Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

57.கார்த்திகா கார்த்திகேயன்-தேவனுக்கேற்ற தேவியோ

அத்தியாயம் 4.1_தேவனுக்கேற்ற தேவியோ_கார்த்திகா கார்த்திகேயன்

அத்தியாயம் 4

 

தொடர்பில் இல்லாமல் போனாலும்

தொலைந்து விடப் போவதில்லை



Advertisement

உண்மைக் காதல்!!!

 

திவ்யா மற்றும் ரதி இருவரும் சென்ற பிறகு திவ்யாவின் பேச்சை எண்ணி திகைத்து நின்றான் அமர். “உண்மையிலே இவர்களை கொல்ல வந்தார்களா? யாரா இருக்கும்? அதனால் தான் ரதி அப்படி வேகமாக ஓடி வந்ததா? அண்ணனா அப்படி செய்தான்?”, என்று குழப்பத்தில் கல்லூரிக்கு கூட செல்லாமல் நேராக வீட்டுக்குச் சென்றான்.

Advertisement

 

Advertisement

ஆனால் லேசான பிளாஸ்ட்டர் போட்டு ஆங்காங்கே வீங்கிய முகத்துடன் தன்னுடைய அறையில் மருந்தின் உதவியால் தூங்கிக் கொண்டிருந்தான் சாணக்கியன். போலீஸ் அந்த அளவுக்கு அவனை அடித்திருந்தார்கள். அவனிடம் பேச வந்த அமருக்கு வலியில் முகம் சுழித்த படி தூங்கிக் கொண்டிருந்த அண்ணனை எழுப்ப மனதில்லாமல் அப்படியே திரும்பிச் சென்று விட்டான்.

 

அடுத்த ஒரு வாரம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக கடந்தது. தருமர் அடியாளிடம் “அந்த பொண்ணுங்களுக்கு ஒரு பயம் காமிச்சிருக்கோம்ல? அதுவே இப்போதைக்கு போதும். மத்தத அப்புறம் பாத்துக்கலாம். அவங்களை எதுவும் செய்ய வேண்டாம்”, என்று கூறி விட்டார். ஆனால் சாணக்கியனை அடித்த போலீஸ் அடுத்த நாளில் இருந்து எங்கு சென்றான் என்று கூட யாருக்கும் தெரிய வில்லை. இன்ஸ்பெக்டர் மாயம், தீவிர வேட்டையில் போலீஸ் என்ற செய்தி மட்டுமே வந்தது.

Advertisement

 

சாணக்கியனோ தன்னவளை எப்படி பார்போம் எப்போது உடம்பு சரியாகும் என்ற கவலையில் இருந்தான். அவனுக்கு நடந்ததை அமர் இன்று வரை சொல்ல வில்லை. சொல்ல முடியவில்லை என்று கூட சொல்லலாம். சாணக்கியன் அருகே தாய் இல்லை என்றால் தந்தை என்று இருக்க அமர் அதைப் பற்றி பேச வில்லை. அது மட்டும் இல்லாமல் ரதியுடன் தனியே பேச அமர் முயற்சி செய்து கொண்டிருக்க அவன் கவனம் அங்கே இருந்தது.

 

திவ்யாவோ கொல்லும் அளவுக்குச் செல்வார்களா? அதுவும் தனக்கு ஏதாவது ஆனால் கூட பரவாயில்லை. வாயில்லா பூச்சியான ரதிக்கு ஒன்று வந்தால் அவளாலே அவளை மன்னிக்க முடியாது. இனி சாணக்கியனை தன்னை நெருங்க விடக் கூடாது என்ற முடிவில் இருந்தாள்.

 

ரதிக்கோ நடந்த நிகழ்வு கொஞ்சம் பயத்தைக் கொடுத்திருந்தாலும் அமர் பேசிய காதல் வசனமே மனதுக்குள் வந்து கொண்டிருந்தது. அவன் பேசிய போது அவளைப் பார்த்த உரிமைப் பார்வை, அவன் கண்களில் வழிந்த நேசம், அவன் சொன்ன கண்ணம்மா என்ற வார்த்தை அனைத்துமே அவள் மனதில் பதிந்து அவளை இம்சித்துக் கொண்டிருந்தது. ஆனால் அவன் பேச வந்தால் மட்டும் அங்கிருந்து ஓடிக் கொண்டிருந்தாள்.

 

திவ்யா வேறு ரதிக்கு அரணாக இருக்க அமரால் அவளை நெருங்க முடியவில்லை. அவன் போனில் அழைத்த போதும் ரதி அவன் போனை எடுக்க வில்லை.

 

அந்த எண்ணின் புகைப்படத்தில் அமர் இருக்க அவள் அதை எடுக்க வில்லை. ஆனாலும் அமரும் சரி சாணக்கியனும் சரி, தருமரைப் பற்றி ஒரு சதவீதம் கூட சந்தேகமாக நினைக்க வில்லை. அந்த அளவுக்கு இருந்தது அவரது நடிப்பு திறமை.

 

ஒரு வாரம் கடந்திருந்த நிலையில் அன்று தான் வீட்டை விட்டு உல்லாசமாக கிளம்பினான் சாணக்கியன். இன்று எப்படியாவது திவ்யாவிடம் பேசி விட வேண்டும் என்ற தீவிரம் அவனிடம்.

 

அவனது நல்ல நேரமோ என்னவோ? அன்று ரதி விடுமுறை எடுத்திருந்ததால் திவ்யா மட்டும் தனியாக பேருந்து நிறுத்தம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். அப்போது ஒரு கார் அருகே வந்து நிற்க அவள் என்ன என்று உணரும் முன்னே அவளை உள்ளே இழுத்து கதவை அடைத்திருந்தான் சாணக்கியன்.

 

முதலில் மிரண்டவள் அது சாணக்கியன் என்று தெரிந்ததும் சிறிது தைரியத்தோடு “ஏய் என்ன பண்ணுற? காரை நிறுத்து, காரை நிறுத்து டா”, என்று சத்தம் போட மின்னல் வேகத்தில் பறந்தது கார்.

 

“இப்ப நிறுத்த போறியா இல்லையா? உன் மேல செம கொலைவெறில இருக்கேன். மேலும் மேலும் தப்பு பண்ணுற?”, என்றவள் கதவை திறக்க முயல அவளால் முடிய வில்லை.

 

‘கொஞ்ச நேரம் அமைதியா இரு. உன் கிட்ட கொஞ்சம் பேசணும். அதுக்கப்புறம் நானே பத்திரமா உன்னை இறக்கி விட்டுருவேன். கத்தி சீன போட்டு என்னை வெறியேத்தாத டி”

 

“அன்னைக்கு பொறுக்கின்னு சொன்னதுக்கு கோபம் வந்துச்சு. ஆனா இப்ப நீ பண்ணுறதுக்கு பேர் என்ன? ஆயிரம் தடவை சொல்லுவேன். பொறுக்கி தான் நீ. விடு டா என்னை”

 

“ஆமா பொறுக்கி தான் டி. பொறுக்கியே தான். பொறுக்கி என்ன பண்ணுவான்னு உனக்கு காட்ட வேண்டாமா? இன்னைக்கு காட்டுறேன்”, என்று சொன்னவன் கார் ஓட்டுவதில் கவனம் செலுத்த லேசாக பயந்து அவள் பிஞ்சு கைகளால் அவ்வளவு அடி அடித்தாள். ஆனாலும் அவனது உரத்த தேகத்துக்கு அது வலிக்கவே இல்லை.

 

யாரும் இல்லாத இடத்தில் இருந்த ஒரு மரத்தின் அடியில் காரை நிறுத்தியவன் அவளை நோக்கி திரும்பினான். லேசான பயத்துடன் அவனைப் பார்த்தவள் அப்போதும் கெத்தாய் அவனைப் பார்த்து “ஒழுங்கு மரியாதையா என்னை விட்டுரு. நீ நினைக்கிற மாறி ஆள் நான் இல்லை”, என்று மிரட்டினாள்.

 

“கண்டிப்பா உன்னை விட்டுறேன். ஆனா அதுக்கு முன்னாடி நான் உன் கிட்ட என்ன பொறுக்கி தனம் பண்ணினேன்னு கேட்க வேண்டாம்?”, என்றவன் “பொறுக்கி ஒரு பொண்ணைப் பாத்ததும் என்ன செய்வான் தெரியுமா டி?”, என்றவன் அவளையே ரசித்துப் பார்த்தான்.

 

அவன் பார்வையில் முகம் சுளித்தவள் அவனை முறைத்துப் பார்க்க “பொறுக்கி பாக்க மட்டுமா செய்வான்?”, என்றவன் அவள் தடுக்க தடுக்க அவளை இறுக அணைத்து அவள் கழுத்தில் முகம் புதைத்தான்.

 

திமிரி அவனிடம் இருந்து விடுபட நினைக்க அவளால் அது முடிய வில்லை. அவள் கழுத்தில் முகம் புதைத்தவன் அவளை விலக்கி அவள் முகம் முழுக்க முத்தங்களைப் பதிக்க அவனுடைய கை மற்றும் முதுகில் எல்லாம் அவளது நககீறல் விழுந்தது.

 

ஆனாலும் அவளால் அவனை முழுதாக நகர்த்த முடிய வில்லை. முகம் முழுக்க முத்தமிட்டவன் “பொறுக்கி இதையும் செய்வான் டி”, என்றவன் அவளுடைய உதடுகளில் அழுந்த முத்தமிட்டான்.

 

ஒரு அந்நிய ஆண் அவள் உதடுகளை மென்று தின்று கொண்டிருக்க அவளுக்கோ கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.

 

அவளை பயமுறுத்த தான் சாணக்கியன் இப்படி நடந்து கொண்டான். ஆனால் அவனையே அறியாமல் அவளின் மென்மையில் மயங்கி தான் போனான். அவளது இடையில் பதிந்த அவனது கைகள் அவள் மென்மையை சற்று அழுத்தமாக வருட அவளது எதிர்ப்பு குறைந்திருந்தது அப்போது தான் அவனுக்கே புரிந்தது.

 

அதிர்ந்து போனவன் லேசாக அவளை விலக்கி அவள் முகம் பார்க்க அவன் கைகளிலே மயங்கி இருந்தாள் திவ்யா.

 

“அச்சோ, இவ்வளவு கொடூரமாவா நடந்துக்குவ டா?”, என்று தன்னைத் தானே கேட்டவனின் கைகளில் அங்கே இங்கே இருந்த ரத்த கீறல் சொல்லியது அவள் தான் அவனிடம் கொடூரமாக நடந்து கொண்டிருக்கிறாள் என்று.

 

பின் பக்கம் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்தவன் அவள் முகத்தில் தெளிக்க லேசாக கண் விழித்தவள் அவனை கண்டு அதிர்ந்து பயப் பார்வை பார்க்க “இந்த முழி முழிச்சா கொன்னுருவேன் பாத்துக்க? நான் உன்னை ரேப் பண்ணுற மாதிரி முகத்தை வச்சிருக்க? ஆனா நீ தான் டி என்னை பிராண்டி வச்சிருக்க. எப்படி இருக்குன்னு பாரு”, என்று கையைக் காட்ட அதைப் பார்த்தவளுக்கு தான் அவனை இந்த அளவுக்கு காயப் படுத்தி இருக்கிறோமோ என்ற எண்ணம் வந்தாலும் அவன் செய்த செயல் நினைவு வர அவனை முறைத்துப் பார்த்தாள்.

 

“முதல்ல இந்த தண்ணிய குடி டி. அப்புறம் மயங்கி விழுவ”, என்றவன் அவளை குடிக்கச் சொல்ல “நீ இதுல ஏதாவது கலந்து வச்சிருப்ப. எனக்கு வேண்டாம்”, என்றாள்.

 

“ஏதாவது கலந்து உன்னை ரேப் பண்ணுற ஐடியா எல்லாம் எனக்கு இல்லை. எனக்கும் கற்பு முக்கியம் மா”, என்று அவன் சொல்ல அவனிடம் இருந்து பாட்டிலை பிடுங்கி தண்ணீரை குடித்து முடித்தவள் “சாத்தான் வேதம் ஓதுது”, என்றாள்,

 

“என்ன? புரியல?”

 

“நீயெல்லாம் கற்பு பத்தி பேசுற? நீ செஞ்சதுக்கு பேர் என்னவாம்? அது எல்லாம் நல்லவன் பண்ணுற வேலையா?”

 

“நீ பொறுக்கி பொறுக்கின்னு உசுப்பேத்துன? நான் பொறுக்கி என்ன செய்வான்னு சும்மா சொல்லி காமிச்சேன் டி. அது தப்பா?”

 

“அப்ப நானும் கத்தியால எப்படி குத்தணும்னு குத்தி காமிக்கட்டுமா சும்மா?”

 

“சரி சரி விடு, நான் வேணும்னு பண்ணலை. ஒரு கோபத்துல ஆரம்பிச்சேன்? அப்புறம் என்னையே அறியாம….”, என்று சொல்ல வர “எதுக்கு இப்படி பண்ணின?”, என்று கேட்டவளின் கண்கள் லேசாக கலங்கியது

 

“சாரி, ஒரு கோபத்துல? தப்பு தான். ஆனா நீ செஞ்சது மட்டும் சரியா டி? அன்னைக்கு உன்னோட ஷால் என் வண்டில தான் மாட்டுச்சு. நான் உன் ஷாலை பிடிச்சு இழுக்க எல்லாம் செய்யலை. அது தெரியாம திமிரா பேசின. எனக்கு அது கோபம் வந்தாலும் உண்மைலே எனக்கு உன்னை பிடிச்சிருந்தது. அதான் உன்னைப் பாக்க வந்தேன். இப்பவும் உன் கிட்ட பேச தான் டி வந்தேன். ஆனா அந்த பொறுக்கின்னு சொல்றது தான் என்னை டிரிகர்  பண்ணி விடுது”

 

“அதுக்கு இப்படி எல்லாம் பண்ணனுமா?”

 

“நான் மிரட்ட தான் நினைச்சேன். ஆனா உன்னை தொட்டதும் நான் நானாவே இல்லை. இந்த இடத்துல உன்னைத் தவிர வேற யாரா இருந்தாலும் என்னோட நிழல் கூட அவங்க மேல பட்டிருக்காது”, என்றவன் உல்லாசமாக அந்த நினைவில் அவளைப் பார்க்க அவளுக்கோ அவனை நிமிர்ந்து கூட பார்க்க முடிய வில்லை.

 

அவளுக்கும் அந்த அனுபவம் புதியதல்லவா? அவனது பேச்சு அவள் கோபத்தை விரட்டி அடிக்க முகம் செங்கொழுந்தாக மாறிப் போனது.

 

“எனக்கு வீட்டுக்கு போகணும்”, என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.

 

“எனக்கு எந்த பதிலும் சொல்லலை? பதில் சொல்லு. கொண்டு போய் விடுறேன்”

 

“சாரி தெரியாம உன்னை பொறுக்கின்னு சொல்லிட்டேன் போதுமா? ஆனாலும் இப்ப நீ செஞ்சது பொறுக்கித்தனம் தான். ஆனா சொன்னா மறுபடி ஏதாவது செய்வ?”

 

“நீ சொன்னதுக்கும் நான் உன் கிட்ட இப்படி நடந்துகிட்டதுக்கும் சரியா போச்சு. எனக்கு வேற பதில் சொல்லு”

 

“வேற என்ன?”

 

“எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?”

 

“எது கல்யாணாமா?”, என்று அவள் அதிர “ஏன் டி அந்த ஆசை இல்லாமலா உன் கிட்ட இப்படி நடந்துகிட்டேன்? எனக்கு நீ வேணும் திவி மா”, என்றான்.

 

அவன் பேச்சில் அவள் அதிர்ந்து அவனைப் பார்க்க “நான் அழகா இல்லையா டி? உனக்கு என்னைப் பிடிக்கலையா?”, என்று கேட்டான்.

 

“அதெல்லாம் அழகான பொறுக்கி தான். ஆனா வேண்டாம்”, என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு.

 

“எதுக்கு டி?”, என்று உரிமையாக மல்லுக்கு நின்றான் சாணக்கியன்.

 

“எங்க வீட்ல காதல் அது இதுன்னு சொன்னா எல்லாம் ஒத்துக்க மாட்டாங்க. எனக்கும் இப்ப அதுல எல்லாம் விருப்பம் இல்லை. எனக்கு நிறைய படிச்சு பெரிய சைன்டிஸ்ட் ஆகணும்னு ரொம்ப ஆசை”

 

“ஏன் டி, உனக்கு இந்த கலெக்டர் ஆகணும், கவர்ன்மெண்ட்ல வேலை வாங்கணும்னு சின்ன ஆசை எல்லாம் இல்லையா? ஆனா சைன்டிஸ்ட் தான் ஆகனுமா?”

 

“எல்லார மாதிரி நான் இருக்க கூடாதுல்ல? அதெல்லாம் பெரிய ஆசைன்னு எனக்கே தெரியும். ஆனா என்னால முடியும். எத்தனை வருஷம் ஆனாலும் நான் சாதிச்சு காட்டுவேன்”

 

“அப்ப அது வரைக்கும் லவ் பண்ணுவோமா?”, என்று கிசுகிசுப்பாக கேட்க அவனை முறைத்துப் பார்த்தவள் “இவ்வளவு நேரம் என்ன சொன்னேன்? நான் உன்னை லவ் எல்லாம் பண்ணலை. என்னை இனி டிஸ்ர்ப் பண்ணாத. உன்னோட காதல் என்னோட கனவுக்கு தடையா இருந்தா என்னால என்னையே மன்னிக்க முடியாது. அதுக்கு நான் உயிரையே கூட விட்டுருவேன்”, என்றாள்.

 

அவளை அதிர்ந்து பார்த்தான் சாணக்கியன். அவள் பேச்சில் மனம் சோர்ந்து போனாலும் “என்னோட காதல் உன்னை வாழ வச்சதா தான் இருக்கணும். அதுவே உனக்கு தொல்லையா இருந்தா அதை கொடுக்குறது வேஸ்ட் தான் டி. சரி இனி உன்னை தொல்லை பண்ண மாட்டேன். ஆனா எனக்குள்ள பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது நீ. நமக்குள்ள நடந்ததை நீ நினைப்பியான்னு தெரியலை. ஆனா என்னால என்னைக்கும் இதை மறக்க முடியாது. எங்கயாவது உன்னைக் காயப் படுத்திருந்தேன்னா சாரி டி”, என்று சொல்ல அவளுக்குள் அவன் பேச்சு மின்சாரத்தை பாய்த்தது போல ஒரு உணர்வு.

 

அவன் அழுத்தி வலிக்கும் படி எதுவும் செய்ய வில்லை தான். ஆனாலும் அவன் தொட்ட இடம் எல்லாம் நினைவு வர ஒரு மாதிரி இருந்தது. “என்னாலயும் இதை மறக்க முடியாது”, என்று மனதில் எண்ணிக் கொண்டவள் “வீட்டுக்கு போகணும்”, என்றாள்.

 

“சரி போகலாம்”, என்றவன் காரை சிட்டி நோக்கி திருப்பினான். இருவரும் அடுத்து எதுவும் பேச வில்லை.  ஒரு மாய வலை இருவரையும் பின்னி பிணைத்திருந்தது.

 

அவளை அவள் செல்லும் பேருந்தில் ஏற்றி விட்டவன் அந்த பஸ் போகும்  வரை அங்கேயே நின்றான். அவளும் அவன் கண்ணுக்கு தெரியும் வரை பார்த்த படியே தான் இருந்தாள். கடைசி வரை எதற்கு கொல்ல ஆள் அனுப்பினான் என்று அவள் கேட்க வில்லை. அவன் பேச்சிலும் செய்கையிலும் எழுந்த உணர்வுகளின் தாக்கத்தில் அதை மறந்திருந்தாள். ஒரு வேளை அதைக் கேட்டிருந்தால் அவனுக்கும் தருமரை பற்றி தெரிந்திருக்கும். அனைவரின் வாழ்க்கையும் கூட மாறி இருக்கும். விதியை என்ன செய்யவாம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!