Skip to content
Post Views: 189
அந்த சந்தோஷம் அப்படியே அன்று முழுதும் அவளிடம் பிரதிபலித்தது. கண்ணாடி முன் நின்று இப்படியும் அப்படியுமாய் திரும்பி பார்த்தாள். டயர் போல் இருக்கும் வயிற்று பகுதி, இன்று நன்றாகவே கொழுப்பை கரைத்து சற்று வடிவானது போல தெரிந்தது. அந்நேரம் போன் செய்தான் கிரி, இவளும் வீடியோ காலில் இணைந்தாள்.
கிரி என்றதுமே எங்கிருந்து தான் வருமோ எனர்ஜி, ஆனால் இன்று சற்று அதிகமாகவே வெளிப்பட்டுவிட்டது.
“கிரி..” என உற்சாக குரலில் அழைத்து, “சாப்பிட்டிங்களா.. வேலை முடிஞ்சதா?” என வெகு நாட்களுக்கு பின் ஆரவராமாய் கேட்க, திடுக்கிட்டான் கிரி.
‘என்ன அதியசம்.. பழைய மாதிரி துள்ளலான குரலா அதுவும் இவளிடமிருந்தா?’ என்னவாக இருக்கும், அவசர அவசரமாய் அவள் முகத்தை ஆராய்ந்தான். ஆனால் முகம் தெளிவாயில்லை.
Advertisement
“ப்ச்.. சரியா நீ தெரியல கமலி, உன் முகமும் கூட.. டவர் பிராப்ளமா” என எடுத்ததுமே கேட்டு வைக்க
இத்தனை நாளில் இல்லாத டவர் பிரச்சனை இப்போதா? “நீங்க எனக்கு நல்லா தெரியுறீங்களே.. வாய்ஸ் கூட பிரேக் ஆகலையே” என கூறியவள் அப்போது தான் கேமரா இருந்த பக்கம் நொறுங்கி இருப்பதை கவனித்தாள். கூடவே பாஸ்புட் கடையில் போன் கீழே விழுந்ததும், கீரல் விட்டதும் நியாபகம் வந்தது.
“ஐய்யய்யோ.. புது போன்.. போச்சா” என டெம்ளர் கிளாலை லேசாய் பிரித்து பார்த்தாள். உறுதியானது கிராக் விட்டது டெம்பர்கிளாஸ் இல்லை போன் தான் என்பது.
Advertisement
“காலையில் போனை கீழே போட்டுட்டேன் கிரி.. டெம்ர்கிளாஸ் தான் போச்சுனு நினைச்சேன். போனே போச்சு போல, இருபத்தஞ்சாயிரம்” என இவள் நிஜமாகவே கவலையோடு பேச
Advertisement
“போன் மட்டும் தான் விழுந்ததா, இல்லை நீயும் விழுந்து வாரி வச்சிட்டியா?” இவனது கேள்வியிலும், அவனது முக பாவனையிலும் அவள் மீதான அக்கறை இன்று வெளிப்பட்டதை உணர்ந்து முறுவலித்தாள் கமலி.
ஆனால் அந்த பக்கம் பதிலில்லாதது, தவிர வீடியோ காலில் இவள் முகம் ஏதோ பிளர்ராக தெரிந்தது என பதற்றமானான்.
“ஏய் உன்னை தாண்டி கேட்கேன்” இவன் குரல் அதிர கேட்டான்.
Advertisement
அதில் திடுக்கிட்டவள் “எனக்கொன்னும் இல்லை, போன் தான் விழுந்து கீரல் விட்ருச்சு” என பதில் கூற
“படுத்துற நீ” என எரிச்சலானான் பின் “போன் நிறைய டேமேஜ் ஆயிடுச்சா..” என இவன் கேட்க..
“இல்லையில்லை.. மைல்ட் டேமேஜ் தான். புது போன் வேற, சர்வீஸ் பண்ணி யூஸ் பண்ணிக்கலாம்” என
“ப்ச்..” இவள் முகத்தை காண முடியா கடுப்பில் “பணம் போடுறேன், வேற வாங்கிக்கிறியா.. இல்லை நான் வரும் போது புதுசு வாங்கிட்டு வரவா” என இவன் கேட்டான்.
திருமணமான பின், உனக்காக வாங்கி வரவா என கேட்கிறான். திருமணம் முடிந்த பதினைந்து நாட்களில் கூடவே இருந்த போது கேட்கவில்லை. கத்தார் சென்றபின் கேட்கவில்லை. இப்போது அதுவும் முடிந்து நான்கு மாதங்கள், ஐந்தாக போகிறது இப்போது கேட்கிறான்.
“என்னாச்சு..! பதிலையே காணோம், தவிர இன்னைக்கு மேடம் சந்தோஷமா இருக்கீங்க போல என்னவாம்” அவள் அமைதியை வைத்தே கேட்டான் இவன்.
தன் சந்தோஷத்திற்கான காரணத்தை கேட்கிறான் என உணர்ந்து ‘ம்ஹூம் சொல்ல மாட்டேன்.. அது சர்ப்பிரைஸ்’ என மனதினுள் நினைத்தவள், “முதல் முறையாய் என்ன வேணும்னு கேட்கிறீங்க.. ஜெர்க் ஆகுதுல்ல” பேச்ணை வேறு பக்கம் திருப்பினாள் கமலி.
“இதுக்கே ஜெர்க் ஆன எப்படி? அப்போ உனக்காக, நீ கேட்காமலேயே வாங்கி வீட்டில் வச்சிருக்கேனே, அதை பார்த்தா என்ன செய்வ?” இவள் புருவம் உயர்த்தினான்.
“என்ன? எனக்கா வாங்கினீங்க? என்கிட்ட எதுவும் கொடுக்கலை நீங்க!” அதிர்ச்சி அவள் குரலில்.
“ம்.. வாங்கினேன் தான், ஆனால் உன் கையில் குடுக்காமலேயே வந்துட்டேன்” அதை சொல்கையில் அவன் குரலில் அப்படி ஒரு அமைதி நிலவியது. தேவையில்லாது இந்த பேச்சை ஏன் எடுத்தோம் என்று.
“ஓ.. வாங்கிட்டு வந்து என் கையில் குடுக்காமல் போற அளவுக்கு அப்படி என்ன வாங்கினீங்களாம்” இவள் குரலில் ஆர்வம்.
“எப்போ லீவு வருது? எப்போ வீட்டுக்கு போவ?” என கேட்டான்.
“நான் கேட்டதுக்கு இது பதில் இல்லையே” குழப்பமானாள் இவள்.
“அதான் பதில். நீ வீட்டுக்கு போனேனா.. உன்னோட மர பீரோவில் கீழ் அடுக்குல மூனு பெட்டி இருக்கும், பார்த்துட்டு என்கிட்ட பேசு” என இவன் புதிர் போட்டான்.
“பெட்டில.. என்ன?” என இவள் கேட்க.
“சும்மா நொய் நொய்னு கேள்வி கேட்காத, இரண்டு பெட்டி உனக்கு செட்டாகும், இன்னொன்னு செட் ஆகுமான்னு தெரில.. பட் செட்டாகாத பொருளை தூக்கி போட்டுடு.. சண்டை போடகூடாது” முன்னேற்பாடாய் டிஸ்கிளைமரை போட்டான் கிரி.
இவன் புதிர் மேல் புதிர் போட, “நீங்க தான் இப்போ நொய் நொய்னு உயிர வாங்குறீங்க.. தயவு செஞ்சு வைங்க போனை, என்னை எரிச்சல் படுத்தாதீங்க” என்றாள் சிடு சிடுப்பாக
“வைக்க முடியாது, என்ன பண்ணுவ?” என்றான் வீம்பாக
“நான் வைப்பேன், கிப்ட் என்னனு சொல்லலைன்னா!” மிரட்டினாள் இவள்.
“சொல்ல முடியாது நீ வீட்டுக்கு போய் பாரு” என்றான் திமிராய்.
“நான் அடுத்த வாரம் தான் வீட்டுக்கு போவேன், அதுவரை தூங்க கூட முடியாது ப்ளீஸ்.. சொல்லுங்களேன்” இவள் கெஞ்ச
“ம்ஹூம்..” முடிவாய் இவன் மறுக்க
“கிப்ட் வாங்கினது கூட எனக்கு தெரியாமலேயே மறச்சு வச்சிட்டீங்கல்ல.. வீட்டுக்கு போய் கிப்டை பார்க்குற வரை என்கிட்ட பேசாதீங்க” என்றாள் இவளும் முடிவாய்
“ஓ.. என்கிட்ட பேசாமல் இருந்திடுவ..” சவால் விட்டான் இவன்
இவன் நக்கல் செய்ய செய்ய “இருப்பேன்..” என்றாள் இவள் வீரப்பாய்.
அவளது உறுதி இவனுக்கு சுவாரஸ்ரமாய் இருக்க “அதையும் பார்ப்போம்டி” என இவனும், “பார்க்க தானே போறீங்க” என இவளும் சூல் உரைத்து கொண்டனர். விளையாட்டாய் ஆரம்பித்து வினையில் முடிந்தது அவர்களது பேச்சு.
**********
தர்ஷிக்கு பத்து கிலோ தான் எடைகுறைப்பு என்பதால் அதற்கு தகுந்தார்ப்போல் பயிற்சியும் உணவையும் எடுக்க, எடுக்க மெல்ல மெல்ல எடை குறைய துவங்கினாள்.
ஆனால் கமலியோ என்பத்தெட்டில் இருந்து ஐம்பத்தைந்து என்கையில் கிட்டதட்ட முப்பது மூன்று கிலோ குறைக்க வேண்டும்.. கிட்டதட்ட பாதி எடையை குறைக்க வேண்டும் என்கையில், தர்ஷியை விட கொஞ்சம் கடுமையான பயிற்சியை கமலி எடுக்கும் நிலைக்கு தள்ளபட்டாள். தொடர்ந்த பயிற்சியில் துவண்டு போனாள்.
ஆரம்பத்தில் இருந்து உடல் வலி இருக்கும் தான், ஆனால் இந்த ஒரு வாரமாய் எக்யூப்மெண்ட்ஸை ஹேண்டில் செய்வதால் கூடுதலான வலியும் சேர்ந்து கொண்டது. ஆனால் நடந்து ஒரே நன்மை, எங்கிருந்து தான் வருமோ தூக்கம் எங்கே எப்படி எந்தபோஸில் படுக்கிறாளோ அங்கேயே அப்படியே படுத்தவுடன் உறங்கிவிடுவாள்.
இங்கு கிரியோ, தூக்கத்தை தொலைத்து திரிந்தான். தினந்தோறும் எப்போதும் இவள் பேசும் நேரத்திற்கு, கமலிக்காக காத்திருந்து காத்திருந்து ஒருகட்டத்தில், ‘என்கிட்ட பேசாம இருக்குற அளவுக்கு தைரியமாகிப்போச்சுல்ல.. பார்க்குறேன்டி, எத்தனை நாளுன்னு’ இவனும் கோபத்தில் விட்டிட, ஒரு வாரமாக இவனும் கமலிக்கு போன் செய்யாது போக, இந்த ஒரு வாரமும் கமலி எடுத்த முடிவின் படி, இவளும் கிரியோடு பேசாமலேயே இருந்தாள்.
அடுத்த வாரமும் வந்தது. எப்போதும் இரண்டாம் மற்றும் நான்காம் சனி கல்லூரி விடுமுறை என்பதால், அதை ஒட்டி ஹாஸ்டல் மாணவிகள் தங்கள் ஊருக்கு சென்றுவிட்டு பெரும்பாலும் திங்கள் காலையில் வந்துவிடுவார்கள். அதோபோல் டெப்யூட்டியிடம் சொல்லிவிட்டு கமலி கிளம்ப, “நீ இல்லாமல் நான் மட்டும் ஜிம் போகவா.. போ நானும் ஊருக்கு போறேன்” என தர்ஷியும் கிளம்பிவிட்டாள்.
ஹாஸ்டல் கிளம்பி சென்றதில் இருந்து ஒவ்வொரு வாரமும் “வீட்டுக்கு வாயோன்டி, அப்பா கூட உன்னை தேடுறாருடீ.. ஒரு எட்டு வந்துட்டு தான் போயேன்” மல்லிகா கேட்டு கொண்டு தான் இருக்கிறாள்.
வேலை, ஜிம் என பிசியாக இருந்தவள், வார வாரம் மறுத்து, இந்த வாரம் கிரி வாங்கி வைத்த கிப்டை பார்க்கவென்றே, வெள்ளிகிழமை மாலையே பஸ்ஸில் கிளம்பிவிட்டாள்.
வருகிறேன் என மல்லிகாவிடம் கூட சொல்லாமல் வீட்டிற்கு ஒரு எட்டு மணி போல் போய் சேர்ந்தாள் கமலி.
அந்த இரவு நேரத்தில் மகளை எதிர்பார்க்காத மல்லிகாவிற்கு சந்தோஷம் தாங்கவில்லை. உடனே செல்வத்திடம் சொல்ல. கடையை எடுத்து வைத்து கொண்டிருந்தவர், “முருகா இதெல்லாம் எடுத்து வச்சிட்டு, பூட்டிட்டு சாவியை வீட்டில் கொடுத்துட்டு போடா..” என வேலையாளை ஏவிவிட்டு, மகளுக்கு பிடித்த பிரைட் ரைஸ், சிக்கன் சிக்ட்டிபைவ் என வாங்கி கொண்டு வீட்டிற்கு விரைந்தார் செல்வம்.
தினமும் போனில் பேசினாலும் நேரில் மகளை பார்க்கும் ஆர்வம் அந்த தந்தையின் கண்களில்.
error: Content is protected !!