உளமாற உனதாகிறேன் – 10(2)
உளமாற உனதாகிறேன் – 10(2)
உடையை மாற்றி கொண்டு வாசு அவள் அருகில் நிற்பதை கூட அவள் உணரவில்லை… தீவிரமான அவள் முகபாவனையை பார்த்தவன்… அவளை நெருங்கி நின்றான்… ஆனால் அதனை கூட உணரமுடியாதவளாக தன் சிந்தையில் உழன்று கொண்டு இருந்தாள் இனியாள்.
Advertisement
“என்ன இனி இந்த குட்டி மூளையை அப்படி என்ன குழப்பிட்டு இருக்கு… உங்க அக்காவை பத்தி தானே” என்றதும் நிமிர்ந்து பார்த்தவள்… அவன் கண்களை நோக்கியபடி தனக்குள் இருக்கும் கேள்விக்களை அவனிடம் ஒப்படைத்தாள்.
“ஆமா… நான் தப்பு பண்ணிட்டேனா கீர்த்தி… யாரு கட்டாயப்படுத்தி இருந்தாலும் நான் உங்களை கட்டி இருக்க கூடாது… இன்னைக்கு வெண்பா என்னை பார்த்த பார்வை என்னமோ அவ பொருளை அபகரிச்ச மாதிரி பீல் பண்றேன்…” என்றதும் பட்டென்று அவளை விட்டவன்…
Advertisement
Advertisement
“மூளைன்னு எதாச்சும் உனக்கு இருக்கா இனியா… நீ சொல்லியா உங்க அக்கா வீட்டை விட்டு ஓடி போன… அவங்களை நியாயபப்படுத்திக்க அடுத்தவங்களை குறை சொல்றவங்க தான் இந்த உலகத்துல நிறைய இருக்காங்க… இதுல உங்கக்காவும் ஒருத்தர்…”
“இவ்ளோ யோசிச்சயே… இதை யோசிச்சயா… வெண்பா வீட்டை விட்டு போக நீயும் ஒரு காரணம்னு உங்க வீட்டுல நம்புறாங்க… அது வெண்பாவுக்கும் தெரியாம இருக்க வாய்ப்பு இல்ல… அப்படி இருந்தும் நான் ஓடிப் போனதுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு ஒரு வார்த்தை உங்க அக்கா வாயில இருந்து வந்துச்சா…”
Advertisement
“வராது… ஏன் வரும்… அப்படி சொல்லிட்டா… எல்லா கோவமும் அவ மேல திரும்பும்… அதுவும் இல்லாம உன் மேல ஒரு சாப்ட் கார்னர் உங்க வீட்டுல இருக்கிற எல்லாருக்கும் ஏற்படும்… ஆனா அதை வெண்பா விரும்பல…”
“சும்மா எல்லாத்துக்கும் நான் தான் காரணமும் நடந்ததை நினைச்சு கவலைப்படாம… அடுத்து நம்ம லைப்ல என்னன்னு யோசி… அப்படியே உன் மண்டையில நல்லா ஏத்திக்க… உங்க அக்கா அன்னைக்கு ஓடிப் போகலைன்னாலும் நான் அவளை கல்யாணம் பண்ணி இருக்க மாட்டேன்னு… இஸ் தட் கிளியர்…” என்றவன் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டான்…
‘இப்படி பேசுறவ எப்படி என்னை அவ்ளோ காதலிச்சா…’ என்ற குழப்பத்தோடு அவன் நினைவுகள் பின்னோக்கி செல்ல… அவளின் நினைவுகளும் கடந்த காலத்திற்கு தான் பயணம் மேற்கொண்டது…
•••••••••
கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர் அனைவரும். அதில் தானும் ஒருத்தியாய் தன் தோழிகளோடு மெதுவான நடையிட்டு கதை பேசியபடி நடந்து வந்துக் கொண்டு இருந்தாள் இனியாள்.
அப்போது தீடிரென அனைவரின் மொபைலுக்கும் ஏதோ மெசேஜ் வந்த சத்தம் கேட்டிட… தோழி ஒருத்தி தன் செல்போனை எடுத்து பார்த்தவள்… அப்படியே வாயை பிளந்து நின்று விட்டாள்…
“ஏய் இங்க பாருங்கடி இவளை… என்ன வேலை செஞ்சு வைச்சு இருக்கா… இனியா இந்த விடியோ பார்த்தியாடி… இப்போ நீ தான்டி இந்த காலேஜ்ல ஹாட் டாபிக்கே…” என்றபடி அவள் தோழி ஒரு விடியோவினை காட்டினாள். அதில் இவள் புல்லாங்குழல் இசைப்பதை கண் இமைக்காது ரசித்துக் கொண்டு இருந்த வாசுவின் பிம்பம் பதிவு ஆகியிருந்தது…
முதலில் காக்கி உடையில் கம்பீரமாக அவன் நடந்து வருவதும்… இவளின் குழல் இசையில் அவன் நடை நின்றது… கண்கள் சுருங்க… உதட்டோர சிறு புன்னகையோடு இவளையே இமைக்காது பார்த்து கொண்டு இருந்தான்…
அதை பார்ப்பவர் யாராயினும் அவனின் விழிகளில் வழியும் ரசனையை சொல்ல இயலும்… அந்தளவில் அப்பட்டமாக அவனின் ரசிப்பு தெரிந்தது… அதை வீடியோவில் பார்த்திருந்த இனியாளின் முகம் சூடாகியது…
“ஏய் இங்க பாருங்கடி… இவ வெட்கப்படுற… ம்ம்… அப்போ போலீஷூக்கும் இவளுக்கும் என்னவோ இருக்குடி…” என்று தோழிகள் அவர்களுக்குள்ளே கிசுகிசுத்து கொள்ள…
“அடச்சே நிறுத்தங்கடி… அப்படியெல்லாம் எதுவும் இல்லை” என்றவள் அங்கிருந்து அப்படியே ஓடி வந்துவிட… ஆனால் மனம் மட்டும் குறுகுறுத்து கொண்டேயிருந்தது….
நாளாக நாளாக… அந்த குறுகுறுப்பு அவனை பார்க்க வேண்டும் என்ற உந்துதலை கிளப்ப… நடப்பது நடக்கட்டும் என்று தோழியை பார்க்க போகிறேன் என்ற சாக்கில் அவனை பார்க்க அதே அப்பார்ட்மெண்ட் பூங்காவில் காத்திருந்தாள்… ஆனால் நேரம் சென்றதே தவிர அவனை காணவில்லை…
சரி இங்கிருந்து சென்றுவிடலாம் என்று அவள் யோசித்து கொண்டு இருக்க… அவன் வந்துவிட்டான்… அதுவும் அதே காக்கி உடையோடு… என்னவோ அந்த உடையில் அவனை காணும் போதே கல்லூரியில் அவன் பார்த்த பார்வை தோன்றிட… வேக நடையிட்டு அவனை நெருங்கினாள்…
“ஹலோ சார்… என்னை நியபகம் இருக்கா… நீங்க கூட எங்க காலேஜ்க்கு வந்து இருந்திங்களே… நான் கூட புலுட் வாசிச்சேனே… நியபகம் வந்திடுச்சா…” என்று என்னவோ உளறியவள்… அந்த வீடியோவினை அவனிடம் காட்ட… அதை உறுத்து பார்த்திருந்தவன் கண்கள் ரசிப்பில் சுருங்கியதோ என்பதை போன்று தோன்றியது…
அவளை நேருக்கு நேராக பார்த்தவன்… “கெட் அவுட்… ராஸ்கல்” என்றுவிட்டு அங்கிருந்து சென்றுவிட… இவளின் முகமோ அவனின் வார்த்தைகளில் சுருங்கியது…
‘சரி… சரி… விடு இனி… பார்த்துப்போம்… எங்க போயிட போறாரு…’ என்ற ரீதியாக அடுத்த நொடி தன்னை தானே சமாதானம் செய்து கொண்டவள் சாதரணமாக தன் வீடு நோக்கி பயணமாக செல்லும் அவளையே யோசனையாய் பார்த்திருந்தது இரண்டு விழிகள்…
அதனை அறியாதவளாய் வாசுவை தன் கிரஷ் லிஸ்டில் சேர்த்தவள்… அவனை அடுத்து எப்படி கவரலாம் என்ற தீவிர யோசனையில் மூழ்கி போனாள்…
வாசுவும் அவளை பற்றிய யோசனையில் தான் இருந்தான்… தன்னை கவர அவள் செய்த குரங்கு சேட்டைகளை நினைத்து சிரித்தவன்… அதனை தானே கெடுத்துக் கொண்டோமே என்ற ரீதியில் வாடியும் போனான்… ஆனால் அவனின் ஈகோ மட்டும் தன்நிலை இறங்கி தான் செய்ததிற்கு அவளிடம் விளக்கம் கொடுக்க முனையவில்லை…
தன் சிந்தையில் உழன்று கொண்டிருந்தவனை போன் கால் கலைத்திட… அதை எடுத்து பேசியவன் முகம் செந்தனலாய் சிவந்து போயிருந்தது…
‘அப்பா…’ என்று பல்லை கடித்தவன் அவர் இருக்கும் இடம் நோக்கி தன் புல்லட்டை பறக்க விட்டான்…
தொடரும்…

Yenn avalo kovam
Vasu appavoda aalu avanai vevu pakkarangala 🤔🤔🤔🤔