Skip to content
Post Views: 968
ஆராதனா 5
மன்டே மார்னிங் மீட்டிங் எப்போதும் போல போய்க் கொண்டிருந்தது. விடுமுறையில் இருந்த போதும் அலுவலகத்தில் என்ன நடக்கிறது என்பதை எனது பர்சனல் அசிஸ்டன்ட் மூலம் தெரிந்து கொண்டு தான் இருந்தேன்.
எனது சக லாயர்ஸ் ப்ரசன்டேஷன் செய்து கொண்டிருக்க எனது கருத்துக்களை அவ்வப்போது சொல்லிக் கொண்டிருந்தேன்.
அன்றைய மதிய நேரத்தில் ஷ்யாமிடம் இருந்து வந்தது அழைப்பு
Advertisement
“ஹேவ் டு டேக் திஸ் கால்” கரணிடம் சொல்லிவிட்டு கான்டீனை ஒட்டியிருந்த திறந்தவெளியை நோக்கிச் சென்றேன். விக்ரமை பற்றி முக்கியமாக பேச வேண்டும் என்றான்.
“ஈவினிங் மீட் செய்யலாம் ஷ்யாம். அப்போ விரிவா பேசலாம்” என்றேன்.
“என் ஆஃபீசிற்கு வருகிறாயா ஆரா” ஷ்யாம் கேட்கவும் நான் மறுத்தேன்.
Advertisement
“வேறு எங்கேனும் மீட் செய்யலாம் ஷ்யாம். உன் ஆஃபீஸ் சேஃப் பிளேஸ் இல்லை” நான் அடிக்கடி செல்லும் பீச் கஃபேயில் மீட் செய்வதாகக் கூறினேன்.
Advertisement
முக்கிய வேலை ஏதும் இல்லாததால் மூன்று மணி வாக்கில் கரணிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன்.
ஷ்யாமிடம் சந்திப்பதாகச் சொன்ன நேரத்திற்கு முன்பே கஃபேக்கு வந்திருந்தேன். மும்பையில் எனக்குப் பிடித்தமான இடங்களில் ஒன்று இந்த காஃபி ஷாப்.
கதவைத் திறக்கும் போதே நம் வருகையை அறிவிக்கும் WIND CHIMES (வின்ட் கைம்ஸ்). உள்ளே நுழைந்தால் மெல்லிய இசை நம்மை வரவேற்கும்.
Advertisement
ஆங்காங்கே தொட்டிகளில் இன்டோர் செடிகள், இயற்கையாக சூரிய வெளிச்சம் ஒளிக்கீற்றாக உள்ளே பரவும் விதமாக மேற்கூரை மற்றும் வட்ட வடிவத்தில் தொங்கும் விளக்குகள் என்று இந்த சூழலே ரம்மியமாக இருக்கும்.
இங்கே முக்கிய ஹைலைட் என்னவென்றால் ஓர் அலமாரி முழுக்க இருக்கும் புத்தகங்கள் தாம். கஸ்டமர்கள் காஃபி அருந்தியபடியே அங்கிருக்கும் குஷன் போடப்பட்ட சேர்களில் அமர்ந்து விருப்பமான புத்தகங்களை வாசிக்கலாம். இரண்டொரு டேபிள்களில் செஸ் போர்டும் உண்டு.
என்னைப் பார்த்ததும் ஷாப்பின் ஓனர் லிசி கவுண்டரிலிருந்து கையசைத்தாள். இது அவளுடைய பாட்டி நடத்திய ஷாப். பாரம்பரியத்தை விடாமல் தொடர்ந்து நடத்திக் கொண்டு வருகிறாள்.
இரண்டு வருடங்களுக்கு முன் அவளுக்கு லீகல் ஹெல்ப் தேவை என்று கேள்விப்பட்டு நானே முன்வந்து அவளுக்கு உதவினேன். அதனால் என்னை ஸ்பெஷலாக கவனிப்பாள்.
“ஆரா. ரொம்ப நாளா இந்தப் பக்கம் காணோம். வெல்கம்” கவுண்டரில் இருந்து ஓடி வந்து என் கைகளைப் பற்றி வரவேற்றாள்.
“கொஞ்சம் பிசியாக இருந்தேன். இனி அடிக்கடி வருகிறேன். ஐ ரியலி மிஸ்ட் யுவர் காப்புசினோ” என்றதும்
“உன்னுடைய யூசுவல் தானே, ஹசல் நட் ஃப்ளேவர்” என்று கேட்டவள் எனக்காக காஃபியை தயாரிக்கலானாள்.
“அதே தான். கராமல் ” என்று நான் சொல்லவும் “லெஸ் சுகர். எனக்குத் தெரியும்” என்றாள் அழகியச் சிரிப்புடன்.
காஃபி ஷாப்பில் அவ்வளவாக கூட்டம் இல்லை. ஆங்காங்கே ஓரிருவர் மட்டும் அமர்ந்திருந்தனர்.
ஜன்னலோரமாக தூண் மறைவில் இருந்த டேபிள் என்னுடைய ஃபேவரைட் இடம். அது காலியாக இருக்கவே எனது லேப்டாப் பேக்கை அருகில் இருந்த மோடாவில் வைத்து விட்டு குஷனில் சாய்ந்தமர்ந்தேன்.
“யுவர் காஃபி இஸ் ரெடி” ஆவி பறக்க காப்புசினோவை டேபிளில் வைத்தாள். கூடவே இரண்டு ஹனி ஆல்மண்ட் குக்கீஸூம்.
ஜோடிப் புறாக்கள் டிசைனை க்ரீமில் வரைந்திருந்தாள். அது லிசியின் ஸ்பெஷாலிட்டி. நானும் பல இடங்களில் காஃபி குடித்திருக்கிறேன். ஆனால் லிசியின் காஃபி இஸ் ஒன் ஆஃப் தி பெஸ்ட்.
“தேங்க்ஸ் லிசி. யூ ஆர் தி பெஸ்ட்” நான் பாராட்டவும் சிறு புன்னகையுடன் “என்ஜாய் யுவர் காஃபி” என்று சொல்லிச் சென்றாள்.
சோனா ஒரு டீ பர்சன். இங்கே தேநீர் வகைகளும் உண்டு என்றாலும் காஃபி தான் ஸ்பெஷல். ஓரிரு முறை சோனாவை அழைத்து வந்திருக்கிறேன். ஆனால் பெரும்பாலும் தனியாகத் தான் வருவேன்.
சிறிது நேரத்தில் ஷ்யாமும் வந்துவிட அன்று மீட்டிங்கில் நடந்தவற்றை விரிவாக சொல்லிக் கொண்டிருந்தான்.
“அப்பா கூப்பிட்டு ரைட் லெஃப்ட் வாங்கிட்டார் ஆரா. வெல் அவர் அப்படித் தான். ஆனால் எனக்கு இப்போது தான் இதில் இன்னும் தீவிரமாக இறங்க வேண்டும் என்று உத்வேகம் வருகிறது.” என்றான்.
முதலில் விக்ரம் அந்த சந்திப்பில் இந்த ஒப்பந்தம் வேண்டாம் என்று சொல்லி விட்டவுடன் சோனா அவனை விடவில்லையாம். அவனுக்கு நன்றாக டோஸ் கொடுத்தாளாம். வேறே முதலீட்டாளர்களை பார்க்கலாம் என்றாளாம்.
அதன் பிறகுதான் அவன் டெல்லி சென்றிருந்த போது ஃப்ளைட்டில் விக்ரமைப் பார்த்தானாம். பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்தானாம். என்ன பேசினார்களோ! துள்ளி குதிக்காத குறையாக இன்று அவ்வளவு உற்சாகமாக இருக்கிறான்.
இன்னும் இரண்டொரு நாட்களில் விக்ரமிடம் இருந்து குட் நியூஸ் எதிர்பார்க்கலாம் என்று மிகுந்த நம்பிக்கையோடு சொன்னான்.
சோனாவும் மிகவும் மகிழ்ந்து போனாள். என்னால் ஏனோ அந்த மகிழ்ச்சியில் பங்கு கொள்ள முடியவில்லை.
பாயும் புலியைக் கூட நம்பலாம். விக்ரம் பதுங்கும் புலி என்று பெயர் வாங்கியவன். அடுத்து மிகப் பெரிய தாக்குதல் இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்.
இரண்டொரு நாட்கள் ஒரு வாரம் என்று நீண்டது. விக்ரமிடமிருந்து எந்த செய்தியுமில்லை.
அன்று எங்களது அடுத்த பிராஜெக்ட் சம்மந்தமாக ஷர்மாவை உடனே சந்தித்து பேசிவிட முடிவு செய்து அவரின் செக்ரட்டரிக்கு கால் செய்தேன்.
ஷர்மா லாலுடன் முக்கிய மீட்டிங்கில் இருப்பதாகவும் மீட்டிங் எப்போது முடியும் என்று தெரியவில்லை என்றும் கூறினார்.
“ஒகே நாளை பார்த்துக் கொள்கிறேன். ஒரு பத்து மணிக்கு போல வரவா” என்று கேட்டேன்.
“ஆராதனா, நீ இன்னும் மெயில் பார்க்கவில்லையா. நாளை பதினோரு மணிக்கு போர்ட் ரூமில் மீட்டிங் இருக்கிறது. அதற்கு பிறகு சர் வில் பி ஃப்ரீ” ஷர்மாவின் செக்ரட்டரி சொல்லவும் என் ஆஃபீஸ் மெயில் பாக்ஸை திறந்தேன்.
நாளை காலை பதினோரு மணிக்கு போர்ட் ரூமில் மீட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டும் என்ற அறிக்கை மட்டும் இருந்தது. கார்ப்பரேட் பிரிவின் அனைத்து டிபார்ட்மன்ட் ஹெட்ஸ்க்கும் சிசி செய்யப்பட்டிருந்தது..
மீட்டிங் அஜெண்டா பற்றி மெயிலில் ஒன்றும் குறிப்பிடப் படவில்லை. எங்களது அடுத்த பிராஜெக்ட்டான மில்லர் டீல் விஷயமாகத் தான் இருக்கும்.
எதற்கும் நான் தயாராக இருப்பது நல்லது. காலையில் டீம் மீட்டிங் போதே வொர்கிங் மாடலுக்கு நோட்ஸ் ரெடி செய்திருந்தேன்.
எனது ஜூனியர் அசோசியேட்டை அழைத்து எனது குறிப்புகளை பவர் பாயின்ட் ஸ்லைடுகளில் ஏற்றி காமன் ஃபோல்டரில் அப்லோட் செய்யச் சொல்லிவிட்டு அஷ்வத்திடம் மீட்டிங் பற்றிக் கேட்கலாம் என்று அவனைத் தேடிச் செல்ல அவனும் ஐடி ஹெட் நகுலும் காரிடாரில் பேசிக் கொண்டிருந்தனர்.
மீட்டிங் பற்றிய விவரங்கள் தெரியுமா என்று நான் அவர்களிடம் கேட்க, “நாங்கள் இப்போது தான் உன்னிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று பேசிக் கொண்டிருந்தோம். நீயே இப்படிச் சொன்னால் என்ன” என்று கூறவும் “மில்லர் ப்ராஜெக்ட் பற்றி இருக்கலாம்” என்றேன்.
“மில்லர் டீல் பற்றிப் பேச போர்ட் ரூமில் ஏன் மீட்டிங் வைக்க வேண்டும்” என்று அஷ்வத் கேட்டதிலும் அர்த்தம் இருந்தது.
“நான் எதற்கும் ப்ரிபேர்டா இருக்கலாம் என்று பிபிடி பண்ணச் சொல்லியிருக்கிறேன்” என்று சொல்லி முடிக்கவில்லை.
நகுல் அஷ்வத் இருவரும் கும்பிடு போடுவது போல கை கூப்பி “ நீ இருக்கும் போது எங்களுக்கு என்ன கவலை. நாங்கள் ஜாலியாக மீட்டிங் அட்டன்ட் செய்கிறோம், காஃபி ஸ்நாக்ஸ் சாப்பிட்டுகிறோம்” என்று கலாய்த்துக் கொண்டிருந்தனர்.
“ஹாவ் டு கோ. நாளை பார்க்கலாம்” சிரித்துக் கொண்டே வீட்டிற்குக் கிளம்பினேன்.
மறுநாள் காலை
மீட்டிங்கிற்கு துறைத் தலைவர்கள் மட்டும் தான் அழைக்கப்பட்டிருந்தனர்.
எங்கள் துறைத் தலைவர் ஷர்மா தான் என்ற போதும் அவர் நிறுவனத்தின் ஓனரும் என்பதால், அவர் சார்பில் ஆக்டிங் ஹெட்டாக நான் தான் பிரசென்டேஷன் எல்லாம் செய்வது.
போர்ட் ரூம் மீட்டிங் ஒன்றிரண்டு தான் நான் அட்டன்ட் செய்திருக்கிறேன். பொதுவாக ஃபைனான்ஸ் மக்கள் தான் அடிக்கடி போர்ட் ரூமில் மீட்டிங் நடத்துவார்கள்.
மீட்டிங்கிற்கு நேரமாகிவிட ஜூனியர் தயாரித்த பிபிடி சரியாக இருக்கிறதா என்று மட்டும் பார்த்து விட்டு என் லாப்டாப்பை எடுத்துக் கொண்டு போர்ட் ரூம் இருந்த தளத்திற்கு விரைந்தேன்.
போர்ட் ரூம் பில்டிங்கின் மேல் தளத்தில் இருக்கிறது. லிஃப்ட் ஒவ்வொரு தளமாக நிற்கவும் வேறு வேறு துறையைச் சேர்ந்தவர்கள் உள்ளே நுழைவதும் வெளியேறுவதுமாக இருந்தனர்.
ஒரு வழியாக போர்ட் ரூமிற்குள் நான் நுழைய ஏற்கனவே அஷ்வத், நகுல் இன்னும் சிலர் அங்கே அமர்ந்திருந்தனர். எங்கள் துறையைச் சேர்ந்தவர்கள் இல்லாமல் இரண்டு மூன்று பேர் அமர்ந்திருந்தனர். யாரென்று எனக்குத் தெரியவில்லை.
ஆங்கில யூ வடிவத்தில் பெரிய மேஜை சுற்றிலும் நாற்காலிகள் என அமைந்திருக்க லால், ஷர்மா இருவருக்கும் நடுவில் அமர இடம் விட்டு மற்ற அனைவரும் சுற்றிலும் அமர்வது வழக்கம். ஷர்மா என்னை அவர் அருகில் அமரச் சொல்வார் என்பதால் அவருக்கான இருக்கைக்கு அடுத்து அமர்ந்து கொண்டேன்.
என் லாப்டாப்பை ஓபன் செய்து பிபிடியை சரி பார்த்துக் கொண்டிருந்தேன். போர்ட் ரூமின் கதவு திறக்கும் ஓசையும் ஷர்மாவின் ஹாஹா என்ற சிரிப்பும் என் காதுகளில் ஒலிக்க மெல்ல நிமிர்ந்து பார்த்தேன்.
நான் அமர்ந்திருந்த இடத்திற்கு நேரெதிரில் இருந்தது கதவு.
லாலுடன் பேசிக் கொண்டே ஊன்றுகோலைப் பற்றிய படி உள்ளே நுழைந்த புதியவன் மேல் என் பார்வை படிந்தது.
ஊன்றுகோல் பற்றியிருந்த போதும் நிமிர்வுடன் கம்பீரமாக நடந்து வந்தவனின் கான்ஃபிடன்ஸ் இஸ் சம்திங் கிரேட்.
லால் பேசிக் கொண்டே வர கேட்டுக் கொண்டே வந்தவனின் பார்வை அறையில் இருந்தவர்கள் மீது படிந்து என் மீது நிலைத்தது.
ஷார்ப் ஐஸ். லேசர் ஷார்ப். இது என்ன இப்படி ஒரு துளைக்கும் பார்வை. அவனது முகத்தையே பார்த்திருந்தேன் சில நொடிகள்.
“ஷ்ஷ்ஷ்… என்ன இது? என் பார்வையை விலக்கிக் கொண்டேன். மீண்டும் எனது கண்கள் அவனை நோக்கி செல்ல அதை சிரமப் பட்டு கட்டுப் படுத்தினேன்.
‘யார் இவன்?’
rāga-dveṣha-viyuktais tu viṣhayān indriyaiśh charan
ātma-vaśhyair-vidheyātmā prasādam adhigachchhati (BG 2;64)
மனதைக் கட்டுப்படுத்தி, பற்றுதல் மற்றும் வெறுப்பு இல்லாதவர், புலன்களின் பொருட்களைப் பயன்படுத்தும்போது கூட, கடவுளின் அருளைப் பெறுகிறார்.
error: Content is protected !!