Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

68. சரண்யா கீதா - உளமாற உனதாகிறேன்

உளமாற உனதாகிறேன் – 10(1)

உளமாற உனதாகிறேன் – 10(1)

 

“அங்கேயே நில்லு… இன்னும் ஒரு அடி எடுத்து வைச்ச… என்னை உசுரோட பார்க்க முடியாது… எதுக்கு வந்த… நான் செத்துட்டேனா… இல்ல உயிரோடு இருக்கேனான்னு தான பார்க்க வந்த… பார்த்துட்ட இல்ல… அப்படியே வாசலோடு கிளம்பிடு… என் கண் முன்ன நிக்காத” என்ற தந்தையின் வெறுப்பில் அதிர்ந்து நின்றாள் வெண்பா..

 



Advertisement

நிச்சயம் அப்பா தன்னை ஏற்று கொள்ள மாட்டார்… காச் மூச்சென்று கத்துவார்.. ஆனால் தான் சொன்னால் புரிந்து கொள்வார் என்று நினைத்து கொண்டு இருந்ததில் பெரும் அடியே விழுந்தது போல் இருந்தது நமச்சிவாயத்தின் பேச்சு… தாயோ அதற்கு மேலாக எதுவும் பேசாது அமைதியாய் நிற்க… தவித்து தான் போனாள்…

 

இதில் வாசுவின் இருப்பு… நிச்சயம் அதனை எதிர்பார்க்கவில்லை… என்னவோ உடைந்தது போன்று தோன்றியது… அவனை புகைப்படத்தில் பார்த்த போதே அத்தனை பிடித்தது… அதனால் தான் வேலையை கூட பெரிதாக எடுக்கவில்லை…

Advertisement

 

Advertisement

ஆனால் திருமணத்திற்கு முன் அவனின் உதாசீனம்… தன் மன குழப்பம் எல்லாம் சேர்ந்து அவனை தன்னிடம் இருந்து பிரித்து விட்டதோ என்று தோன்றிட… சட்டென்று மனதை அடக்கியவள் தன் பார்வையை பெற்றவர்கள் பக்கம் திருப்பினாள்‌.

 

“அம்மா… அப்பா…  ஒரு முறை அவ என்ன சொல்றான்னு கேளேன்… அவ பக்கம் கேட்காம கோவப்படுறதல நியாயமே இல்ல…” என்ற பிரபாவின் வார்த்தையில் சீறி கொண்டு எழுந்தார் ஞானசெல்வி.

Advertisement

 

“ஏய்  என்னடி கேட்கனுங்கிற.‌.. உனக்கு என்ன வேலையோ அதை மட்டும் பாரு…. தேவையில்லாம பேசாத… ஏய் வெண்பா இன்னும் எதுக்குடி இங்க நின்னுட்டு இருக்க… போடி இங்கேயிருந்து… உன்னால என் மவன் மரியாதையே போயிருக்கும்… இப்போ என் தம்பி உசுரை பறிக்க வந்திருக்கிறயா… ஊர் சுத்துற கழுதைக்கு கால் கட்டு போட முடியுமா… அதுதான் திமிரெடுத்து ஓடிடுச்சு… ஆமா தனியா ஓடுனியா இல்ல எவன் கூடாவாச்சும் சேர்ந்து ஓடுனியா…” என்ற ஞானசெல்வியை முறைத்து பார்த்தவள்…

 

“வேற யாரும் இல்ல அத்தை… உன் சின்ன மவனோட தான் ஓடுனேன்… இப்போ தெரிஞ்சிடுச்சு இல்ல… என்ன செய்ய போற… எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சு வைக்க போறியா” என்றவளின் பேச்சில் அதிர்ந்து போனார் ஞானசெல்வி. அர்ஜூனோ திடுக்கென்று அதிர்ந்து விழித்தான் அவள் வார்த்தைகளில்…

 

“அடிப்பாவி… எதுக்குடி என் புள்ள மேல பழியை போடுற… உன்னை விட ஒரு மாசம் சின்னவன்டி அவன்… அவனை போய் அப்படி பேசுற… அய்யோ இந்த அநியாயத்தை போய் எங்க சொல்றது… டேய் சிவம்

பாருடா உன் மவ பேசுறதை…”

 

“இங்கிருந்து போறியா இல்ல… உன் கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளட்டுமா” என்று நமச்சிவாயத்தின் வார்த்தைகள் இறுக்கமாக வந்து விழ… அதற்கு மேலும் சும்மா இருக்க இயலவில்லை…

 

“ப்ச்ச் சும்மா போ போன்னு சொல்லாதீங்க… நீங்களே இருன்னு சொன்னாலும் நான் இருக்க மாட்டேன்…‌ இன்னும் ரெண்டு மாசத்துல ஜெர்மன் போக போறேன் வேலை விஷயமா… அதை உங்கக்கிட்ட சொல்லிட்டு என் பாஸ்போர்ட் எடுத்திட்டு போகலாம்னு தான் வந்தேன்… வேற எதுக்காகவும் இல்ல” என்று அழுத்தமாக சொன்னவள்…

 

“உங்களால தான்ப்பா நான் கல்யாண நடக்கற அன்னைக்கு ஓடிப் போனேன்… எப்போ பார்த்தாலும் அக்கா மவனையே தூக்கி வைச்சு பேசுறீங்க இல்ல… ஒரு நாள் இல்ல ஒரு நாள் உங்க மண்டையில உரைக்கிற மாதிரி சொல்ல போறாரு… அன்னைக்கு புரியும் உங்களுக்கு எங்க மனசு” என்றபடி விறுவிறுவென்று வீட்டிற்குள் சென்றவள் அதே வேகத்திலே தன் பாஸ்போர்ட்டை எடுத்து கொண்டு வெளியேற முயன்றவள் ஒரு நிமிடம் இனியாளின் முகத்தை உற்று பார்த்துவிட்டு…

 

“நல்லா இருக்க தானே… உனக்கென்ன நீ நல்லா தான் இருப்ப” என்றபடி வெளியேறிவிட… அவள் கூறிய சொற்களின் அர்த்தம் புரியாது செல்லும் அவளின் முதுகையே அமைதியாக பார்த்திருந்தாள் இனியாள்…

 

“அதுதான் அவ போயாச்சே வாங்க போய் சாப்பிடுவோம்… வீட்டு மாப்பிள்ளைக்கு நேரங்கழிச்சு சாப்பாடு போடுறதா” என்று வாசகி அனைவரையும் உள்ளே அழைத்து சென்றாலும் நடுமகளை நினைத்து மனம் அரித்து கொண்டே இருந்தது…

 

விருந்து பேரமைதியோடு முடிந்தது… வாசுவும் எதுவும் பேச்சை வளர்க்கவில்லை… என்னவோ அவள் யோசித்து கொண்டு இருக்கிறாள்… யோசிக்கிட்டும் என்று விட்டுவிட்டான்… அப்படியே மதிய உணவும் முடித்த கையோடு இல்லம் திரும்பி விட்டனர் வாசு தம்பதிகள்…

 

“என்னடா விருந்து எல்லாம் முடிஞ்சதா… எப்படி போச்சு மறு வீட்டு விருந்து… டேய்… டேய்… என்னடா பேச பேச கண்டுக்காம போற… இவனை” என்றபடி செல்லும் அவனை  முறைத்து பார்த்தபடி இருந்தார் மங்களம்…

 

மேலே செல்லலாம இல்லை இங்கேயே இருப்பதா என்று தெரியாது இனியாள் அமைதியாய் நிற்க…

 

“நீ ஏன் இனியா இங்கேயே நிற்குற… மேல போ… மேல போ… என்ன கேட்டாலும் இந்த பையன் கண்டுக்கிறது இல்ல… அப்படியே அப்பன் புத்தி… அவரு கட்சி விஷயமா வெளியே போய் நாலு நாள் ஆகுது… இன்னும் ஆளை காணல… என்னத்த சொல்ல எல்லாம் நான் வாங்கி வந்த வரம் அப்படி…” என்று புலம்பியபடியே அவரும் அறைக்கு சென்றுவிட… மெல்ல மாடியெறியவள் பால்கனியில் இருக்கும் ஊஞ்சலில் அமைதியாக அமர்ந்து கொண்டாள்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!