Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

13. Ambal - உயிர் உருகும் காதல் எனதே

உயிர் உருகும் காதல் எனதே…..21(நிறைவு)

உயிர் உருகும் காதல் எனதே….21(நிறைவு)

கொடைக்கானல் ஏரியை ரசித்தபடி நின்றிருந்தாள் துர்கா.சிறுவயதில் தந்தையுடன் இங்கு வந்திருந்தாள் அந்த நியாபகங்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக எழ மனதில் அத்தனை உற்சாகம் பிறந்தது.

“என்ன பார்த்து முடிச்சாச்சா……அடுத்தது எங்க போகனும் சொல்லு….”என்று வீராவின் குரலில் அதிக எரிச்சல் தென்பட,திரும்பி அவனை பார்த்து கண்சிமிட்டி சிரித்தாள் துர்கா.

“சிரிக்காதடீ…..”என்று உதடுக்குள் முணகியவனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது.பின்னே தேன்நிலவுக்கு போகலாம் என்றவன் துர்காவிடம் எங்கு போகம் என்று நீயே கூறு என்று கேட்டிருக்க,



Advertisement

“கொடைக்கானல் போகலாம்ங்க……சின்ன வயசுல போனது…..எனக்கு அங்க போகனும்னு ரொம்ப நாள் ஆசை ஆனா முடியலை…..போலாமா…..”என்று அவனின் கழுத்தைக் கட்டிக் கொண்ட கேட்டவளை ரசித்தபடியே தலையாட்டிவிட்டான்.அவன் மனதில் பல ஆசைகளுடன் வந்திருந்தவனின் கனவில்  ஒரு கூடை மண்ணை அள்ளி கொட்டிவிட்டாள் துர்கா.

ஆம் வந்து மூன்று நாட்களாகிறது இவர்கள் காலை வெளியில் ஊர் சுற்றி பார்க்க வந்தால் இரவு தான் ஹோட்டல் திரும்புகின்றனர்.இதுவும் துர்காவின் ஆசையே வந்தவுடனே வீராவிடம் கூறிவிட்டாள்.எனக்கு இந்த ஊரை சுற்றி பார்க்க வேண்டும் என்று அவளின் கண்களில் தெரிந்த ஏகத்திள்காகவே அவன் சம்மத்திருக்க அதுவே அவனிற்கு வினையாகி போனது முதல் இரண்டு நாள் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவன்.இன்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு திரிந்தான்.

“இன்னும் ஒரு இடம் தான்…..”என்று துர்கா முகத்தை குழந்தை போல வைத்துக் கொண்டு கேட்க,

Advertisement

“இப்படி பார்க்காதடீ….இப்படி பார்த்து பார்த்து தான் நான் இங்க நின்னுக்கிட்டு இருக்கேன்….”என்றவனை அப்படியே அணைத்துக் கொள்ளலாம் போல இருந்தது துர்காவிற்கு.

Advertisement

“உன்னையே சுத்தி பார்க்க முடியல இதுல ஊரை சுத்தி பார்த்து என்ன ஆகப்போகுது…..இதுக்கு நான் ஊர்லேயே இருந்திருப்பேன்….”என்று வேறு புலம்ப,

“வீராஆஆஆ…..”என்றவளின் குரலில் திரும்பியவன்,

“போடீ…..”என்றுவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டான்.

Advertisement

“சரி சரி வாங்க ரூம்க்கே போகலாம்….”என்று வெட்கத்துடன் கூற,

“பெரிய மனசு செஞ்சு எல்லாம் நீங்க வர வேண்டாம் டீச்சரம்மா….வாங்க நாம அடுத்த இடத்துக்கு போவோம்…..”என்று அவளின் கையை பற்றிக் கொண்டு நடக்க,

“இப்படி கூப்பிடாதீங்கனு உங்க கிட்ட எத்தனை தடவை சொல்லியிருக்கேன்….”என்று அவனின் கைகளில் கிள்ள,

“ஆஆ….நான் அப்படி தான் கூப்பிடுவேன்…..என்னடீ பண்ணுவ….”என்று தெனாவட்டாக கூறினான் வீரா.

“யோவ்…..வீராச்சாமி…..”என்றதும் அவனின் நடை தடை பட,

“ஆ….இப்ப தெரியுதா….நீங்க கூப்பிட்டா நானும் கூப்பிடுவேன்….”என்று துர்காவும் கிண்டல் போல கூற,

“சரி கூப்பிட்டுக்கோ….”என்று வீரா உடனே ஒத்துக் கொண்டதில் துர்காவிற்கு ஆச்சரியம் தான் அவள் நம்பா பார்வை பார்த்துக் கொண்டிருக்க,

“ஆனா அதுக்கான பனிஷ்மென்ட்டும் இருக்கும் வாங்கிக்கோ…..”என்று கூற,

“என்ன பனிஷ்மென்ட்???…..”என்று துர்கா கேட்க,வீரா அவளின் காதில் அவன் கூறியதைக் கேட்டு அவளின் முகம் அந்தி வானம் போல சிவந்துவிட்டது.

“என்ன இப்படி சிவக்குது….உன்னை கூப்பிட்டதுக்கு நீயும் என்னை பனிஷ் பண்ணிக்கோ டீச்சரம்மா….”என்று அவன் ராகபாட,

“போதும் பேசாதீங்க….பேசாதீங்க…..”என்று அவனின் வாயை மூடினாள் துர்கா.மனதெங்கும் அத்தனை சந்தோஷம் எதெல்லாம் தனக்கு இனி நடக்காது என்று நினைத்திருந்த தருணங்கள் எல்லாம் இன்று நடந்து கொண்டிருக்க இதில் இருவரின் வாழ்வும் புதியதொரு விடியலை நோக்கி பயணம் செய்ய தொடங்கியிருந்தது.

அன்று வாசினியின் வளைகாப்பு ஏழாம் மாதமே வைத்துக் கொள்ளலாம் என்று நிர்மலா கூறிவிட இதோ மண்டபத்தில் சொந்தங்கள் கூடி நடந்து கொண்டிருந்தது.பச்சை நிற புடவையில் அத்தனை அழகாக ஜொலித்துக் கொண்டிருந்தாள் துர்கா.வீராவிற்கு மனைவியிடம் இருந்து பார்வையை திருப்புவதே சிரம்மமாக இருந்தது.

“வீரா….”என்று கற்பகம் அழைக்க நிகழ்வுக்கு வந்தவன்,

“என்னம்மா??…..”

“டேய் இன்னும் கொஞ்ச நேரத்துல பந்தி ஆரம்பிச்சிடும் நாம தான் பார்த்துக்கனும்…..நீ போய் பாரு….”என்று கற்பகம் கூற,

“ஆங்….இதோ போறேன்மா…..”என்றவன் நகராமல் இருக்க,

“அடேய் உன் பொண்டாட்டியை அப்பறம் பார்த்துக்கலாம் போடா…..”என்று அவனை தள்ளாத குறையாக அனுப்பி வைத்தார்.அவருக்கு அத்தனை சந்தோஷம் மகனின் இந்த மாற்றம் கண்டு தனக்குள்ளே மறுகி நின்றவனை திருப்பி தந்த தன் மருமகளை தான் வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டு நின்றார்.

திருமண பட்டுத்தி தன் ஏழு மாத வயிறுடன் இரு கன்னங்களிலும் சந்தனம் பூசி அழகு தேவதை போல இருந்தாள் வாசினி.இரு கைகளிலும் வண்ண வண்ண கண்ணாடி வளையல்கள் மின்ன அது இன்னும் கூடுதல் அழகாக இருந்தது அவளிற்கு.வானாதி ஒரு ஓரத்தில் மகளை ரசித்தபடி நின்றிருந்தார்.இருவரும் பெரிதாக எல்லாம் மாறிவிடவில்லை,வாசினி இப்போதெல்லாம் சிறு சிறு வேலைகள் செய்கிறாள்.அதோடு மேல் படிக்கவும் அவர்கள் வீட்டில் அவளை ஊக்கியிருக்க அதற்கும் தன்னை தயார் செய்ய தொடங்கியிருக்கிறாள்.

வானாதியை பொருத்தவரை அவருக்கு இன்றும் சின்ன மகள் சற்று கூடுதல் ப்ரியம் தான் ஆனால் அதற்காக பெரிய மகளை குதர்க்கமாக பேசுவதில்லை.அதற்கு வீராவின் மீது இருந்த பயமும் ஒரு காரணம்.ஆம் அன்று மருத்துவமனையில் பேசியதற்கே அவரை தனியாக சந்தித்த வீரா,

“அத்த உங்களுக்கு என்ன பிரச்சனை….எதுக்கா எங்களோட வாழ்க்கையை நீங்க விமர்சனம் செய்றீங்க….எங்க வாழ்க்கை எப்படி வாழனும் எங்களுக்கு தெரியும் நீங்க அதை விமர்சிக்க வேண்டாம்….இது தான் கடைசி இதுக்கு அப்பறம் இப்படி நடக்காது நான் நம்புறேன்….இல்லைனா  துர்கா உங்களுக்கு இல்லை….நான் அவளை கூட்டிட்டு போயிடுவேன்….பார்த்துக்கோங்க…..”என்று கூறியிருந்தான்.வானாதிக்கு பேச்சே எழவில்லை தன்னை குறித்தே ஒரு கழிவிரக்கம் உண்டானது.அதிலிருந்து துர்காவிடம் அவள் வாழ்வை குறித்து அவர் பேசுவதில்லை.

“ஏம்மா துர்கா நீ எப்ப நல்ல செய்தி சொல்ல போற…..”என்று வருபவர்களில் பலர் நக்கலாக கேட்டுவிட்டு தான் சென்றனர்.துர்கா அதற்கெல்லாம் அலட்டிக்கொள்ளவில்லை சிரித்த முகத்துடன் பதில் கூறாமல் நின்று கொண்டாள்.தங்கள் வாழ்வு தங்கள் விருப்படி அமைதியாக,நல்லமுறையில் செல்கிறது அதை யாருக்காவும் கெடுத்துக் கொள்ள அவள் விரும்பவில்லை.எது எப்போது நடக்க வேண்டும் என்று கடவுளுக்கு தெரியும் அதனால் அவர் கொடுப்பதை நல்ல முறையில் வாழ வேண்டும் என்பது மட்டுமே துர்கா,வீராவின் எண்ணமாக இருந்தது.

கற்பகத்திற்காக இரண்டுரொருமுறை குழந்தை நல மருத்துவர்களை இருவரும் சந்திருந்தனர்.வீராவின் உடல் நிலை பற்றி முழுமையாக கேட்டுக் கொண்டவர்,

“இங்க பாருங்கமா….இது ஒருவித மனநோய் தான்….அதுக்கு இவரு டீர்ட்மெண்ட் எடுத்திருக்காரு….அதனால குழந்தை பிறக்காதுனு எல்லாம் சொல்ல முடியாது….ஆனா அதற்கான காலம் கொஞ்சம் தள்ளி தான் போகும் அவ்வளவு தான்….மத்தபடி உங்க இரண்டு பேருக்கும் எந்த பிரச்சனையும் இல்ல……”என்றுவிட்டார்.அதை கற்பகத்திடம் கூற அவருக்கு இன்னும் கவலை தான் அதிகமானது.

“அத்த….குழந்தை எல்லாம் இறைவன் நம்மளுக்கு கொடுக்குற வரம்….அதை எப்ப யாருக்கு கொடுக்கனும்னு அவருக்கு தெரியும்…..அதனால நீங்க இதை எல்லாம் நினைச்சு மனசையும்,உடம்பையும் கெடுத்துக்காதீங்க…..”என்று துர்கா சொன்னாலும் கற்பகத்தின் முகம் தெளியாமல் இருக்க,

“ம்மா…..நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்….இதை அப்பா அடிக்கடி சொல்லுவாரு நியாபகம் இருக்கா….அதை தான் நான் இன்னைக்கு இந்த நிமிஷம் சொல்லுவேன்…..”என்று வீரா கூற,கற்பகத்தின் முகமும் தெளிந்தது.ஆனால் இது போல் விழாக்கள் செல்லும் போது ஏதாவது அபஸ்வரம் போல நடந்து கொண்டு தான் இருந்தது.ஆனாலும் அதை கடந்து வரும் பக்குவத்தை கொண்டு வந்திருந்தார்.வீராவிற்கும் இதை எல்லாம் கடக்கும் மன தைரியத்தை துர்கா வரவழைத்திருக்க அவனும் இப்போது எல்லாம் எதிலும் ஒதுங்குவது இல்லை.அவ்வபோது யாராவது எதாவது பேசினால் கோபம் வந்துவிடுகிறது தான் ஆனாலும் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள கற்றுக் கொண்டிருந்தான்.

வாசினிக்கு வளையல் பூட்டி முடித்ததும் துர்காவிற்கும் வளையல் பூட்டினர்.துர்கா மலர்ந்த முகத்துடன் அனைத்தையும் ஏற்றுக் கொண்டாள்.அதை பார்த்துக் கொண்டிருந்த வானாதி,கற்பகத்திடம்,

“எம் பொண்ணை இப்படி சந்தோஷமா நான் பார்த்ததில்லை சம்மந்தி….அவளுக்கு கடவுள் குழந்தையை கொடுக்கனும்….”என்று கலங்கிய படி கூற,

“நல்லது நடக்கும் அண்ணி……என் மருமக மனசுக்கு எல்லாம் நல்லது தான் நடக்கும்….நாம கடவுள் கிட்ட வேண்டுதல் வைப்போம்….மத்ததை அவர் பார்த்துக்குவார்……”என்று கூறிக் கொண்டிருக்க,அவரின் பக்கத்தில் அனைத்தையும் கேட்டபடி தன் மனையாளை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தான் வீரா.

அன்றைய இரவு துர்காவை தன் மடியில் வைத்துக் கொண்டு வெகு நேரம் எதுவும் பேசவில்லை வீரா.ஆனால் அவளின் கைகளில் இருந்த கண்ணாடி வளையல்களை தான் வருடியபடி அவன் இருக்க,துர்காவிற்கு புரிந்து போனது கணவனின் மனநிலை,இருந்தும் அவள் பேசாமல் இருக்க அவனே தொடங்கினான்.

“ஏன் துர்கா நமக்கு குழந்தை வந்தா இப்படி தான செய்வாங்க….”

“ம்ம்….”

“ஊரையே கூப்பிடனும்டீ….பெரிய மண்டபத்துல தான் வைப்பேன்….”என்றவனின் கண்களில் கனவுகள் மின்னின.

“ம்ம்….”

“அப்பறம் குழந்தைக்கு எல்லாமே வாங்கிடுவேன்…..தொட்டில்,பொம்மை…..”என்றவன் சிறிது நேரம் யோசித்துவிட்டு,

“துர்கா பேசாம நாம ஒரு ரூமையே குழந்தைக்கு கொடுத்திடலாம்…….என்ன சொல்லுற…..”என்று கேட்க,

“ம்ம்…..சரி…..”என்றவளை இமைக்காமல் பார்த்தவன் அவளின் கைகளை அழுந்த பற்றி,

“ஏன்டீ நமக்கு குழந்தை பிறக்கும் இல்ல…..”என்று கேட்க,

“பிறக்கும்பா…..”என்று துர்கா கூற,வீராவின் முகத்தில் இன்னும் ஏதோ ஒன்று ஒருவித சுணக்கம் இருந்தது.

“என்னப்பா???…..”என்று துர்கா அவனின் நெஞ்சில் சாய்ந்தபடி கேட்க,

“ஒரு வேலை பிற….பிறக்கலைனா…..”என்று அதை கேட்கவே அவனின் உயிர் வற்றியிருந்தது.அவனின் எண்ணவோட்டம் புரிந்து கொண்ட துர்கா மென்மையாக சிரித்தபடி,

“வீரா…..உங்களை கஷ்டபடுத்தனும்னு நான் இதை சொல்லலை….ஆனா சில விஷயங்களை நாம ஏத்துக்கிட்டு தான் வாழனும்…..ஒருவேளை நமக்கு இல்லைனா நாம தத்தெடுத்து….”என்றவளை இடைமறித்த வீரா,

“இல்ல இல்ல நமக்கு நல்லது நடக்கும் துர்கா….நாம இதை பேசியிருக்கவே கூடாது….”என்று பதட்டமாக கூற,அதற்கு மேல் அவனிடம் பேச முடியாது என்று துர்காவிற்கு புரிந்தது.ஆம் இன்றளவும் அவனிற்கு சில விஷயங்களில் இந்த படபடப்பு வந்துவிடுகிறது தான் அந்த நேரங்களில் துர்கா எதுவும் பேசமாட்டாள் அமைதியாக அவனை அரவணைத்துக் கொள்வாள்.ஆழ்ந்த முத்தமும்,அழுத்தமான அணைப்பு தான் அவனின் நிவாரணியாகும் அத்தகைய நேரங்களில்.இப்போதும் அதே போல் அவனை அரவணைத்துக் கொள்ள,துர்காவின் மனது சஞ்சலத்துடன் கடவுளை பிராத்தனை செய்து கொண்டிருந்தது.

இதோ ஒரு வருடம் கடந்து,

“துர்கா போயே ஆகனுமா…..”என்று வீரா அவளின் பின்னே சுற்றிக் கொண்டிருக்க,துர்கா அவனை சட்டை செய்யாமல் தன் வேலைகளை செய்து கொண்டிருந்தாள்.இப்போது அரசு ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று இப்போது அரசு பள்ளியில் ஆசிரியராக இருக்கிறாள்.

“துர்காமா…..இந்தா இது குழந்தைக்கு டிரஸ் எல்லாம் எடுத்து வச்சாச்சு….”என்று துணி பையை நீட்ட,

“சரித்த….நீங்க படுங்க அப்ப தான் காலையில சீக்கிரம் எழுந்திரிக்க முடியும்….”என்று கூற,

“ஆமா….உங்க அம்மா வாசினி வீட்டுக்கு போயிட்டாங்களா….நீ கேட்டியா…..”என்று கேட்க,

“போயிட்டாங்கத்த…..எனக்கு போன் பண்ணாங்க…..”என்றாள் துர்கா.

“அவங்களுக்கு சின்ன மகளையும் பேரனையும் பார்க்காம இருக்கமுடியாது…..”என்று சிரித்தார் கற்பகம்.

“ஆமா ஆமா…..இப்பெல்லாம் பேரன் தான் வேணும்…..”என்று கிண்டல் செய்தவாரே தன் அறைக்குள் வர,அங்கு முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான் வீரா.அவளை பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டு அமர்ந்து கொள்ள துர்காவிற்கு சிரிப்பு தான் வந்தது.

“வீராச்சாமி இன்னும் மலையிறங்கல போலவே……”என்று கூற,

“என்னை அமைதி படுத்த எதுவும் பேச வேண்டாம்…..”என்றவனின் காரமான பதிலில் துர்கா அமைதியாகிவிட்டாள்.அவளின் முகத்தை பார்த்த வீரா இனி இவள் பேசமாட்டாள் என்று உணர்ந்து,

“சரி நீ மட்டும் போயிட்டு வா…..”என்று கூற,மேலும் முறைப்பு கூடியது.

“ப்ச்…..எதுக்கு என்னை கம்பல் பண்ற எனக்கு என்னவோ மாதிரி இருக்கு….நீ மட்டும் போயிட்டு வா…..”என்ற வீராவின் குரல் மன்றாடலாகவே ஒலித்தது.

“சரி….நீங்க வர வேண்டாம்….”என்றுவிட்டு துர்கா மறுபக்கம் வந்து படுத்துக் கொள்ள,வீராவிற்கு தூக்கம் தூரப்போனது.நாளை வாசினி மகன் பரணிதரனுக்கு முட்டை அடித்து காது குத்துகின்றனர்.அந்த விஷேத்திற்கு தான் வீரா போக வேண்டாம் என்று பிடிவாதம் பிடித்தபடி இருக்கிறான்.திருமணம் முடிந்து இதோ ஒரு வருடம் முடிந்துவிட்டது இருவருக்கும் குழந்தை இல்லை என்பது அத்தனை வருத்தமாக இருந்தது வீராவிற்கு.அதனால் இது போல குழந்தைகள் விழாக்களில் கலந்து கொள்ள அவனால் முடியவில்லை.துர்கா இதுவரை தங்களுக்கு குழந்தை இல்லை என்று ஏங்கியதில்லை ஆனால் வீரா ஏங்குகிறான்.

அவனின் ஏக்கத்தை பார்த்த துர்கா ஒருமுறை,

“நாம ஒரு குழந்தையை தத்தெடுத்துக்கலாமா……”என்று கேட்க,

“வேண்டாம்….எனக்கு என் குழந்தை தான் வேண்டும்…..இது சுயநலமா கூட தெரியலாம்….இருந்துட்டு போகட்டும்…..ஆனா என்னால சிலதை ஏத்துக்க முடியல…..என்னை வற்புறுத்தாத துர்கா…நமக்கு குழந்தை பிறக்கும்…..எனக்கு நம்பிக்கையிருக்கு……”என்றுவிட,அதன் பின் துர்கா அதை பற்றி பேசுவதே விட்டிருந்தாள்.

“துர்காம்மா…..”என்று அவளை அழைக்க,மெல்ல அவனை பார்த்து திரும்பி படுத்தவள்,என்ன என்று கண்களால் வினவ,

“நான் உன்னை கஷ்டப்படுத்துறேனா…..”

“இல்லனு சொல்லமாட்டேன்….ஆனா உங்களை எனக்கு புரியும்….”என்று இரண்டு கை நீட்டி அவனை அழைக்க,குழந்தை போல அவளுள் ஒன்றினான் வீரா.மனமெங்கும் சஞ்சலம் துர்காவிற்கு இருந்தும் கணவனிடம் காட்டிக் கொள்ளவில்லை.தன் முகம் சுருங்கினாலே அவனால் தாங்க முடியாது என்பதை தான் நன்கு அறிவாளே.

“ஏன்டீ நமக்கு மட்டும் இப்படி நடக்குது……”என்றவனின் குரல் உடைந்துவிட,

“ச்சு….வீரா….என்னதிது குழந்தை மாதிரி….எல்லாருக்கும் எல்லாம் உடனே கிடைச்சிடாது….அப்படி கிடைச்சிட்டா அதோட மதிப்பு போயிடும் இல்ல…அதான் நம்மளை கடவுள் காக்க வைக்குறார்….”என்றவளின் நெற்றி முட்டி இதழ் நனைத்தவன்,

“என்னை சமாதனபடுத்த எப்படியெல்லாம் பேசுற நீ……நானா அவ்வளவு பிடிக்குமாடீ…..”என்று கேட்க,துர்கா பதில் ஏதும் சொல்லவில்லை மாறாக அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் விட்டால் அவனுள் சென்றுவிடுபவள் போல் அவளின் அணைப்பு இறுக அதுவே கூறியது அவளின் அன்பை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!