அன்று பள்ளிக்கூடத்தில் காலை இடைவேளையின் பொழுது வராஹியின் அருகே உற்சாகமாக வந்தாள் வீர்யா.
Advertisement
இருவரும் பேசிக்கொண்டே இருப்பதால், வகுப்பாசிரியர் இருவரையும் இடம் மாற்றி அமர வைத்திருந்தார்.
“என்ன வரா? ஏன் உம்முன்னு இருக்க?”
Advertisement
Advertisement
“ப்ச்ச்.. ஒன்னுமில்லை வீர்யா”
“ஒன்னுமில்லைன்னு உன் வாய் தான் சொல்லுது.. என்கிட்டே சொல்றதுக்கு என்ன வரா.. சொல்லு என்ன ஆச்சு?”
Advertisement
“நம்ம மிஸ் என்னை அந்த சம்பவ் பக்கத்துல போய் உட்கார வச்சுட்டாங்க.. எனக்கு அவனை பார்த்தாலே பிடிக்கலை..”
“ஏன் பிடிக்கலை?”
“அவன் பாதி டெஸ்க் மேலே அவனே எடுத்துக்கிறான். தெரியாம என் நோட் அவன் நோட் மேலே பட்டா தள்ளி விட்டுடறான்”
இரண்டு பேர்களுக்கு ஒரு டெஸ்க் என்று இருந்தது அவர்கள் வகுப்பின் அமைப்பு.
எப்பொழுதுமே வரா அதிக இடத்தை உபோயகிப்பாள். முன்பு எப்பொழுதும் வீர்யா உடன் அமர்வதால் அவள் சமாளித்துக் கொள்வாள்.
“அதுகூட பரவாயில்ல வீர்யா. அவன் பின்னாடி உக்காந்துட்டு இருந்த நரேஷ் கிட்ட சொல்றான், ‘நல்ல வேலை தனி தனி நாற்காலி கொடுத்திருக்காங்க.. இல்லனா இந்த குண்டு பூசணிக்காய் பக்கத்துல உட்கார்ந்தா நான் நசுங்கி போயிருப்பேன்னு..’”என்றாள் வரா மூச்சு வாங்க. சொல்லும்பொழுதே அவள் முகம் கோவத்தில் சிவந்துவிட்டது.
“உன்னை பார்த்து குண்டு பூசணிக்காய் சொன்னானா.. நீ வருத்தப்படாத்தே வரா.. நான் பார்த்துக்கிறேன்.. சரி நீ இதை சாப்பிடு, உனக்கும் சேர்த்து தான் அம்மா கொடுத்து விட்டாங்க” என்று ஸ்னாக்ஸ் டப்பாவை தோழியிடம் கொடுத்துவிட்டு தீவிர யோசனைக்கு சென்று விட்டாள் வீர்யா.
மறுநாள் கலர் செல்லோ டேப் கொண்டு வந்து, வராஹியின் டெஸ்க்கை அவளுடனே சேர்ந்து அளந்து, சரி பாதியாக குறித்து வைத்து அதன் மேலே இந்த கலர் டேப்பை ஒட்டினாள்.
“இப்ப நீ உன் பக்கம் தாராளமா வச்சுக்கலாம் வரா.. சரியா?” என்றாள் வீர்யா.
அதை பார்த்த பிறகே வராஹிக்கு உண்மை புரிந்தது. இத்தனை நாட்களாக தானே அதிக அளவு இடத்தை உபயோகித்திருப்பதும் வீர்யா விட்டுக் கொடுத்திருப்பதும்.
“நீ ஏன் முன்னவே நான் அதிகம் இடத்தை உபயோகிக்கிறேன்னு சொல்லவே இல்ல? நீ சொல்லி இருந்தா எனக்கு புரிஞ்சிருக்கும் இல்லையா வீர்யா?”
“எனக்கு கொஞ்ச இடத்துல எழுதுறதுல சிரமம் இல்லை வரா”
“அது அப்படி இல்ல, எப்பொழுதும் நான் உன் கூட மட்டுமே இருக்க முடியாது இல்ல? நீ விட்டுக்கொடுக்கிறது மாதிரி எல்லார் கிட்டயும் நான் எதிர் பார்க்க முடியுமா?”
மனதில் பட்டத்தை அப்படியே கூறிவிடுவாள் வராஹி. அதே போல தன் மீது தவறு என்றால் உடனே ஒத்துக்கொள்வாள்.
“சரி சரி” என்றாள் வீர்யா சற்றே எரிச்சலாக. வீர்யாவிற்கு பொறுமை கொஞ்சம் கம்மி. அதே போல, பதிலுக்கு பதில், பழிக்கு பழி என்பது அவள் கொள்கை. அவள் மிருதுவாக இருப்பது வாராஹியிடம் மட்டுமே.
“இல்ல வீர்யா.. நீ எனக்கு அந்த சலுகையை கொடுத்ததுனால, நான் அது தான் எனக்கு கிடைக்க வேண்டியதுன்னு சம்பவ் கிட்ட எரிச்சல் பட்டிருக்கேன்.. நான் அவனிடம் மல்லுக்கு நிக்க போய் தானே அவன் என்னை குண்டு பூசணிக்காய் சொல்லி இருக்கான்”
“இப்ப நான் தான் காரணம் சொல்றீயா? அதுக்காக அவன் உன்னை குண்டு பூசணிக்காய் சொல்லுவானா? போ வரா” என்று தோழியிடம் கோவமாக கூறிவிட்டு அவள் இடத்திற்கு வந்து தொப்பென்று அமர்ந்து கொண்டாள்.
மறுநாள் காலையில் அனைத்து மாணவர்களும் வகுப்பு வாரியாக அசெம்பிளிக்கு வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு வகுப்பு மாணவர்கள் ஒரு வரிசையிலும் பக்கத்திலே அதே வகுப்பை சேர்ந்த மாணவிகள் ஒரு வரிசையிலும் என்று நின்றுகொண்டிருப்பார்கள்,
வராஹி உயரம் கொஞ்சம் குறைவு என்பதால் முதலில் இருந்து இரண்டாவதாக நிற்பாள். வீர்யா கடைசியில் இருந்து இரண்டாவதாக நிற்பாள்.
வீர்யாவின் இடது பக்கம் தான் சம்பவ் இருந்தான்.
அவனது காலணிகள் பளபளவென்று மின்னியது.. அவ்வளவு நேர்த்தியாக பாலிஷ் போட்டு வந்திருந்தான்.
அசெம்பிளி முடியவும் ஒவ்வொரு வரிசையாக அனைவரும் வகுப்பறைக்குள் செல்ல வேண்டும் . செல்லும் போது உடற்பயிற்சி ஆசிரியர் அனைவரது சீருடை, காலணிகள் என்று சோதனை செய்வார்.
மாணவிகள் வரிசை செல்லும்பொழுது, வீர்யா தடுமாறி கீழே விழ இருந்து, முன்பே நின்ற மாணவியை பிடித்து சமாளித்து நின்றுவிட்டாள்.
பின் இவர்கள் வரிசை வகுப்பறைக்கு நகர்ந்துவிட்டது.
இவர்களுக்கு அடுத்து மாணவர்கள் வரிசை செல்கையில் சம்பவ்வை ஆசிரியர் தனியே நிப்பாட்டிவிட்டார்.
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் மிகவும் கவனமாக சீருடையை அணிந்து கொள்வான். குனிந்து பார்த்தால், அவன் ஷூ மேலே முழுவதும் மண்..
“சார் நான் பாலிஷ் போட்டுட்டு தான் வந்தேன்” என்றான் பாவமாக.
“அது எல்லாம் எனக்கு தெரியாது. இப்ப அழுக்கா தானே இருக்கு, ஒரு ரவுண்ட் கிரவுண்ட் சுத்தி ஓடு..” என்று அன்றைக்கு மாட்டிய ஐந்து மாணவர்களையும் ஓட சொல்லிவிட்டு அவர் சென்று விட்டார்.
சோகமாக வந்து வகுப்பில் அமர்ந்து கொண்டான் சம்பவ்.
காலை இடைவேளையின் போது,
“வரா.. காலையில ரன்னிங் போனா, குண்டு பூசணிக்காய் மாதிரி இல்லாமல் முருங்கைக்காய் மாதிரி இருக்கலாம் தெரியுமா?” என்றாள் வீர்யா.
சம்பவ் ‘அடப்பாவி’ என்று வீர்யாவை பார்த்தான்.
அப்பொழுது தான் அவனுக்கு வீர்யா காலையில் தடுமாறியது பின் சமாளித்து நடந்தது என்று நியாபகம் வந்தது.
“யார்கிட்டயாவது சொன்னா பாரு” என்று அவனுக்கு மட்டும் கேட்கும்படி மிரட்டிவிட்டு சென்றுவிட்டாள் வீர்யா.
அதன் பிறகு சம்பவ் வராஹியை எதுவும் சொல்ல மாட்டான். சிறிது நாட்களிலே வராஹியுடன் நட்பாகிவிட்டான். அதனால் வீர்யாவும் நட்பாகி போனாள்.
—————-
வீர்யா வீட்டில்…
“அண்ணா, உன்னை கிரிக்கெட் டீம்ல இந்த தடவை தேர்ந்தெடுக்கலையாமே?”
“ஆமா வீர்யா..” என்றான் சோகமாக.
“ஏன்? உங்க குரூப்ல நீதானே நல்லா விளையாடுவ?”
“அது வந்து புதுசா ராகுல்ன்னு ஓர் பையன் சேர்ந்திருக்கான். அவன் நல்லா விளையாடுறான்னு சார் சொல்லிட்டாங்க”
“அம்மா, நீ வந்து ஸ்கூல்ல பேசேன்.. என்னை டீம்ல சேர்த்துக்க சொல்லுங்க மா” என்றான் ரகுநந்தன் தாயிடம்.
“நான் வந்து என்னனு சொல்றது ரகு.. நீ தான் கேட்கணும்..”
“அப்பாவை வந்து பேச சொல்றியா?”
“டேய், நம்ம வெளியே தனியா கோச்சிங் போறோம். அதனால் கூட அவர் உன்னை சேர்த்துக்காம இருப்பாரு. நீ தான் கோச்சிங் கிளாஸ்ல நிறைய மேட்ச் விளையாடுறியே? இதை விட்டுடு பரவாயில்லை”
“ஆனாலும் ஸ்கூல் டீம்ல இருக்கனும் இல்ல ம்மா?” என்று கடுப்பாக கூறி எழுந்து உள்ளே சென்று விட்டான்.
வீர்யா தீவிர யோசனைக்கு சென்று விட்டாள்.
“இங்க பாரு வீர்யா, தேவை இல்லாம நீ இதுல தலையிட்டு பிரச்சனை பண்ணி வைக்காத புரியுதா?” என்று மகளை எச்சரித்துவிட்டே உள்ளே சென்றார் அன்னை.
மறுநாள் பள்ளிக்கு சென்று துப்பறிவு வேலைகள் எல்லாம் செய்து, அந்த ராகுலை பற்றி தெரிந்து கொண்டாள். அவன் பி.டி சாரின் அண்ணன் மகன் என்று.
இவள் தான் செய்தது என்று தெரியாமலே , இந்த விஷயத்தை மாணவர்களிடையில் பரப்பி, அப்படியே ஆசிரியர்கள் காதிற்கும் எட்ட செய்து, தாளாளர் வரை கொண்டு சென்று விட்டாள்.
அதன் பிறகு, தாளாளரே வந்து, தகுதி அடிப்படையில் தான் டீமை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் ரிப்போர்ட்கள் எல்லாம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டுவிட்டார்.
தகுதி அடிப்படையில் தேர்வு செய்யவும், முதலில் தேர்வானது ரகுநந்தன் தான்.
அவனுக்கு மிகவும் மகிழ்ச்சி. ஆனால் இதற்குப்பின் இருந்தது வீர்யா என்று ரகுநந்தன் உட்பட யாருக்கும் தெரியாது.
சம்பவிற்கு மட்டுமே தெரியும். அவன் ரகசியம் காப்பான் என்று நம்பிக்கை இருந்ததால் அவனை துணைக்கு சேர்த்துக்கொண்டாள். வரா இதற்கு எல்லாம் ஒத்து வர மாட்டாள். அவள் பிரச்சனையை நேர்மையாகவே கையாள நினைப்பாள்.
“ஏன் வீர்யா, நீ தான் செஞ்சேன்னு சொன்னா கெத்தா இருக்கும்ல, ஏன் யாருக்கும் சொல்லாம செய்ற?”
“சில விஷயம் எல்லாம் தடயமோ சாட்சியோ இல்லாம தான் செய்யணும் நண்பா.. நல்லதே செஞ்சாலும், நமக்கு ஆபத்து வராத மாதிரி பார்த்துக்கணும்.. புரிஞ்சுதா?”
“நீ எல்லாம் இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல வீர்யா.. நான் எப்பவுமே உனக்கு பி.ஏ வாவே இருக்கேன் ஓககேவா?” என்று கை குலுக்கினான் வீர்யாவோடு.
அன்றிலிருந்து வீர்யாவின் நம்பகமான ஆள் சம்பவ் தான்
வரா ரகுநந்தன் பற்றி கூறியதில் இருந்து வல்லபனுக்கும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று ஆசை பிறந்தது. பின் வராஹி மூலம் அவன் எங்கே கோச்சிங் செல்கிறான் என்று விசாரித்து இவனையும் அதே கோச்சிங் சென்டரில் சேர்த்து விட்டனர்.
முதலில் பார்க்கும் போது சிரித்து கொண்டார்கள் வல்லபனும் ரகுநந்தனும். நாளடைவில் இருவருக்குள்ளும் நல்ல நட்பு மலர்ந்தது.
அவ்வப்பொழுது வாராஹியும் வல்லபனும் வீர்யா வீட்டிற்கு வந்து விளையாடி சென்றார்கள்.
அந்த பருவத்திற்கே உரித்தான ஆசைகள், சின்ன சின்ன சண்டைகள், சமாதானங்கள், விளையாட்டு, படிப்பு என்று மகிழ்ச்சியாகத்தான் சென்று கொண்டிருந்தது பிள்ளைகளின் நாட்கள்.
ஆனால் விதி வசத்தால், கொஞ்சம் கொஞ்சமாக வாராஹியின் வீட்டில் தாளம் தப்பி போக ஆரம்பித்தது.