Skip to content
Post Views: 240
அத்தியாயம் 02
துர்க்காவை கூட்டிக்கொண்டு வேறு மாநிலம் வந்த சிவா, அவளின் நகைகளை விற்று, அவன் தூரத்து உறவுக்காரன் மூலம் ஒரு அறை மட்டுமுள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து துர்க்காவுடன் வாழ ஆரம்பித்து விட்டான்.
Advertisement
14 வயதில் முதல் தாம்பத்தியம், வலியும் வேதனையும் தான், அதன் பின்னும் அதே கதை தான்.
பிஞ்சு மெட்டு அவளை அவன் இஷ்டத்திற்கு கசக்கி போட்டு இருந்தான்.
Advertisement
Advertisement
அவள் நகையை விற்ற காசு எட்டு மாதங்கள் தாக்கு பிடித்தது. இதற்கிடையில் துர்க்கா ஏழு மாதம் கர்ப்பமாக இருந்தாள்.
அவளுக்கு வயது இல்லையே, மைனர் பெண்ணை கர்ப்பம் ஆக்கிவிட்ட குற்றத்திற்கு போலீஸ் பிடிக்க வாய்ப்பு உள்ளது என்பதால் சிவா மருத்துவமனைக்கு துர்க்காவை அழைத்துப் போகவில்லை.
Advertisement
மாளிகை வீட்டில் மகாராணியாக இருந்தவள், அந்த ஒற்றை அறையில் படாத கஷ்டம் இல்லை.
ஒரு கட்டத்தில் சிவாவுக்கே அவன் செய்வது தவறு என்றுப்பட்டது. ஆனால் அதை சரி செய்வதை விட தான் மட்டும் தப்பித்துக் கொள்ள வேண்டும் என்று தோன்ற, நிறைமாதமான துர்காவை அனாதரவாக விட்டுவிட்டு வேறு ஊருக்கு தப்பி ஓடிவிட்டான்.
காதல் என்று கூறி தன்னை நாசம் பண்ணி விட்டு, ஏமாற்றி விட்டு சென்று விட்டான் என்பதை கூட உணர்ந்து கொள்ளாமல், பத்து நாட்களாக மொழி தெரியாத, வழி தெரியாத ஊரில் இருந்ததை வைத்து சமைத்து சாப்பிட்டு, அதுவும் தீர்ந்துவிட சில நாள் பிள்ளை வயிற்றுடன் பட்டினி கிடந்து, அவன் வருவான் என்று கண்ணீருடன் காத்திருந்தாள்.
ஆனால் அந்த கயவன் பெற்றவரை பற்றி யோசிக்கவில்லை, கூட பிறந்தவளை பற்றியும் யோசிக்கவில்லை, ஏதும் அறியாத பெண்ணின் மனதைக் கெடுத்து, அவள் உடலையும் கெடுத்து அவள் வயிற்றில் தன் குழந்தை இருப்பதையும் பொருட்படுத்தாமல் விட்டுச் சென்று இருந்தான்.
இறுதியாக பத்து நாட்கள் கழித்து, பிரசவ வலியில் கதறி அழுத துர்க்காவின் சத்தம் கேட்டு, அக்கம் பக்கம் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க,
மாதாந்திர பரிசோதனை இல்லை, சரியான ஆகாரம், சத்து மாத்திரைகள் எதுவும் எடுத்துக் கொள்ளாதது, 15 வயதான சிறுமி அவளின் உடல்நிலை என அனைத்தும் சேர்ந்து அவள் வயிற்றில் உதித்து இருந்த அவள் மகவுவின் உயிரைக் குடித்து விட, குழந்தை இறந்தே பிறந்தது.
15 வயதிலேயே தாம்பத்திய வலி, பிரசவ வலி, புத்திர சோகம், வாழ்க்கை நிதர்சனம் என அனைத்தையும் அனுபவித்து விட்டாள் அந்த அப்பாவி பேதை.
போதாக்குறைக்கு அதிகப்படியான உதிரப்போக்கால் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, மருத்துவ நிர்வாகம் அவளை அனுமதித்தவர்களிடம் விவரம் கேட்க, அவர்களுக்கு தான் எதுவும் தெரியாதே.
எனவே போலீசுக்கு தகவல் சொல்லப்படு, அவர்கள் வந்து விசாரித்ததில் உடலும் மனதும் ரண வேதனையில் துடித்தவள், தன் சொந்த ஊரும் பெற்றவர்கள் பேரும், ஆங்கிலத்தில் சொல்ல போலீசார் முருகானந்தத்திற்கு தகவல் சொன்னார்கள்.
துர்க்காவை பிரபாகரனும் கிருபாகரனும் தேடாத இடமில்லை, சிவாவின் வீட்டு ஆட்களுக்கும் அவன் எங்கு சென்றான் என்பது தெரியாது.
தங்கை எப்படி எங்கு இருக்கின்றாள் என்று இன்றுவரை தேடிக்கொண்டிருந்தவர்கள் விபரம் கேள்விப்பட்டு குடும்பத்துடன் சென்று பார்க்க, பாதி உயிராக பற்றுதல் இல்லாத கொடியாக துவண்டு கிடந்தாள் துர்க்கா.
உடனே அதிநவீன மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அவளுக்கான சிகிச்சை கொடுக்கப்பட்டது. இருபது நாட்கள் வாழ்வா சாவா என்று போராடி மீண்டவளை, 15 வயதில் குழந்தை பெற்றாள் என்பதால் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தாக வேண்டும் என்று போலீசார் சொல்ல, முருகானந்தமும் பிரபாகரனும் எவ்வளவு வாதாடியும் அவர்கள் மசியவில்லை.
பஞ்சாயத்து தலைவர், பணம், பதவியெல்லாம் தமிழ்நாட்டில் தானே அங்கு செல்லுபடியாகாமல் போக, ஒன்றரை மாதம் மருத்துவமனையில் இருந்த துர்க்கா தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அனுமதிக்கப்பட்டாள்.
கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் அவள் மனநிலை சரி செய்ய கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் 18 வயது வரை அங்கு தான் இருந்தாள்.
அங்கேயே படித்தாள், முருகானந்தம் ஊரில் துர்க்காவை கண்டுபிடித்து வெளியூரில் ஹாஸ்டலில் தங்க வைத்து படிக்க வைப்பதாகவே கூறியிருந்தார். எனவே கிராமத்தில் யாருக்குமே அவள் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்தது தெரியாது.
பிரேமாவதியும் பிரபாகரன், கிருபாகரன் மட்டுமே அடிக்கடி சென்று துர்க்காவை பார்த்து வந்தனர். முருகானந்தம் அவளின் பிறந்தநாளுக்கு மட்டும் சென்று பார்த்தார்.
18 வயது முடியவும் வீட்டிற்கு அழைத்து வந்த துர்க்காவை மேற்கொண்டு படிக்க வைக்க பிரபாகரன் முயற்சித்த போதுதான் உள்ளுக்குள் இருந்த மொத்த வெறுப்பையும் கொட்டினார் முருகானந்தம்.
துர்க்கா வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது, அப்படியே போனாலும் குடும்பத்துடன் போக வேண்டும் என்றார்.
ஒருமுறை வாசல் தாண்டி சென்று தன் கௌரவத்தை கெடுத்தது போதும், ஏதோ பெற்ற பாசம் ஒட்டிக்கொண்டு இருப்பதால் உயிருடன் விட்டு வைத்திருப்பதாகவும், இதற்கு மேல் எனக்கு ஒரு பொண்ணு இருக்கின்றாள் என்பதே யாருக்கும் தெரியக்கூடாது என்றும்,
பெற்ற கடமைக்கு இருக்க இடமும், உண்ண உணவும், மற்ற தேவைகளும் காலடிக்கே வரும் இஷ்டம் என்றால் இருக்கட்டும், இல்லையா எங்காவது போகட்டும் என்று சொல்லிவிட,
ஒரு தடவை கூண்டை விட்டு சென்று சிறகுகள் ஒடிக்கப்பட்ட வேதனை போதாதா, ஆகவே அமைதியாக தனது அறையில் முடங்கிக் கொண்டாள்.
இதோ பத்து வருடங்களாக அவள் ஒருத்தி இருப்பதே தெரியாது. அந்த வீட்டை விட்டு அவள் வெளியே வருவது மாதம் ஒருமுறைதான். அதுவும் முருகானந்தத்தின் தங்கை சகுந்தலாவுடன் தான்.
அவள் உலகம் அந்த வீடும், அண்ணன் பிள்ளைகளும் என்றாகிவிட்டது. அதுவும் முருகானந்தம் இருந்தால் அறையை விட்டு வெளிய வரவே மாட்டாள்.
இப்போதும் தன் அறையில் சின்ன அண்ணனின் மகன் விகர்ணனுடன் கதை பேசிக் கொண்டிருந்தாள்.
மகன்களுக்கு எதிராக டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தார் முருகானந்தம். பிரேமாவதி அவருக்கும் உணவை எடுத்து வைக்க, “பிரபா அந்த சம்பந்தத்த முடிச்சுடலாம்னு நினைக்கிறேன்…” என்று சொல்ல
சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து பார்த்த பார்வையில் அத்தனை ஆத்திரம், ஆதங்கம், கோபம்.
“இந்த கல்யாணமும் உங்க விருப்பப்படி நடக்கணும்.. கடந்த ஆறு வருஷம் நான் பட்ட கஷ்டம் போதாது இல்ல.. இன்னமும் கஷ்டப்படணும்.. என் விருப்பம், சந்தோஷம், நிம்மதி எதுவும் உங்களுக்கு முக்கியம் இல்லல.. பஞ்சாயத்து தலைவர் வீட்டுக்கு தகுதியான மருமகள் வந்தா போதும்.. பிரபாகரனுக்கு பொருத்தமான பொண்டாட்டி வரனும் என்கிற அவசியமில்ல இல்ல…” என்று கேட்க
“என்னடா பேசுற அப்படி என்ன கஷ்டப்பட்டுட நான் அமைச்சு தந்த வாழ்க்கையில.. நல்லா வாழ்ந்து தேவதை மாதிரி ஒரு பொண்ணு பெத்து வச்சிருக்கியே போதாதா…”
“ஓஹோ!.. ஆக மொத்தம் ஒரு ஆண் பெண்ணோட கல்யாண வாழ்க்கை தாலி கட்டி குடும்பம் நடத்தி குழந்தை பெத்துக்குறது தான் இல்ல.. இந்த உலகத்துல இல்லாதவள பத்தி நான் பேச விரும்பல.. இருந்தாலும் சொல்றேன், புரிந்துணர்வு இல்லாத குடும்ப வாழ்க்கையில பூர்ணாவல நான் பட்டது அதிகம்.. அதுக்கு காரணம் அவ நீங்க பார்த்த பொண்ணு.. பெரிய வர்க்கம், ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் தேவைகளும் அதிகமாகவே இருந்தது..
…ஆனா நான் எதிர்பார்த்தது எதிர்பார்க்கிறது எதார்த்தத்த ஏத்துக்கிட்டு என்னையும் முழு மனசா ஏத்துக்குற ஒருத்தி.. அது நீங்க அமைச்சு தந்த முதல் வாழ்க்கைல கிடைக்கல.. இப்பவும் ரெண்டாவது வாழ்க்கைக்கு நான் ஆசைப்படல.. ஆனா நீங்கதான் ஆதூவ பார்த்துக்க ஒருத்தி வேணும்னு என்ன நச்சுரிச்சு சம்மதிக்க வச்சீங்க.. இந்த வாழ்க்கையாவது எனக்கு புடிச்ச மாதிரி அமையட்டும்.. முக்கியமா என் பொண்ணுக்கு எந்த கஷ்டமும் தராத ஒருத்தி தான் வேணும்.. உங்கள மாதிரியே வாரவளும் என் குழந்தைய பாரமா நினைச்சா என்ன பண்றது?…” என்று கேட்கவும்
“அண்ணா!”
“பிரபா!” என்று இதுவரை அமைதியாக இருந்த கிருபாகரனும் பிரேமாவதியும் குரல் கொடுக்க,
“என்னடா? அம்மா, நித்யா, துர்க்கா இந்த வீட்ல மூணு பொண்ணுங்க இருந்தும் என் குழந்தைய பாத்துக்க முடியாதுன்னு தானே என்ன ரெண்டாவது கல்யாணம் பண்ண சொல்றாங்க…” என்று தம்பியிடம் கேட்க
“அப்படி இல்ல பிரபா.. பேத்திய பாத்துக்க எனக்கு என்ன கஷ்டம்.. ஆனாலும் இந்த காலத்து பிள்ளைகள பாத்துக்க ஒருத்தர் போதாது.. இங்க ரெண்டு குழந்தைங்க இருக்காங்க நாங்க மூணு பேர் இருந்தாலும் நித்தியா சின்ன பொண்ணு அவ குழந்தை பாப்பாளா இல்ல ஆதூரிய பாப்பாளா? அப்புறம் துர்ங்கா அவள பத்தியே பேசாத.. குழந்தைகள பத்தி அவளுக்கு என்ன தெரிஞ்சுட போகுது.. தன் குழந்தைய பாதுகாக்க தெரியாதவ உன் குழந்தைய பாதுகாப்பா பாத்துக்க போறாளா என்ன?…” என்று கேட்க
இப்போது அன்னையை கோபமாக பார்த்தான் பிரபாகரன். கணவர் இருப்பதை மறந்து பேசியதை நினைத்து நாக்கை கடித்துக் கொண்ட பிரபாவதி, மகனின் கோபத்தை பொருட்படுத்தவில்லை.
“அது மட்டும் இல்ல பிரபா.. இப்போ சரி ரெண்டு குழந்தைங்க தான் மாத்தி மாத்தி எங்களால பாத்துக்க முடியும்.. ஆனா எத்தன காலத்துக்கு.. இருக்கிற ரெண்டு பசங்கள பாத்துக்கணும் என்றதுக்காகவே தனக்கு அடுத்த குழந்தைய பத்தி யோசிக்காம இருக்கா நித்தியா.. நீ வேணா கிருபா கிட்ட கேளு..
…விகர்ணனுக்கு மூனு வயசாகுது அடுத்த குழந்த பெத்துக்கணும்னு சொன்னதுக்கு இவன்கிட்ட அத தான் காரணமா சொல்லி இருக்கா.. இவன் உன் தம்பியா இருந்தாலும் அவனுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு பிரபா.. நீயும் உனக்குன்னு தனிப்பட்ட வாழ்க்கைய வாழனும்.. நீ தான் சொல்றியே பூர்ணா கூட சந்தோஷமா வாழலன்னு அப்ப நாங்க சொல்ற மாதிரி ஒரு கல்யாணத்தை பண்ணிட்டு நீ சந்தோஷமா வாழு…”
“சரிமா நான் நீங்க சொல்ற வழிக்கே வாரேன்.. அதனாலதான் சொல்றேன் எனக்கு பிடிச்சிருந்தா மட்டும் தான் இந்த கல்யாணம் நடக்கும்.. எனக்கு புடிச்ச மாதிரி பொண்ண பாருங்க, உங்க குடும்ப கௌரவத்துக்கு உங்களுக்கு புடிச்ச மாதிரி பொண்ணு பாக்காதீங்க..
…தயவு செஞ்சு இந்த பேச்ச இத்தோட விடுங்க.. நான் சொன்ன மாதிரி பொண்ணு கிடைச்சா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் இல்லையா என்ன இப்படியே விட்டுருங்க.. நீங்க யாருமே என் பொண்ண பாக்க தேவையில்ல, நான் பேக்டரிக்கு போகல என் தொழில பாக்கல, வீட்ல இருந்து நானே என் பொண்ண வளத்துக்கிறேன் போதுமா…” என்று விட்டு சாப்பிட்ட தட்டிலேயே கையை கழுவி விட்டு கோபமாக எழுந்து செல்ல,
கிருபாகரன் எப்போதும் ராமனுக்கு ஏத்த லட்சுமணன் தானே. இருந்தும் தந்தையை எதிர்த்து அவன் ஒரு செயல் என்ன ஒரு சொல் கூட சொல்லியது கிடையாது.
எனவே எதுவும் கூறாமல் சாப்பிட்டு விட்டு, மனைவியிடம் கூறிவிட்டு செல்ல தோற்றினாலும் அதை செய்யாமல் கிளம்பிவிட்டான்.
முருகானந்தம் எப்போதும் போல் நான் உன்னை பெற்றவன், என் விருப்பப்படிதான் வாழ வேண்டும் என்ற இறுமாப்போடு உணவில் கவனமாக இருக்க, பிரேமாவதிக்கும் கணவன் எண்ணம் தான்.
நித்தியா அதூரியை எழுப்பி குளிக்க வைத்து, உணவு கொடுக்கலாம் என்று குழந்தையுடன் அறையை விட்டு வெளியேற, கோபமாக கடுகடுவென சிவந்த முகத்துடன் பிரபாகரன் வேகமாக வரவும்,
ஆதூரி “அப்பா…!” என்று அவன் காலை கட்டிக் கொள்ள, எரிமலையாய் கொதித்துக் கொண்டிருந்தவன் பனிமலையாய் உருக ஆரம்பித்தான்.
அவன் வெறுமையான, வேதனையான வாழ்க்கையின் வெகுமதி தான் அவன் மகளரசி ஆதூரி. மகளை தூக்கிக் கொண்டவன் “செல்லம்மா குளிச்சிட்டீங்களா?…” என்று மகளின் கன்னத்தில் முத்தம் வைக்க
“ம்ம்.. சித்தி குளிக்க வச்சாங்க…” என்று தலையாட்டி திராட்சை விழிகளை உருட்டி பதில் சொன்னாள் அழகு குட்டி ஆதூரி.
“சரி சாப்பிடலாமா?…” என்று கேட்டவாறு மகளுடன் கீழே போக திரும்பியவனிடம்
“மாமா நீங்க கிளம்புங்க, நானே ஆதூக்கு சாப்பாடு குடுக்கேன்…” என்று சொல்ல
“இல்லம்மா இனிமே என் பொண்ண நானே பாத்துக்கிறேன்.. யாருக்கும் சிரமம் வேணாம்…” என்று சொல்ல
பதறிய நித்தியா “என்ன மாமா என்ன ஆச்சு?.. ஏன் இப்படி பேசுறீங்க?…” என்று கேட்க
“என்ன இன்னொரு கல்யாணம் பண்ண சொல்லி நச்சரிக்கிறதுக்கு காரணமே செல்லம்மாவ பார்த்துக்க கஷ்டமா இருக்குன்னு தானே.. அதான் நானே என் பொண்ண பாத்துக்கிறேன்.. இந்த வீட்டுக்கு இன்னொரு பொண்ணு வாக்கப்பட்டு வந்து ஆசையையும் எதிர்பார்ப்பையும் புதைச்சிட்டு கஷ்டப்பட வேணாம்…” என்ற பிரபாகரனின் வார்த்தைகளில் இருந்தது ஆற்றாமையால் வந்த வேதனையின் சாயல்.
error: Content is protected !!
சூப்பர்… பாவம் துர்கா இவளோ கஷ்ட பட்டுட்டாளா…
பிரபா நெனைக்குற மாறி பொண்ணு யார இருக்கும்.. அவன் விருப்புன்னு பொண்ண??..அவனுக்குன்னு ஒரு love ஸ்டோரி இருக்கபோல