நிலாவிடம் எழிலன் எதுவும் பேசவில்லை. அந்த இனிமையான நேரம் கடந்ததும், இருவருக்குள்ளும் ஏதோ சேருமிடத்தைச் சேர்ந்த திருப்தியும், மகிழ்ச்சியும் மட்டுமே மிச்சம் இருந்தது.
அடுத்த நாள் காலையில் மலர்விழியும், தேன் மொழியும் மட்டுமே தங்கள் மக்களை நினைத்துக் கவலைக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் யாருக்கும் எதுவும் தோன்றவில்லை.
தேன்மொழியைப் பொறுத்தவரை எழிலன் மாப்பிள்ளையாக நல்லபடியாகவேத் தெரிந்தான். அது முடிவான இடம் வேண்டும் என்றால் கேள்விக்குரியதாக இருக்கலாம். ஆனால் எழிலன் பற்றி நல்ல அபிபிப்ராயமே. நிலாவின் மனது அவள் மறுக்காததிலிருந்து அவளின் அன்னைக்குப் புரிந்து இருந்தது. என்றாலும் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாததால் கவலையாக இருந்தார்.
Advertisement
எழிலனின் அன்னைக்கு அவனின் வாய்யை நினைத்துப் பயம். எழிலன் அப்படி ஒன்றும் யாரையும் தவறாக நடத்துபவன் இல்லை தான். ஆனால நிலவன் மேல் எழிலனுக்கும் பொறாமை இருக்கிறதோ எனச் சந்தேகேம் இருந்தது. அதை நிலாவிடம் வெளிப்படுத்தினால், அந்த பெண் என்ன செய்வாள் என நினைத்தார் மலர்விழி.
ஆனால் இருவரும் இறங்கி வந்த போது அவர்களின் முகங்கள் பொலிவுடன் இருக்காகவே நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் தாய்மார்கள்.
பெரிதாக எதுவும் பேசவில்லை தான். ஆனால் இருவரும் அடிக் கண்களில் பார்த்துக் கொண்டதே விஷயத்தைக் கூறி விட்டது.
Advertisement
அன்று மதியம் விருந்து முடிந்ததும், எழிலன் குடும்பத்தினர் கிளம்புவதாகக் கூற, ஃப்ளைட் டிக்கெட் பார்ப்பதாகக் கூறினார் அதியமான்.
Advertisement
ஆனால் செகண்ட் ஏசி புக் செய்திருப்பதாகக் கூறி, டிரைனில் நிலாவையும் அழைத்துக் கொண்டு சென்றனர் எழிலன் வீட்டார்.
மறுநாள் தான் ரிசப்ஷன் என்பதால் அடுத்த நாள் காலை ஃப்ளைட் டிக்கெட் தான் போட்டிருந்தனர் நிலாவின் குடும்பத்தினர்.
நிலா இல்லாமல் அவர்களுக்கு வீடே வெறுமையாக இருந்தது. மூன்று வருடங்கள் ஹாஸ்டலில் இருந்தாலும், நிலாவின் இருப்பிடம் அவளின் புகுந்த வீடு தான் எனப் பேசிக் களைத்தனர்.
Advertisement
ரிசப்ஷனுக்கு வருவதற்கு முன், எழிலன் வீட்டினில் நிலா குடும்பத்தினருக்கு விருந்து வைத்தனர். பெரிதாக ஏதும் குறை கூறவில்லை நிலவனும், அவன் பெற்றோர்களும். சாப்பாட்டில் குறை கூறும் பழக்கமும் அவர்களின் குடும்பத்தாருக்குக் கிடையாது.
செழியன் அவர்கள் மூவரையும் ஸ்டார் ஹோட்டலில் ரெஸ்ட் எடுத்துவிட்டு வரவேற்பிற்கு தயாராகி வருமாறு கூறினார்கள். அதைத் தான் நிலவன் தவறாக எடுத்துக் கொண்டான். இது சின்ன வீடு. இங்கே நிலா எப்படி இருப்பாள் எனத் தவித்துப் போனான். தேன்மொழி தான் அவனைச் சமாதானபடுத்தினார்.
மாலை வரவேற்பில் எழிலனின் பழைய நண்பர்கள் வர, ஒரே சத்தம் தான். சென்னையில் நடந்த வரவேற்பு சினிமா டிக்கெட் வரிசை போல நின்று சத்தம் செய்யாமல் போட்டோவிற்கு போஸ், பரிசுகள் கொடுத்துவிட்டுச் சென்றனர்.
இங்கே எழிலனின் நண்பர்கள் ஆர்க்கெஸ்ட்ரா போட்டு அங்கே அங்கே ஆடிக் கொண்டிருந்தனர். எழிலனுக்கு என்றே பாட்டுகள் செலக்ட் செய்து குழுவினரைப் பாட வைத்தனர்.
நிலவனின் நண்பர்கள் சிலரும் வந்திருந்தனர். பேராசிரியர்கள் எல்லோரும் நிலவனையும் விசாரித்துச் சென்றனர்.
எழிலனின் நண்பர்கள் அவனைப் பாட அழைக்க, எழிலன் மனதில் இருந்த சந்தோஷத்தில் “மாமா, உன் பொண்ணைக் கொடு” எனப் பாடினான்.
அதியமான், நிலவன் இருவரும் முழிக்க, எழிலனின் நண்பர்கள் ஆட்டம் போட்டனர். செழியன் தான் அவர்களைக் கட்டுப்படுத்தி அனுப்பி வைத்தார்.
வரவேற்பு முடிந்ததும், எழிலனின் வீட்டிற்குச் சென்றனர். நிலாவின் பெற்றோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அறைக்கு நேரடியாகச் சென்றனர். நிலவன் மட்டும் இவர்களோடு வந்து, நிலாவைக் கொண்டுவிட்டுத் தான் திருப்பிச் சென்றான்.
அதுவும் நிலாவோடு அமர்ந்து சற்று நேரம் பேசிவிட்டுத் தான் சென்றான். நிலவன் கவலை எல்லாம் நிலா இந்த சின்ன வீட்டில் சமாளித்து விடுவாளா என்பதில் தான் இருந்தது. நிலாவே நான் பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறவும் தான் கிளம்பினான் நிலவன்.
நிலா எழிலன் அறைக்குள் வர, எழிலன் அவளைக் கட்டி அணைத்தான். அவனின் கைகளை நிலா மெதுவாக எடுக்க இன்றைக்குத் தான் எழிலனுக்குப் பேசத் தோன்றியது போலும்.
“அழகி, இன்னும் என் மேலே கோபமா தான் இருக்கியா?” எனக் கேட்டான்.
நிலா பதில் சொல்லாமல் இருக்க “நிலவழகி, சில விஷயங்கள் நடக்கும்போது அப்படியே ஏத்துக்கிட்டு போயிடனும். நான் எதுவும் பிளான் பண்ணலை. ஆனால் எனக்கு ஒரு சான்ஸ் கிடைக்கவும் யூஸ் பண்ணிக்கிட்டேன். அது தப்பா?” எனக் கேட்டான்.
“அப்படி நினைக்கலை. ஆனால் என்னை மட்டம் தட்டினது மாதிரி இருந்தது.” என்றாள் நிலா.
“இல்லை அழகி. உன் அண்ணன் அன்னிக்கு ரொம்பவே துள்ளி குதிச்சான். அதில் தான் என்னனு புரியாமல் ஏதோ பேசிட்டேன். உன்னோட திறமை எல்லாம் எனக்கும் தெரியுமே. என்ன இன்னும் கொஞ்சம் வெளிப்படுத்திக்கலாம்னு தோணுது. அவ்வளவு தான். மற்றபடி நீ அழகிடி. அதுவும் நிலவழகி.” என சரசமும், சமரசமும் பேசினான் எழிலன்.
நிலா அதற்கு மேல் என்ன சொல்ல என விட்டுவிட்டாள். மிச்சம் உள்ள நேரம் அவர்களுக்கு உரியதாக மட்டுமே இருந்தது.
எழிலன் அழகி என அழைத்தால் நிலாவிற்கு உலகம் மறந்தது.
மறுநாள் நிலவன் குடும்பத்தோடு வந்து விடைபெற்றுச் சென்றான். தேன்மொழி மலரிடம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டுச் சென்றார். அதியமான், நிலவன் இருவரும் தான் செழியன், எழிலனை விட அதிகமாகப் பாடமா எடுத்துக் கொண்டிருந்தனர். அது நிலாவிற்கு மட்டுமல்ல, எழிலன் குடும்பத்திற்கே என்பதில் தான் சிறப்பே.
எழிலனுக்கு வாய் துறு துறுவென்று வந்தது. ஆனால் மலரின் பார்வையில் அடங்கி விட்டான். அவர்கள் சென்றதும், எழிலன் ஊஃப எனப் பெருமூச்சு விட்டான் எழிலன்.
செழியன் சிரித்தபடிச் சென்றுவிட, வள்ளி தான் எழிலனிடம் அது எல்லா அப்பா, அம்மாவும் செய்வது என எடுத்துக் கூறினார்.