Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

05. முகில் - ஊஞ்சலாடும் முகிலே

ஊஞ்சலாடும் முகிலே 38

அத்தியாயம் 38

 

பேச்சச்சு அமர்ந்திருந்தாள் பல்லவி. ஒரு மாதிரியான பலவித சிந்தனைகளில் மனம் முழுதும் அலையாய் ஒரு நிலையில் இல்லை.

 



Advertisement

அதுவும் கீர்த்திஸ்வரன் இத்தனை பேசுவான் என்றோ இதை பேசுவான் என்றோ எண்ணாதவளுக்கு ஒருவித மலைப்பும் பயமும் தான் அதிகமாய் இருந்தது.

 

இப்படி பேச்சின்றி தான் அமரும் நிலை வரும் என்று எதிர்பார்திருக்கவே மாட்டாள். அப்படி ஒரு நிலை அவளுக்கு.

Advertisement

 

Advertisement

எதிர்த்து பேசவும் முடியவில்லை. அதற்காக சம்மதிக்கவா என்றும் தோன்றாமல் இல்லை. ஆனால் அவளை யோசிக்க மட்டும் வைத்துவிட்டான். அது தான் கீர்த்திஸ்வரனின் வெற்றியே.

 

ஈஸ்வர் “கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு முடிவு பண்ணிருக்கேன்!” என்றதுமே சந்தோஷமாய் தான் புன்னகைத்திருந்தாள் பல்லவி.

Advertisement

 

அவள் புன்னகையையே பார்த்தவனும், “ஹ்ம்! டிசைட் பண்ணிட்டேன். நாம கல்யாணம் பண்ணிக்கலாம்!” என்று சொல்ல, உடனே புரிந்தாலும் உள்ளுக்குள் ஆராய்ச்சி வேறு பல்லவியிடம்.

 

தான் கேட்டது சரி தானா! அப்படி தான் கூறினானா என உள்ளுக்குள் அவன் வார்த்தைகளை ஓட்டிப் பார்த்து மெதுவாய் தான் அதிர்ச்சியை காண்பித்தாள் பல்லவி.

 

“என்ன சொன்னிங்க?” என மீண்டுமாய் உறுதிப்படுத்திக் கொள்ள அவள் கேட்க,

 

“நீ கேட்டது சரி தான். கல்யாணம் பண்ணிப்போம்ன்னு சொன்னேன்!” என்றான். இம்முறை கொஞ்சம் கட்டளையாய் தான் அவன் குரல் வந்தது.

 

வரும்வரை கூட அவள் விருப்பத்திற்கு விட்டுவிட தான் நினைத்திருந்தான். அவள் பேச பேச தான் அந்த எண்ணம் தகர்ந்து அவளோடு தான் வாழ்க்கை என மனம் அவனோடே சண்டையிட்டது.

 

சில நொடிகள் மௌனமாய் இருந்தவளுக்கு அவனிடம் பேச தோன்றவில்லை. எத்தனை நம்பிக்கை அவனிடம் வைத்து தான் வந்திருக்க, இப்படி கூறிவிட்டானே எனும் ஒரு எண்ணத்தில் எழுந்து கொண்டாள்.

 

அவள் முகம் வைத்தே அவளின் அதிருப்தியை உணர முடிந்தது ஈஸ்வருக்கும்.

 

“பல்லவி சிட்!” ஈஸ்வர் சொல்ல, அவனை நிமிர்ந்து பார்த்தவள் முகத்தில் அப்பட்டமான முறைப்பு.

 

“உக்காருன்னு சொன்னேன். முதல்ல பேசு” என அவள் கிளம்ப ஆரம்பிப்பதை காண்பித்து அவன் சொல்ல,

 

“நான் போகணும்” என்றவளுக்கு பேச கூடாது எனும் பிடிவாதம் கூடியது.

 

அவனை பேச்சில் காயப்படுத்த கூடாது எனும் எண்ணமும் ஒரு காரணம். என்னவோ அவனிடம் கோபமாய் பேச தோன்றவில்லை. அதற்காக அவன் சொல்லியதில் கோபம் இல்லாமலும் இல்லை.

 

“சரி நான் பேசணும். அதை கேட்டுட்டு மட்டும் போ!” என அவன் சொல்லியதே வற்புறுத்துவதாய் இருக்க,

 

“கேட்க மாட்டேன்!” என காதுகளை மூடிக் கொண்டவள்,

 

“லதாம்மாக்கு மட்டும் இது தெரியணும்!” என்றாள் முறைப்போடு.

 

தன் மேல் அவளுக்கு கோபமாம். அதை அவள் காண்பிக்கும் விதம் கூட அத்தனை பிடித்தது ஈஸ்வருக்கு.

 

‘கையை எடு’ என அவன் சிறு கண்ணுக்கு புலப்படாத புன்னகையுடன் கைகளால் சைகை செய்ய,

 

“சார் ப்ளீஸ்! நீங்க இப்படி பார்க்காதீங்க.. இப்படி பேசாதீங்க!” என கையை எடுத்துவிட்டவளுக்கு எதுவும் செய்ய முடியாத நிலை ஆற்றாமையைக் கொடுத்தது.

 

அவனின் சிறு பார்வை வித்தியாசமும் அவளை கவனிக்க வைத்தது. இத்தனைக்கும் அவன் பார்த்து வைத்தது என்னவோ ஒரு சுவாரசியம் சுமந்த பார்வை தான்.

 

“ஓகே! உனக்கு இன்ட்ரெஸ்ட் இல்ல ரைட்?” என்றவன் ஆமாம் என்றால் விட்டுவிடுவான் என எண்ணி தலையசைக்க,

 

“ஓகே நான் கேட்குறதுக்கு சரியான பதில் சொல்லிட்டு போ. இப்ப உக்காரு!” என்றான் பொறுமையாய்.

 

“அதெல்லாம் வேண்டாம். சீக்கிரம் கேளுங்க. நான் கிளம்பனும்!” என பிடிவாதமாய் நின்றாள்.

 

“உன் இஷ்டம்!” என்றவன்,

 

“சரி சொல்லு! நான் வேண்டாம்ன்றதுக்கு ஒரு ரீசன்?” என முதல் கேள்வியை அவன் துவங்க,

 

“ஒன்னென்ன? நூறு இருக்கு? நூறுமே நீங்க உங்க அப்பாக்கு பையன்றதும் உங்க அப்பாடக்கர் வசதியும் தான்” என்றவள்,

 

“ஏன் சார் என்னை பேச வைக்குறிங்க. இதெல்லாம் சாத்தியமே இல்லாத ஒண்ணு. அன்னைக்கு உங்க அப்பா இல்லாத ஒன்னுக்கே அவ்வளவு அசிங்கப்படுத்தினார் வீடு தேடி வந்து. நீங்க இப்படி என்கிட்ட கேட்டது மட்டும் தெரிஞ்சது.. “ என்று மூச்சுமுட்ட சொல்லி,

 

“அன்னைக்கு உங்க அப்பா அப்படி பேசினத்துக்கு பிராயச்சித்தமா இப்படி ஒரு கண்ராவி முடிவை பாவம் பார்த்து எடுத்தீங்களா?” என்றும் கேட்க,

 

இதோ இதுவும் அவனை அவளிடம் கவனிக்க வைத்தது. எத்தனை சாதாரணமாய் காதல் என்ற ஒன்றோடு தான் ஒன்றை அவளிடம் யாசிக்க, அவள் அதற்குள் எத்தனையை தேடுகிறாள்? அதிலும் அவளுக்கு ஆதாயம் என்ற ஒன்றை மட்டும் அவள் தேடவே இல்லை தானே!.

 

“சரி சரி! இதை இப்படியே நீங்களும் மறந்துடுங்க நானும் மறந்துடுறேன். கிளம்புறேன்!” என்றவள் பையை மாட்டிக் கொள்ள போக,

 

“நான் இன்னும் முடிக்கல!” என்றதில் கையிலிருந்து சலிப்பாய் பை விலகியது.

 

“லதாம்மாக்கும் என் அப்பாக்கும் நான் உன்னை விரும்புறது தெரியும்ன்னு சொன்னா?” என்று அவன் கேட்கவும், கண்கள் வெளிவந்துவிடும் போல அவ்வளவு விரிந்தது பல்லவிக்கு.

 

அவள் “என்னது?” என்றதும் மீசைக்கு அடியில் அவன் புன்னகை வெளிவரவா என துடிக்க, அவர்களுக்கு தெரிந்ததற்கு இவ்வளவு அதிர்ச்சியா என்று தான் பார்த்தான்.

 

“நீங்க விரும்புறீங்களா? அதுவும் என்னை?” என்றதில் தான் அவன் விருப்பம் என்ற ஒன்றே அவள் புத்திக்கு இப்பொழுது தான் செல்வதை அவன் உணர்ந்தான்.

 

“விரும்பினா தான் கல்யாணம் பண்ணிக்க முடியும் பல்லவி. யாரோட கம்பல்ஷன்க்கும் இல்ல பாவம் பார்த்து பிராயச்சித்தம் தேடி எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது!” என அழுத்தமாய் அவன் சொல்ல, இப்படியே ஓடிவிட்டால் என்ன என்று தான் பேந்த பேந்த விழித்தாள்.

 

“என் விருப்பம் அது ரொம்ப நாள் ஆச்சு. நம்ம கல்யாணம் முடியட்டும் அதை பேசலாம். இப்ப அடுத்த கொஷின்!” என்றதும் படபடவென அடித்துக் கொள்ள,

 

“வேண்டாம் வேண்டாம்!” என நிறுத்தினாள்.

 

“ம்ம்ஹுஹ்ம்ம்! நீங்க என்ன சொன்னாலும் இது சரியே இல்ல. அதுவும் உங்ககிட்ட கடன் வாங்கிட்டு….” என்றவள் பலமாய் தலையை உலுக்க,

 

“நான் பேசுறதை கேட்க என்ன உனக்கு? அதுக்கு தானே வர சொன்னேன்?“ என்றவன் அதட்டலில் பொருமிக் கொண்டு அவள் நிற்க,

 

“இப்போ நான் ஈஸ்வர் மகேஸ்வரன் பையன் இதெல்லாம் தாண்டி… இப்ப நான் தான் உன் வீட்டுல உனக்காக பார்த்த பையன்… ஐ மீன் மாப்பிள்ளை.. இப்ப வேண்டாம்னு சொல்லுவியா?” என்று அவன் கேட்க, தலை கிறுகிறுத்தது பல்லவிக்கு.

 

இவனா பேசுகிறான் என்றதோடு இப்படி பேசுகிறானே என மனம் வேகமாய் துடிப்பை அதிகப்படுத்தி இருந்தது.

 

“சே அன்சார் பல்லவி!” என்றதில் அவள் முகம் அழுவதைப் போல மாற, கண்ணங்களை உட்புறமாகக் கடித்துக் கொண்டவன்,

 

“அடுத்து!” என்றதும் என்ன சொல்வானோ என அவள் பதறிப் பார்க்கும் பொழுதே,

 

“என் லவ் என் அப்பாக்கு தெரிஞ்சதால தான் உன் வீட்டுல வந்து பிரச்சனை பண்ணினார்னு நான் சொன்னா?” என்று கீர்த்திஸ்வரன் சொல்ல, அதிர்ந்து அலமலந்து விழித்தாள் பல்லவி.

 

“என் லவ் எனக்கே தெரிஞ்சதால தான் நான் உன் விஷயத்துல இத்தனை நாள் வெயிட் பண்ணினேன்னு சொன்னா?”

 

“என் லவ் என் கையை விட்டு போயிடுமோனு பயந்து தான் இப்பவே உன்கிட்ட கல்யாணம் பண்ணிக்குறேன்னு பேச வந்தேன்னு சொன்னா?” என்றவன் அடுத்தடுத்த பேச்சில் தலை சுற்ற மயக்கம் வரும் போலானது பல்லவிக்கு.

 

“அவ்வளவு தான். நான் சொல்ல வந்ததை எல்லாம் சொல்லிட்டேன். உன் அப்பா வீட்டு சொந்தத்தை கல்யாணம் பண்ணி தான் தக்க வச்சுக்கணும்னு இல்ல. கொஞ்சம் லதாம்மா சொந்தம் வேணும்ன்றதையும் யோசிச்சுக்கோ!” என்றவன் கோவத்தில் இன்னும் விழி மூட மறந்து அகன்ற விழியாய் அவள் பார்வை இருக்க,

 

“என்ன?” என்றான்.

 

சுத்தமாய் வார்த்தை வரவில்லை. என்னென்ன சொல்லிவிட்டான். இப்பொழுது எதற்கு பதில் சொல்ல வேண்டும் என அவன் பேசியதை எல்லாம் மூலைக்கு எடுத்து செல்ல அவள் முயல,

 

“அவ்வளவு ஈஸியா என் அம்மாவை தூக்கிப் போடுற நீ?” என்றவன் பார்வையும் துளைக்க,

 

‘இதற்காவது பேசிவிடு!’ என்று மனதில் தோன்றவும்,

 

“லதாம்மாவை நான் எப்ப பிரிச்சுப் பார்த்தேன்? ஏன் என்னென்னவோ பேசி அது கூட லதாம்மாவையும் இழுக்குறீங்க?” என்றாள். படபடவென்று கேட்டு விட்டாலும் வார்த்தை தந்தியடித்தது.

 

“பின்ன இல்லையா? அதான் சொன்னியே அப்பா வீட்டு சொந்தம் விட்டு போகக் கூடாதுன்னு கல்யாணம் பண்ணிக்க போறதா?” என்றான் அதுவும் அவளைக் குற்றம் சாட்டும் குரலில்.

 

“அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?” என்றவள்,

 

“நான் எங்க இருந்தாலும் லதாம்மா எப்பவும் எனக்கு முக்கியம் தான். நிச்சயம் அவங்களை நான் பார்த்துட்டு தான் இருப்பேன்! யாரும் என்னை தடுக்க முடியாது” என்று சொல்ல,

 

கொஞ்சமும் யோசிக்காமல், “கிழிச்ச நீ!” என்றவன் சொல்லில் மூச்சு நிற்க அதிர்ந்து பார்த்தாள்.

 

“என் அப்பா பண்ணின பாவத்துக்கு இன்னைக்கு வரை என் அம்மாகிட்ட பேசாம பார்க்காம சுத்தி வர்ற நீ தான் வேற ஒரு வீட்டுக்கு போய்ட்டாலும் என் அம்மாவை பார்த்துக்க போறியா?” என்றான். 

 

உண்மை பலமாய் சுட்டதில் நிமிர்ந்து அவன் முகம் பார்க்கவே முடியவில்லை பல்லவிக்கு.

 

கூடவே இன்னும் இன்னும் அதிர்ச்சியாய் ஈஸ்வர் இப்படி எல்லாம் தன்னிடம் பேசுகிறானா என்ற ஒரு எண்ணம் வேறு அவஸ்தை கொடுத்தது.

 

சொல்ல வேண்டியது பேச வேண்டியது என எல்லாம் பேசி முடித்து தண்ணீரை எடுத்து குடித்த கீர்த்திஸ்வரன், 

 

“உன் படிப்பு முடியவும் பேசலாம்னு இருந்தேன். அதுக்குள்ள என் அப்பாவையும் சரி பண்ண நினைச்சேன்!” என்று சொல்லி அமைதி கொள்ள, அடிக்கண்ணால் பார்த்தாள் பல்லவி அவனை. அவனின் முழுப் பார்வையும் அவளிடம் தான் என்பதை மறந்து.

 

“அவ்வளவு தான். பேசியாச்சு. நீ போகலாம்!” என்றதும் ‘அவ்வளவு தானா!’ என்ற கேள்வியோடு அவள் அவனைக் காண,

 

“இன்னைக்கு அவ்வளவு தான். ஆனா அம்மா எப்ப வேனா பொண்ணுக் கேட்டு வருவாங்க. அதுக்கு நீ நோ சொல்ல கூடாது!” என்று சொல்லியவன்,

 

“இனி பெரியவங்க பார்த்துக்கட்டும். உனக்கு அவ்வளவு தான் சான்ஸ்!” என்று சொல்ல,

 

‘எனக்கு எப்ப டா குடுத்த அந்த சான்ஸ்ஸை?’ என்று தான் விழித்தாள் அவள்.

 

“ஓகே அத்தை தேடுவாங்க. நீ போ நான் அம்மாகிட்ட பேசிக்குறேன்!” என்றவன் சொல்லில், 

 

‘என்ன பேசுவ நீ?’ என்று தோன்றினாலும் எதையும் வாய் வார்த்தையாய் கேட்க முடியவில்லை அவனிடம்.

 

மீண்டும் தலையசைத்து வாசல் வழியை அவன் கண்களால் காண்பிக்க, தலையை கூட அசைக்காமல் தான் அங்கிருந்து கிளம்பி இருந்தாள் பல்லவி.

 

அவள் வெளியே செல்லும் வரை மூச்சைப் பிடித்து அமர்ந்திருந்தவன் அவள் சென்ற பின் தான் ஆழமாய் பெருமூச்சை விட்டு கண்களை இறுக்கமாய் மூடித் திறந்தான் 

 

“கொஞ்சம் கேப் விட்டிருந்தாலும் மூச்சு விடாம பேசி என்னையே ஆஃப் பண்ணியிருப்பா!” என சிரித்துக் கொண்டவன் அவள் வந்த வழி பார்த்து, நடந்ததை நினைத்து சிரித்துக் கொண்டே இருந்தான் தனிமையில்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!