சுளீர் என்று எதிர்பாராமல் முதுகில் விழுந்த அடியால் துடித்துப் போய் “அம்மா” என்று அலறியது மீனுக் குட்டி.
அவள் அலறல் சத்தம் கேட்டு, திடீரென்று வேகமாக காற்று பேய்க் காற்றுப் போல வீசியதால், மிகவும் கஷ்டப் பட்டு, கொடியில் துணிகளைக் காயப்போட்டுக் கொண்டிருந்த கவி, அதை எல்லாம் அப்படியே போட்டு விட்டு, மீனு விளையாடிக் கொண்டு இருந்த இடத்தை நோக்கி வேகமாக ஓடி வந்தாள்.
வந்தவளிடம் அடைக்கலமானாள் மீனு!
கவியின் இடுப்பைக் கட்டிக்கொண்டு பயந்து கொண்டு நின்றவளை அணைத்துப் பிடித்தவாறே, மீனுவை இப்படி அடித்தவனைக் கோபமாக பார்த்தாள்!
Advertisement
“யாருங்க..நீங்க..இப்படி வீட்டுக்குள்ள கேக்காம வந்ததும் இல்லாம பிள்ளையை இப்படி போட்டு அடிச்சுருக்கீங்க?”
“நான் யாரா? நீ யாரும்மா முதல்ல?” என்றான் மீனுவை அப்படி கொடுமையாக அடித்தவன்!
மீனுவின் அலறல் சத்தத்தை கேட்டு விட்டும், இவர்களின் கோபமான பேச்சு சத்தத்தையும் கேட்டு பின்புறம் தோட்டத்தை ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்த நந்தினியும் ஓடி வந்தாள்.
Advertisement
“யாரு.. என்ன? மீனு ஏன் அப்படி கத்துனா?” என்றபடி அங்கே வந்தவளுக்கு அங்கே அந்த இருந்த ரத்தினத்தைக் கண்டவுடன் உள்ளுக்குள் கடுப்பாகி, ஏதோ பேச முற்படுகையில், சரியாக அங்கு வந்து சேர்ந்து விட்டாள் ரஞ்சிதா!
Advertisement
ரத்தினம் ரஞ்சிதாவின் கணவன்!
ரஞ்சிதா ரத்தினம் திருமணத்தின் போது ரகு சிறிய பையன்!
ரகுவின் பெற்றோர்கள் சிறு விவசாயிகள்!
Advertisement
அவர்களின் ரெண்டு ஏக்கர் நிலத்தோடு, மற்றவர்களின் நிலத்தையும் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்தவர்கள்!
சொந்தமாக சிறிய வீடு ஒன்றே அவர்களின் சொத்து!
ஆனால் மிகப்பெரிய சொத்தாக அவர்களுக்கு ரகு இருந்தான்! அவனின் படிப்பு இருந்தது!
அப்போதே நன்றாக படித்தான் ரகு.
அப்போது அவன் அப்பா வழியில் சொந்தமாக ஆதரவு தேடி அடைக்கலமாக வந்தார்கள் ரஞ்சிதாவும், கணவனை இழந்த அவளின் தாயும்.
கணவன் இல்லாமல் பதினாலு வயது பெண்ணோடு வாழ வழி தெரியாமல் நின்றவர்களை தங்களோடு வைத்துக் கொண்டார்கள் ரகுவின் பெற்றோர்கள்!
“நான் குடிக்கிற கஞ்சியில உனக்கும் கொஞ்சம் ஊத்தறேன்! வாம்மா” என்று அவர்களை ஆதரித்தனர் அவர்கள்!
ரஞ்சிதாவின் அம்மாவும் நல்ல உழைப்பாளி!
மிக நன்றாக சமையல் செய்வார்.
அந்த ஊரில் சிறிய இட்லிக் கடை ஒன்றை போட்டு விட்டார்!
காலங்கள் இப்படியே செல்ல, ரஞ்சிதா பெரிய மனுசி ஆனாள்.
அடுத்த மூன்று வருடங்களில் எல்லாம் அவளை ஒருவன் கையில் பிடித்து கொடுத்து விட்டால் போதும் என்று அவள் அம்மா கொண்டு வந்த மாப்பிள்ளை தான் ரத்தினம்!
ஆனால் ரகுவின் அப்பா அவனைப் பற்றி நன்றாக விசாரித்து விட்டு வேண்டாம் என்றும் சொல்லியிருந்தார்.
ஆனால் விதி வேறு விதமாக செயல் பட்டது!
அந்த ஊரில் கோவில் திருவிழாவின் போது, கோவில் வளாகத்தில் இருந்த ஒரு மரத்தில் கூடு கட்டி இருந்த கதண்டு என்னும் விஷ வண்டுகள் கடித்து, அந்த வருடம் நிறைய பேர் இறந்தார்கள்!
அதில் ரகுவின் பெற்றோர், ரஞ்சிதாவின் அம்மாவோடு, அவர்கள் வீட்டுக்கு அருகில் இருந்த பெரும் நிலக்கிழார் குடும்பத்தை சேர்ந்த ஒருவரான மஞ்சுவின் அம்மாவும்!
மஞ்சு அப்போது சிறியப் பெண்! வீட்டில் இருந்து விட்டாள்!
ரஞ்சிதா வீட்டு விலக்காகி கோவிலுக்கு செல்லவில்லை அன்று!
ரகுவும் அவளுக்கு துணையாக வீட்டில் இருந்தான் அன்று!
பெரியவர்கள் எல்லோரும் இறந்த பின்னே,
“உங்க உனக்குப் பார்த்த மாப்பிள்ளை நான் தான்” என்று சொல்லி ரஞ்சிதாவை கொஞ்சம் கூட யோசிக்க விடாமல் கல்யாணம் செய்து கொண்டான் ரத்தினம்!
ஆனால் சதா குடித்து விட்டு வந்து தன் அக்காவை அடித்துக் கொண்டிருந்தவனை, ரகு கொஞ்சம் பெரியவனாகி விட்ட பின்பு துரத்தியே விட்டிருந்தான்!
பின் சில வருடங்கள் கழித்து யாரையோ ஏமாற்றி விட்டு கையில் ரொக்கமாக ஐந்து லட்ச ரூபாயுடன் திரும்ப வந்தான்.
வந்தவன், கொண்டு வந்த காசு தீர்ந்த உடன்எந்த வேலைக்கும் செல்லாமல் வெட்டியாக ஊரை சுற்றிக் கொண்டு இருக்க, அதற்குள் ரகு படித்து வளர்ந்து, கல்யாணமும் செய்து , சொந்த தொழில் ஆரம்பித்து, நல்ல முதலாளியாக அமர்ந்து விட்டான்!
அவன் அக்காவுக்காக வேண்டி தான், வெட்டி ஆபிசராக திரிந்து கொண்டிருந்த அவனுக்கு ரகு தான் ஒரு தொழிலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறான்.
செகண்ட் ஹாண்டில் ஒரு பொக்லைன் வண்டி வாங்கிக் கொடுத்து அதை வாடகைக்கு விடும் தொழிலை ஆரம்பித்துக் கொடுத்து இருக்கிறான் அவன் அக்காவுக்காக!
மஞ்சு இருந்த வரை அவளிடம் தான் வண்டி ட்ரிப் அடித்த கணக்கு வழக்குகளைக் கொடுப்பான் ரத்தினம்!
அவற்றில் பெரும்பாலும் பொய்க்கணக்குகள் தான் அதிகம் இருக்கும்!
மஞ்சு அதைக் கண்டுபிடித்து அவ்வபோது திட்டிக் கொண்டு தான் இருப்பாள்!
இருப்பினும் ரஞ்சிதாவின் முகத்துக்காக பெரும்பாலும் திட்டுவதோடு சரி.
வண்டியைத் திருப்பிக் கொடு என்று எல்லாம் கேட்டதில்லை அவளுமே!
இதோ.. இப்போது மஞ்சுவும் இருக்குமிடம் தெரியவில்லை!
ரகு ஊருக்குள் வருவதே இல்லை!
அதனால் ரத்தினம் பாடு தான் இப்போது கொண்டாட்டம்!
மனைவி ரஞ்சிதாவை மிகவும் எளிதாக கையாண்டு விடுவான்!
மஞ்சுவும் இப்போது இல்லை!
ரகுவும் இங்கு இல்லை!
கேப்பார் இல்லாத சொத்துக்கள்!
ஆண்டு அனுபவித்துக் கொண்டிருந்தான் ரத்தினம்!
“அண்ணே.. இப்ப எதுக்குண்ணே பாப்பாவை இப்படி அடிச்சீங்க? இது ரகு அண்ணனுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்?” நந்தினி கேக்க,
ரத்தினம் ஏதோ சொல்ல வருமுன், குறுக்கிட்ட ரஞ்சிதா,
“ இரு.. நந்தினி நான் கேக்குறேன்!
ஏங்க… எதுக்கு அவளை அடிச்சீங்க?
“பாரு.. எப்படி ஈர மண்ணில் உட்கார்ந்து விளையாடிக் கொண்டு இருக்கா!
ஒண்ணு காய்ச்சல் வரும். இல்ல கை காலில் எல்லாம் சிரங்கு வரும்! அதான் அவளை எழுந்து போக சொல்லி லேசா தட்டினேன்!”
“சரி. சரி.. மீனு..நான் மாமாவை அப்புறமா நான் அடிச்சுடறேன். நீ அழுவாத.. உள்ள போ..
டீச்சர் உனக்கு ஏதாச்சும் ஸ்நாக்ஸ் வாங்கி வச்சுருப்பாங்க.. இல்லையா டீச்சர்..” என்று கவியைப் பார்க்க, கவியும் மீனுவை அழைத்துக் கொண்டு உள்ளே போனாள்.
“டீச்சர்..முதுகு எரியுது டீச்சர்” என்று மீனு இன்னமும் விசும்ப, “சரியாகிடும்..வா..நாம உள்ளே போகலாம்” என்று அவளை அழைத்து சென்று,
அவள் கவுனின் ஜிப்பை லேசாக அகற்றி முதுகைப் பார்த்தவளுக்கு கோபத்தில் கண்கள் சிவந்தன!
அப்படியே ஐந்து விரல்கள் பதிந்து போய் இருந்தன குழந்தையின் முதுகில்!
“படுபாவி.. நாசமா போக.. இப்படியா குழந்தையை அடிப்பான்! அவன் கையை அப்படியே முறிச்சு தான் போடணும் கடவுளே” என்று வாய் விட்டே அவனைத் திட்டிக் கொண்டே, தேங்காய் எண்ணெய் எடுத்து வந்து மீனுவின் முதுகில் தேய்த்து விட்டாள்.
வெளியே இன்னமும் காற்று வேகமாக அடித்துக் கொண்டிருந்தது!
அன்று ஞாயிற்றுக்கிழமை.
மீனு இங்கு வந்து விளையாட வேண்டுமென்று அடம் பிடித்து தோட்ட வேலை செய்ய வந்த நந்தினியோடு வந்து விட்டாள்.
“டீச்சர் நாம கல்லு வச்சு விளையாடலாமா.. இருங்க.. அங்க கேட் கிட்ட நிறைய கல்லு இருக்கு மூட்டையில். நான் போய் பொறுக்கிட்டு வர்றேன்” என்று சொல்லி
அந்த வீட்டின் திருஷ்டி பரிகாரம் போல முன்பகுதில் இருந்த அந்த பழுதடைந்த ட்ராக்டர் நிறுத்தி இருக்கும் இடத்திற்கு அருகில் சுற்றிலும் மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஜல்லிக் கல் மூட்டையில் இருந்து கற்களை பொறுக்கிக் கொண்டு இருந்தாள் மீனு.
“நீ எடுத்துட்டு வா. நான் அதுக்குள்ள துணியை எல்லாம் காயப் போட்டுட்டு வந்திடறேன்!” என்று சொல்லி இருந்தாள் கவி.
அவள் முதல் இரண்டு புடவைகளைக் காயப் போடும்போது கூட சுத்தமாக காற்று இல்லை!
அதன் பின் தான் திடீரென்று வேகமாக காற்று வீசத் தொடங்கி இருந்தது!
அப்போது தான் ரத்தினமும் உள்ளே அடி எடுத்து வைத்திருந்தான்!
பின்பக்கம் கூட்டிக் கொண்டிருந்த நந்தினியும், ‘என்ன திடீர்ன்னு இப்படி காத்து அடிக்குது’ என்று குப்பை மீது கொஞ்சம் தண்ணீர் தெளித்து அடக்கிக் கொண்டிருந்தாள் அப்போது!
கவியும் மீனுவும் வீட்டுக்குள் சென்றவுடன் மீண்டும் தோட்டத்திற்கு சென்று அதை சுத்தம் செய்துக் கொண்டிருந்த நந்தினியின் கால்களில் குத்தியது ஏதோ ஒன்று!
சட்டென்று காலை உதறி விட்டு, காலில் குத்தியது என்னவென்று கையில் எடுத்துப் பார்த்தாள் நந்தினி!
அது ஒரு மொபைல் கேஸின்(Mobile Case)உடைந்த ஒரு சிறிய பகுதி!
அதன் பின் பக்கம் திருப்பிப் பார்த்த நந்தினி திடுக்கிட்டாள்!
அது அவள் போனின் கேஸ்!
மஞ்சு வாங்கிக் கொடுத்த பூப்போட்ட டிஸைன் கேஸ் அது!
‘இந்த போனைத் தானே அவளிடம் சர்வீஸ் செய்ய சொல்லி கொடுத்து, இப்போது வரை எங்கு போனது என்று தெரியாத அதே போன்! அந்த போனின் கேஸ்! இது எப்படி இங்க? அதுவும் உடைஞ்சு போய்!’
அது கிடந்த இடத்தின் அருகே தேடினாள்.
அங்கே இன்னொரு சிறிய துண்டு!
இரண்டும் மாடியில் இருந்து வரும் மழைத் தண்ணீர் குழாயின் அருகே!
அப்போ.. மாடியில் இருந்து மழைத் தண்ணீரில் அடித்து வந்துருக்கு போல! அப்ப போன் எதுவும் மாடியில் உடைஞ்சு கிடக்குமோ? மனதுள் சந்தேகம் எழ, மாடிப்படியை நோக்கி சென்றவளைத் தடுத்தது, ரத்தினத்தின் குரல்!
“ஏய்.. நீ எங்க அங்க போற?”
“ஏன்..? மாடிக்கு”
“உனக்கு அங்க என்ன வேலை?”
“அங்கயும் செடிங்க இருக்கு! தண்ணீர் ஊத்தணும்!”
“எல்லாம் இங்க இருக்கிற செடிகளை பார்த்துகிட்டா போதும்! அங்க எல்லாம் போக வேண்டாம்!” என்று சொல்லிட, ரஞ்சிதாவும் “வேண்டாம் நந்தினி. இப்ப அங்க ஒரு செடியும் இல்ல! எல்லாம் போய்டுச்சு!”
“நீ இங்க இருக்கிற செடிகளை மட்டும் பார்த்துக்கோ போதும்!”
இருவரையும் சந்தேக பார்வை பார்த்து விட்டு சென்றாள் நந்தினி!
“இதுக்கு தான் நான் சொன்னேன். வீடு அப்படியே பூட்டிக் கிடக்கட்டும்னு! வாடகைக்கு ஆசைப்பட்டு, இப்ப பாரு எல்லாரும் வீட்டுக்குள்ள வர ஆரம்பிச்சுட்டாங்க!” என்றான் ரத்தினம் கடுப்பாக!
“அது ரகு சொல்லி வந்து தோட்டத்தைப் பார்த்துக்கிதுங்க. நாம என்ன அதுக்கு சம்பளமா தர்றோம்!
ஏதோ அதுவும் மஞ்சு மாதிரி ஒரு செடி பைத்தியம்! அதுவா வந்து வேலை செய்யுது! விடுங்க.
என்னையே சொல்றீங்களே.. நீங்க இப்ப பண்ணினது மட்டும் ரகுவுக்கு தெரிஞ்சது அவ்வளவு தான்!
ஏங்க மீனுவ அப்படி அடிச்சு வச்சுருக்கீங்க?”
“அவ என்ன பண்ணினா தெரியுமா? எங்க உக்கார்ந்து விளையாடிட்டு இருந்தா தெரியுமா? அந்த ட்ராக்டர் பக்கத்துல! பார்த்துட்டு சும்மா இருக்க சொல்றியா?”
“ட்ராக்டர் பக்கத்தில்” என்றவுடன் ரஞ்சிதாவின் முகம் ஒரு கணம் கறுத்து மீண்டது!
“பாரு.. இந்த ஜல்லி மூட்டைய எல்லாம் சரிச்சு விட்டிருக்கு சனியன்..” என்று அவன் திட்டிக் கொண்டே அவற்றை மறுபடியும் நேராக வைத்துக் கொண்டிருந்தான்!
அப்போது மீண்டும் ஒரு சுழல் காற்று போல வேகமாக அடித்த காற்றில், காம்பவுண்ட் சுவரின் மேல் வைக்கப்பட்டிருந்த ஒரு சிமென்ட் பூந்தொட்டி ஒன்று சரிந்து சரியாக ரத்தினத்தின் வலது கையின் மேலே விழுந்து அவன் கை எலும்பை முறித்து விட்டது!