தென்றலாய் என் காதல் – 28
தென்றல் – 28
மேடையில் ஜோடியாக ஆதவ் மற்றும் சிந்துவை காண விக்ரமின் முகம் கருத்தது.
Advertisement
“இந்த ஆதவ்க்கு என்ன ஆச்சு?”
“இவ கூட ஏன் ச்ச…”என்று முகத்தை திருப்பிக்கொள்ள பாடல் ஒலித்தது.
மலரே ஒரு வார்த்தைப் பேசு இப்படிக்கு பூங்காற்று…. பாடலுக்கு ஏற்றார் போல் நளினமாக இருவரும் நடனமாடினார்.
Advertisement
ஆனால் என்னவோ தெரியவில்லை விக்ரமின் மனம் ஒரு வித வலியை உணர்ந்தது.
Advertisement
“ஏய்…இந்த பொண்ணு யாரு? ரொம்ப அழகா இருக்காங்க. நம்ம சார் ஆதவுக்கு ஏற்ற ஜோடி”.
“ஆமாம், நான் கூட கேக்கணும் நினச்சேன். வந்ததில் இருந்து இங்க இருக்குறவங்க எல்லார் பார்வையும் அந்த பொண்ணு மேல தான் இருக்கு.”
“ஒரு வேலை ஆதவ் சார் இந்த பொண்ண லவ் பண்றாரோ என்னவோ” என்று கூட்டத்தில் பேசிக்கொள்ள மேலும் விக்ரமின் முகம் வாடியது.
Advertisement
விக்ரமிற்கு சிந்துவை ஆதவுடன் சேர்த்து பார்க்க ஏதோ மனம் பிரட்டியது.
நடனம் ஆடி முடிந்ததும் இறுதியில் அவள் கையை பிடித்த ஆதவ்…
“ஐ லவ் யூ சிந்து”என்றான்.
கீழே இருந்த அனைவரும் கையைத் தட்டி “ஆதவ்…ஆதவ்…எஸ்…சொல்லுங்க.. எஸ் சொல்லுங்க”என்று கூச்சலிட, சிந்துவிற்கு ஒருவாராகப் போனது.
அவள் கண்கள் கலங்கின. தலையை தரை நோக்கி கவிழ்ந்தாள்.
அனைவரும் அவளின் பதிலுக்காக காத்திருந்தனர்.
ஆனால் விக்ரமின் மனம் ஏனோ பரிதவித்தது.
“ஏன் எனக்கு இப்படி எல்லாம் தோணுது. என் ஹார்ட் பீட் ஏன் இப்படி வேகமா துடிக்குது. என்ன ஆச்சு எனக்கு. அவள யார் லவ் பண்ணா எனக்கு என்ன கல்யாணம் பண்ணா எனக்கு என்ன?
அவ யார் எனக்கு” என்று அவன் மனம் அவனையே கேள்விக் கேட்டுக்கொண்டு இருந்தது.
கூடி இருந்த ஆபீஸ் ஸ்டாப் அனைவரும் ஆதவின் காதல் நிறைவேற வேண்டும் என்று ஆராவாராம் செய்து கொண்டு இருக்க, அதை கேட்டுக்கொண்டு இருக்க முடியாத விக்ரம் “ஷடாப்…”என்று சொல்லி முடிப்பதற்குள்…
“என்ன ஆதவ் நீங்க! உங்களை நான் எவ்ளோ நம்பினேன்” என்ற சிந்துவின் குரல் கூட்டதோடு கலந்து விக்ரமின் காதில் ஒலித்தது.
அந்த குரல்…. தன் மனதை இத்தனை நாள் தென்றலாய் வருடிக்கொண்டு இருந்தவளின் அதே குரல்.
மேடையில் இருந்து ஒலித்தது.
அவன் குழம்பினான்.
அருகில் திரும்பி பார்க்க ரஞ்சிதா இல்லை.
தன் காதுகளையே அவனால் நம்ப முடியவில்லை.
இப்போது ஒலித்தது ரஞ்சியின் குரல் தானே…
ஆனால் எப்படி என்று ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியோடு வாயடைத்து மேடையை ஏறிட்டான் விக்ரம்.
சிந்து அழுதப்படி
“என்ன ஆதவ்… நீங்க இப்படி என்னை மேடை ஏற்றி அசிங்கப்படுத்திட்டீங்களே?”
“நான்…நான்…எப்படி ஆதவ்…”
அவள் குரல் நடுங்கியது.
நான் எப்படி ஆதவ் உங்கள? என்று இடறி அழுதாள்.
அவள் அழுவதை கண்டதும் கூட்டம் தன் ஆராவாரத்தை நிறுத்திக்கொண்டது.
அவ்விடமே அமைதி காத்தது.
அனைவரும் கவனமாய் சிந்துவின் வார்த்தைகளை கவனித்தனர்.
“சிந்து நான் விளையாட்டுக்கு சொல்லல சிந்து.
உங்கள எனக்கு உண்மையாகவே பிடித்து இருக்கு.
நீங்க என் லைஃப்ல இருந்தா நான் சந்தோசமா இருப்பேன் சிந்து.
தயவு செஞ்சி என் காதலை நிராகரிச்சுராதீங்க” என்று கெஞ்சும் தோரணையில் கூறினான் ஆதவ்.
அவளுக்கு மேலும் அழுகை தான் வந்தது.
எரிச்சலும், கோபமும் அதனுடன் சேர்ந்து கொள்ள குரலில் நடுக்கத்தோடு, “ஆதவ் உங்களுக்கு என்ன பத்தி என்ன தெரியும்.
என் வாழ்க்கையில் என்ன நடந்துச்சு, நான் யாருன்னு உங்களுக்கு முழுசா தெரியுமா?”
“அப்படி தெரிஞ்சா நீங்க என்ன ஏத்துப்பீங்களா?
சொல்லுங்க…சொல்லுங்க” ஆதவ் என்று அவன் சட்டை காலரை பிடித்து உளுக்கி கேள்விகளை கேட்க,
“சிந்து நீங்க யாரு? உங்க பாஸ்ட் என்ன எதுவும் எனக்கு தெரிய வேண்டாம்.
நீங்க எப்படி இருந்தாலும் நான் உங்களை அப்டியே ஏத்துப்பேன் சிந்து” என்றான் ஆதவ்.
இன்னும் விக்ரம் அதிர்ச்சியில் இருந்து வெளியே வரவில்லை.
“சார்…நீங்க சொல்றது வேணும்னா வார்த்தைக்கு ஒத்து வரும்.
ஆனா நடைமுறைக்கு சாத்தியம் இல்லை ஆதவ்” என்றாள்.
அதே சமயம் அந்த இடத்திருக்கு ரஞ்சிதா வந்தாள்.
“என்ன நடக்குது இங்க. ஆதவ் சிந்து ரெண்டு பேரும் ஏன் மேடையில் நிக்குறாங்க.
சிந்து ஏன் அழறா ஒன்னுமே புரியலையே.”
“ஐயோ…இப்போ அவ பேசிட்டு இருக்கா அப்போ விக்ரம் சார் நிலைமை” என்று கூட்டத்தில் அவனைத் தேடினாள் ரஞ்சிதா.
மேடையில் கை எடுத்துக்கும்பிட்டாள் சிந்து. கண்ணீர் மழ்க “ப்ளீஸ்…ஆதவ் என்ன…என்ன.. விட்டுருங்க.இந்த ஜென்மத்துல எனக்கு காதல் கல்யாணம் எதுவும் வேண்டாம். எனக்கு இது மாதிரியான எந்த ஆசையும் இல்லை. என்ன விட்டுருங்க…ப்ளீஸ்…”என்று கதறி அழுதாள் சிந்து.
சிந்துவை ஆறுதலாய் தொட போன ஆதவின் கையை தட்டி விட்டு, “இனி என் கண்ணு முன்னாலேயே வராதீங்க” என்று மேடையை விட்டு இறங்கி ஓடினாள்.
விக்ரம் இடிந்து போய் நின்று இருந்தான்.கண்களை ஒரு முறை இறுக்கி மூடினான்.
அமைதியாய் சிந்துவின் முதல் சந்திப்பை நினைவு படுத்திக்கொண்டான்.
அவள் குரல்…. ஆழ்ந்த அமைதிக்கு பின் ஒலித்தது.
அவன் கண் முன்னே காட்சியானது.
பொண்ணுங்கன்னா…”உங்களுக்கு எல்லாம் அவ்ளோ இளக்காரமா போச்சா?
உங்களை யாரையும் நான் சும்மா விட மாட்டேன்” என்ற வார்த்தைகள் யாவும் காற்றில் கலந்து அவன் காதுகளில் மீண்டும் ஒலிப்பதாய் உணர்ந்தான் விக்ரம்.
“அப்போ…. இவ…இவ…தான் அந்த குரலுக்கு சொந்தக்காரியா?
அதனால தான் எப்போதும் ஒரு வார்த்தைக்கூட பேசாம என் முன்னே பொட்டி பாம்பை பேலே அடங்கி இருந்தாளோ?
எத்தனை முறை நான் அவளை திட்டி பேசியப்போதும் ஒரு முறைக்கூட அவள் ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாகவே நின்று இருந்தாளா?என்னால இதை நம்பவே முடியவில்லை.”
“அப்போ ரஞ்சியை ஏமாற்றி இத்தனை நாள் என்னோடு பேசியது இவள் தானா?
சீ என்ன மாதிரியான பொண்ணு இவ, தன் சொந்த தோழிக்கே துரோகம் செஞ்சி இருக்கா.
சீட்டர்” என்று அவளை மீண்டும் தவறாகவே புரிந்துக்கொண்டான்.
ரஞ்சிதா விக்ரமை கண்டதும் அங்கிருந்து நகர்ந்தாள்.அவள் செல்வதை விக்ரம் பார்த்துவிட்டான்
“ரஞ்சி நில்லுங்க, ப்ளீஸ்…”என்று அவள் பின்னே ஓடினான் விக்ரம்.
ஆதவிற்கு மனம் வெகுவாக கவலைப்பட்டது.
“அவசரப்பட்டு விட்டோமோ. இப்படி அவங்க மனசுல என்ன இருக்குனு தெரியாம நாம இப்படி பப்ளிக்கா என் காதலை சொல்லி இருக்க கூடாது.”
“எவ்ளோ பெரிய தப்பு பண்ணிட்டேன்.
இனி சிந்து முகத்துல நான் எப்படி விழிப்பேன்.
அவங்க என்ன பத்தி என்ன நினச்சு இருப்பாங்க.
ஏற்கனவே ஆண்களால ரொம்ப காயப்பட்டு இருக்கேனு சொன்னாங்க, அதனால தானே என்னையும் அவங்க ஆரம்பத்துல அவொய்ட் பண்ணாங்க. கடைசில அவங்க சொன்ன மாதிரியே நானும் சீப்பா அவங்கள ட்ரீட் பண்ணிட்டேன்.
ஓ மை காட் சிந்து என்னை மன்னிப்பாங்களா?
இல்லை இதுக்காக என் கூட பேசாம என்னை தண்டிப்பாங்களா?
அவங்க மனசுல அப்படி என்ன வலி இருக்கு.
ஏன் யார்கிட்டையும் அதை சேர் பண்ணிக்க மாற்றாங்க.
நிச்சயம் அது என்னனு ரஞ்சிக்கு தெரியும்.
எப்படியாவது அவங்க வாழ்க்கையில் என்ன நடந்துச்சுனு நான் தெரிஞ்சுக்கணும்.
அப்போ தான் அவங்க மன நிலையை மாற்றி முழுசா அவங்கள இந்த சூழலை விட்டு வெளியே கொண்டு வர முடியும்.
சிந்துவிற்கு இப்போ வேண்டியது, காதல் இல்லை.
நல்ல அன்பும் ஆறுதலும் தான்.
அதை தான் இப்போ நான் அவங்களுக்கு கொடுக்கணும்.
கவலைப்படாதீங்க சிந்து நான் எப்போதும் உங்களுக்கு உறுதுணையாய் இருப்பேன்.
உங்க லைஃப்ல என்ன நடந்து இருந்தாலும் பரவா இல்லை, அதைப் பற்றி எனக்கு கவலையும் இல்லை. நீங்க மட்டும் தான் என் உலகம்.
உங்களை என்னால யாருக்காகவும் விட்டு கொடுக்க முடியாது. உங்க கடந்த காலத்துக்காக விட்டுட்டு போகவும் முடியாது.
உங்க குடும்பத்துக்காக நீங்க வாழுங்க உங்களுக்காக நான் வாழறேன்” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
“ரஞ்சி நில்லுங்க” என்று ரஞ்சியை துரத்திச் சென்று பிடித்தான் விக்ரம்.
“என்ன நடக்குது இங்க.
எனக்கு ஒன்னுமே புரியல.
ரஞ்சிதா இன்னும் அவளை நம்புறீங்க.”
“அவ என் கிட்ட உங்களை மாதிரி நடிச்சு இத்தனை நாள் ஏமாத்தி இருக்கா.”
“உங்க பேருல…. நான் தினம் தினம் நீங்க தான் பேசறீங்கனு நினச்சு…ச்ச…எவ்ளோ கேவலமான பொண்ணு” என்றான் விக்ரம்.
“போதும் விக்ரம் சும்மா வாய்க்கு வந்தப்படி பேசாதீங்க.
இங்க ஏமாத்துனது நான். அவ எந்த பாவமும் அறியாதவ.
சும்மா எப்போ பார்த்தாலும் உண்மை என்னனு தெரியாம தொட்டதுக்கு எல்லாம் அவளையே குறை சொல்லிட்டு இருக்கீங்க?”
“உங்களுக்கு என்ன உண்மைனு தெரியுமா?
தப்பு பண்ணது முழுக்க முழுக்க எல்லாமே நான் தான்” என்று கத்தினாள்.
அவனுக்கு ஒரே குழப்பம்.
என்ன சொல்றிங்க ரஞ்சி.
உடைந்தக் குரலில் “ஆமாம் சார்…அவ ஒரு பாவமும் அறியாதவ. என்ன நடந்துச்சுனா நான் தான் வேலைக்காக என் ரெசுமை மாத்திக்கொடுத்தேன்.”
“எப்படியாவது சிந்துக்கு இந்த வேலை கிடைக்கணும் நினச்சேன். அவ குடும்ப சூழ்நிலை என்னனு எனக்கு தெரியும். அதனால தான் நான் எதைப் பத்தியும் யோசிக்காம நானே வந்து இண்டர்வியூ அட்டென்ட் பண்ணேன். ஆனா இப்படி எல்லாம் நடக்கும் எனக்கு தெரியாது.
அவ அப்பவே உண்மையை சொல்லிவிடலாம்னு தான் சொன்னா நான் தான் அவ குடும்ப சூழ்நிலையை காரணம் காட்டி இப்போ சொல்ல வேண்டாம் சிந்து. சந்தர்ப்பம் அமையும் போது சொல்லிக்கலாம் சொன்னேன்.
இதுல அவ தப்பு என்ன சார் இருக்கு.
உங்களுக்கு சிந்துவை ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கல. அது ஏன்னு எனக்கும் தெரியல.
அவளை மாதிரி நல்ல பொண்ணு எல்லாம் வெரி ரேர் சார்.”
“ஆனா நீங்க என்னடானா அவளை எப்போது பார்த்தாலும் தப்பாவே புரிஞ்சுக்கிட்டு அவளை ஹெர்ட் பண்ணி அழ வச்சு பாக்குறீங்க.
இதுல என்ன ஹைலைட்னா..
அவங்க அம்மா கிட்டையே அவளை பத்தி தப்பா சொல்றிங்க.
அப்போ சிந்துவோட மன நிலைமை எப்படி இருந்து இருக்கும்”என்றாள் ரஞ்சி.
அதிர்ச்சியாய் அப்போ “துளசி…”
“ஆமாம்…அவ என் தங்கச்சி இல்லை.
சிந்துவோட தங்கை தான் என்றாள்.
அவன் மேலும் நொந்து போனான்.
ச்ச…அவங்க குடும்பத்துல போய்…அவளை பற்றியே…”என்று மனம் வருந்தினான் விக்ரம்.
“சார் ஒன்னு மட்டும் புரிஞ்சுக்கோ கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்.
உங்க மனசு என்ன சொல்லுதுனு கேளுங்க சார். அதை விட்டுட்டு உங்களுக்கு பிடிக்கலைனு ஒரே காரணத்துக்காக ஒரு அப்பாவி பொண்ண இப்படி தப்பா பேசி, காயப்படுத்தி பாக்காதீங்க.
எவ்ளோ நாள் உங்களை ஏமாத்துறோம்னு மனசு வலிக்க அழுது இருக்கா தெரியுமா.
அவ ரொம்ப நல்லவ சார்.
முடிஞ்சா அவ கிட்ட போய் ஒரு சாரி கேளுங்க.
அதை கூட அவ எதிர்பார்க்க மாட்டா. ஏன்னா அவ ரொம்ப வித்தியாசமானவ” என்றாள் ரஞ்சிதா.
“இனியா…..!!!!” சத்தத்தில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தென்றல் மீண்டும் வீசும்…..

