Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

95. தேவி - தேன் சிந்துமோ மேகம்

தேன் சிந்துமோ மேகம்-14(2)

அத்தியாயம் – 14.2
எழிலன், நிலா இருவரும் கல்லூரி விழா முடித்துவிட்டுத் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பினார்கள். நிலாவின் தோழிகள் எழிலன் பாட்டைப் பற்றி பேசிக் கொண்டு வந்தனர்.
எழிலனின் நட்புகளோ “மச்சா, இன்னிக்கு காலேஜ் டே மறக்கவே முடியாது டா. அந்த நிலவனின் தங்கச்சி டான்ஸ் என்னமா இருந்தது.” எனச் சிலாகித்தனர்.
சம்பந்தப்பட்ட இருவரும் மௌனமாகவே  எல்லாவற்றையும் கேட்டிருந்தனர். எழிலனின் வீட்டில் அவனின் பாட்டி கற்பூரம் சுற்றி திருஷ்டி எடுத்தார்.


Advertisement

செழியன், மலர்விழி இருவரும் தங்கள் மகனைச் சேர்த்து அணைத்துக் கொண்டனர்.
அதே சமயம் மலர்விழி “அந்தப் பொண்ணு நிலவழகிக்கும் யாராவது இப்படிச் சுத்திப் போட்டா நல்லா இருக்கும்” எனக் கூற, எழிலன் விழிகள் பளிச்சிட்டது.
“என்னமா.. திடீர்னு சொல்றீங்க?” எனக் கேட்டான் எழிலன்.

Advertisement

எழிலனின் பாட்டியும் “ஆமாம் எழிலா. அந்தப் பொண்ணு டான்சும் ரொம்பவே நல்லா இருந்தது. கடமைக்காக ஆடாம, ஆத்மார்த்தமா ஆடினது நல்லாவேத் தெரிஞ்சுது. அதான் நாங்க எல்லாரும் அவளைக் கூப்பிட்டுப் பாராட்டினோம்” என்றார்.

Advertisement

“இது எப்போ நடந்தது?”
“டான்ஸ் புரோகிராம் முடிஞ்சு, ஆர்க்கெஸ்ட்ரா அரேஞ்ச் பண்ணப் போன கேப்பில் பேசினோம். அந்த பொண்ணு ஃபேமிலி கூட வந்தாங்க எழிலா” என்றார் மலர்விழி.
“அந்த நிலவனும் வந்திருந்தாரா? கொஞ்சம் தகராறு பிடிச்சப் பேர்வழி ஆச்சே?” என்றான் எழிலன்.

Advertisement

“அப்படி எல்லாம் ஒண்ணும் தெரியலை. கொஞ்சம் ரப் டைப் போல் இருக்கார். நம்ம ஸ்டூடண்ட் தானே. கொஞ்ச நாள் ஆனா தானே சரியாகிடுவார்” என்றார் மலர்விழி.
“ஆனாலும் உங்களுக்கு ஓவர் கான்ஃபிடன்ஸ் தான் மலர் மேடம்” என்ற எழிலன் “நீங்க கூப்பிட்டதும் உடனே வந்தாங்களா அந்த அழகி மேடம்” என்றான்.
எழிலனின் இந்தச் சுருக்கத்தை மலர்விழி கவனிக்கவில்லை. தனது மகனுக்குப் பதில் மட்டும் கூறினார்.
“முதலில் ட்ரெஸ்ஸிங் ரூமில் போய் கேட்டேன். என்னோட பேரண்ட்ஸ் வந்திருக்காங்க. அவங்க கிட்டே கேட்டுட்டு வரேன் மேடம்னு சொன்னா. நானும் கூடவே போய் அவங்களையும் கூட்டிக்கிட்டு வந்து அத்தை, மாமா கிட்டேப் பேச வச்சேன்” என்றார்.
“அதானேப் பார்த்தேன். இந்த மேடம் பாஷா பாய் சம்மதமில்லாமல் எதுவும் செய்ய மாட்டாங்களே” என்றான் எழிலன்.
“அது என்னடா பாஷா பாய்”
“ம். குடும்பத்தைக் காக்க கம்பத்திலே கட்டி வச்சு அடி வாங்கினாரே பாஷா. அந்த மாதிரி இந்த பாஷா பாய் அவர் தங்கச்சிக்கு ஒன்னுனா, சம்பந்தப்பட்டவங்களை கம்பத்தில் கட்டி வச்சு அடிப்பார்” என்றான் எழிலன்.
தன் மகன் கேலியாகப் பேசுகிறான் என நினைத்த மலர்விழியும் “ஆனாலும் ரொம்ப ஓவராத் தான் போறீங்க டா” என்றார்.
பின் அவரவர் அறைக்குத் திரும்பிட, எழிலன் தன் போனில் “வானம் என் விதானம் .. என்றும் நீயே என் சன்னிதானம்” எனப் பாடி அனுப்பினான்.
அதைக் கேட்ட நிலாவிற்கு வெட்கமாகவும் வந்தது. அதே போல பதிலை அனுப்பவும் அவளுக்குத் தெரியவில்லை. தன்னுடைய மனதை ஹார்ட் எமோஜியாக அனுப்பி வைத்தாள் நிலா. அதற்கு பதில் ஹார்ட் அனுப்பினான் எழிலன்.
இதுவரை தம்ஸ் அப்களும், சிரிக்கும் எமோஜிகளும் போட்டுக் கொண்டிருந்த இருவரும் ஹார்ட் எமோஜி போட ஆரம்பித்தனர்.
அடுத்த நாள் நிலாவின் நடன வீடியோ கல்லூரி சார்பாக அவர்களின் வெப்சைட்டில் பதிந்து இருந்தனர். அதே போல எழிலனின் பாடலும் போடப் பட்டிருந்தது.
இருவரின் நட்புகளும் அதைச் சிலாகித்துப் பேசினார்கள். எல்லா முக்கிய நிகழ்வுகளும் போட்டோவாகவும் வரும். என்றாலும் வீடியோ சிலவற்றை மட்டுமே போட முடியும். அதனால் இருவருக்குமே மிகவும் மகிழ்ச்சி.
நிலா அந்த லிங்க்கைத் தன் குடும்பத்தினருக்கும் அனுப்பி வைக்க, அவர்களுக்குப் பெருமை தாங்கவில்லை.
தொடர்ந்து அடுத்த இன்டெர்னல் தேர்வுகள் வரவிருக்க, நிலா படிக்க உட்கார்ந்தாள். எழிலனும் அவனின் எம்பில் வைவாவிற்குத் தயாராக ஆரம்பித்தான்.
எழிலன் முக்கிய வரலாற்று நிகழ்வுகளான ஆனை மங்கலச் செப்பேடுகள் குறித்து ஆய்வு செய்திருந்தான். அதில் சில குறிப்பிட்டச் சில செய்திகளுக்கு வேறு வடிவம் இருப்பதாகக் கூறி அதை நிரூபிக்கும் முயற்சியிலும் இருந்தான். கிட்டத்தட்ட அது முழு வடிவம் பெற்று விட்டது.
அந்த ஆராய்ச்சிச் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு, வரலாற்றுத் துறை மாணவர்கள் அனைவரும் வரவேண்டும் என கல்லூரி உத்தரவிட்டது. நிலாவும் சென்றிருந்தாள்.
அந்த நிகழ்ச்சிக்கு இந்திய அளவில் வரலாற்று ஆய்வாளர்களும், மாநிலத்தின் முக்கியப் பிரதிநிதிகளும் வந்திருந்தனர். குறிப்பாகத் தொல்பொருள் துறையினர் கணிசமாகக் கூடியிருந்தனர்.
அப்படிக் கூடியிருந்த விருந்தினர்களை எழிலனின் நட்புகளும், அவனின் மென்டாரும் நன்றாக உபசரித்தனர். அதைப் பார்த்த மற்ற மாணவர்களும், சில சில உதவிகள் செய்ய, வந்தவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி.
எழிலன் அவனின் ஆராய்ச்சிக் குறித்துப் பேசப் பேச, பல்வேறு நபர்களும் குறுக்குக் கேள்விகள் கேட்டனர். இதில் வேறு மொழிப் பேசுபவர்களும் கேட்டனர். எல்லோரரையும் எழிலன் சமாளித்துப் பதில்கள் உரைக்க, கல்லூரியே அவனை வியந்து பார்த்தது.
அந்த கருத்தரங்கு முடியும்போது எக்ஸாமினர்களாக வீற்றிருந்த நால்வரும் மேடை ஏறி எழிலனைப் பாராட்டினார். அத்தோடு அவனின் ஆராய்ச்சியை அங்கீகரிக்கப் பரிந்துரை செய்வதாகவும் கூறினார்கள.
எழிலனின் தந்தை செழியன் மற்றும் அவனின் அன்னை மலர்விழி இருவருக்கும் சந்தோஷத்தில் கண்கள் காலங்கியது. கல்லூரித் தாளாளர் எழிலனை இந்த வருடமே அசிஸ்டண்ட் புரொஃபசர் பணியில் அமர்த்துகிறேன் என உறுதியளித்தார்.
கல்லூரி நிர்வாகம் எழிலனுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் பார்த்து நிலாவிற்கு வியப்பாகவே இருந்தது. அதைத் தன் அண்ணனிடம் தெரிவிக்க அவனோ “அவங்க வீட்டில் ஏற்கனவே ரெண்டு புரொஃபசர். இவனும் அந்த லைன் தானே வரான். அதான் இம்பார்டண்ஸ் அதிகமா இருக்கு” என்றான்.
நிலாவோ “அப்படித் தோணலைனா. அவரோட ரிசர்ச்ப் பற்றி இன்னிக்குப் பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் பாராட்டிப் பேசினாங்க தெரியுமா? காலேஜ்லே இருக்கிறவங்க சொல்றது வேறே. இவங்க எல்லாம் அப்படிப் பேச வைக்க முடியாது” என்றாள்.
“ம். நீ சொல்றதும் சரிதான். அவன் ரிசர்ச் பற்றி நானும் கேள்விபட்டேன். ஹிஸ்டரிலே அது ஒரு மைல் ஸ்டோன்னு பேசிக்கறாங்க. அதோட அவன் திறமை எல்லாம் அந்த சின்ன ஊரில் வேஸ்ட்டாப் போகுதுனு என் ஃபிரண்ட்ஸ் சொல்றாங்க” என்றான் நிலவன்.
“ஏன் அண்ணா? அங்கே நல்ல பெயர் தானே அவருக்கு?” எனக் கேட்டாள் நிலா.
“ம்ச். இங்கே இருந்தா அவன் ரேஞ்ச்சே வேறே தெரியுமா? இந்த ரிசர்ச் மட்டும் சென்னையில் உள்ள ஃபேமஸ் காலேஜ் மூலமா செய்தா, மீடியா பூரா அவனைக் கவர் பண்ணியிருக்கும். அங்கே இந்த அளவு புகழ் கிடைக்காது” என்றான் நிலவன்.
“இந்த காலேஜ்  நல்ல காலேஜ்னு தானே நீயே சேர்ந்த? அப்புறம் ஏன் இப்படிச் சொல்ற?”
“படிக்க நல்ல காலேஜ் தான் நிலா. ஆனால் முன்னேற்றம் எல்லாம் ஒரு கட்டத்தில் நின்னுடும். எழிலன் அப்பா வைஸ் பிரின்சிபால் தான் அவர் டிபார்ட்மெண்ட்டுக்குப் பெரிய அசெட். ஆனால் அவரை எடுத்த உடனே எல்லாம் இந்த பொசிஷன்கு கொண்டு வரலை. சீனியாரிட்டி பிரகாரம் தான் வந்தார். இதுவே சென்னை மாதிரி நகரத்தில் இருந்தால் அவர் குவாலிபிகேஷனுக்கு இந்த நேரம் கவர்ன்மெண்ட் ஹையர் எஜுகேஷன் டிபார்ட்மெண்ட்டில் பெரிய போஸ்டிங் கிடச்சிருக்கும். அவர் அந்த காலேஜ் விட்டு வெளியவே வரலை. அப்படித் தான் எழிலனும் இருப்பான் போல்.” என்றான் நிலவன். 
அப்போதைக்கு அண்ணனிடம் வேறு எதுவும் கூறவில்லை. என்றாலும் நிலாவின் மனதில் இது தனியாகப் பதிந்தது.
அன்றைக்கு நிலா தனியாக எழிலனுக்குக் கங்க்ராட்ஸ் என மெசேஜ் அனுப்ப, எழிலனும் தாங்க்ஸ் அழகி எனப் பதில் அனுப்பினான்.
எழிலனின் அழகி நிலாவினை ஏதோ செய்ய, வெட்கத்தில் சிவந்தாள்.
நிலாவிற்கு இரண்டாம் செமெஸ்டெர் தேர்வுகள் நடக்க, எழிலன் வரலாறு தவிர மற்ற டிபார்ட்மெண்ட்களுக்கு எக்ஸாமினராகச் சென்றான். அதனால் எல்லோருமே பிசியாக இருந்தார்கள்.
நடுவில் நிலவனுக்கும் அவனின் இன்டர்ன்ஷிப் சமபந்தமான வைவா நடைபெற்றது. அத்தோடு இரண்டு தியரி பேப்பர்களும் இருக்க, அதை எழுதும்போது எழிலன் தான் அவனுக்கு எக்ஸாமினர்.
நிலவன் மனதிற்குள் இந்த காலேஜ்லேயே இருந்தா இதுதான் நடக்கும் என நினைத்துக் கொண்டான்.
செமெஸ்டெர் முடிந்து விடுமுறைக்கு நிலா தன் வீட்டிற்குச் சென்று விட்டாள். எழிலனும் கிராமத்திற்கு சென்றுவிட்டு வந்தான்.
நிலவன் தங்கள் நிறுவனத்தில் மேலாளராக பொறுப்பேற்றுக் கொண்டான். நிலாவிற்கு ஆயிரம் பத்திரம் கூறி, இரண்டாம் வருட ஹாஸ்டல் வாசத்திற்கு அனுப்பி வைத்தான் நிலவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!