Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

13. Ambal - உயிர் உருகும் காதல் எனதே

உயிர் உருகும் காதல் எனதே…..4

உயிர் உருகும் காதல் எனதே….4

வீராபத்தரனிடம் கேலி பேசி அவனை துரத்திவிட்டு வந்ததில் துர்காவின் மனது சற்று லேசாக உணர்ந்தது.சிறு வயதில் தன்னிடம் மல்லுக்கு நிற்கும் வீராவை தான் எதிர்பார்க்கிறாள் ஆனால் அவனோ இவளைக் கண்டாலே ஓடவும் இவளிற்கு சிரிப்பு தான் வருகிறது.அவன் வாழ்வில் நடந்த விடயங்களை தன் தாய் கூற கேட்டுயிருக்கிறாள் தான் ஆனால் இவனின் மீது தவறு இல்லாத பட்சத்தில் ஏன் இப்படி ஒடுங்கி போகிறான் என்று நினைத்து கொண்டே வண்டியை தன் வீட்டை நோக்கி செலுத்திக் கொண்டிருக்கும் போது,தொலைவில் பேருந்து நிறுத்துமிடத்தில் வாசினி நின்று கொண்டிருக்க அவளின் அருகே யமகா பைக்கில் ஒருவன் நின்று பேசிக் கொண்டிருந்தான்.

துர்காவிற்கு அதுவரை இருந்த இதமான மனநிலை மாறி முகத்தில் இறுக்கம் குடி கொண்டது.தன் வண்டியை அவர்கள் இருவரையும் நோக்கி செலுத்த,வாசினி எதெர்சையாக திரும்பியவள் தம்க்கை பார்த்துவிட்டாள்.அவள் ஏதோ கூற வண்டியை எடுத்துக் கொண்டு அவன் சென்றுவிட்டான்.வாசினியின் முன் வண்டியை நிறுத்திய துர்கா,

“ஏறு…..”என்று கூற வாசினிக்கு மனதில் பய பந்து உருண்டு கொண்டிருந்தது.



Advertisement

“அக்கா….”என்று வாசினி ஏதோ கூற வர,

“எதுவும் பேச வேண்டாம் ஏறு…..”என்று அழுத்தமாக வந்தது துர்காவின் குரல்.அதற்கு மேல் வாசினி எதுவுப் பேசவில்லை அமைதியாக ஏறிக் கொண்டாள்.ஆனால் வீட்டிற்கு சென்றால் என்னனென்ன நடக்குமோ என்ற பயமும் உள்ளுக்குள் இருந்து கொண்டு தான் இருந்தது.ஆனால் அந்த பயம் அவசியமற்றது என்பது போல் துர்கா வீட்டிற்கு வந்த பிறகு தங்கையிடம் எதுவும் பேசவில்லை.வாசினி இருமுறை பேச முயன்றும் அவள் தவிர்த்துவிட அவளுக்கும் இதுவும் நல்லது தான் என்று நினைத்துக் கொண்டு தன் வேலை பார்க்க தொடங்கிவிட்டாள்.

அந்த மாலை நேரத்தில் மிதமான கூட்டம் இருந்தது அந்த காபி ஷாப்பில்.துர்கா அமர்ந்திருந்தாள் மனது முழுவதும் வரும் நபருடன் எப்படி பேச வேண்டும் என்ன பேச வேண்டும் என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தாள்.சற்று நேரம் காக்க விட்டு தான் வந்தான் சித்தார்த் நேற்று வாசினியுடன் பேசிக் கொண்டிருந்தவன்.இது நேற்று மட்டும் நடக்கவில்லை இதற்கு முன் இரண்டொரு முறை இருவரையும் ஒன்றாக பார்த்துவிட்டு தான் துர்கா வாசினியை எச்சரித்துக் கொண்டிருந்தாள்.ஆனால் வாசினி அதை காதில் வாங்கியது போல் தெரியவில்லை.ஆனால் நேற்று இருவரையும் சேர்ந்து பார்த்தவுடனே முடிவு செய்துவிட்டாள் இனி தங்கையிடம் பேசுவது வீண் என்று அதனால் தான் சித்தார்த்தை பிடித்துவிட்டாள்.

Advertisement

“ஹாய்….”என்றபடி சிரித்த முகமாக வந்தமர்ந்தான் சித்தார்த்.

Advertisement

“ஹாய்….”என்று அமைதியாக கூறிய துர்காவின் விழிகள் என்னவோ எதிரில் இருந்தவனை அளவிட்டப்படி தான் இருந்தன.சித்தார்த்தை பற்றி நன்கு விசாரித்துவிட்டு தான் வந்திருந்தாள்.சித்தார்த் வீட்டிற்கு ஒற்றை பிள்ளை தாய்,தந்தை இருவரும் கல்லூரி பேராசிரியர்கள்.எப்படி பார்த்தாலும் இவர்களை விட அவர்கள் நிலை சற்று உயர்ந்து தான் இருந்தது.அது தான் துர்காவை பயம் கொள்ள செய்திருந்தது.அவள் ஒண்ணும் காதலுக்கு எதிரி அல்லவே.அவளுக்கு அவளின் தங்கைக்கு நல்ல வருங்காலம் அமைய வேண்டும் என்பது தான் வேண்டுதலாகவே இருக்கிறது.

“பார்த்து முடிச்சிடீங்கனா…காபி எடுத்துக்கோங்க….”என்று ஒரு குரல் கேட்க,திடுக்கிட்டு விழித்தாள் துர்கா.அவளை பார்த்த சித்தார்த்துக்கு சற்று பாவமாகவும் இருந்தது வாசினியின் மூலம் துர்காவை பற்றி அனைத்தும் அறிந்து வைத்திருந்தான் சித்தார்த்.அவனிற்கு துர்காவின் இந்த துணிச்சல் தனிப்பட்ட முறையில் பிடித்தும் இருந்தது.

“என்ன பார்க்குறீங்க….என்கிட்ட பேச வந்திருக்கீங்க…என் தோற்றத்தை வச்சி நான் எப்படி எடை போட்டுக்கிட்டு இருக்கீங்க…காபி குடிச்சிட்டே யோசிங்க…”என்று கூற,

Advertisement

“என்ன நக்கலா….”என்று துர்கா அழுத்தமாக கேட்க,அதுவரை சிரித்தபடி இருந்த சித்தார்த்தின் முகம் மாறியது.

“சாரி…நான் உங்களை கிண்டல் பண்ணும்னு சொல்லலை….”என்றுவிட்டு அமைதியாகிவிட்டான்.சற்றென்று ஏதோ ஒருவித இறுக்கம் பரவியது போல் இருந்தது இருவருக்குள்ளும்.

“உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேச தான் வந்தேன்…”என்று துர்கா ஆரம்பிக்க,

“நானும் வாசினியும் விரும்புறோம்….நான் அவளை தான் கல்யாணம் பண்ணிப்பேன்…”என்று சித்தார்த் முடித்து வைக்க,துர்கா அவனை ஆழ்ந்து பார்த்தாள்.

“என்னை பார்த்தா ஏதாவது ர் மாதிரி தெரியுதா….சாரி உங்களுக்கு அப்படி தெரிஞ்சா அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது…..”

“நான் ஒண்ணுமே சொல்லையே….”

“நீங்க பார்க்குறதுலே தெரியுது…..”

“நான் அப்படி நினைக்கல…..இது நான் வேற பேச வந்தேன்….”என்று எப்படி இவனிடம் கேட்பது என்று ஒரு தயக்கம் வந்தது.இது தங்கையின் வாழ்க்கை தான் ஏதாவது கூறி அதில் அவள் பாதிக்கப்பட்டுவிட்டால் அதை அவளால் தாங்கிக் கொள்ள முடியாது அதற்கா தான் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள முயன்றாள்.

“நீங்க இவ்வளவு யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை….நான் வாசினியை விரும்புறேன் கல்யாணமும் பண்ணிப்பேன்…..என்னை நம்புங்க…என்னை பத்தி விசாரிச்சிட்டு தான் வந்திருப்பீங்க….நானும் என் குடும்பமும் தப்பானவங்க இல்லை…..இதுக்கு மேல எப்படி சொல்லுறதுனு தெரியலை….”என்று சித்தார்த் கூறிவிட்டு தோய்ந்து அமர்ந்துவிட்டான்.

இதுக்கு மேல் துர்காவிடம் எப்படி பேசுவது என்று அவனிற்கு தெரியவில்லை.அவளின் மீது துளி கோபம் இருந்தாலும் மதிப்பு நிறையவே இருந்தது.அந்த ஒரு காரணத்திற்காகவே தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தான்.

“உங்க வீட்ல இந்த கல்யாணத்துக்கு ஒத்துப்பாங்கலா…..”என்று துர்கா கேட்க,

“ஆங்….”

“ப்ச்….உங்க வீட்ல இந்த கல்யாணத்துக்கு ஒத்துப்பாங்கலா….”என்று மீண்டும் கேட்க,அதுவரை இருந்த கடினம் நீங்கி முகமும் அகமும் மலர்ந்தது சித்தார்த்துக்கு.பின்னே ஐந்து வருட காதல் ஆகிற்றே அவனது.சித்தார்த் பன்னிரெண்டாவது படிக்கும் போது தான் இந்த ஊரில் வந்து குடியேறினர்.வாசினியும்,சித்தார்த்துப் ஒரே வகுப்பில் படித்தனர் ஆரம்பத்தில் நட்பில் இருந்த உறவு நாளுக்கு நாள் வளர்ந்து கல்லூரி காலத்தில் காதலாக மலர்ந்து இதோ இப்போது வரை சென்று கொண்டிருக்கிறது.எங்கே துர்கா தங்கள் காதலை புரிந்து கொள்ளாமல் வேண்டாம் என்று விடுவாளோ என்ற பயம் மனதிற்குள் இருந்தது.ஆனால் இப்போது அவளே அவர்களின் திருமணத்தை பற்றி பேசவும் அவனிற்கு மனதில் அழுத்திக் கொண்டிருந்த பாரமே விலகியது போல் இருந்தது.

“ஹலோ….”என்று அவனின் முன் கைகளை துர்கா ஆட்டவும் நிகழ்வுக்கு வந்தவன்,

“சொல்லுங்க….”

“என்ன நீங்க இப்ப எங்கயோ போயிட்டீங்க போல…”என்றவளின் முகத்திலும் குறுநகை எட்டிப்பார்த்து.

“ம்ம் ஆமா….அது அதை விடுங்க….என்ன கேட்டீங்க எங்க வீட்டல ஒத்துப்பாங்கலானு தான கேட்டீங்க…..நான் ஏற்கனவே பேசிட்டேன்….அவங்க ரெடியா இருக்காங்க பொண்ணு கேட்க ஆனா நான் தான் வாசினி படிப்பு முடியட்டும்னு இருக்கேன்….”என்று சித்தார்த் கூற,

“என்ன நிஜமா தான் சொல்லுறீங்களா….உங்க வீட்ல ஒத்துக்கிட்டாங்களா….”என்று துர்கா ஆர்பரிப்புடன் கேட்க,

“ஆமாங்க….நான் பேசிட்டேன்……”

“……”

“என்னாச்சு பேச்சையே காணும்….ஓஓ..என்னை நம்பலையா இருங்க என் அம்மாக்கு போன் பண்ணுறேன் அவங்கிட்டே பேசுங்க….”என்று அவருக்கு அழைக்க முற்பட,

“அச்சோ வேண்டாம் வேண்டாம்….நான் உங்களை நம்புறேன்….எனக்கு ரொம்ப சந்தோஷம் அதான் பேச முடியலை….”என்றவளுக்கு கண்களில் நீர் கோர்த்துவிட்டது.

“அவங்களுக்கு என்னை பத்தி….”என்று கேட்டுவிட்டு துர்கா தயங்க,

“நீங்க செஞ்சது சரிதான் அதனால நீங்க எதுக்கு பயப்படனும்…..இன் பாக்ட் நீங்க அப்படியே என் அம்மா மாதிரியே இருக்கீங்க….எங்க அம்மாவும் இப்படி தான் போல்டா இருப்பாங்க….உங்களை பார்க்கும் போது அவங்க நியாபகம் தான் வருது…..”என்றவனின் பதிலில் துர்கா அகமகிழ்ந்து விட,

“ரொம்ப சந்தோஷம்….இன்னும் ஒரு விஷயம்….”

“சொல்லுங்க….”

“அது வீட்ல எல்லாம் பேசி எல்லாம் நல்லபடியா முடியர வரைக்கும் நீங்க சந்திக்க வேண்டாம்…..”

“…..”

“இல்ல யாராவது பார்த்துட்டா பிரச்சனையாகிடும்….அதனால தான் சொல்லுறேன்….அதனால தான் நாம சந்திக்கிறதைக் கூட வாசினிக்கு தெரிய வேண்டாம்….அவளுக்கு இன்னும் பக்குவம் பத்தலை…..உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்….”என்று கூற,

“புரியுதுங்க….நான் பார்த்துக்குறேன்….”என்று சித்தார்த் கூறிவிட அதன் பின் தான் துர்கா நிம்மதியுடன் கிளம்பினாள்.அதன் பின்னா நட்களில் வாசினியும் சித்தார்த்தும் அதிகம் வெளியில் பேசிக்கொள்ளவில்லை என்றாலும் கைபேசியில் பேசிக் கொண்டு தான் இருந்தனர்.இந்த நாட்களில் வாசினி தன் அக்காவை பற்றி தான் அதிகம் பேசுவாள்

“நம்மளை பார்த்துட்டு எப்படி சும்மா இருக்கானு தெரியலை…இல்ல எனக்கு தெரியாம எதாவது பிளான் போடுறாளோனு கூட சந்தேகமா இருக்கு….ஆனா நான் ஸ்டாங்கா சொல்லிடுவேன் என் வாழ்க்கையில நீ உள்ள வராதனு….”என்று கூற சித்தார்த்துக்கு இப்போது புரிந்தது ஏன் துர்கா வாசினியிடம் சொல்ல வேண்டாம் என்று கூறினாள் என்று அவளின் வார்த்தைகளில் தன் சுதந்திரத்தை பறிக்க இவள் யார் என்னும் கேள்வி தான் அதிகம் இருக்கும்.அது சித்தார்த்துக்கு வருத்தமளித்தாலும் திருமணமான பின் அவளை மாற்றிவிடலாம் என்று தப்பு கணக்கு போட்டு வைத்திருந்தான்.

எது நின்றாலும் காலம் நிற்காமல் சுழன்று கொண்டு தான் இருக்கிறது அது போல் தான் சித்தார்த்,வாசினியின் வனவாச காலம் முடிந்து இதோ அவர்களின் திருமணத்தில் வந்து நின்றது.சித்தார்த்திடம் பேசிவிட்டு வந்தவுடன் வானாதியிடம் விஷயத்தைக் கூறிவிட்டாள் துர்கா.அவரோ பயந்து விட துர்கா தான் அவரை தேற்றி சித்தார்த்தை பற்றி நன்கு விசாரித்துவிட்டு தான் வந்திருக்கிறேன் நல்ல வரன் வாசினி நன்றாக இருப்பாள் என்று கூறி அவரை சமாதானபடுத்தினாள்.இன்னும் இருவாரங்களில் திருமணம் என்ற நிலையில் துர்காவின் வீட்டில்,

“ம்மா….எனக்கு இந்த கலர் பிடிக்கல….உன் பெரிய பொண்ணையே கட்டிக்க சொல்லு….”என்று கத்திக் கொண்டிருந்தாள் வாசினி.

“ஏன்டீ….அந்த புடவை எவ்வளவு தெரியுமா….அவளுக்கு விலை கம்மியா எடுத்துக்கிட்டு உனக்கு நல்லதா எடுத்துட்டு வந்தா நீ என்னடானா இது பிடிக்கல அது பிடிக்கலனு குத்தம் சொல்லிக்கிட்டு இருக்க….”என்று வானாதி சமையலறையிலிருந்து கத்தினார்.அவருக்கு உள்ளுக்குள் வருத்தம் பெரிய மகள் இப்படி இருக்க இளைய மகளுக்கு திருமணம் நடக்கிறது என்று.அவரின் ரணத்தை இன்னும் கிழிக்கும் விதம் அவரின் உறவுகள் வேறு அவரை திட்டிவிட்டு தான் சென்றிருந்தனர்.அதுவேறு அவரை நிலைகுலைய செய்திருந்தது.அதிலும் சிலர்,

“ஏன் வானாதி துர்காவை கடைசி வரைக்கும் உன்கூடவே வச்சிக்கலாம்னு முடிவு பண்ணிட்டியா….வாழ வேண்டிய பொண்ணு இப்படி வீட்ல இருக்கு நீ பாட்டுக்கு சின்ன பொண்ணுக்கு பெரிய இடமா பிடிச்சிட்ட….”என்று தங்கள் மன வன்மத்தை கக்கிவிட்டு சென்றிருக்க வானாதிக்கு அத்தனை வருத்தம்.அவரும் பெரிய மகளிற்கு வரன் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார் ஆனால் கூடி வரவில்லை அப்படி கூடி வந்தால் மகள் எதையாவது விசாரித்துவிட்டு வந்து வேண்டாம் என்று கூறிவிடுகிறாள்.இதற்கு என்ன தான் தீர்வு என்று அவரும் புரியாமல் கடவுளிடம் தான் முறையிட்டுக் கொண்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!