Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ராஜாளியின் சிறகினில் ரோஜாப்பூ

ராஜாளியின் சிறகினில் ரோஜாப்பூ – 3

அத்தியாயம்– 3:

காலை ஆறு மணி, வர்மன் கோவில் வாசலை அடைந்தான்.
கதவு திறந்திருந்தது.
உள்ளே நுழைந்தான். டார்ச் வெளிச்சம் சுவர்களில் ஓடியது. தூபக்கால். நந்தாவிளக்கு … இன்னும் எரிந்து கொண்டிருந்தது.
மூலஸ்தானம் நோக்கி நடந்தான்.
அங்கே தெய்வம் இல்லை… காலி பீடம் மட்டும் இருந்தது. சாமுண்டி இல்லை!
வர்மன் ஒரு நொடி நின்றான். முகம் கல்லானது. கண்கள் இறுகின.
அவன் டி.எஸ்.பி சந்திரனை அழைத்தான். “விக்கிரகம் போயிடுச்சு.”
“சார்…”
“செக்போஸ்ட்ல கேளுங்க. எந்த வெஹிக்கிளும் போச்சான்னு.”
இரண்டு நிமிடம். சந்திரன் திரும்ப அழைத்தான்.
“சார்… நான்கு செக்போஸ்டும் சொல்றாங்க… ஜீப் இல்லை, வேன் இல்லை, பைக் கூட இல்லை. கடந்த மூணு மணி நேரத்துல ஒரு  வாகனமும் போகலைன்னு கன்பார்ம் பண்றாங்க.”
வர்மன் கோவிலின் பின் வாசலை திறந்தான். வெளியே …மலை!
செங்குத்தான பாறைகள். கீழே பள்ளத்தாக்கு.  அந்த இருட்டில் ஒரு. பாறையில் ஒரு கயிறு கட்டியிருந்தது!  புதிதாக கட்டியது.
“மலைப்பாதை. கீழே இறங்கி போயிருக்காங்க.”
அவன் கயிற்றை பிடித்தான். கீழே பார்த்தான்.
ஐநூறு அடி கீழே ஒரு குறுகிய பாதை தெரிந்தது. அங்கிருந்து கொடைக்கானல் … மதுரை பழைய சாலை போகும். அங்கே எந்த செக்போஸ்டும் இல்லை.
“ஸ்மார்ட்! ரோடு இல்லாம போறாங்க!”
வர்மன் கயிற்றை இறுக்கப் பிடித்தான். இறங்கத் தொடங்கினான்.
கோவில் வாசல் காலை ஏழு மணி.
மீராவின் ஜீப் கோவில் முன் நின்றது.
அவள் இறங்கியதும் தெரிந்தது.
கிராம மக்கள் வந்திருந்தனர். ஐம்பது பேர். நூறு பேர். ஒவ்வொருவரின் முகத்திலும் ஒரு கேள்வி …. கேட்கத் தெரியாத கேள்வி!
வேலாண்டி தாத்தா கோவில் வாசலில் நின்றிருந்தார். அவரது உடல் நடுங்கியது. கால்கள் தரையில் ஊன்றி நின்றன. ஆனால் அவர் கண்கள்  கோவிலையே பார்த்தன. இமைக்கவில்லை.
மீரா அவரருகே சென்றாள்.
“தாத்தா.”
அவர் திரும்பவில்லை.
“தாத்தா, என்னாச்சு?”
வேலாண்டி மெல்ல கோவிலை நோக்கி நடக்க மீரா பின்னால் சென்றாள்.
மூலஸ்தானம் …காலி பீடம்!
ஒரு பெண் அலறினாள். “சாமுண்டி இல்லை!”
அந்த ஒரு குரல் ….அலையாக பரவியது!
“சாமுண்டி போயிட்டா!”
 “நம்ம அம்மன் போயிட்டா!”

Advertisement

கோவில் முழுக்க அழுகை. ஒரு வயதான பாட்டிகாலி பீடத்தை கட்டிப்பிடித்து அழுதாள்.
ஒரு குழந்தை தன் தாயை கேட்டது  “அம்மா, அம்மன் எங்க போனா?” அந்தக் குரல் மீராவின் நெஞ்சில் ஊடுருவியது.
வேலாண்டி தாத்தா காலி பீடத்தின் முன் தரையில் உட்கார்ந்தார். அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. வார்த்தை வரவில்லை.
மீரா அந்த காட்சியை பார்த்தாள். அவள் உள்ளே ஏதோ உடைந்தது.
அவள் பீடத்தின் முன் நின்றாள். சுற்றிலும் பார்த்தாள். இரண்டு, பத்து,   நூறு கண்கள் அவளை பார்த்தன ….கோபத்தில், துயரத்தில், நம்பிக்கையில்!
அவள் குரல் உயர்ந்தது. அமைதியாக. உறுதியாக!
“தாத்தா.”
வேலாண்டி  நிமிர்ந்தார்.
“சாமுண்டி போகலை. திருடப்பட்டிருக்கா. ஆனா திரும்பி வருவா! வர்மன் போயிருக்கார். அவர் போனா திரும்பி வருவார். கையிலயே சாமுண்டியை கொண்டு வருவார். நான் உங்களுக்கு வாக்கு குடுக்கிறேன்.”
அமைதி.
“சரி மேடம். நாம காத்திருப்போம். ஆனா சாமுண்டி வரணும்.”
“வருவா தாத்தா.”
மலைப்பாதை … அதே நேரம் ஐநூறு அடி கீழே இறங்கியிருந்தான் வர்மன்.
கைகளில் கயிறு. பாறைகள் கூர்மையாக இருந்தன. இருட்டில் கால் வழுக்கியது. சரியாக இடம் பார்த்து கால்களை வாகாக இருத்தி அவன் சுதாரித்துக்கொண்டான். இறங்கினான். நிதானமாக அதே சமயம் வேகமாக ஒரு அசல்  வீரனைப்போல இருந்தது அவனது செயல்பாடு! (பின்னே? ஐபிஎஸ் வர்மன் னா சும்மாவா! )
கீழே பாதை தெரிந்தது.
ஒரு வேன். இஞ்சின் சத்தம். நகரத் தொடங்கியது.
வர்மன் கடைசி நூறு அடியை விட்டு குதித்தான்.
பாறையில் விழுந்தான். முழங்கால் உரசியது. எழுந்தான்.
வேன் நகர்ந்தது. அவன் ஓடினான்.
வேன் வேகம் பிடிக்க. வர்மனும் வேகமெடுத்தான். நூறு மீட்டர். இருநூறு மீட்டர்.
வேன் திடீரென்று நின்றது.
கதவு திறந்தது. இரண்டு பேர் இறங்கினர். முகங்களை மறைத்து  துணி கட்டியிருந்தனர். கைகளில் கம்புகள்.
வர்மன் நின்றான். ஒரு மூச்சு இழுத்தான்.
முதல் ஆள் வந்தான். வர்மன் சைட்-ஸ்டெப் எடுத்தான். அவனது கம்பு காற்றை வெட்டியது. வர்மன் அவன் முதுகில் ஒரு வெட்டு!  அநாயசமாக விழுந்தது அந்த அடி. விழுந்தான்.
இரண்டாவது ஆள் … பெரியவன். வேகமாக வந்தான்.
வர்மன் மூன்று அடி பின்வாங்கினான். பாறையை முதுகில் உணர்ந்தான். அவன் பாறையில் கை ஊன்றி முன்னே பாய்ந்தான். அந்த ஆளின் நடு நெஞ்சில் மோதினான்.  சரியான இடி. இருவரும் தரையில் விழுந்தனர். வர்மன் எழுந்து அவன் கை முறுக்கினான்.
“விடு! விடு!”
“வேன்ல என்ன இருக்கு?”
அவன் பதில் சொல்லவில்லை. வர்மன் இன்னும் முறுக்கினான்.
“ஐயோ! பெட்டி இருக்கு! கோவில் பெட்டி!”
வர்மன்  வேனை நோக்கி நடந்தான்.
பின்னால் சத்தம். திரும்ப….
மூன்றாவது ஆள். கத்தி.
வர்மன் ஒரு நொடி பார்த்தான்.
கத்தி வந்தது. வர்மன் உடலை வளைத்தான். கத்தி தோளை உரசியது .. ஒரு கீறல். ரத்தம். அவன் உணரவில்லை!
சரியாக அவன் அந்த ஆளின் மணிக்கட்டை பிடித்தான். இறுக்கி திருக கத்தி விழுந்தது.
முழங்காலால் அவன் வயிற்றில் ஒரே ஒரு மிதி. விழுந்தான்.
அமைதி.
மூவரும் தரையில்.
வர்மன் வேனை திறந்தான்.
உள்ளே  ஒரு மரப்பெட்டி. கம்பளியில் சுற்றப்பட்டிருந்தது.
அவன் மெல்ல கம்பளியை விலக்கினான். சாமுண்டி!
ஆயிரம் வருட பழமை. பஞ்சலோகத்தில் வார்க்கப்பட்டவள்! ஒரு அடி உயரம். எட்டு கைகள் … ஒவ்வொன்றிலும் ஒரு ஆயுதம். கடாயுதம், வாள், கேடயம், மணி,சூலம், பாசம், அங்குசம், அபயஹஸ்தம். முகத்தில் ஒரு மூன்றாம் கண். கிரீடத்தில் பிறைநிலா. சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தாள் ….அதே கம்பீரத்துடன்! ஆயிரம் வருடங்கள் கடந்தாலும், அவள் கண்கள்….ஒரு தாயின் கண்கள் போல, அன்பையும் ஆற்றலையும் ஒரே நேரத்தில் கொண்டிருந்தன!
வர்மன் அவளை பார்த்தான்.
ஒரு நொடி அவன் கண்களில் ஏதோ இருந்தது…கோபமல்ல, வெற்றியுணர்வுமல்ல. வேறு ஒன்று!
அவன் மெல்ல கம்பளியை மீண்டும் போர்த்தினான்.
போனை எடுத்தான்.
“சந்திரன். இரண்டு ஆம்புலன்ஸ், மூணு பேர். பழைய கொடைக்கானல் சாலை. கிலோமீட்டர் பதினெட்டு. சாமுண்டி பத்திரமா இருக்காங்க.”
கோவில் … காலை ஒன்பது மணி.
மீரா மக்களிடம் நின்றிருந்தாள்.
வேலாண்டி தாத்தா தரையில் உட்கார்ந்திருந்தான்.கூட்டம் அமைதியாக இருந்தது …அழுகை நின்றிருந்தது. ஆனால் கண்களில் கவலை போகவில்லை.
மீராவின் போன் ஒலித்தது.
வர்மன்.
“சாமுண்டி சேஃப் !.” இரண்டே வார்த்தைகள்!
மீரா போனை கீழே வைத்தாள். வேலாண்டி தாத்தாவைபார்த்தாள்.
“தாத்தா.”
“சாமுண்டி வர்றா.”
ஒரு நொடி அமைதி.
பிறகு வேலாண்டி தாத்தாவின் கண்களிலிருந்து இரண்டு துளிகள் வழிந்தன. இந்த முறை அது அழுகையாக அல்ல. வேறு ஒன்று.
கூட்டத்தில் ஒரு ஆரவாரம் எழுந்தது.
“சாமுண்டி வர்றா! அம்மன் வர்றா!”
ஒரு மணி நேரம் கழித்து வர்மனின் ஜீப் வந்தது.
அவன் இறங்கினான். கையில் கம்பளியில் போர்த்திய சாமுண்டி.
தோளில் ஒரு கட்டு ….கூட்டம் பிரிந்து வழி விட்டது.
வர்மன் நடந்தான். நேரே கோவிலுக்கு.
மூலஸ்தானத்தில் மெல்ல சாமுண்டியை வைத்தான்.
கம்பளியை விலக்கினான்.
சாமுண்டி அதே கம்பீரத்துடன் பீடத்தில் அமர்ந்தாள்!
நந்தாவிளக்கு அவள் முகத்தில் விழுந்தது. பஞ்சலோக உடல் ஒளிர்ந்தது.
கூட்டத்திலிருந்து ஒரு பெரிய அழுகை …ஆனால் இந்த முறை வேறு மாதிரி. நிம்மதியின் அழுகை!
வேலாண்டி தாத்தா தள்ளாடும் கால்களுடன் பீடத்தின் அருகே சென்றார். சாமுண்டியின் பாதத்தில் விழுந்தார். தன் நடுங்கும் கரங்களால் அந்தச் சிலையின் பாதங்களைத் தொட்டார். தொட்டதுமே அவருக்குள் ஏதோ ஒன்று உடைந்தது. சிறு குழந்தையைப் போல விக்கி விக்கி அழத் தொடங்கினார். “தாயே… எங்களை விட்டுட்டு எங்கேம்மா போன? உன்னைப் பெத்தவன்னு நெனைச்சேனே, எங்களை அனாதையா விட்டுட்டுப் போயிட்டியே!” என்று கதறினார். அவரின் கண்ணீர் அந்தச் சிலையின் பாதங்களில் விழுந்து, சிலைக்குப் பாலாபிஷேகம் செய்வது போல் வழிந்தது.
பெண்கள் கூட்டம் ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக் கொண்டு அழுதனர். அது துக்கமல்ல, உயிருக்கு உயிரான ஒன்று பறிபோய் மீண்டும் கிடைத்த நிம்மதி!
மீரா ஓரமாக நின்று இந்த உணர்ச்சிப் போராட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு கல்லாக இருந்த சிலை, ஒரு ஊரின் மொத்த நம்பிக்கையாகவும்,உயிராகவும் மாறியிருந்த அந்தக் காட்சி அவளை நிலைகுலையச் செய்தது.
அழுகை மெல்ல மெல்ல ஒரு கூட்டுப் பிரார்த்தனையாக மாறியது. மக்கள் வர்மனைப் பார்க்கத் தொடங்கினர். வார்த்தைகளால் சொல்ல முடியாத நன்றியைத் தங்கள் பார்வைகளிலேயே கடத்தினர். யாரோ ஒரு பெரியவர் ஓடிவந்து வர்மனின் கால்களைத் தொடமுயன்றார்.
வர்மன் அவரைத் தடுத்து நிறுத்தினான். அவன் முகம் இன்னும் அதே இறுக்கத்துடன் தான் இருந்தது. ஆனால், அந்த நந்தா விளக்கின் ஒளியில், அவன் கண்கள் லேசாகப் பனித்திருந்ததை மீரா கவனித்தாள்
“அம்மன் இங்கதான் இருப்பா. இனிமே எங்கும் போக மாட்டா,” என்றான் வர்மன்.
கோவிலில் மணி ஒலிக்கத் தொடங்கியது. அந்தச்சத்தம் ஊரின் ஒவ்வொரு மூலைக்கும் பரவியது.
வர்மன் மெல்ல அங்கிருந்து நகரத் தொடங்கினான்.
மீரா அவனை நெருங்கினாள். அவன் தோளில் இருந்த அந்தப் பட்டை, இன்னும் ரத்தத்தால் நனைந்து கொண்டிருந்தது. அவள் குரல் மிகத்தாழ்ந்திருந்தது
“வர்மன்…. நீங்க பைக்ல வர்றது சேஃப் இல்லை,” என்றாள் கவலையுடன்.
“இது சின்னக் காயம் தான், பரவாயில்லை,” என்றான் வர்மன்… அலட்சியமாக.
“பிடிவாதம் வேண்டாம். ஜீப்ல ஏறுங்க. உங்க பைக்கை நான் கான்ஸ்டபிள் கிட்ட சொல்லி ஸ்டேஷனுக்கு எடுத்துட்டு வரச் சொல்றேன்,” என்று மீரா கண்டிப்பான குரலில் சொல்ல, வர்மன் மறுப்பு ஏதும் சொல்லாமல் அவளுடன் நடக்கத் தொடங்கினான்.
ஜீப் காட்டுப்பாதையில் குலுங்கிச் சென்றது. வர்மன் ஜன்னல் பக்கம் தலை சாய்த்து அமர்ந்திருந்தான். அவனது இறுக்கமான மௌனம் மீராவை ஏதோ செய்தது. அடிபட்ட சிங்கம் போல இருந்தது அவன் அமர்ந்திருக்கும் தோரணை.
“அந்தப் பாதையில இறங்கும்போது பயமா இல்லையா? 500 அடி… ஒரு சின்னத் தப்பு நடந்திருந்தாலும்…”
வர்மன் திரும்பாமலேயே சொன்னான்,”வேலையை முடிக்கணும்னு நினைச்சேன். முடிச்சேன். அவ்வளவுதான்.”
“வேலையை முடிக்கிறதுன்னா என்ன? சட்டத்தை மதிக்காம 500 அடி பள்ளத்துல குதிக்கிறதா? சிஸ்டம் படி பேக்-அப் கூப்பிட்டு இருக்கலாம்ல?”
வர்மன் இப்போது மீராவைத் திரும்பிப் பார்த்தான். அவன் கண்கள் சிவந்திருந்தன. “சிஸ்டமா? உங்களோட அந்தத் தடிமனான ரூல்ஸ் புக்கைத் தூக்கிக்கிட்டு வர்றதுக்குள்ள அந்தச் சிலையைக் கடல் கடந்து கடத்தி இருப்பாங்க “.
“ஓ… அப்போ நாங்கெல்லாம் வெறும் பேப்பர் ஒர்க் பண்ற ரோபோக்கள், நீங்க மட்டும் தான் ரத்தமும் சதையுமா இருக்கிற ஹீரோவா?” மீரா ஸ்டீயரிங்கை ஆக்ரோஷமாகத் திருப்பினாள்.
வர்மன் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவனது கண்கள் தகித்தன.
“என்னடிப் பிரச்சனை உனக்கு இப்ப?”
“இந்தா… போடி வாடி-ன்னு பேசுன..” என்றபடி அவளும் ஒருமையில் அவனைப் பார்த்து கோபமாகத் திரும்ப…அவன் தோள் காயம் தான் முதலில் பார்வையில் விழுந்தது. இன்னும் ரத்தம் சொட்டுச் சொட்டாக வழிந்து கொண்டிருப்பதை இப்போது தான் அவன் கவனித்தாள்.
“உங்க தோள்ல ரத்தம் அதிகமா வருது,” எனப் பதைபதைத்தபடியே அவள் கத்தினாள்.
மீரா ஜீப்பைத் ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு வர்மன் பக்கம் பாய்ந்தாள்.
அவன் சட்டையின் மேலிருந்த துணியை இன்னும் இறுக்கிக் கட்டினாள். அவள் கைகள் நடுங்கின.
மீராவின் அந்த திடீர் ஆக்ரோஷமான கவலை, வர்மனை ஒரு நிமிடம் நிலைகுலையச் செய்தது. அவன் அவளை முறைத்துப் பார்க்க முயன்றான், ஆனால் மீராவின் கண்களில் தெரிந்த அந்த உண்மையான பயம் அவன் ஈகோவை மெல்லக் கரைத்தது.
“விடு மீரா… நான் எத்தனையோ அடிதடி பார்த்தவன்.இது சும்மா…”
“வாயை மூடுங்க!” மீரா அவன் பேச்சை இடைமறித்தாள். “உங்க வீரத்தைக் காட்ட இது இடமில்லை. இன்னும் பதினஞ்சு நிமிஷத்துல ஹாஸ்பிட்டல் போகலைன்னா, ரத்த இழப்புல நீங்க மயங்கி விழுந்துடுவீங்க. அப்புறம் நான் தான் உங்களைத் தூக்கிட்டு ஓடணும்…!”
“என் உடம்பைப் பத்தி எனக்குத் தெரியும்.நீ கவலைப்பட வேணாம்.” என்று அவன் கிண்டலாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் ஒரு கசப்பு இருந்தது.
“இது கவலை இல்லை … என் கடமை!”
“கடமையா?” வர்மன் அவளைச் சட்டென நெருங்கினான். அவனது மூச்சுக்காற்று அவள் முகத்தில் பட, மீரா ஒரு கணம் பின்வாங்கினாள்..
“ சும்மா உன்னையே ஏமாத்திக்காத டி, உனக்கு வலிக்குது ! அது உனக்கே தெரியல…! இந்த இதயம் எனக்காகத் தான்டீ துடிக்குது!” வர்மனின் கண்கள் சிவக்க, அவன் மீராவின் நெஞ்சின் மீது கை வைத்து அழுத்தமாக இடித்தபடி தணிந்த குரலில் கர்ஜித்தான்.
“அது தான் எனக்கும் புரியலயே!  … என் அறிவும் மனசும் ரெண்டும் வெவ்வேறா திரியுதே”  மனதுள் உட்குமைந்தாள் மீரா.
அந்தக் காட்டுப் பாதையில் ஜீப் பறந்தது.
அத்தியாயம்– 3:
காலை ஆறு மணி, வர்மன் கோவில் வாசலை அடைந்தான்.
கதவு திறந்திருந்தது.
உள்ளே நுழைந்தான். டார்ச் வெளிச்சம் சுவர்களில் ஓடியது. தூபக்கால். நந்தாவிளக்கு … இன்னும் எரிந்து கொண்டிருந்தது.
மூலஸ்தானம் நோக்கி நடந்தான்.
அங்கே தெய்வம் இல்லை… காலி பீடம் மட்டும் இருந்தது. சாமுண்டி இல்லை!
வர்மன் ஒரு நொடி நின்றான். முகம் கல்லானது.கண்கள் இறுகின.
அவன் டி.எஸ்.பி சந்திரனை அழைத்தான். “விக்கிரகம் போயிடுச்சு.”
“சார்…”
“செக்போஸ்ட்ல கேளுங்க. எந்த வெஹிக்கிளும் போச்சான்னு.”
இரண்டு நிமிடம். சந்திரன் திரும்ப அழைத்தான்.
“சார்… நான்கு செக்போஸ்டும் சொல்றாங்க… ஜீப் இல்லை, வேன் இல்லை, பைக் கூட இல்லை. கடந்த மூணு மணி நேரத்துல ஒரு  வாகனமும் போகலைன்னு கன்பார்ம் பண்றாங்க.”
வர்மன் கோவிலின் பின் வாசலை திறந்தான். வெளியே …மலை!
செங்குத்தான பாறைகள். கீழே பள்ளத்தாக்கு. அந்த இருட்டில் ஒரு. பாறையில் ஒரு கயிறு கட்டியிருந்தது!  புதிதாக கட்டியது.
“மலைப்பாதை. கீழே இறங்கி போயிருக்காங்க.”
அவன் கயிற்றை பிடித்தான். கீழே பார்த்தான்.
ஐநூறு அடி கீழே ஒரு குறுகிய பாதை தெரிந்தது. அங்கிருந்து கொடைக்கானல் … மதுரை பழைய சாலை போகும். அங்கே எந்த செக்போஸ்டும் இல்லை.
“ஸ்மார்ட்! ரோடு இல்லாம போறாங்க!”
வர்மன் கயிற்றை இறுக்கப் பிடித்தான். இறங்கத் தொடங்கினான்.
கோவில் வாசல் காலை ஏழு மணி.
மீராவின் ஜீப் கோவில் முன் நின்றது.
அவள் இறங்கியதும் தெரிந்தது.
கிராம மக்கள் வந்திருந்தனர். ஐம்பது பேர். நூறு பேர். ஒவ்வொருவரின் முகத்திலும் ஒரு கேள்வி …. கேட்கத் தெரியாத கேள்வி!
வேலாண்டி தாத்தா கோவில் வாசலில் நின்றிருந்தார். அவரது உடல் நடுங்கியது. கால்கள் தரையில் ஊன்றி நின்றன. ஆனால் அவர் கண்கள்  கோவிலையே பார்த்தன. இமைக்கவில்லை.
மீரா அவரருகே சென்றாள்.
“தாத்தா.”
அவர் திரும்பவில்லை.
“தாத்தா, என்னாச்சு?”
வேலாண்டி மெல்ல கோவிலை நோக்கி நடக்க மீரா பின்னால் சென்றாள்.
மூலஸ்தானம் …காலி பீடம்!
ஒரு பெண் அலறினாள். “சாமுண்டி இல்லை!”
அந்த ஒரு குரல் ….அலையாக பரவியது!
“சாமுண்டி போயிட்டா!” “நம்ம அம்மன் போயிட்டா!”
கோவில் முழுக்க அழுகை. ஒரு வயதான பாட்டிகாலி பீடத்தை கட்டிப்பிடித்து அழுதாள். ஒரு குழந்தை தன் தாயை கேட்டது  “அம்மா, அம்மன் எங்க போனா?” அந்தக் குரல் மீராவின் நெஞ்சில் ஊடுருவியது.
வேலாண்டி தாத்தா காலி பீடத்தின் முன் தரையில் உட்கார்ந்தார். அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. வார்த்தை வரவில்லை.
மீரா அந்த காட்சியை பார்த்தாள். அவள் உள்ளே ஏதோ உடைந்தது.
அவள் பீடத்தின் முன் நின்றாள். சுற்றிலும் பார்த்தாள். இரண்டு, பத்து,   நூறு கண்கள் அவளை பார்த்தன ….கோபத்தில், துயரத்தில், நம்பிக்கையில்!
அவள் குரல் உயர்ந்தது. அமைதியாக. உறுதியாக!
“தாத்தா.”
வேலாண்டி  நிமிர்ந்தார்.
“சாமுண்டி போகலை. திருடப்பட்டிருக்கா. ஆனா திரும்பி வருவா! வர்மன் போயிருக்கார். அவர் போனா திரும்பி வருவார். கையிலயே சாமுண்டியை கொண்டு வருவார். நான் உங்களுக்கு வாக்கு குடுக்கிறேன்.”
அமைதி.
“சரி மேடம். நாம காத்திருப்போம். ஆனா சாமுண்டி வரணும்.”
“வருவா தாத்தா.”
மலைப்பாதை … அதே நேரம் ஐநூறு அடி கீழே இறங்கியிருந்தான் வர்மன்.
கைகளில் கயிறு. பாறைகள் கூர்மையாக இருந்தன. இருட்டில் கால் வழுக்கியது. சரியாக இடம் பார்த்து கால்களை வாகாக இருத்தி அவன் சுதாரித்துக்கொண்டான். இறங்கினான். நிதானமாக அதே சமயம் வேகமாக ஒரு அசல்  வீரனைப்போல இருந்தது அவனது செயல்பாடு! (பின்னே? ஐபிஎஸ் வர்மன் னா சும்மாவா! )
கீழே பாதை தெரிந்தது.
ஒரு வேன். இஞ்சின் சத்தம். நகரத் தொடங்கியது.
வர்மன் கடைசி நூறு அடியை விட்டு குதித்தான்.
பாறையில் விழுந்தான். முழங்கால் உரசியது. எழுந்தான்.
வேன் நகர்ந்தது. அவன் ஓடினான்.
வேன் வேகம் பிடிக்க. வர்மனும் வேகமெடுத்தான். நூறு மீட்டர். இருநூறு மீட்டர்.
வேன் திடீரென்று நின்றது.
கதவு திறந்தது. இரண்டு பேர் இறங்கினர். முகங்களை மறைத்து  துணி கட்டியிருந்தனர். கைகளில் கம்புகள்.
வர்மன் நின்றான். ஒரு மூச்சு இழுத்தான்.
முதல் ஆள் வந்தான். வர்மன் சைட்-ஸ்டெப் எடுத்தான். அவனது கம்பு காற்றை வெட்டியது. வர்மன் அவன் முதுகில் ஒரு வெட்டு!  அநாயசமாக விழுந்தது அந்த அடி. விழுந்தான்.
இரண்டாவது ஆள் … பெரியவன். வேகமாக வந்தான்.
வர்மன் மூன்று அடி பின்வாங்கினான். பாறையை முதுகில் உணர்ந்தான். அவன் பாறையில் கை ஊன்றி முன்னே பாய்ந்தான். அந்த ஆளின் நடு நெஞ்சில் மோதினான்.  சரியான இடி. இருவரும் தரையில் விழுந்தனர். வர்மன் எழுந்து அவன் கை முறுக்கினான்.
“விடு! விடு!”
“வேன்ல என்ன இருக்கு?”
அவன் பதில் சொல்லவில்லை. வர்மன் இன்னும் முறுக்கினான்.
“ஐயோ! பெட்டி இருக்கு! கோவில் பெட்டி!”
வர்மன்  வேனை நோக்கி நடந்தான்.
பின்னால் சத்தம். திரும்ப….
மூன்றாவது ஆள். கத்தி.
வர்மன் ஒரு நொடி பார்த்தான்.
கத்தி வந்தது. வர்மன் உடலை வளைத்தான். கத்தி தோளை உரசியது .. ஒரு கீறல். ரத்தம். அவன் உணரவில்லை!
சரியாக அவன் அந்த ஆளின் மணிக்கட்டை பிடித்தான். இறுக்கி திருக கத்தி விழுந்தது.
முழங்காலால் அவன் வயிற்றில் ஒரே ஒரு மிதி. விழுந்தான்.
அமைதி.
மூவரும் தரையில்.
வர்மன் வேனை திறந்தான்.
உள்ளே  ஒரு மரப்பெட்டி. கம்பளியில் சுற்றப்பட்டிருந்தது.
அவன் மெல்ல கம்பளியை விலக்கினான். சாமுண்டி!
ஆயிரம் வருட பழமை. பஞ்சலோகத்தில் வார்க்கப்பட்டவள்! ஒரு அடி உயரம். எட்டு கைகள் … ஒவ்வொன்றிலும் ஒரு ஆயுதம். கடாயுதம், வாள், கேடயம், மணி,சூலம், பாசம், அங்குசம், அபயஹஸ்தம். முகத்தில் ஒரு மூன்றாம் கண். கிரீடத்தில் பிறைநிலா. சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தாள் ….அதே கம்பீரத்துடன்! ஆயிரம் வருடங்கள் கடந்தாலும், அவள் கண்கள்….ஒரு தாயின் கண்கள் போல, அன்பையும் ஆற்றலையும் ஒரே நேரத்தில் கொண்டிருந்தன!
வர்மன் அவளை பார்த்தான்.
ஒரு நொடி அவன் கண்களில் ஏதோ இருந்தது…கோபமல்ல, வெற்றியுணர்வுமல்ல. வேறு ஒன்று!
அவன் மெல்ல கம்பளியை மீண்டும் போர்த்தினான்.
போனை எடுத்தான்.
“சந்திரன். இரண்டு ஆம்புலன்ஸ், மூணு பேர். பழைய கொடைக்கானல் சாலை. கிலோமீட்டர் பதினெட்டு. சாமுண்டி பத்திரமா இருக்காங்க.”
கோவில் … காலை ஒன்பது மணி.
மீரா மக்களிடம் நின்றிருந்தாள்.
வேலாண்டி தாத்தா தரையில் உட்கார்ந்திருந்தான்.கூட்டம் அமைதியாக இருந்தது …அழுகை நின்றிருந்தது. ஆனால் கண்களில் கவலை போகவில்லை.
மீராவின் போன் ஒலித்தது.
வர்மன்.
“சாமுண்டி சேஃப் !.” இரண்டே வார்த்தைகள்!
மீரா போனை கீழே வைத்தாள். வேலாண்டி தாத்தாவைபார்த்தாள்.
“தாத்தா.”
“சாமுண்டி வர்றா.”
ஒரு நொடி அமைதி.
பிறகு வேலாண்டி தாத்தாவின் கண்களிலிருந்து இரண்டு துளிகள் வழிந்தன. இந்த முறை அது அழுகையாக அல்ல. வேறு ஒன்று.
கூட்டத்தில் ஒரு ஆரவாரம் எழுந்தது.
“சாமுண்டி வர்றா! அம்மன் வர்றா!”
ஒரு மணி நேரம் கழித்து வர்மனின் ஜீப் வந்தது.
அவன் இறங்கினான். கையில் கம்பளியில் போர்த்திய சாமுண்டி.
தோளில் ஒரு கட்டு ….கூட்டம் பிரிந்து வழி விட்டது.
வர்மன் நடந்தான். நேரே கோவிலுக்கு.
மூலஸ்தானத்தில் மெல்ல சாமுண்டியை வைத்தான்.
கம்பளியை விலக்கினான்.
சாமுண்டி அதே கம்பீரத்துடன் பீடத்தில் அமர்ந்தாள்!
நந்தாவிளக்கு அவள் முகத்தில் விழுந்தது. பஞ்சலோக உடல் ஒளிர்ந்தது.
கூட்டத்திலிருந்து ஒரு பெரிய அழுகை …ஆனால் இந்த முறை வேறு மாதிரி. நிம்மதியின் அழுகை!
வேலாண்டி தாத்தா தள்ளாடும் கால்களுடன் பீடத்தின் அருகே சென்றார். சாமுண்டியின் பாதத்தில் விழுந்தார். தன் நடுங்கும் கரங்களால் அந்தச் சிலையின் பாதங்களைத் தொட்டார். தொட்டதுமே அவருக்குள் ஏதோ ஒன்று உடைந்தது. சிறு குழந்தையைப் போல விக்கி விக்கி அழத் தொடங்கினார். “தாயே… எங்களை விட்டுட்டு எங்கேம்மா போன? உன்னைப் பெத்தவன்னு நெனைச்சேனே, எங்களை அனாதையா விட்டுட்டுப் போயிட்டியே!” என்று கதறினார். அவரின் கண்ணீர் அந்தச் சிலையின் பாதங்களில் விழுந்து, சிலைக்குப் பாலாபிஷேகம் செய்வது போல் வழிந்தது.
பெண்கள் கூட்டம் ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக் கொண்டு அழுதனர். அது துக்கமல்ல, உயிருக்கு உயிரான ஒன்று பறிபோய் மீண்டும் கிடைத்த நிம்மதி!
மீரா ஓரமாக நின்று இந்த உணர்ச்சிப் போராட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு கல்லாக இருந்த சிலை, ஒரு ஊரின் மொத்த நம்பிக்கையாகவும்,உயிராகவும் மாறியிருந்த அந்தக் காட்சி அவளை நிலைகுலையச் செய்தது.
அழுகை மெல்ல மெல்ல ஒரு கூட்டுப் பிரார்த்தனையாக மாறியது. மக்கள் வர்மனைப் பார்க்கத் தொடங்கினர். வார்த்தைகளால் சொல்ல முடியாத நன்றியைத் தங்கள் பார்வைகளிலேயே கடத்தினர். யாரோ ஒரு பெரியவர் ஓடிவந்து வர்மனின் கால்களைத் தொடமுயன்றார்.
வர்மன் அவரைத் தடுத்து நிறுத்தினான். அவன் முகம் இன்னும் அதே இறுக்கத்துடன் தான் இருந்தது. ஆனால், அந்த நந்தா விளக்கின் ஒளியில், அவன் கண்கள் லேசாகப் பனித்திருந்ததை மீரா கவனித்தாள்
“அம்மன் இங்கதான் இருப்பா. இனிமே எங்கும் போக மாட்டா,” என்றான் வர்மன்.
கோவிலில் மணி ஒலிக்கத் தொடங்கியது. அந்தச்சத்தம் ஊரின் ஒவ்வொரு மூலைக்கும் பரவியது.
வர்மன் மெல்ல அங்கிருந்து நகரத் தொடங்கினான்.
மீரா அவனை நெருங்கினாள். அவன் தோளில் இருந்த அந்தப் பட்டை, இன்னும் ரத்தத்தால் நனைந்து கொண்டிருந்தது. அவள் குரல் மிகத்தாழ்ந்திருந்தது
“வர்மன்…. நீங்க பைக்ல வர்றது சேஃப் இல்லை,” என்றாள் கவலையுடன்.
“இது சின்னக் காயம் தான், பரவாயில்லை,” என்றான் வர்மன்… அலட்சியமாக.
“பிடிவாதம் வேண்டாம். ஜீப்ல ஏறுங்க. உங்க பைக்கை நான் கான்ஸ்டபிள் கிட்ட சொல்லி ஸ்டேஷனுக்கு எடுத்துட்டு வரச் சொல்றேன்,” என்று மீரா கண்டிப்பான குரலில் சொல்ல, வர்மன் மறுப்பு ஏதும் சொல்லாமல் அவளுடன் நடக்கத் தொடங்கினான்.
ஜீப் காட்டுப்பாதையில் குலுங்கிச் சென்றது. வர்மன் ஜன்னல் பக்கம் தலை சாய்த்து அமர்ந்திருந்தான். அவனது இறுக்கமான மௌனம் மீராவை ஏதோ செய்தது. அடிபட்ட சிங்கம் போல இருந்தது அவன் அமர்ந்திருக்கும் தோரணை.
“அந்தப் பாதையில இறங்கும்போது பயமா இல்லையா? 500 அடி… ஒரு சின்னத் தப்பு நடந்திருந்தாலும்…”
வர்மன் திரும்பாமலேயே சொன்னான்,”வேலையை முடிக்கணும்னு நினைச்சேன். முடிச்சேன். அவ்வளவுதான்.”
“வேலையை முடிக்கிறதுன்னா என்ன? சட்டத்தை மதிக்காம 500 அடி பள்ளத்துல குதிக்கிறதா? சிஸ்டம் படி பேக்-அப் கூப்பிட்டு இருக்கலாம்ல?”
வர்மன் இப்போது மீராவைத் திரும்பிப் பார்த்தான். அவன் கண்கள் சிவந்திருந்தன. “சிஸ்டமா? உங்களோட அந்தத் தடிமனான ரூல்ஸ் புக்கைத் தூக்கிக்கிட்டு வர்றதுக்குள்ள அந்தச் சிலையைக் கடல் கடந்து கடத்தி இருப்பாங்க “.
“ஓ… அப்போ நாங்கெல்லாம் வெறும் பேப்பர் ஒர்க் பண்ற ரோபோக்கள், நீங்க மட்டும் தான் ரத்தமும் சதையுமா இருக்கிற ஹீரோவா?” மீரா ஸ்டீயரிங்கை ஆக்ரோஷமாகத் திருப்பினாள்.
வர்மன் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவனது கண்கள் தகித்தன.
“என்னடிப் பிரச்சனை உனக்கு இப்ப?”
“இந்தா… போடி வாடி-ன்னு பேசுன..” என்றபடி அவளும் ஒருமையில் அவனைப் பார்த்து கோபமாகத் திரும்ப…அவன் தோள் காயம் தான் முதலில் பார்வையில் விழுந்தது. இன்னும் ரத்தம் சொட்டுச் சொட்டாக வழிந்து கொண்டிருப்பதை இப்போது தான் அவன் கவனித்தாள்.
“உங்க தோள்ல ரத்தம் அதிகமா வருது,” எனப் பதைபதைத்தபடியே அவள் கத்தினாள்.
மீரா ஜீப்பைத் ஒரு ஓரத்தில் நிறுத்திவிட்டு வர்மன் பக்கம் பாய்ந்தாள்.
அவன் சட்டையின் மேலிருந்த துணியை இன்னும் இறுக்கிக் கட்டினாள். அவள் கைகள் நடுங்கின.
மீராவின் அந்த திடீர் ஆக்ரோஷமான கவலை, வர்மனை ஒரு நிமிடம் நிலைகுலையச் செய்தது. அவன் அவளை முறைத்துப் பார்க்க முயன்றான், ஆனால் மீராவின் கண்களில் தெரிந்த அந்த உண்மையான பயம் அவன் ஈகோவை மெல்லக் கரைத்தது.
“விடு மீரா… நான் எத்தனையோ அடிதடி பார்த்தவன்.இது சும்மா…”
“வாயை மூடுங்க!” மீரா அவன் பேச்சை இடைமறித்தாள். “உங்க வீரத்தைக் காட்ட இது இடமில்லை. இன்னும் பதினஞ்சு நிமிஷத்துல ஹாஸ்பிட்டல் போகலைன்னா, ரத்த இழப்புல நீங்க மயங்கி விழுந்துடுவீங்க. அப்புறம் நான் தான் உங்களைத் தூக்கிட்டு ஓடணும்…!”
“என் உடம்பைப் பத்தி எனக்குத் தெரியும்.நீ கவலைப்பட வேணாம்.” என்று அவன் கிண்டலாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் ஒரு கசப்பு இருந்தது.
“இது கவலை இல்லை … என் கடமை!”
“கடமையா?” வர்மன் அவளைச் சட்டென நெருங்கினான். அவனது மூச்சுக்காற்று அவள் முகத்தில் பட, மீரா ஒரு கணம் பின்வாங்கினாள்..
“ சும்மா உன்னையே ஏமாத்திக்காத டி, உனக்கு வலிக்குது ! அது உனக்கே தெரியல…! இந்த இதயம் எனக்காகத் தான்டீ துடிக்குது!” வர்மனின் கண்கள் சிவக்க, அவன் மீராவின் நெஞ்சின் மீது கை வைத்து அழுத்தமாக இடித்தபடி தணிந்த குரலில் கர்ஜித்தான்.
“அது தான் எனக்கும் புரியலயே!  … என் அறிவும் மனசும் ரெண்டும் வெவ்வேறா திரியுதே”  மனதுள் உட்குமைந்தாள் மீரா.
அந்தக் காட்டுப் பாதையில் ஜீப் பறந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!