Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

13. Ambal - உயிர் உருகும் காதல் எனதே

உயிர் உருகும் காதல் எனதே….19

உயிர் உருகும் காதல் எனதே….19

துர்காவின் சம்மதம் கிடைத்த நிமிடம் ஏதோ உலகை வென்ற சந்தோஷம் வீராவின் முகத்தில்.அவளின் நெற்றி முட்டி மென்மையாக முத்தமிட அதற்கே அவளின் உடல் நடுங்க துவங்கியிருந்தது.

“ஒரு முத்ததுக்கே இப்படி நடுங்குனா என் பாடு கஷ்டம் தான் போல…..”என்று அவளின் காது மடலில் குறுகுறுப்பை மூட்டி கிசுகிசுப்பாக வீரா கூற,

“வீராஆஆஆ……”என்றவளின் மெல்லிய குரல் இசை போல அந்த அறையை நிறைத்தது.



Advertisement

“ம்ம்….”என்று அவளின் நெற்றி முட்டி நின்றவனை பார்த்தவள் தன் நெஞ்சின் படபடப்பை அடக்க வழி தெரியாமல் அவனின் நெஞ்சிலேயே தஞ்சம் அடைந்தாள்.அவளை தன்னுடன் இறுக்கிக் கொண்ட வீரா,

“இனி நாம யாருக்காவும் வாழ வேண்டாம் துர்கா நமக்காக வாழ்ந்தா போதும்….நீ எனக்காக….நான் உனக்காக…..நம்ம இரண்டு பேரும்…..”என்றவனின் மீதி வார்த்தைகள் அவளின் உதடுகளில் தஞ்சம் அடைந்து கொள்ள இதை சுத்தமாக எதிர்பாராதவளின் உடல் மொத்தமும் மின்சாரம் தாக்கியது போல துடித்து அடங்க.வீராவின் முத்தமோ நீண்டு கொண்டே போனது.ஒருகட்டத்தில் அவள் மூச்சுக்கு திணறுவதைக் கண்டு விடுவித்தவனை தன்னிடம் இருந்து தள்ளியவள் கட்டிலின் மறுவிளிம்பிற்கு சென்று தன் நெஞ்சின் படபடப்பை அடக்க நீவிக் கொள்ள.

“ஹா ஹா…..என்ன டீச்சரம்மா இதுக்கே இப்படி பயந்து நடுங்கினா எப்படி……”என்றவன் இரண்டே எட்டில் அவளின் பாதம் பிடித்து தன்னில் இழுத்துக் கொள்ள,

Advertisement

“வீரா….வீரா…ஆஆஆ….”என்று அவனின் பிடியை தளர்த்த போராட,

Advertisement

“ரொம்ப வீக்கான டீச்சரம்மாவா இருப்பாங்க போல இருக்கே…..”என்றவனின் கிண்டல் பேச்சில்,

“அச்சோ பேச்சை பாரு விடுங்க என்னை…..”என்றவளின் வெட்கத்தை கண்களால் நிரப்பிக் கொண்டான்.

“விடுனுமா….இதுவே லேட்டுமா….”என்றவனின் சரசமான பதிலில் திகைத்து அவனை பார்க்க அவனும் அவளை பார்த்து கண் சிமிட்டினான்.

Advertisement

“என்ன பதிலே காணும் டீச்சரம்மாவுக்கு கேள்வி மட்டும் தான் கேட்க தெரியுமா…..”

“…..”

“என்னம்மா???….”என்று குனிந்திருந்த அவளின் முகத்தை நிமிர்த்த,அவளின் முகம் இப்போது அழுகையில் துடித்து கண்கள் சிவந்திருந்தது.அதைக் கண்டதும் பதறி அவன் விலக முயல அவனை விலகவிடாமல் தன்னுடன் பிடித்தவள்,

“இ…..இது….இது நிஜம் தான வீரா…..பொய் இல்லைல…..”என்று உதடு துடிக்க கேட்க,

“இல்லடா இல்ல……இது பொயில்ல…..இது தான் நிஜம்….இது மட்டும் தான் நிஜம்……என்னை நம்புமா…..”என்றவன் அவளை தன் நெஞ்சில் பொதித்துக் கொண்டான்.

“இப்ப எங்க போச்சாம் உங்க காதல் கத்திரிக்கா எல்லாம்…..”

“எங்கேயும் போகல….இங்க பக்கத்துல….என் நெஞ்சுல தான் சாய்ஞ்சிருக்கு…..”என்றவனை தள்ளிவிட்டு அவனின் நெஞ்சில் அடித்தவள்.

“நான் எதை கேட்குறேன்னு உனக்கு தெரியும்….ஒழுங்கா நான் கேட்டதுக்கு பதில் சொல்லு….”

“டீச்சரம்மா பேக் டூ த பார்ம்…..”என்றவனின் காதை பிடித்து இழுத்தவள்,

“ஆமா….பொய் சொன்னா பனிஷ்மென்ட் தான்…..”என்று ஒற்றை விரல் நீட்டி மிரட்ட,அந்த ஒற்றை விரலை பிடித்து இழுத்து முத்தம் தந்தவன்,

“வித் யூவர் பிளஷர் மேடம்….”என்று சிகை தாழ்ந்து அவளிற்கு அனுமதி வழங்க,

“விளையாடதீங்க பதில் சொல்லுங்க….”என்றவளின் குரல் பேதத்தில்,

“ம்ம்…..சரி சொல்லுறேன்….இது தான் கடைசி நாம பழசை பத்தி பேசுறது…..என்னொட பழசை பத்தி எனக்கு இப்ப பேச கூட பிடிக்கலை….என்னைக்கு என்னை வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டாங்களோ அப்பவே அவங்களுக்கும் எனக்குமான உறவு அருந்து போச்சு….நான் அவங்களை நினைச்சுக்கிட்டு தான் கல்யாணம் வேண்டாம்னு சொல்லுறேன்னு எங்க அம்மாவுக்கு ஒரு நினைப்பு….ஆனா என்னோட தயக்கம் எல்லாம் வேற….”என்றவனின் குரலும்,உடலும் தனக்குள் சுருங்க துவங்க,

“பிச்சுடுவேன்….ஒழுங்கா இருங்க….”என்று அவனின் நெஞ்சில் வாகா சாய்ந்து கொண்டவள் அவனின் நெஞ்சை மென்மையாக நீவி விட துவங்க,காயம்பட்ட இதயத்தில் மெல்லிய இறகை கொண்டு வருடுவது போல் இருந்தது அவளின் வருடல்.வேகமாக துடித்த இதயம் கொஞ்சம் கொஞ்சமாக இலகு நிலைக்கு திரும்பியிருந்தது.

“இப்ப சொல்லுங்க….”என்றவள் அவனின் முகத்தை நிமிர்ந்து பார்க்க,கண்களில் நீர் திரையிட அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஏன்டீ எனக்கு கடவுள் இப்படி ஒன்னை கொடுத்தாரு….என்…என்னால முடியலை துர்கா….எல்லார் முன்னாடியும் அன்னைக்கு நின்னது இன்னமும் என் மனசை விட்டு போகமாட்டேங்குது…..அதே மாதிரி நீ…..”என்றவனின் வார்த்தைகள் துர்காவின் உதடுகளால் விழுங்கப்பட,இப்போது அதிர்வது வீராவின் முறையானது.ஆரம்பித்த துர்காவிற்கு தான் செய்யும் செயலில் தயக்கம் வர அவள் பின் நகரும் முன் வீராவின் கைகள் உயர்ந்து அவளின் தலையை இறுக்கமாக தன்னுள் புதைத்துக் கொண்டது.ஒருகட்டத்தில் துர்கா அவனை அடித்து கடித்து தான் தன்னை விடுவித்துக் கொண்டாள்.மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவனை முறைத்தவள்,

“உங்களைஐஐஐ……”என்று அவனை இன்னும் அடிக்க அனைத்தையும் இன்முகமாக வாங்கி கொண்டவனுக்கு உணர்வுகள் கட்டவிழ்ந்த நிலை.அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன்,

“இப்படி இன்ப அதிர்ச்சி எல்லாம் கொடுத்தா நான் பேச மாட்டேன் செயல்ல இறங்கிடுவேன் அப்பறம்…..”என்றவனின் கைகள் அவளில் ஊர்கோலம் ஆரம்பிக்க,

“ஆஆ கூசுது….சும்மா இருங்க…”

“அப்ப நீயும்….உன் வாயை….”என்றவனின் உதட்டை கையால் மூடியவள்,

“ப்பா சாமி நான் எதுவும் பண்ணலை….நீங்க சொல்லுங்க…எப்போதிலிருந்து இந்த மாற்றம் எனக்கு தெரியவேயில்ல….”என்று அவள் படபடப்பாக கேட்க,

“இப்ப பேசியே ஆகனுமா….”என்றவனின் கைகளும்,உதடுகளும் அவளில் தன் ஆதிக்கத்தை ஆரம்பித்து அச்சாரங்களை வழங்க துவங்கியிருந்தது.அதில் துர்கா தன்னை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க துவங்க மெல்ல தன் கையை உயர்த்தி அவனின் காதை பிடித்திருந்தாள் இனி இவனை விட்டால் பதில் கூற மாட்டான் என்ற புரிந்து காதை மெல்ல திருக,

 “ஆஆஆஆ…..விடுடீ……”என்று அடுத்த நிமிடம் கத்தியிருந்தான் வீரா,

“வலிக்கட்டும் வலிக்கட்டும்…..”என்றவள் இன்னும் அவனின் காதை திருக,

“சொல்லுறேன் விடு….”என்றவன் தன் காதை தேய்த்துக் கொண்டே அவளை முறைக்க,

“ம்ம் சொல்லுங்க….”என்று அவனிடம் இருந்து சற்று தள்ளி அமர போக அவளை விடாமல் தன் மடியில் அமர்த்திக் கொண்டவன்,

“இப்படியே இரு…அப்ப தான் சொல்லுவேன்….உன்னை நான் ரொம்ப நாளாவே என்னோட மனைவியா பார்க்க ஆரம்பிச்சுட்டேன்….நீ தான் என்னை பார்க்கவேயில்ல….”என்று குறைபட,

“எப்படி பார்க்குறதாம்….அதான் என்னை வேண்டாம்னு சொன்னீங்க தான…”என்று அவளும் முகத்தை தூக்க,

“அ….அது ஏதோ ஒரு கோபத்துல சொன்னேன்….அதுக்காக அம்மா வீட்டுக்கு போயிடுவியா நீ…..எப்படி இருந்துச்சு தெரியுமா எனக்கு…..இந்த ரூமே ஏதோ மாயனம் மாதிரி என்னை பயமுறுத்திக்கிட்டே இருந்துச்சு…அஞ்சு நிமிஷம் கூட என்னால இங்க இருக்க முடியலை….அதான் மாடிக்கு வந்தேன்…அங்க உன்னை பார்த்ததும் தான் எனக்கு மூச்சே சீராச்சு….அந்த நிமிஷம் ஒன்னை புரிஞ்சிக்கிட்டேன் துர்கா….எனக்குனு ஒரு துணையை நானும் தேடியிருக்கேன்…..என் மனசு அவ்வளவு தேடுச்சு உன்னை…..அதுக்கு அப்பறம் தான் உன்கிட்ட போன்ல பேச ஆரம்பிச்சேன்…..நிஜமா எனக்கு எப்படி உன்கிட்ட பேசறதுனே தெரியலை….அதான் ஏதோதேதோ பேசினேன்….நீயும் என்கூட பேசின….எனக்குள்ள இருந்த அந்த இருள் கொஞ்சம் கொஞ்சமா என்னை விட்டு விலகுச்சு….”

“நிஜமா வா….”என்று துர்கா இடையில் கேட்க,அவளின் நெற்றி முட்டி,

“நிஜம் தான் துர்கா….நீ நம்மளோட ஸ்கூல் டேஸ் பத்தி பேசறப்பல்லாம் எனக்குள்ள எங்கோ போய் தொலைஞ்சி போயிருந்த அந்த வீராவை நான் தேடினேன்….என்னை மாத்திக்க முயற்சி பண்ணேன்….அதுல கொஞ்சம் வெற்றியும் கிடைச்சிடுச்சி….”

“அது என்ன கொஞ்சம் அப்ப மீதி…..”

“அதுக்கு தான் நீ விடமாட்டேங்குறியே…..”என்றவன் அவளின் கழுத்தில் முகம் புதைக்க,

“ம்ஹம்….விடுங்க….நான் வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறமாவது என்கிட்ட சொல்லியிருக்கலாம்ல….இதுக்கு தான் தினமும் நைட் வெட்டிக் கதை பேசிக்கிட்டு இருந்தீங்களா…..”

“ஆமாடீ இத்தனை நாள் வெட்டியா தான் போச்சு…..அதை இன்னைக்கு….”என்று கூறிக் கொண்டே அவளின் கன்னம்,கழுத்து என்று முத்தங்களை பதிக்க,துர்காவின் மறுப்பும் கொஞ்சம் கொஞ்சமாக வசமிழந்து கொண்டிருந்தது.

“நீ ஏன்டீ என்னை பார்க்கவேயில்லை….கல்யாணம் ஆன புதுசுல என்னை பார்த்திட்டு இருந்தவ திடீர்னு என்னை கண்டுக்கவேயில்ல….”என்று கூறிக் கொண்டே அவளின் கன்னத்தை வன்மையாக கடித்து வைக்க,

“ஆஆஆ…..வலிக்குது…தள்ளிப்போங்க…தள்ளிப்போங்க….”என்றவளின் மெல்லிய கரங்கள் வீராவின் தோள்களை அடிக்க,

“என்னடீ கொசு அடிச்சிக்கிட்டு இருக்க….”என்றவன் அவளின் முன் மேனியின் மீது மெல்ல படர துவங்க,

“வே….வேண்டா….”

“எனக்கு வேணுமே….”என்றவன் பேசிக் கொண்டே அவளின் மீது வந்திருந்தான்.துர்காவிற்கு நெஞ்சமெல்லாம் நடுக்கம் எடுக்க அவளின் உடல் வெளிப்படையாகவே நடுங்க துவங்கிவிட்டது.

“ரிலாக்‌ஸ் துர்கா….”என்றவனின் மென்மையான குரலும் அவனின் தீண்டல்களும் அவளை கொஞ்சம் கொஞ்சாமாக தன்னிலை இழக்க செய்ய,எப்போது இருவரின் ஆடைகளும் விடுதலை ஆனது தெரியவில்லை.முடிவில்லா அதரங்களின் ஆக்கரமிப்பில் இருவரும் துவண்டு மீண்டு தங்களுக்கான தேடல்களை தொடங்கியிருந்தனர்.

வீராவின் திணறல்கள் எல்லாம் துர்காவின் ஆறுதலான தலைகோதலிலும் மென்மையான வருடலிலும் கரைந்துவிட,ஆணவனின் ஆதிக்கத்தில் பெண்ணவள் துவண்டு அவனில் கரைந்து அவனையும் தன்னுள் கரைத்து விடியலில் கரை ஒதுங்கிய நேரம் அழகிய வாழ்க்கையின்  ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்திருந்தனர்.

தன் நெஞ்சில் கலைந்த ஓவியமாக கிடந்தவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டவன்,அவளின் முகம் காண அவளோ கண்களை மூடியிருக்க,

“கஷ்டபடுத்திட்டேனா…..”என்று அவன் தயக்கமாக கேட்க நிமிர்ந்தவள் இல்லை என்னும் விதமாக தலையாட்ட,

“நீ நீ….”ஏதோ கேட்க வந்து பின் அவன் தயங்கி நின்றுவிட்டான்.இன்றே இதை கேட்க வேண்டுமா என்று மனது கூறினாலும் மூளை கேட்டுவிடு என்று கூற,தன் மனதின் உள்ளதை அவன் கேட்டுவிட,அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் முகத்தில் இப்போது இதம் குறைய தொடங்கியது.

“இல்லடீ….நான் டாக்டர் கிட்ட கவுன்சிலிங் எல்லாம் போனேன்….”

“போதும்….இதை பத்தி நாம பேச வேண்டாம்….”என்று அவள் முகத்தை திருப்பிக் கொண்டு தள்ளி படுக்க,அவளை நகரவிடாமல் அழுத்தமாக பிடித்து வைத்துக் கொண்டவன்,

“துர்கா எனக்கு பதில் சொல்லிட்டு போ…..”என்று அழுத்தமாக கேட்க,அவனின் முகத்தில் இப்போது தெரிந்தாக வேண்டும் என்னும் பாவனை,

“இது என்ன அபத்தமா…நா….நாம இ….இப்ப தான்….சந்தோஷமா…..”என்று மேலும் கூற முடியாமல் அவள் தடுமாற,

“துர்கா இது உனக்கு அபத்தம் ஆனா எனக்கு…..நான் ஒரு சாராசரி மனுஷன் தான்டீ…..என் உணர்ச்சிகள் கூட மரத்து தான் போயிருந்தது இத்தனை நாளா….நீ வந்து என்னை புரிஞ்சிக்கிட்டு அப்பறம் தான் நான்…..”என்றவன் துர்காவின் முகம் கசங்க துவங்க,அதை காண பிடிக்காதவன் அவளின் தோள்களை பற்றி முகம் நிமிர்த்தி,

“ஏய்….உனக்கு என்னை புரியும் சொல்லு….”என்று பிடிவாதமாக நிற்க,அவன் தன்னிடம் பதில் வாங்காமல் விடப்போவதில்லை என்று புரிந்தவளுக்கு இதை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை.அவனின் இத்தனை நாள் அழுத்தங்கள் தான் இப்படி கேட்க சொல்லி தூண்டுகிறது என்று புரிகிறது.ஆனால் இது தொடர்ந்தால் நல்லதற்கு அல்லவே என்று இன்னொரு மனம் எடுத்துரைக்க ஒருவித அல்லாட்ட மனநிலை.

“துர்கா நீ அமைதியா இருக்க இருக்க என்னோட பீபி ஏறுது…..”

“இதெல்லாம் எப்படி சொல்லறது….”என்றவளின் தயக்கமான பதில் அவனை இன்னும் மன போராட்டத்திற்குள் இழுத்து செல்ல,மீண்டும் கையில் நடுக்கம் ஏற்பட துவங்கியது.அதனைக் கண்ட துர்கா,

“வீரா….வேண்டாம்….இது நான் சந்தோஷமா தான் இருந்தேன்….என்னை பாருங்க…..”என்று அவன் முகம் நிமிர்த்த,அந்த கண்களின் சிவப்பு அவளை அச்சமூட்டியது.

“வீரா வீரா….”என்று இரண்டு முறை அவனை தன்னிலைக்கு அவள் கொண்டு வர முயல அதையும் மீறி அவன் கை,கால்கள் நடுக்கம் ஏற்பட,

“இப்ப என்ன நான் பதில் சொல்லனும் அவ்வளவு தான….பதிலை சொல்ல போறதில்லை…..”என்றவள் அவனின் முகம் முழுவதும் முத்தமிட்டு,

“இது தான் கடைசி இனி இப்படி ஒரு வார்த்தை உங்க வாயிலேந்து வந்துச்சு அவ்வளவு தான்….”என்றவள் தொடக்கம் அவளாக இருந்த போதிலும் முடிவு அவனுடையாதாக மாறியிருந்தது.அதிகாலை வரை நீடித்த இருவரின் தேடலும் முடிவுக்கு வரும் போது,

“என்னை முழுமை அடைய வச்சது நீங்க தான் போதுமா…..இனியும் நீங்களா தான் இருப்பீங்க….நம்மளோட சந்தோஷ தருணங்கள் எல்லாம் இப்படி விதண்டாவதாத்தில் முடியறத நான் விரும்பல….சில விஷயங்களை நாம பேசிட முடியாது வீரா அதை நாம உணரனும்….”என்று அவனின் தலை கோதிக் கொண்டே துர்கா பேச,

“ம்ம்…..புரியுதுடீ….ஆனா சாரி…..நான் அப்படி பேசியிருக்க கூடாது…….”

“இது இப்ப என்னை சமாதான படுத்தற பதிலா இல்லை…..”என்று துர்கா அவனை பார்க்க,

“உடனே எல்லாம் சரியாகிடுச்சுனு சொல்லமாட்டேன் ஆனா முன்ன இருந்த ஒருவித படபடப்பு இனி இருக்காது…..நிச்சயம் என்னை மாத்திக்க முயற்சி பண்ணுறேன் துர்கா….”என்று உணர்ந்து கூற,

“குட் பாய்….”என்று அவனின் முன் நெற்றி முடி கலைந்து அவள் கூற,

“இப்ப இந்த குட் பாய் பேட் பாயா மாறப்போறான்…..”என்றவனின் கரங்கள் மீண்டும் தன் வேலையை துவங்க துர்காவும் அவனிற்கு தன்னை முழுமையாக ஒப்பு கொடுத்தாள் சந்தோஷமாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!