

“என்ன விக்ரம் இது? இங்கே எல்லாம் நிக்கறது சேஃபே இல்லை ” அவள் சொல்லிக் கொண்டிருக்க

“இது என்ன இடம் தெரியுமா?” என்றேன் அவளது முகம் படித்த படியே

“எந்த இடமா இருந்தாலும் எனக்கு இங்கே இருக்க வேண்டாம். இட்ஸ் நாட் அட் ஆல் சேஃப்”

அவளை இந்த இடத்திற்கு எப்படி அழைத்து வந்து, என்னவெல்லாம் சொல்ல வேண்டும் என்றெல்லாம் பல திட்டங்கள் எனக்குள்ளே இருந்தன. ஆனால் இந்த  நிலையில் இது என்ன இடம் என்று கூட அவளிடம் சொல்லிக் கொள்ளத் தோன்றவில்லை எனக்கு.

கார் டாஷ்போர்டில் இருந்து  அதை சட்டென எடுத்து, அவளது முகத்துக்கு நேரே நீட்டினேன். ஒரு கணம் மிரண்டு போனாள் ஆராதனா.

அவளது முகத்துக்கு நேரே நீண்டிருந்தது எனது துப்பாக்கி.

“லைசென்ஸ்டு கன். ஓகேவா? இதை விட பெரிய பாதுகாப்பு ஒண்ணும் தேவையில்லை.” அற்றாமையாக இருந்த எனது குரல் எனக்கே பெரிய வியப்பு.

“வி… விக்ரம்” அவளது முகத்தில் வந்த மிரட்சி என்னை கொஞ்சம் உலுக்கியது.

துப்பாக்கியை டாஷ் போர்டின் மீது வைத்து விட்டு, அவளைப் பார்த்து இதமாக புன்னகைத்தேன்.

“உங்ககிட்ட துப்பாக்கி இருக்கா  விக்ரம். ஐ டிட்ன்ட் நோ”

“என் கிரிமினல் லாயருக்குத் தெரியும். ஓகே வா” நான் சொல்ல தலையை இடம் வலமாக அசைத்துக் கொண்டாள்.

“என்ன பேசணும் விக்ரம்?”

“ஒண்ணுமில்லை. நாளைக்கழிச்சு வீ ஆர் கெட்டிங் மேரிட்,” நிறுத்தி நிதானமாகச் சொன்னேன் ஆராதனாவின் காதலனாகிய நான்.

“விக்ரம்… நாளைக்கழிச்சா? அது அப்பா அம்மா வேறே நாள் பார்த்து…”

“அவங்க என்ன வேணும்னாலும் பண்ணிக்கட்டும். ஆனா நாம நாளை மறுநாள் நம்ம கல்யாணத்தை ரெஜிஸ்டர் பண்றோம். அவ்ளோதான். அவங்க யார்கிட்டேயும் சொல்ல வேண்டாம்.” சொல்லியபடியே, இரண்டு கைகளையும் தேய்த்துக் கொண்டே  அவளது முகத்தைப் பார்த்தேன். “அம் ஐ க்ளியர்?”

“பட் வொய் விக்ரம் ?”

“பிகாஸ் ஐ நீட் இட் டு ஹேபன் ரைட் நவ். எனக்கு நம்ம கல்யாணம் உடனே நடக்கணும்.”
எனது  தொனியில் இரும்பின் தன்மை.

“விக்ரம்… இது என்ன பிடிவாதம். இப்போ தான் நிச்சயம் முடிஞ்சிருக்கு.  நாம ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்க கொஞ்சம் டைம் வேணும்”

“அதெல்லாம் வாழ்க்கை முழுசும் இருக்கு. நிறைய  புரிஞ்சுக்கலாம். மூணு நாளைக்கும் மூணு மாசத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை ஆராதனா” குரலை சம நிலையிலேயே வைத்துக் கொள்ள பெரு முயற்சி எடுத்துக் கொண்டிருந்தேன் நான்.

“ஆக்சுவலா எட்வர்ட் ஒரு பிரச்சனையில மாட்டி இருக்கான். ஒரு லா சூட். இங்கிருந்து அதை சால்வ் செய்ய முடியல, ஐ ஹாவ் டு ஹெல்ப் ஹிம். டூ வீக்ஸ் அட்லீஸ்ட். யூஎஸ் போகணும்” அவளது வார்த்தைகள்  படபடதத்தன.

“போயிட்டு வா. ஆனா நம்ம மேரேஜ் ரெஜிஸ்டர் பண்ணிட்டு போயிட்டு வா,” இப்போது எனது  பார்வை இருட்டை கிழித்து, அலைகளை வெறித்துப் பார்த்தது.

“ஏன் விக்ரம் இத்தனை பிடிவாதம்? அதுவும் அம்மா அப்பாக்கு தெரியாம. இதெல்லாம் வேண்டாம் விக்ரம்.”

அவளது பக்கம் சரேலென திரும்பினேன். அவளது விழிகளில் மிரட்சி பரவ,  அதைப் பார்த்து சற்றே தரை இறங்கினேன்.

“எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஆரா”
குரலை சீர்படுத்திக் கொண்டு சொன்னேன் நான்.
“ஆனா உன்னை மனசில எந்த இடத்தில வெச்சிருக்கேன்னு உனக்கு புரிய வைக்க தெரியல. அண்ட் எந்த சூழ்நிலையிலும் நான் உன்னை இழக்கவும்  விரும்பல. அஸ் சிம்பிள் அஸ் தட்.”

“வாட்? என்ன சூழ்நிலை? என்னை ஏன் இழக்கணும் ” சில நொடிகள் புரியாமல் விழித்தாள். பின்னர் “நவ் ஐ அன்டர்ஸ்டான்ட்” என்றாள் நிதானமாக.
“சந்தேகம்…  அப்படிதானே?”

“சந்தேகம் மண்ணாங்கட்டி எல்லாம் இல்லை. எனக்கு நம்ம கல்யாணம் நடக்கணும். அவ்ளோதான். அதுக்குப் பிறகு எங்கே வேணும்னாலும் போ”
அவளது முகத்தை ஆழமாகப் பார்த்து சொன்னேன் நான் .

 “ஒரு கையெழுத்து மேலே  இருக்குற நம்பிக்கை என் மேல இல்லை அப்படி தானே”

நம்பிக்கையை பற்றி என்னிடம் பேசுகிறாள். மெலிதாக சிரித்துக் கொண்டேன். அவளை நம்பி நான் போட்ட கையெழுத்துக்கள் பல நூறு.

‘அன்று உன்னை நம்பி முதல் கையெழுத்து போட்டது முதல் இன்று மோதிரத்துக்கு கரம் கொடுத்தது வரை அத்தனையும் உன் மீது இருக்கும் நம்பிக்கை தான் பெண்ணே’ சொல்லிக் கொள்ளவில்லை அவளிடம்.

“ஐ ஹேட் ஆர்கியூமென்ட்ஸ்” என்றேன் நான். “எனக்கு நம்ம கல்யாணம் நடக்கணும்”

 “நோ விக்ரம்” படீரென  சொன்னவள் காரின் கதவைத் திறந்து கொண்டு அலைகளை நோக்கிச் சென்று, கைகளைக்  கட்டிக் கடலைப் பார்த்து கொண்டு நின்று விட்டாள் ஆராதனா.

எனது மனதினுள்ளே  பல நூறு அலைகள். நிச்சியத்தில் சற்று முன் நடந்தவைகள் எல்லாம் ஒவ்வொன்றாக வந்து என்னை அழுத்தின.

‘என்ன மாப்பிள்ளை கால் சாய்ஞ்சுருச்சு?’

 அன்று இதே போல பேசிய அமைச்சர் தர்மேந்திரனை மிக எளிதாக பணிய வைத்து விட்டேன். ஆனால் இன்று பேசியவர்கள் அனைவரும் என்னவளை சேர்ந்தவர்கள்.

எனது கோபத்தையும் பழி வாங்கும் உணர்வுகளையும் அவர்கள் மீது காட்டும் எண்ணம் வரவே இல்லை எனக்கு.

அவர்கள் கொடுத்த காயங்களுக்கு என்னவளிடமே அடைக்கலம் தேடத்தான்  விழைந்தேன் நான். இன்னும் மாதக் கணக்கில் அவளுக்காக காத்திருக்கும் பொறுமையும் எனக்கில்லை.

‘என்னவளாகி விடு ஆரா. யார் என்ன சொன்னாலும் உனக்கு நான் இருக்கிறேன் என்று சொல்லிவிடு. உடனே என்னவளாகி விடு’ மனதிற்குள் மன்றாடிக் கொண்டேன் நான்.

அதே நேரத்தில் நடந்தவைகள் எல்லாம் சொல்லி அவளிடம் அனுதாபம் தேடும் எண்ணமும் இல்லை எனக்கு.

காரில் இருந்து இறங்கி, மெல்ல நடந்து அவள் பின்னால்  சென்று நின்றேன். இரவு வானை தழுவி கொண்டிருந்தது வெண்ணிலவு.

“என்னை இப்படி யாருமே எதுக்குமே ஃபோர்ஸ் பண்ணதே இல்லை. அது உங்களுக்கு நல்லாவே தெரியும்” திரும்பிப் பார்க்காமல், ஆனால் உறுதியான குரலில் சொன்னாள் ஆராதனா.

அவளது தோளின் மீது எனது கரத்தை பதித்தேன். அதற்கு அவளிடம் எந்த எதிர் வினையும் இல்லை.

“ஃபோர்ஸ் பண்ணல ஆரா. திஸ் இஸ் மை வே ஆஃப் சேயிங் ஐ லவ் யூ. என்னோட காதலை இப்படித்தான் வெளிப்படுத்த தெரியும் எனக்கு.”

“லவ்” மெலிதாக சிரித்தாள். “என்னை பேச வைக்காதீங்க விக்ரம்” அவளது குரலில் இப்போது காரம் இருக்க,

“இல்ல பேசேன். அதையும் கேட்போம்” நான் சொல்லி விட, சட்டென திரும்பி எனது  முகம் பார்த்து நின்றாள்.

“இது காதல் இல்லை விக்ரம். திஸ் இஸ் யுவர் ஈகோ. கல்யாணம் பண்ணிட்டு நான் யூ எஸ் போனா மட்டும் என்ன மாறிடப் போகுது? எனக்கு அப்போ கூட வேறே யாரையும் பிடிச்சா நீங்க என்ன செய்வீங்க? உங்க அனுபவத்தில்  யூ நோ பெட்டர்”

இந்த உலகத்தில் பல கத்தி முனைகளை கடந்து வந்தவன் நான். ஆனால் ஒரு நொடியில் பல நூறு கத்திகளை என்னை நோக்கி வீசுபவள் என்னவள்  என்றாகி இருக்க,  தடுமாறிப் போய் நின்றேன் நான்.

 என்னை விட்டுவிட்டு அரவிந்தனுடன் சென்று விட்ட  வைஷாலியை பற்றித்தான் அவள் தான் குறிப்பிடுகிறாள் என்பது எனக்குப் புரியாமல் இல்லை. அதற்கு மேல் அவளிடம் எதையும் பேசக் கூடத் தோன்றவில்லை எனக்கு.

இது போன்ற பல வார்த்தைகள் என்னை கடந்து போயிருக்கின்றன. அவர்களை பற்றி எல்லாம் நான் கவலைக் கொண்டது இல்லை. ஆனால் இன்று இந்த வார்த்தைகளை பேசியது ஆராதனாவாயிற்றே.

எனது கை பற்றியிருந்த ஊன்றுகோல் கூட நடுங்கும் பிரமை.

 “இது காதல் இல்லை விக்ரம். திஸ் இஸ் ஃபோர்ஸ். எஸ்  நீங்க ஃபோர்ஸ்தான் பண்றீங்க,”
உயர்ந்தது அவளது குரல். “கன் பாயின்ட்ல மிரட்டறீங்க என்னை.  நோ விக்ரம் கண்டிப்பா நோ.”

“விக்ரம் கிட்டே ‘நோ’ சொல்லாதே ஆராதனா” என்கிட்டே ஒரு தடவை நோ சொன்னா, அப்புறம் எப்பவுமே நோ தான்” என்னை மீட்டுத் தேற்றிக் கொண்டு சொல்லியும் விட்டேன்.

“டன் விக்ரம்,” என்று முடித்தாள் அவள்.
“எப்பவுமே நோவாவே இருக்கட்டும்.”

கடகடவென காருக்குள் சென்று அமர்ந்து, காரை கிளப்பி பின்னால்  எடுத்து நான் ஏறி அமரக் காத்திருந்தாள். காருக்கு அருகில் சென்று ஜன்னலை தட்டினேன். திறந்தாள்.

“விக்ரமுக்கு தனியாவே நடக்கத் தெரியும். யூ மே கோ”

கார் அடுத்த நொடி கிளம்பிப் பறந்தது. எனது மனதிற்கு ஈடாக வானத்தில் காய்ந்து கொண்டிருந்தது வெண்ணிலவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!