Skip to content
Post Views: 175
அத்தியாயம் 24
மொட்டை மாடியில் ஒற்றை நிலவு குடை பிடிக்க, அண்ணனும் தம்பியும் ஒருவரை ஒருவர் பார்த்து நின்றிருந்தனர்.
Advertisement
கிருபாகரனுக்கு ஏற்கனவே தந்தையை பற்றிய சில விடயங்கள் தெரிந்து இருந்தாலும், மதியம் நடந்த சம்பவத்தின் பின்னர் நித்தியா விளாவறியாக விளக்கியிருந்தாள்.
அதைக் கேட்டு கிருபாகரன் பெரிதாக ஒன்றும் அதிரவில்லை. ஏற்கனவே அவனுக்குமே தந்தையின் செயல்கள் மீது ஒரு அதிர்ப்தி இருக்கத்தான் செய்தது.
Advertisement
Advertisement
இப்போது இங்கு இருவரும் கூடி இருப்பது மதியம் நடந்த சம்பவத்துக்காக இல்லை.
“எப்படி கிருபா?.. அந்த நாய எங்கெங்கயோ தேடி ஒன்றர வருஷத்துக்கு முன்னாடி தான் கண்டுபிடிச்சோம்.. அந்த நாதாரிய கடத்தி வைச்ச அடுத்த நாளே காணாம போனான்.. அவனா தப்பிச்சானா இல்ல யாரும் காப்பாத்தி விட்டாங்களா எதுவுமே தெரியாம தேடி திரிஞ்சும் நம்ம கைக்கு சிக்கவே இல்ல..
Advertisement
…இப்போ ஒன்றர வருஷம் கழிச்சு செத்துட்டானு கூறு போட்ட உடம்ப கொண்டு வந்து போலீஸ் குடுத்துட்டு போயிருக்கு.. எங்க தப்பு நடந்துச்சு.. நமக்கிட்ட இருந்து தப்பிச்சு போனவனுக்கு என்ன நடந்திருக்கும்…?” என்று பிரபாகரன் கேட்க
“தெரியல ண்ணா.. ஆனா விசாரிச்சிட்டேன்.. நம்ம கிட்ட இருந்து தப்பிச்சு போன அடுத்த ரெண்டு நாளுலயே மகாராஷ்டிரா ஹாஸ்பிடல்ல யாரோ இவன புதர்ல கிடந்து தூக்கிக்கொண்டு அட்மிட் பண்ணி இருக்காங்க.. நாம அடைச்சு வச்சிருந்த இடத்துக்கும் அந்த ஹாஸ்பிடலுக்கும் பெரிய தூரம் இல்ல…” என்று கிருபாகரன் சொல்ல
“அப்போ நம்ம கிட்ட இருந்து தப்பிச்சு போற வழியில தான் ஏதோ அவனுக்கு நடந்து இருக்கா?…” என்று பிரபாகரன் கேட்க
“தெரியல ண்ணா.. ஆனா அந்த சிவாவ ஹாஸ்பிடல்ல சேக்கும் போது எந்த ரத்த காயமும் இருக்கலையாம்.. எதனாலன்னு தெரியாம அவனோட ஒவ்வொரு உறுப்பா அழுகி கிட்டே வந்து இருக்கு.. அழுகுன உறுப்பு எல்லாம் ஆப்ரேட் பண்ணி எடுத்து இருக்காங்க.. கடைசியா இதயத்துலயும் மூளைலயும் ஒரேயடியா நினநீர் சேர்ந்து செத்துப் போயிருக்கான்.. அந்த சாவு சாதாரணமானது இல்லைன்னு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கொண்டு வந்து கொடுத்த போலீஸ் சொல்லி இருக்காரு.. நரக வேதனைய அனுபவிச்சு செத்து இருக்கான், நம்ம கொடுத்திருந்தா கூட இப்படி ஒரு தண்டனைய கொடுத்திருக்க மாட்டோம்…” என்று கிருபாகரன் சொல்ல
“அப்படி என்னதான் அந்த ரெண்டு நாள்ல நடந்திருக்கும்.. நீ நாளைக்கு அவன வெச்சிருந்தா ஹாஸ்பிடல்ல யாரையாச்சும் கான்டக்ட் பண்ண முடியுமான்னு விசாரி.. என் கையால அவன கொல்லனும்னு நினைச்சேன் அது நடக்காம போச்சு.. அவன் எப்படி செத்தானு தெரிஞ்சுக்கணும்…” என்று பிரபாகரன் அடக்கப்பட்ட சினத்துடனும் ஆதங்கத்துடனும் சொல்ல
“ஏற்கனவே அந்த போலீஸ் ஆபீஸர் கிட்ட விசாரிச்சிட்டேன் ண்ணா.. அவரும் அங்க உள்ள டாக்டர் நம்பர் எடுத்து தர்றதா சொல்லி இருக்காரு.. தேவைப்பட்டா நேர்லேயே போய் என்னன்னு பாத்துட்டு வாரேன்…” என்று கிருபாகரன் சொல்ல
“சரி சரி.. வந்து ரொம்ப நேரமாச்சு யாராச்சும் தேடுவாங்க கீழே போலாம்.. துர்க்காம்மாவ பாத்தியா எப்படி இருக்கா…?” என்று கேட்டுக்கொண்டு மொட்டை மாடியில் இருந்து பிரபாகரன் படி இறங்க
“நித்தி போய் கொஞ்ச நேரம் கூடவே இருந்து இருக்கா.. ஆனாலும் தனியா விட சொல்லி சொல்லிட்டா போல…” என்று சொன்னவாறு கிருபாகரனும் கீழே வர
இருவரும் மூன்றாம் மாடியில் நின்று தங்கையின் அறையை பார்த்தவர்கள் “அவ மனநிலம இன்னைக்கு மோசமா இருக்கும் தொந்தரவு பண்ண வேணாம்.. அவள பத்தி செல்லம்மா கிட்ட பேசணும்னு நினைச்சேன் ஆனா அவளே பயந்து போய் ஆதூ குட்டிய கட்டி புடிச்சிட்டு இருக்கா.. நாளைக்கு தான் பேசணும்…” என்று பிரபாகரன் சொல்ல
கிருபாகரனும் “நானும் அதத்தான் நினைச்சேன் ண்ணா.. நாம ரெண்டு பேர் இருந்தும் இதுவரைக்கும் துர்க்காவ இப்படியே விட்டது தப்பு.. இனியும் அந்த தப்ப பண்ண வேணாம்.. நாளைக்கு பேசி ஒரு முடிவுக்கு வருவோம்…” என்று சொல்ல
“சரி போய் தூங்கு…” என்ற பிரபாகரன் தனது அறைக்கு செல்ல
கிருபாகரன் படி இறங்கி தனது அறைக்குள் நுழைந்து கொள்ள
நன்கு தூங்கிக் கொண்டிருந்த நித்தியா தூக்கம் கலைந்து, வெளியே சென்று வரும் கணவனை பார்த்து “என்னாச்சுங்க?.. தூங்கலையா? எங்க போயிட்டு வர்றீங்க?…” என்று கேட்க
அவள் திடீரென எழுந்து கேட்ட கேள்வியில் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றவன், பின் “ஆமா தூக்கம் வரல.. நடந்துட்டு வாரேன்…” என்று சொல்ல
“ஏன்? என்னாச்சு ஏன் தூக்கம் வரல?…” என்று நித்தியா விடாமல் கேள்வி கேட்க
“ஏன் தூக்கம் வரலைன்னு சொன்னா அப்படியே தேவையானத அள்ளி தந்து தூங்க வைக்க போறியா?…” என்று கோபமாக இருப்பது போல் சிடுசிடுத்து விட்டு மறுபக்கம் சென்று கட்டிலில் படுத்துக்கொள்ள
‘என்னாச்சு மச்சான ரொம்ப காய போட்டமோ!…’ என்று கழுத்தில் இருந்த செயினை கடித்தபடி யோசித்தவள்
“மச்..சான்…!” என்று அவனுக்கு மட்டுமான பிரத்யேக அழைப்பை ராகம் கூட்டி இழுக்க
அவர்களுக்கான நேரம் மட்டும் அவள் அழைக்கும் மச்சானில் உள்ளம் துள்ளி, உடல் முறுக்கிக் கொண்டாலும்,
‘வேணாண்டா.. உன்ன உசுப்பேத்திட்டு ரிவேஜ்னுட்டு அவ பாட்டுக்கு தூங்கிடுவா.. நீ தான் அவஸ்தப்படணும்…’ என்று உள் மனம் எடுத்துக் கொடுக்க
“வேணாண்டி வெறி ஆயிடுவேன்.. வாய மூடிட்டு படு.. மச்சான்னு கூப்பிட இப்பதான் நினைப்பு வந்ததாக்கும்…” என்று கடுப்பாக சொல்ல
“ரொம்ப பண்ணாதீங்க மச்சான்.. நான் அம்மா வீட்டுல இருந்தப்போலாம் என்ன பண்ணுனீங்களாம்.. என்னமோ என் பொண்டாட்டிய விட்டு இருக்கவே முடியாதுன்னு தேடி வந்த மாதிரி சீன் போட வேண்டியது…” என்று அவளும் வம்பு பேச
“நீ உங்க அம்மா வீட்டுல இருந்தப்போ எப்படி இருந்தேனோ அப்படியே இருந்துக்கிறேன்.. என் கஷ்டம் உனக்கு எங்க புரிய போகுது.. அப்பவும் தூங்க முடியாம நான் தவிச்ச தவிப்பு எனக்கு தான் தெரியும்…” என்று சொல்ல
“எனக்கும் தெரியும்.. தெரியும்…” என்று முனுமுனுத்தவள் எழுந்து சென்று நைட்டி ஒன்றை எடுத்துக் கொண்டு அணிந்திருந்த புடவையை கலைய
‘என்ன பேச்ச காணோம்.. தூங்கிட்டாளா?…’ என்று திரும்பி அவளைப் பார்த்தவனுக்கு விழிகள் ஜொலித்தன.
“எ..என்னடி.. பண்ற…?” என்றான் கரகரத்த குரலில்
“கசகசன்னு இருக்கு அதுதான் நைட்டி மாத்துறேன்…”
அவள் எதற்கு நைட்டி மாற்றுவாள் என்று தெரியுமே ‘உசுப்பேத்தி கடுப்பாக்க பாக்குறாளா?…’ என்று நினைத்தவன்
‘பாக்காதடா பாக்காத.. வேணும்னே பண்றா…’ என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு கண்களை மூட தான் முயன்றான், முடியவில்லை. திரும்பி படுக்க தான் நினைத்தான் நகம் கூட அசையவில்லை.
நித்தியா நைட்டியை மாத்தியவள், தாங்கள் சம்சார சாகரத்தின் போது மட்டும் பயன்படுத்தும் மெத்தையை எடுத்துப் போட்டவள், அதில் படுத்து கொண்டு கிருபாகரனை பார்க்க
“நான் சிக்க மாட்டேன்டி…” என்றவன் முயன்று கண்களை இறுக மூடிக் கொண்டு படுத்து விட
“ப்ச்!.. மச்..சான்…!”
சத்தமே இல்லை அவனிடம் .
“எடுத்து வச்ச பாலும்.. விரிச்சு வச்சு பாயும்.. வீணாகத்தான் போகுது.. அந்த வெள்ளி நிலா காயுது…” என்று நித்தியா குரலில் தாபத்தை கூட்டி பாட
“வெள்ளி நிலா காயலடி நான்தான் காய்சி போய் கிடக்கேன்.. வேணாம் நித்தி உசுப்பேத்தி விட்டுட்டு பாதியில விரட்டி விட்ட வெறி ஆயிடுவேன்.. உன் படுத்தி எடுக்குற
மொத்த ஐடியாவும் எப்ப முடியுதோ அப்போ இறக்கம் காட்டு போதும்…” என்று அவன் சொல்ல
“அதெல்லாம் எப்பவோ இறங்கியாச்சு.. நீங்க இறங்கி மெத்தைக்கு வாங்க …” என்று அவள் கூப்பிட
“நம்ப மாட்டேன் போடி…!” என்றவன் திரும்பி படுக்க
“க்ஹூம்! .. மச்சான்!…”
‘ஐயோ கிறங்குறாளே! இதுக்கு மேல தாங்காது…’ என்று அவன் காம பானம் முழித்துக் கொள்ள, எழுந்து ஒரே தாவலில் அவள் மீது பாய்ந்து இருந்தான்.
“ஆஆஆ! மச்சா…” அவள் வார்த்தைகள் அவன் தொன்டைக்குள் இறங்கியது.
முத்தமிட்டு…
மோகம் முற்றி…
காமன் கணை தாங்கி…
காதல் விரதத்தை கட்டில் இன்றி மெத்தையில் மெல்லிடையாளிடம் முடித்துக் கொண்டான் மதனன்.
மூச்சு வாங்க தன் மீது கிடந்தவனை மெத்தையில் தள்ளி விட்டவளுக்கு சிறிது நேரம் எடுத்தது தன் சுவாசத்தை சீர் படுத்திக் கொள்ள.
“புடவையோட தான் அக்கப்போர்னு பாத்தா நைட்டியோடயுமா?…” என்று தன்னவனுக்கு திட்டிக்கொண்டே பரிதாபமான நிலையில் இருந்த நைட்டியை எடுத்து அணிந்து கொண்டாள், வெட்க சிவப்பு வேறு குறைய மாட்டேன் என்றது பெண்ணவளுக்கு.
ஒற்றை கையை தலைக்கு குடுத்து படுத்துக் கொண்டவன் “வீர விளையாட்டுல சேதாரம் எல்லாம் பாக்க கூடாது.. சந்தையில வச்சே சொன்னேன் இல்ல ஹேவியா பர்பாம் பண்ண காத்து கிடக்கேன்னு…” என்று சொல்ல
“அட மறந்தே போயிட்டேன்.. என்ன ஃபோட்டோ எடுத்தீங்க இல்ல காட்டுங்க…” என்று நித்தியா கேட்க
“அது எதுக்கு?…” என்று மங்கையவளை இழுத்து மார்பில் சாய்த்துக் கொள்ள
“ம்ஹூம்!.. சமாளிக்காதீங்க.. ஃபோட்டோவ காட்டுங்க…” என்று வஞ்சியவள் அடம் பிடிக்க
சரி எத்தனை நாள் தான் மறைத்து வைப்பது என்று நினைத்தவன், தன் ஃபோனை எடுத்து அதில் மறைத்து வைதிருந்த ஃபைலை திறந்து தன்வளிடம் குடுக்க,
வாங்கி பார்த்தவள் கண்கள் விரிந்து கொண்டன. இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட புகைப்படங்கள் இன்று மட்டும் அவளை பதினைந்து புகைப்படங்கள் எடுத்திருந்தான்.
“என்னங்க இவ்வளவு?…” என்று வியந்தவள் ஆரம்ப புகைப்படங்களை பார்க்க,
அவர்களது நிச்சயத்தின் போது தாமரை பூவின் டிசைன் போட்ட இளஞ் சிவப்பு புடவையில், நாணத்துடன், முகம் எல்லாம் மகிழ்ச்சியில், தலை குனிந்து நின்று இருந்த புகைப்படங்கள்.
அவளை எப்போது மனைவி என்று தன் மனதில் பதிய வைத்துக் கொண்டானோ அப்போது இருந்து இதை தானே செய்கின்றான்.
அவனுக்காக அவள் நிச்சயிக்கப்பட்டது… அவனுடையவளாக மாங்கல்யம் வாங்கியது…
முதல் கூடல் முடிந்த பின்…
மறு வீடு சென்றது…
மசக்கையில் சுருண்டு கிடந்தது… மேடிட்ட வயிற்றுடன் வளையம் வந்தது…
தன் குழந்தையை மார்போடு அணைத்து அமுது ஊட்டுவது… என்று ஒன்று விடாமல் அவன் அலைபேசி கண்கள் சேமித்து வைத்திருந்தன.
“என்னங்க இது குழந்தைக்கு பால் குடுக்குறதெல்லாம் எடுத்து வச்சிருக்கீங்க?…” என்று சிறு முறைப்புடன் நித்தியா கேட்க
“ஏய் தப்பா எல்லாம் இல்லடி.. நமக்கு குழந்த பொறந்த நேரம் உன் கூடவே இருக்கணும் போல இருக்கும்.. நம்ம பையனுக்கு நீ பால் குடுக்கும் போது அவ்வளவு அழகு தெரியுமா…” சிலாகித்து சொன்னான் ரசனைக்காரன்.
“தாய்மை பெண்களுக்கு அழகுன்னு சொல்லுவாங்கல்ல.. அந்த அழக நான் பாத்தேன்.. உன்ன விட்டுட்டு வரவே மனசு வராது.. அங்கேயே தங்கிடலாம்னு தோணும்.. ஆனா அப்போலாம் பூர்ணா அண்ணிக்கும் அண்ணாக்கும் ரொம்ப பிரச்சனை போயிட்டு இருந்துச்சு.. ஆதூவ பாத்துக்க நீயும் இல்ல நான் கூட இருந்தாலாவது அண்ணாக்கு ஒரு தெம்பு கிடைக்கும்னு இங்க வந்துடுவேன்.. ஆனா தூக்கமே வராது அதான் ஃபோட்டோ எடுத்து வச்சு அத பாத்துப்பேன்.. உன்ன எவ்வளவு மிஸ் பண்ணுனேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்…” காதலோடு கிருபாகரன் சொல்ல
“தெரியும்.. கோழி குஞ்ச காகம் கொண்டு போன கணக்கா பாத்துட்டு இருப்பீங்களே…” என்று நித்தியா சொல்ல, அவனுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
“யாரு நீ கோழி குஞ்சா!.. நீ சேட்ட புடிச்சு வாத்து குஞ்சுடி…” என்று மனம் கொய்தவளின் மூக்கை பிடித்து ஆட்ட
” ம்ம்!” அவன் கையை தட்டி விட்டவள் “யாரு நானா வாத்து.. நீங்க தான் மக்கு வாத்து…”என்று சொல்ல
“ஏய் மத்த விஷயத்துல வேணும்னா நான் மக்கா இருக்கலாம்.. இந்த விஷயத்துல கெட்டிக்காரன்டி…” என்றவன் அவளை இழுத்து இதழ் அணைத்துக்கொள்ள,
இதழ் யுத்தம் எங்கு முடிய வேண்டுமோ அங்கு இனிமையாக முடிந்தது.
*****
இங்கோ பிரபாகரன் அறையில்…
தூங்காமல் கட்டிலில் படுத்து இருக்கும் தன் கண்மணிகளையே பார்த்திருந்தான் பிரபாகரன்.
அஞ்சனா தூக்கத்தில் கூட ஆதூரியை இறுக்கமாக கட்டிக்கொண்டு தான் படுத்திருந்தாள்.
தனக்காக விரித்த வலையில் குழந்தை மாட்டி இருந்தால் என்னவாகி இருக்கும் என்றும், தான் இங்கு வந்ததால்தான் இத்தனையும் என்றும் அழுது அரட்டிக் கொண்டிருந்தவளை, சிறு அதட்டல் போட்டு தான் தூங்க வைத்தான் பிரபாகரன்.
தனக்கு வரமாக கிடைத்த பொக்கிஷத்திற்கு தன்னாலே ஆபத்தா என்பதிலேயே அஞ்சனாவின் மனம் உழன்று கொண்டிருக்க, இப்போது கூட நிம்மதியாக தூங்குகின்றாளா என்பது தெரியாது.
இதற்கு விரைவில் ஒரு தீர்வு காண வேண்டும் என்ற யோசனையிலேயே பிரபாகரனின் நேரங்கள் கடக்க, சோஃபாவில் படுத்து இருந்தவன் அவனையும் அறியாமல் கண்ணயர்ந்தான்.
கண்ணுறக்கம் தொலைத்து நின்றது என்னவோ துர்க்காவும், பரணியும் தான்.
கூடத்தில் கயிற்றுக் கட்டிலை போட்டு வானத்தைப் பார்த்து படுத்திருந்த பரணி வட்ட நிலவை ரசித்திருக்க,
தன் அறையின் பால்கனியில் நின்று இருந்த துர்க்காவும் அதே வான்மதியை வெறித்திருந்தாள்.
இருவரும் அடுத்தவரைப் பற்றிய சிந்தனையில் தான் இருந்தனர். அவன் காதலாக…
அவள் ஏக்கமாக…
பரிணியின் கையினால் தன் கழுத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும் தாலியை தூக்கி பார்த்தாள் துர்க்கா.
அன்று 14 வயதில் கோயில் திருவிழாவில் வைத்து இப்போது அம்மன் முன்பு தாலி கட்டி கூட்டி செல்வதாக கேட்டானே, இதோ இப்போது அவள் கழுத்தில் இருக்கும் தாலியும் அதே அம்மன் முன்நிலையில் அவள் கழுத்தில் எறியதுதான், இன்று நடந்தது ஒருவேளை அன்றே நடந்திருந்தால் இப்போது இப்படி களங்கப்பட்டு அவள் நின்று இருக்க வேண்டிய அவசியமில்லை என்று தான் தோன்றியது.
அவள் உதடுகளில் ஒரு வித ஏமாற்றம் கலந்த புன்னகை. இப்போது கூட அவளுக்கு காதல் என்றால் என்னவென்று சரியாக புரியவில்லையே, அப்போது சரியாக சிந்தித்து செயல்படும் திறன் இல்லாத நேரம் அந்த நயவஞ்சகன் ஆட்டி வைத்த ஆட்டத்திற்கு இவளும் ஆடிவிட்டாள்.
“ஏங்க அப்பவும் காதல்னா என்னனு புரியல.. இப்பவும் சரி வற தெரியல.. நீங்களாவது எனக்காக என்ன தேடி வந்து, முழு மனசா என்ன ஏத்துக்கிட்டு காதல்னா என்னனு புரிய வைப்பீங்களா!.. என்னால இதுக்கு மேல எதையுமே தாங்க முடியாது.. எல்லாத்தையும் விட்டுட்டு உங்க கிட்ட ஓடி வந்துடலாம் போல இருக்கு..
…இந்த துர்க்காவ துர்க்காவா மட்டும் பாக்கிறவங்க கிடைக்க மாட்டாங்களான்னு இருக்கு.. ஆனா எல்லாருக்கும் நான் பண்ணுன தப்பு மட்டும்தான் கண்ணுக்கு தெரியுது.. கைதவறி விழுந்த தாலிக்காக கட்டாயத்தின் பேர்ல நீங்க என்ன ஏத்துக்க கூடாது.. காதலாக கூட வேணாம் கட்டுன பொண்டாட்டி என்ற அளவிலயாவது நான் உங்க மனசுல இருக்கேனா?…” அவள் கேட்டது நிலவிடம் தான்.
அது அவள் கண்ணாளனிடம் காதல் தூது சொல்லிவிட்டது போலும்
“ஓய் துர்க்காம்மா!.. பிரபா இப்படி உன்ன கூப்பிடும்போது உன்ன துர்க்காம்மானு கூப்பிட எனக்கும் ஆசையா இருக்கும்.. ஆனா சாரப்பாம்புன்னு கூப்பிடும்போது, மூக்கு சிவந்து, கண்ணு ரெண்டையும் உருட்டி ஒரு பார்வை பாப்ப பாரு.. ப்பா! அப்படி இருக்கும்..
…அதுக்காக தான் உன்கிட்ட வம்பு பண்ண அப்படி கூப்பிடுவேன்.. நீயும் எங்கிட்ட மட்டுமே சண்ட போடுவ.. அப்ப புரியல, இப்ப புரியுது.. உரிமையுள்ள இடத்துல தானே கோபம் வரும்.. சண்ட போட முடியும்.. உனக்கும் புரியல, எனக்கு புரியல நமக்குள்ள என்ன இருந்ததுன்னு..
…அப்ப கூட பரவால்ல.. இப்பவும் புரியாம தான் சுத்திட்டு இருந்திருக்கேன் பாரேன்.. உன் வாழ்க்கைய அந்த அயோக்கியன் நாசம் பண்ணிட்டான்னு தெரிஞ்சதும் அவன கொன்னு போடுற அளவுக்கு வெறி வந்துச்சு.. நீயே மொத்தமா மாறி நின்னப்போ உன்ன எப்படியாவது சரி பண்ணனும்னு மனசு கிடந்து துடிச்சுது.. எல்லா பொண்ணுங்களையும் போல உனக்கும் ஒரு நல்ல வாழ்க்க அமையனும்னு எப்பவுமே அந்த அம்மன் கிட்ட கேட்பேன்..
…இது எல்லாமே எனக்கு தெரிஞ்ச பொண்ணு, என் நண்பனோட தங்கச்சின்னு செய்றேன்னு என்ன நானே ஏமாத்திகிட்டு இருந்திருக்கேன்.. நண்பனோட தங்கச்சிக்காக கொல பண்ற அளவுக்கு போவேனா!.. இல்ல 14 வருஷமா உன் வாழ்க்க சரியாகிடாதானு தவிப்பேனா!.. இந்த ரெண்டு நாளா யோசிச்சதுல தான் என் மரமண்டைக்கே புரிஞ்சது.. நீ மட்டும் தான் இந்த 14 வருஷம் என் மனசுல இருந்திருக்க.. இனியும் உன்ன தனியா விட மாட்டேன்.. கூடிய சீக்கிரமே உன்ன என் கைக்குள் கொண்டு வரணும்.. உன் மனச மாத்தி உன் முகத்துல அந்த பழைய சிரிப்ப பாக்கணும்.. அந்த குண்டு கண்ணு ரெண்டும் என்ன முறைச்சு பாக்கிறதையும் ரசிக்கணும்…” என்று நிலவை தன்னவளாக நினைத்து கூறியவனது இதழ்களில் அழகிய மந்தகாச புன்னகை.
தனக்கு திருமணமே வேண்டாம் என்று இருந்தவன் தான். ஆனால் துர்க்கா தான் தன் மனைவி என்று வந்த பின்னர் அவன் இயலாமை எங்கோ சென்று ஒழிந்து கொண்டது. அவளிடம் அவனுக்கு எந்த நெருடலும் இருக்கப் போவதில்லை, எனவே தன் எதிர்கால இனிய கனவுகளில் சஞ்சரிக்க தொடங்கி விட்டான்.
error: Content is protected !!