சீதாவுக்கு ஏன் தன்னை எல்லாரும் வேதனை படும் படி நடத்து கொள்கிறார்கள்..
தனக்கென்று ஒரு சுயமுடிவு எடுக்க உரிமை இல்லையே, தன் கருத்தைக்கேட்காமல் அவர்கள் இஷ்டத்துக்கு என்னை வளைக்கின்றார்களே, ஏன் என்று மனதில் ஆயிரம் கேள்விகள் தோன்ற? அவள் யோசித்தபடியே அமைதியாக..
Advertisement
ரவி ஏற்பாடு பண்ணியிருந்த தனி சிறிய விமானத்தை அவனோடு பறந்துக்கொண்டிருந்தாள் சீதா..
எங்கே போறோம் என்று ரவியிடம் ஒரு வார்த்தை பேச வில்லை .
அவள் அமைதியை பார்த்து ரவி அவள் எதிரில் வந்து அமர்ந்தவன்..
“நீ ஏன் இவ்வளவு அமைதியா இருக்க சீதா .. உன் பிரண்ட் என்ன பேசுனாலும் இப்படி தான் அமைதியா இருப்பீயா,, நான் அப்படி இல்லடான்னு சொல்ல வேண்டியது தானே.. இல்லன்னா உன் பேரன்ஸ் கிட்ட சொல்லு, அத விட்டுட்டு இப்படி அமைதியா இருக்காத.” என்றவன்..
“உன் பேரன்ஸ் உன்னை தேடுவாங்க தானே,, நீ வேணா ஒரு போன் பண்ணி சொல்லிடு” என்றான்..
“இல்லாத பேரன்ஸ்க்கு நான் எங்கே போவேன்” என்றாள் ஒரு விரக்தியான சிரிப்பு சிரித்து.
“என்ன சொல்லுற சீதா! உனக்கு பேரன்ஸ் இல்லையா,, அந்த டைரக்டர் சொன்னானே, உன் பேரன்ஸ் ரொம்ப கண்டிப்பான வங்க, சீதாவை எங்கேயும் அனுப்ப மாட்டாங்கன்னு,, உண்மையை சொல்லு சீதா உனக்கு பேரன்ஸ் இல்லையா”?.என்றான்..
“இல்லை” என்றவள்…
“அம்மா செத்து பல வருஷம் ஆச்சு, அப்பா செத்து இன்னும் ஒரு வருஷம் கூட ஆகல.. ” என்றாள்.
“அப்போ கூட பிறந்தவங்க..”? ..என்றான் ரவி…
“ஒரு தம்பி இருக்கான், டாக்டர் படிக்குறான்”.. என்றதும்.
“அவனை நீ தான் படிக்க வைக்குறீயா”?.
“ஆமாம்” என்று தலையாட்டி இருந்தவளை…
“சூப்பர் சீதா அப்பா, அம்மா இல்லாம கூட, உன் தம்பியை டாக்டருக்கு படிக்க வைக்குற, வெரி குட்” என்றவன்..
“சாரி சீதா உன் பிரண்ட் உன்னை திட்டுனது கோபத்துல உன்னை, என் கூட கூட்டிட்டு வந்துட்டேன், உனக்கு விருப்பம் இல்லன்னா நீ கிளம்பளாம்” என்றவன்.
பிளைட்டை ஓட்டிக்கொண்டிருந்த பைளெட்டிடம் விமானத்தை சென்னைக்கு திருப்ப சொல்லிட்டு வர்ரேன்” என்று அவன் கூற..
“வேண்டாம் சார்,, எனக்கு கூட எங்கேயாவது தனியா போகனுமுன்னு தோனுது, அங்கேயாவது அமைதியான இடத்துக்கு போகனும் என்னை பற்றி தெரியாத இடத்துக்கு போகனும், முதல்ல நல்லா தூங்கனும்” என்று சீதா கூற…
“கோவா போலாமா சீதா” என்றான் ரவி..
“உங்க இஷ்டம் சார்” என்றாள்..
பெங்களூரு சென்ற விமானம் இப்போது கோவாவை நெருங்கி கொண்டிருந்தது,,.
இந்த சாயக்காலம் வேளையில் சூடான காற்று கூட சீதாவுக்கு இதமாக இருந்தது.
அந்த கடற்கரை தனி ஹோட்டல் ரூம்பிற்கு ரவி சீதாவை அழைத்து வந்திருந்தான்.
முன்னாடி பூங்கா போல உள்ள ஹோட்டல் ரூம் அமைப்பு..பின்னாடி பார்த்தால் கோவா பீச், அவ்வளவு அழகாய் இருந்தது அந்த தனி வீடு.,, கீழ் தளம் மட்டுமே, இரண்டு படக்கை அறைக்கொண்ட வீடு..
கண்ணாடியிலானா வின்டோஸ், பெரிய திரைசீலை போட்டு மறைத்திருக்க, பார்க்க அவ்வளவு அழகாய் இருந்தது.
சீதா அந்த அறையை சுத்தி பார்த்துக்கொண்டே இருக்க.
சீதா கிளம்பு என்று அவளை
பக்கத்தில் உள்ள மஜாஸ் சென்டருக்கு அழைத்து சென்றான்.
‘சீதா இது என்ன இடம்’ என்று பார்க்க.
“இது புல் பாடி மஜாஸ் பண்ணுற இடம் சீதா, லேடிஸ் தான் வருவாங்க மஜாஸ் பண்ணிக்கோ, நல்லா தூக்கம் வரும் தூங்கு, தூங்கி எழுந்ததும் உடல் வலி எல்லாம் பறந்து போயிடம், அப்புறமா எனக்கு கால் பண்ணு என்று அவளிடம் அவள் போனை மட்டும் தந்து விட்டு செல்ல.
வைபெரேட்டில் அவள் போன் அடித்து கொண்டிருந்தது, சிரஞ்சீவி தான் அழைத்து கொண்டிருந்தான்.
போனை எடுத்து பார்த்தாள் சீதா சிரஞ்சு என்று வர..
மீண்டும் திட்டத்தான் கூப்பிடுகிறான் என்றவள் போனை ஆப் பண்ணிவிட்டு மஜாஸ் சென்டருக்குள் நுழைந்திருந்தாள், உடல் வலி, மனவலி, சோர்வு, அலச்சல், எல்லாம் சேர்ந்து சீதாவுக்கு ஒரு விதமான சோர்வை தர, தூக்கம் கண்ணை இருட்டிக்கொண்டு வர.. எங்கே போய் விழுந்து நிம்மதியாக தூக்கம் வேண்டுமென்று சென்றிருந்தாள்..
அங்கே சிவா சிரஞ்சீவி அடித்திருந்தான்..
அவனிடம் பயங்கமாக சண்டை போட்டவன்,, சீதாவை எப்படியாவது அழைத்து வர வேண்டும் என்று
பெங்களுர் சென்றான்.. ரவி சீதாவை அழைத்துக்கொண்டு பெங்களூரு சென்றிருப்பான் என்று இருவரையும் தேடி பெங்களூரு சென்று கொண்டிருந்தான் சிவா..
சிவா வந்து திட்டி அடித்ததும் தான் சிரஞ்சீவிக்கு நான் பண்ணியது தப்பு என்று தெரிய.
சீதாவை போனில் அழைத்துக்கொண்டிருந்தான்..
சீதாவோ எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் அமைதியான இடத்தில் அமர்ந்திருந்தாள்,, அவளுக்கு மஜாஸ் செய்து விட என்று இரு பெண்கள் வந்திருந்தனர், அவர்கள் பார்ப்பதற்கு நேபாள் காரர்கள் போல தெரிந்தனர்..
இவளிடம் அனுமதி கேட்டு, இவளை உள்ளே அழைத்து சென்றவர்கள் அவளுக்கு குடிக்க வெல்கம் டிரிங் போல குடிக்க கொடுத்து விட்டு..
இருவரும் சீதாவுக்கு மஜாஸ் செய்தார்.
அவ்வளவு இதமாக இருந்தது சீதாவுக்கு பாதி மஜாஸ் செய்யும் போதிலே தூங்கிவிட்டாள் சீதா..
ஆனால் அந்த மஜாஸ் செய்யும் பெண்கள் விட வில்லை, அனைத்து மஜாசையும் சீதாவுக்கு செய்து முடித்தவர்கள்,, சீதாவுக்கு ஆயில் மஜாஸ் செய்து கொண்டிருக்க மெல்ல கண்விழித்தாள் சீதா..
உடம்பெல்லாம் வலி எடுத்தது சீதாவுக்கு.. “போதும்” என்று அப்பெண்களிடம் சொல்ல.
, “இன்னும் கொஞ்சம் தான் மேம்” என்றவர்கள்.. அவளுக்கு அனைத்தையும் செய்து முடித்து வெது வெதுப்பான குட்டி நீச்சல் குளத்தில் சீதாவை குளிக்க வைக்க,, சீதாவுக்கு எதோ கனவில் நடப்பது போல தெரிந்தது..
ஆசை தீர நன்றாக குளித்தவளுக்கு..
உடல் துடைத்து மெல்லிய காட்டன் உடையை அணிந்த விட்ட பெண்கள் சீதா கூந்தலுக்கு நறுமணம் உள்ள. புகையை அவள் கூந்தலுக்கு காட்டி கூந்தலை காய வைத்தார்கள்..
சாப்பிட என்ன வேண்டும் என்று கேட்டு, அவள் கேட்டதை கொண்டு வந்து கொடுத்து அவளை உண்ண வைத்தவர்கள்,, அவளை பட்டு துணி விரிப்பில் படுக்க சொல்லி விட்டு.. அந்த அறையில் மெல்லிய இசையை இயக்கி விட்டு வெளியே சொல்ல..
சீதா உடல் அசதியில் அப்படியே படுத்து தூங்கியவள் தான் மறுநாள் மதியம் போல தான் எழுந்தாள்.
கொஞ்சமாக உடல் வலித்தாலும்.. இதமாக இருந்தது சீதாவுக்கு.. அவள் எழுந்ததை தெரிந்த பணி பெண்கள்.. அவளை குளித்து ரெடியாகி வருமாறு செல்ல..
அவர்கள் சொல் படியே குளித்து உடை மாற்றி வந்தவளை.. அழைத்து கொண்டு வெளியில் வர..
பைமீது சாய்ந்து கொண்டு போன் பேசிய கொண்டிருந்தான் ரவி..
இவளை பார்த்ததும் கையசைத்து இவளை அருகில் அழைக்க..
“மஜாஸுக்கு பில்’ என்று சீதா ரவியிடம் கேட்க..
ரவிவை காட்டிய அந்த பெண்கள், “சார் நேத்தே பில் பே பண்ணிட்டார் மேடம்” என்று கூற..
“எவ்வளவு” என்று கேட்டு இருந்தாள் சீதா,.
“ஒன் லாக்” என்று கூற..
தன் வாயின் மீது விரலை வைத்தவளை…
“வா சீதா” என்று ரவி வெளியே இருந்து அழைக்க..
அவன் முன்னாடி வந்து நின்றவளை அவன் ரசித்து பார்த்தான், அவன் வாங்கி கொடுத்த சர்வாரில், புதிதாய் பூத்த ரோஜா பூ போல் இருந்தவளை ரசித்து பார்க்க..
இவள் அவனை முறைத்து பார்த்தாள்..
“என்ன மேடம் நல்லா தூங்கி எழுந்தீயா,, எல்லாம் வசதியா இருந்துச்சா ” என்று கேட்டவனிடம்
கோபத்தை காட்ட முடியாமல்..
அவள் அனுபவித்து நிம்மதியா தூக்கத்தை சொன்னவள்..
“தாங்யூ ரவி சார், நல்லா நிம்மதியா தூங்கி எழுந்தேன்.. உடம்பும் மனசும் ரிலாக்ஸ், இருந்தாலும் இந்த மஜாஸுக்கு ஒன் லாக் அதிகம் தான் சார்”… என்றாள்.
“சில இதுக்கு எல்லாம் காசு பாக்க கூடாது சீதா, நீ நிம்மதியா தூங்கி எழுந்தல, அது போதும் ஏறு” என்று அவன் புல்ட்டில் ஏறி சாட் பண்ணி முருக்க..
சீதா இது வரை அழகு மலர் டூவிலர் தவிற எந்த டூவிலரிலும் ஏறியது இல்லை, ரவி கூட எப்படி என்று அவள் முளித்துக்கொண்டு நிற்க.
“ஏறு சீதா” என்றான் மறுபடியும்.
அவள் ஒன் சைட் அமர போக..
“சீதா இரண்டு பக்கமும் கால் போட்டு உங்காரு நம்ம போற இடம் நிறைய மேடு பள்ளம் இருக்கும் என்று கூற.
சரி என்றவள் இரண்டு பக்கம் கால் போட்டு ரவிவை தோடாத வாறு அமர்ந்தவள்.. பிடிமானத்திற்கு புல்லட் கம்பிகளை பிடித்துக்கொண்டு அமர்ந்தாள்…
சிறிய நேர பயணத்திற்கு பிறகு, ஒரு பெரிய சீ புட் ஹோட்டலுக்கு சீதாவை அழைத்து வந்திருந்தான் ரவி..
“நீ பிஸ் சாப்பிடவ தானே சீதா”? என்று ரவி கேட்க.
“சாப்பிடுவேன்” என்று தலையாட்டியவளை ஹோட்டல் உள்ளே அழைத்து வந்தான்.
அங்கே பெரிய, பெரிய பாக்சில் சில கடல் உயிரனம் உயிரோடு இருக்க..
அதை பார்த்து ரவி தனக்கு வேண்டிய நண்டு, பிரான், மீன் வகைகளை தேர்வு செய்து சமைத்து தருமாரு கேட்டவன்.. சீதாவிடமும் இது உனக்கு பிடிக்கும் தானே சீதா என்று கேட்டே சமைக்க சொன்னான்.
சீதாவுக்கு ஒன்று புரியவில்லை..
ரவியின் தோள் டிசர்டை பிடித்து சுரண்டியவளை..
“என்ன சீதா” என்றான்..
“இது எல்லாத்தையும் இனிமே தான் சமைப்பாங்களா” என்றாள்..
“ஆமாம் சீதா ப்பிரஸ்சா சமச்சு எடுத்துட்டு வருவாங்க, நீ வா நம்ம வெய்ட் பண்ணலாம்” என்றவன்..
இருவருக்கும் நண்டு சூப் வாங்கிக்கொண்டு அவர்களுக்கென்று ரவி புக் பண்ணி இருந்த சிறிய குடிலுக்கு சீதாவை அழைத்து கொண்டு சென்றான்…
அது கோவா பீச்சை பார்த்த வாறு இருந்த குடில்.. கடலலைகளை பார்த்த வாறு சீதா நண்டு சூப்பை குடித்துக்கொண்டிருக்க.
ரவியோ கடலலையையும், சீதாவையும் சேர்த்து ரசித்திருந்தான்..
அவனுக்கு சீதாவிடம் பேசவேண்டும் என்று தோன்ற.
“என்ன படிச்சிருக்க சீதா” என்றான்..
அவள் “பீ, எச். டி” என்று சொல்ல.
“என்ன”? என்றவனுக்கு ஆச்சர்யம்..
“பீ, எச், டி படிச்சிருக்கீயா, “?. என்றான்.
“ஆமாம் சார்” என்றவள்.
தன் போனை எடுத்து அவனிடம், தான் பட்டம் வாங்கியதை காட்ட வேண்டுமென்று போனை எடுக்க.. அது சார்ஜ் இல்லாமல் சுச்சு ஆப் ஆகியிருந்ததது..
சரி அப்பறம் பார்த்து சார்ஜ் போடலாம்,, போன் இல்லாமல் இருந்தால் தான் நிம்மதி என்றவள்.
ரவியிடம் உங்க “போன் தருவீங்களா, தம்பிக்கு கால் பண்ணணும்” என்று சொல்ல…
“இந்தா சீதா” என்று அவனின் போனை தர.
பிரபுவுக்கு அழைத்திருந்தால் சீதா.. பிரபு முக்கியமான கிளாஸில் இருக்க போனை சைலென்டில் போட்டு இருந்தான்..
அவன் போனை எடுக்காமல் இருக்கவும்..
பிரபு விடம் தான் இந்தியாவுக்கு வந்து விட்டதாகவும், பிரண்டோட வெளியூர் வந்திருக்கிறேன், என் போனில் சார்ஜ் இல்லை,, சார்ஜ் போட்டு நைட் பேசுறேன் என்று அவனுக்கு மெஜேஸ் போட்டவள்..
ரவியிடம் போனை தர…
” பேசிட்டீயா சீதா”? என்றான்..
“இல்ல சார் தம்பி போன் எடுக்கல கிளாசில் இருப்பான் போல மெசேஜ் போட்டு இருக்கேன் “..
ரவி ஆர்டர் பண்ணிய கடல் உணவுகள் வர இருவரும் நன்றாக உண்டனர்..
ரவி சீதாவுக்கு பார்த்து, பார்த்து உணவு வகைகளை இது நல்லா இருக்கும் இத சாப்பிடு, இது சூப்பாரா இருக்கும் சாப்பிடு என்று பரிமாற போதும், போதும் என்று சொல்லியவள் நன்றாக உண்டாள் ..
இருவரும் உண்டு விட்டபின், ரவி சீதாவிடம் “பக்கத்துல சுத்தி பார்க்க போலமா” என்று ரவி கேட்க..
போலாம் என்றாள்.
அவளை முதலில் ஒரு பழமையான லூஜி சர்ஜ்க்கு அழைத்து வந்திருந்தான்.. சர்ச் பழசாக இருந்தாலும், சுத்தி பார்க்க அழகாய் இருந்தது.
இருவரும் நன்றாக சுத்தி பார்த்து விட்டு பின்பு பக்கத்தில் உள்ள மீயூசியம் அழைத்து வந்திருந்தான், இருவரும் அந்த மீயூசியத்தை சுத்தி பார்க்கவே இரவானது..
இருவரும் ரூம் வரும் வழியிலே இரவு உணவை உண்டு விட்டு..
ரூம் வந்து சேர்ந்தனர்.
“காலையில் சீக்கிரம் எழுந்து ரெடியா இரு சீதா சன் ரைஸ் பாக்க போகலாம்” என்றவன், அலாரம் செட் பண்ணி விட்டு தூங்க.