Skip to content
Post Views: 207
அத்தியாயம் 16
ஜிம்மில் சேர்ந்து இரு வாரங்கள் ஓடி விட்டது. இந்த இரு வாரங்களில் உடலின் தசை வலிமை மற்றும் சகிப்புத்தன்மையை, படிப்படியாக உயர்த்துவதற்காக சின்ன சின்ன ஒர்க் அவுட்டுகளை மட்டுமே கொடுத்து வந்தாள் மேனகா.
புஸ் அப், ஸ்ட்ரெச்சிங், புல் பாடி ஒர்கவுட் என மாலை நான்கு பதினைந்து முதல் ஐந்தே முக்கால் வரை ஜிம்மிலேயே இருவரையும் பிடித்து வைத்துவிடுவாள்.
அதற்கே தஸ் புஸ் என பெரு மூச்சுவிட்டு இடுப்பை பிடித்து கொள்வாள் தர்ஷி.
Advertisement
‘எனக்கு வலிக்கலையே’ எனும் சுபாவம் கொண்ட கமலியோ இங்கேயும் அப்படியே இருந்தாள். எப்படியாவது ‘லவ்வருக்கேத்த லவ்லியாகனும்’ என்ற தாரக மந்திரமே அவளை எப்போதும் சுறுசுறுப்போடு ஓட வைத்தது. அப்படியே இந்த இரு வாரங்களும் வெற்றி கரமாய் ஓடியிருக்க, “இவ்வளவு தானாடி ஜிம் ஒர்க் அவுட்லாம்.. இந்த மிஷின்ல பண்ற ஒர்க் அவுட்லாம் நமக்கு கிடையாதாடி” என அங்கிருந்த பெயர் கூட தெரியாத மிஷின்களை பார்த்து கமலி கேட்க
“ஏன்டி, உனக்கிந்த கொலைவெறி.. அதெல்லாம் பார்க்கவே பயமா இருக்குடி.. நாம இப்படியே, ஸ்ட்ரெச், புல் பாடி ஒர்க் அவுட்டுனு ஒரு பத்து கிலோ குறைச்சிட்டு ஓடிடுவோம்.. இந்த இரண்டு வார உடம்பு வலியையே தாங்க முடியலடி, இதுல மிஷின் வேறையா?” அழும் குரலில் கூறினாள் தர்ஷி.
ஆனால் கமலிக்கோ அந்த மிஷின்களின் மேல் ஆசை போல.. எப்போதும் ஏதாவது ஒரு மிஷினை, இல்லை அதில் வியர்க்க விறுவிறுக்க ஒர்கவுட் செய்பவர்களை வெறிக்க பார்த்திருப்பாள். “பார்த்தது போதும் வாடி” என தர்ஷி தான் அவளை வலுக்கட்டாயமாய் இழுத்து செல்வாள்.
Advertisement
எந்த நேரத்தில் கமலி சொன்னாளோ, மேனகா மறுநாளில் இருந்து “இந்த இரண்டு வாரமா நீங்க கத்துகிட்ட எல்லாத்தையும் இனி மார்னிங் ஒர்க் அவுட்டா, காலை ஐஞ்சு மணில இருந்து ஆறு மணி வரை பாலோ பண்ண ஆரம்பிச்சுடுங்க” என்றதில் நெஞ்சை பிடித்தாள் தர்ஷி..
Advertisement
“அப்போ தினமும் காலை வேற ஜிம் வரனுமா” பீதியானாள்.
“இல்லையில்லை.. ஹாஸ்டலில் வச்சுகோங்க, ஆனால் கொஞ்சம் காத்தோட்டமான இடமா பாத்து பண்ணுங்க” எனவும், பெருமூச்சுவிட்ட தர்ஷி, ‘அப்பாடா கிரேட் எஸ்கேப்’ என நிம்மதியானாள்.
ஆனால் கமலியோ.. “இந்த சிம்பிள் ஒர்கவுட்லாம் காலையில் பண்ணனும்னா, சாயங்காலம் இங்க என்ன பண்றது” என கேட்டு வைக்க, ‘ஆமால்ல..’ என்பது போல தர்ஷியும் பார்த்து வைத்தாள்.
Advertisement
“நாளைக்கு வாங்க சொல்றேன்” என சிரித்தபடி அவர்களை அனுப்பி வைக்க, கமலி எதிர்பார்ப்போடு மிஷின்களை பார்த்து வைக்க, ‘இவ சிரிப்பே சரியில்லை’ என்ற தர்ஷியோ பீதியானாள்.
மறுநாளில் ட்ரெட் மில், எலிப்டிக்கல், செக்கிளிங் என மூன்றையும் காட்டி, “நீங்க இரண்டு பேரும், அடுத்த ஒரு மாசத்துக்கு இது கூட தான்” என சொல்லிவிட்டு, அன்றே அவை மூன்றையும் பயிற்று விக்க துவங்கி விட்டாள் மேனகா.
துவங்கிய இரண்டே நாளில் கால் ஒரு பக்கம் சைடு வாங்கியது தர்ஷிக்கு. கமலிக்கு சொல்லவே வேண்டாம். உடலில் உள்ள அத்தனை மூட்டும் வலியெடுத்தது.
“சிம்பிள் ஒர்க் அவுட்டோட ஓடிடலாம்னு சொன்னேன். கேட்டியா?உன் நார வாய வச்சிட்டு சும்மா இருக்க சொன்னேன் கேட்டியா.. மிஷினையே குறு குறுனு பார்த்துட்டு இருந்த, வெனகாரி மேனகா வச்சு செஞ்சுட்டா, செத்தா எல்லாரையும் சுடுகாட்டுல வச்சு எரிப்பாங்க.. நம்பள இந்த ஜிம்முக்குள்ளேயே புதைச்சிடுவாங்க போல.. எல்லாத்துக்கு காரணம்! அவன் தான்.. அந்த கோகுல் பய தான். டேய் கோகுல்.. கைல சிக்குன, செத்தடா” புலம்பி தள்ளிவிட்டாள் தர்ஷி.
கமலிக்கோ இந்த வலிகளையெல்லாம் வேணாம் போ என தூக்கி எரியவும் முடியவில்லை, கிரிக்காக கொஞ்சம் பொறுத்துகோயேன் என சமாதானம் செய்த மனதையும் ஏற்று கொள்ள முடியவில்லை. பந்தாவாக இறங்கிவிட்டாள் ஜிம்மிற்குள். ஆனால் அந்த ஒன்றரை மணி நேரத்தை கடப்பதற்குள் உடலில் எங்கே வலிக்கிறது என தெரியாத அளவிற்கு எல்லா பகுதிகளும் வலியெடுத்து நரக வேதனையை கொடுத்தது.
அதற்கு மேல் ஒரு நாள் கூட பொறுக்க முடியவில்லை தர்ஷிக்கு. போன் அடித்து விட்டாள் கோகுலுக்கு.
மறுநாள் பாஸ்ட்புட் சென்டரில் டேபிளை சுற்றி அமர்ந்திருந்தனர் கோகுல், தர்ஷி, கமலி மூவரும்.
“கோகுல்.. நாம வேணா பிரேக்கப் பண்ணிக்கலாமா!” என கேட்ட தர்ஷியை கோகுல் அழுத்தமாய் பார்த்து வைக்க, கமலிக்கோ குடித்து கொண்டிருந்த டீ புரையேறியது.
அவளின் அருகே டிஸ்யூ பாக்ஸை நகர்த்தி வைத்தான் கோகுல், வேகமாய் அதிலிருந்து டிஸ்யூ ஒன்றை எடுத்து துடைத்து கொண்டவள். “லூசா டீ” என அடிக்குரலில் கடிந்தாள் கமலி.
ஆனால் அதற்கு தர்ஷியோ “அவன் தாண்டி லூசு.. பத்து கிலோ எடை என்ன அவ்வளவு ஜாஸ்தியா, அதை போய் குறை குறைனு சொல்லிட்டு, இப்போ என் ஆயுசையே குறைச்சுருவான் போல” பேச்சு கமலியிடம் இருக்க, பார்வையோ கோகுலிடம் இருந்தது.
‘இதென்ன புது பிரச்சனை’ என கமலி விழித்தாள்.
கோகுலோ “இப்போ என்ன.. கல்யாணம் வேணாவா.. கேன்சல் பண்ணிடுவமா.. நான் வேணாமா” கோபமாய் ஆரம்பித்து கெஞ்சலில் முடிக்க.
தர்ஷியோ கோகுலை விடாது பார்த்து வைக்க “நான் உனக்கு வேணாம்.. ஆனா நீ எனக்கு வேணுமே..” அழுத்தமாய் கோகுல் கூற
திடுக்கிட்டாள் கமலி “டிராக் மாறுது கமலி.. கிளம்புடி இங்க இருந்து” என வராத போனை காதில் வைத்தபடி, பாதி குடித்த டீயை அப்படியே வைத்துவிட்டு “ஹலோ.. ஹலோ..” என இவள் அங்கிருந்து நகன்று சென்றுவிட, கோகுலோ நன்றிபார்வையை அவள் பக்கமாய் செலுத்தினான்.
அதெ அறியாத கமலியோ தப்பித்து ஓடும் சாக்கில், வேறு டேபிளை தேடிக்கொண்டு செல்ல, அவளின் மீது வாலிபன் ஒருவன் நச்சென இடித்து வைக்க, போன் கை நழுவி கீழே விழுந்தது.
அவள் சுதாரிப்பதற்குள் “சாரி ஆண்டி” என்ற குரலோடு, கீழே விழுந்த போனையும் எடுத்து அவள் கையிலேயே கொடுத்திட, ‘என்னது ஆண்டியா?’ ஷாக் ஆனாள் ‘என்ன விட ஒரு ஐஞ்சாறு வயசு தான் சின்னவனா இருப்பான்.. அக்கா சொன்னா கூட பரவாயில்லை.. ஆண்டியாடா நானு’ தன்னை தானே குனிந்து பார்த்தவள், ‘அவ்வளவு வெயிட்டாடி நீ’ என இவள் நினைக்க, இருக்கும் மனநிலையையும் கெடுத்து சென்றான் அந்த வாலிபன்.
ஒரு மூலையில் இடம் கிடைக்க போய் அமர்ந்தபடி போனை தான் பார்த்தாள் லேசாய் கீரல் விட்டிருந்தது. “ப்ச்.. டெம்பர் போச்சா, அத வேற மாத்தனுமா” என புலம்பியபடி வேடிக்கை பார்த்திருந்தாள்.
பப்ஸ், பிரட், சான்விட்ச் என வித வித நறுமணங்கள் அவள் மூக்கை துளைத்தாலும், தன்னை கட்டுபடுத்தி அமர்ந்திருந்தாள். ஏதேதோ எண்ணங்கள் அவளை ஆக்கிரமித்துவிட அமைதியாய் நேரத்தை நெட்டி தள்ளினாள்.
ஒரு வழியாய் கோகுல் தர்ஷியை சரிகட்டி அழைத்துகொண்டு இவளிடம் வந்தான்.
“தேங்க்ஸ் பார் கிவ்விங் பிரைவசி” என கோகுல் கூற, “சாரி கமலி” என தர்ஷி, இவளை தனியாக விட்டதற்காக மன்னிப்பு வேண்ட, கமலியோ இருவரையும் முறைத்து பார்த்து, பின் “இதுக்கெல்லாமா தேங்கஸ், சாரிலாம் சொல்வாங்க, ப்ச் போங்கண்ணா” என சலித்து கொண்டாள் கமலி.
எது எப்படியோ தர்ஷியை மீண்டும் ஜிம்மிற்கு தொடர்ந்து வரும்படி செய்துவிட்டான். தர்ஷி இரண்டரை கிலோ குறைந்திருக்க, கமலி நான்கு கிலோ வரை குறைந்திருந்தாள். ‘வெல்டன் கமலி, இப்படியே போனா.. சரியா எட்டு இல்ல பத்து மாசம் தான் சூப்பரா குறைச்சு பிட்டாகிடலாம்’ என ஊக்கம் கொடுக்க சந்தோஷத்தின் உச்சிக்கு போனாள் கமலி.
அவள் முகத்தை பார்த்தே “ம்ஹூம் அதுக்காக ஓரேயடியா வெயிட்டை குறைச்சிடலாம்னு பிளான் பண்ணாதீங்க கமலி.. அது ரிஸ்க் ஆகிடும். படிபடியா எடைய குறச்சா தான் நல்லது. சட்டுனு குறச்சா இரண்டு மடங்கா வெயிட் ஏறிடும்” என உண்மையான காரணத்தையும் சொல்லிட, ‘சரி’ என தலையசைத்துக் கொண்டாள்.
********
error: Content is protected !!