இருவரும் அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து விட்டு, குளித்து கிளம்பி சன்ரைஸ் பார்க்க, பீச்சிற்கு சென்றனர்..
சீதா இப்படி எல்லாம் அவள் இயற்கையை ரசித்ததே இல்லை, மெல்ல இருள் விலக, ஆரஞ்சு நிறத்தில் சூரியன் மேலே செங்கதிர்லாக எழுந்து வருவதை பார்த்தவளுக்கு மனது அவ்வளவு உற்சாகமா இருந்தது, ரவிவை திரும்பி பார்த்து சிரித்த படியே பார்த்திருந்தாள்.
Advertisement
ரவிக்கு இயற்கையை ரசிப்பது மிகவும் பிடிக்கும் பாறைமேல் சாய்ந்த படியே சூரியன் கடலில் இருந்து மேலே வருவதை பார்த்த ரசித்தபடியே இருந்தவன், சிறிது நேரம் கண்களை மூடி இருந்தான்.
அவனிற்க்கு வேலை, வேலை என்று ஓடி, ஓடி உடல் மனம் எல்லாம் சோர்வாகி இருக்க பாறையின் சாய்ந்து தூங்கியிருந்தான்.
Advertisement
Advertisement
சீதா அவன் தூங்குவதை பார்த்த படியே அமர்ந்திருந்தான்.
அவள் இது போல் இடங்களுக்கு எல்லாம் வந்தது இல்லை.. அந்த வாய்பை தனக்கு குடுத்த ரவிவை பார்த்தபடியே அமர்ந்திருந்தால்.
Advertisement
நான் இவனோடு வந்தது சரி தானா.
இவனை பார்த்தால் நல்லவன் போல தான் தெரிகிறது, பின்பு ஏன் சிரஞ்சீவி இவனை பொம்பள பொறுக்கி என்று திட்டவேண்டும், இவன் என்னிடம் நடிக்குறானா?.
நான் கேட்டதுக்காக தானே இந்திர சேனா படத்தை இவன் ரிலீஸ் பண்ணியது,, ஒரு வேலை என்னை மிரட்டி கூட, அவன் ஆசைக்கு இணங்க கேட்டிருக்கலாமே,, ஒரு வேலை நான் இவனோடு வராமல் இருந்தால் சிரஞ்சீவி மேல் உள்ள கோபத்தில் படத்தை ரிலீஸ் பண்ணாமல் இருந்து விடுவானோ..
சீதாவுக்கு ரவி அழைத்தது அவனோடு வர விருப்பம் இல்லை,, ஒரு வேலை கோபப்பட்டு படத்தை ரிலீஸ் பண்ணாமல் இருந்து விட்டால், என்ன செய்வது என்று யோசித்தால், பின்பு ரவியின் மேல் ஏனோ ஒரு கண்மூடி தனமான நம்பிக்கை வந்திருந்தது..
ஏன்னென்றே தெரியவில்லை சீதாவிற்கு.
அவள் பல ஆண்களை தினமும் சந்திக்கின்றாள்,, ஒரு தன் பார்வையை வைத்தே எடை போட கூடிய திறமை உள்ளது சீதாவிற்க்கு,, ரவியின் பார்வை இவளுக்கு தப்பாக தெரியவில்லை.
தன் மீது அக்கரை கொண்ட அவனின் பேச்சும்,, அவன் அவளிடம் காட்டும் அக்கறையும் அவளுக்கு பிடித்திருந்தது..
இவன் கெட்டவனா, நல்லவனா என்று அவனை பார்த்தபடியே சீதா மனதில் யோசிக்க..
“ரொம்பா யோசிக்காத சீதா” என்றான் ரவி..
சீதா அவன் கேட்ட கேள்வியில் அவனை திடுக்கிட்டு பார்க்க.
“நான் நல்லவனா, கெட்டவனா என்று தானே யோசிக்குற சீதா” என்றான்.
சீதா “இல்லை” என்று தலையாட்ட..
“நான் உனக்கு மட்டும் தான் நல்லவன் வா” என்றவன்..
“கோவாவை சுத்தி பார்க்கலாம் வா” என்று சீதாவை அழைத்துக்கொண்டு கோவாவை சுத்தி பார்க்க சென்றான்.
சில இயற்கையான பீச் சைட் சீ இயற்கை காட்சியை அழகை ரசித்து பார்த்தவர்கள்…
பெரியவர்கள் விளையாடும் விளையாட்டு பூங்காவிற்கு அழைத்து சென்றான் சீதாவை ..
அங்கே இருவரும் குட்டி ஜீப்பில் தனி, தனி ஏறிக்கொண்டு இருவரும் யாரு முதலில் ஜீப்பை வேகமாக ஓட்டுவது என்று சண்டை போட்டு ஜீப்பை ஓட்டிய படியே சிறு பிள்ளைகள் போல விளையாடினார்கள், பின்பு அம்பு எய்வது. பிறகு பல விளையாட்டு இருவரும் சிறு பிள்ளை போல விளையாட.
சீதா சிறுபிள்ளையாகவே மாறிவிட்டாள்.. ஒவ்வொரு விளையாட்டு சீதாவுக்கு பிடித்திருந்தது.. அவளிடம் போட்டி போட்டு ரவியும் விளையாட.
இன்னும் ஸ்சுவரசியமாக இருந்தது சீதாவிற்கு..
இருவரும் பல முறை அடித்து கூட விளையாடினார்,, சீதாவிற்கு சிரித்து சிரித்து கண்ணீல் நீரே வந்து விட்டது, வாய்விட்டு சிரித்து விளையாடியவள்..
அந்த ஸ்பிரிங் சம்பிங்கில் ரவியை விட, உயரமாக குதித்தாள்..
ரவியும் தம் கட்டி சீதாவை விட மேலே உயரமாக குதிக்க.
ரவி, ரவி என்று அவனை பேர் சொல்லி அழைக்கும் அளவிற்கு மாறியிருந்தாள் சீதா..
அவனோ சீதா என்பதற்கு பதில் சீத் பேபி என்று கிண்டல் பண்ணி அவளை கலாய்த்து கொண்டிருந்தான்.
இவர்கள் மட்டும் இல்லை அங்கே, இவர்கள் போலவே நிறைய பேர் அங்கே இருக்க. அவர்களோடும் சேர்த்து விளையாடுவது பிடித்திருந்தது.
கடைசியாக பங்கி ஜம்பிங், மற்றும் ஃப்ரீ ஃபால் டவர் டைவிங்கிற்கு அழைத்து வந்திருந்தான் ரவி சீதாவை..
அதை பார்த்தவள் “நோ ரவி, நோ நான் வரல நீங்க போங்க உயரமான இடத்தை பார்த்தால் எனக்கு பயம்,” என்று சொல்ல.
அவள் பயப்படுவதை பார்த்தவன்.
அவன் மட்டும் ஃப்ரீ ஃபால் டைவிங் பண்ண தயார் ஆனான்.
சீதா அவனின் போனில் அவன் மேலே இருந்து குதிப்பதை வீடியோ எடுக்க தயாரனால்,, சீதாவை மறுபடியும் “வா நம்ம சேர்ந்தே குதிக்கலாம்” என்று ரவி அழைக்க..
அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டாள் சீதா.
“பயந்தாங்கோலி” என்று ரவி சீதாவை கிண்டல் பண்ண..
“நான் பயந்தாங்கோலியாகவே இருந்து விட்டு போறேன்” என்று சொல்லி சிரித்தாள் சீதா….
சீதாவிற்கு அந்த பள்ளத்தை பார்க்க பயமாக இருந்தது.. ரவி சிரித்துக்கொண்டே சீதாவுக்கு கையதைத்தவன் மேலே இருந்து கீழே குதிக்க தயாராக..
சீதாவுக்கு இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்திருந்தது..
ரவி குதித்தது கண்களை மூடிகொண்டவள்.. பிறகு கண்திறந்து பார்க்க.. ரவி அழகாய் குதித்து,, மேலே கீழே சென்று வந்தவன்.. கடைசியில் மேலே சிரித்துக்கொண்டே வர..
வேகமாக ரவியிடம் வந்தவள்,, “பயமா இல்லையா ரவி ?”என்றாள்..
“பயமா எனக்கா, சூப்பரா இருந்தது சீத் பேபி, நீ வர்ரீயா நாம இரண்டு பேரும் சேர்ந்து குதிக்கலாம் என்று கேட்க..
“போங்க சார், எனக்கு பயமா இருக்கு” என்றவள், பக்கத்தில் பார்க்க.. புதிதாக திருமணமான தம்பதி இரண்டு பேர் குதிக்க தயாராக..இருப்பதை சீதா ஆர்வமாக பார்க்க..
அதை பார்த்து ரவி, பக்கத்தில் உள்ள ஜம்பிங்கிற்கு கால்களில் மீள்சக்தி கொண்ட கயிறைகளை கட்டி கொண்டிருந்தவனை பார்த்த கண்ஜாடை செய்ய.. சரி என்ற அந்த நபர் சீதாவின் கால்களில் கயிறுகளை கட்ட…
சீதா என்ன இது என்று உணர்வதற்குள் அவளை தன்னோடு இறுக்கமாக ரவி பிடித்துக்கொள்ள.
சீதாவின் காலில் கயிறுகள் கட்ட பட..
“ரவி, ரவி வேண்டாம் ரவி எனக்கு உயரமானயிடமுன்னா பயம், ரவி வேண்டாம்” என்று சீதா பயப்பட..
“சீதா நானும் உன்கூட சேர்ந்து தான் குதிக்குறேன் பயப்படாத” என்றவனின் காலில் கயிறுகள் கட்டி பாதுகாப்பு கவசங்கள் இருவருக்கு பொறுத்தபட.
குதிப்பதற்கு இருவரும் தயாராக..
சீதாவுக்கு உயரத்திலிருந்து கீழே பார்ப்பதற்கு பயமாக இருக்க,, “ரவி பயமா இருக்கு ரவி” என்றவள் கண்களை மூடிக்கொண்டாள்..
“சீதா கண்திறந்து பாரு, பயமே இல்ல பேபி என்னை பிடிச்சுக்கோங்க” என்று ரவி சொல்ல..
இருவரையும் மேலே இருந்து ஒருவர் தள்ளி விட்டார்.. அவ்வளவு தான் “ரவி” என்று கத்தியிருந்தாள் சீதா..
ரவி என்றவளுக்கு மேலே இருந்து கீழே குதிப்பது பயமாக இருக்க, ரவிவை இறுக்கமாக கட்டிக்கொண்டாள்..
ரவிதேஸ்சாவோ “ஏய் பயந்தாங்கோலி கண்ண திறந்து பாரு என்ஜாய் பண்ணு”, என்று கூற..
காற்று வேகமாக வீச,, கண்திறக்க பயந்தவளை, “சீத் பேபி” என்று ரவி அவளின் கன்னங்களின் முத்தமிட.
அவன் முத்தமிட்டதும் கோபத்தில் கண்திறந்தவள் ரவியை முறைக்க..
“கண்திறந்துட்டீயா” என்று அவன் சிரிக்க.
இவளுக்கு ஆகாயத்தில் பறப்பது போல தெரிய, பயந்து போனவள், “ரவி பயமா இருக்கு” என்று கண்களை மூடி அவனை அணைத்து பிடித்துக்கொள்ள.
சில நிமிடங்களில் மேலே வந்திருந்தனர்…
சீதாவுக்கு கீழே குதித்ததை விட, மேலே வருவது இன்னும் பயமாக இருந்தது.
‘ரவி என்னை விட்டுடாத, பிளிஸ் எனக்கு பயமா இருக்கு”, என்று புலம்பிய படியே, மேலே வந்தவள், கால்கயிறை கலட்டியதும், அப்பாட உயிரே வந்து விட்டதை போல உணர்ந்தவள்.
மூச்சு வாங்கியபடியே அமர்ந்திருக்க..
“ரவி என்னை காப்பாத்து,, விட்டுடாத ரவி” என்று சீதா பேசியது போல் ரவி பேசி காண்பிக்க சீதாவை பார்த்து சிரிக்க..
“நீ தான் சீத் பேபி,,, நேத்து பெங்களூருல அவனுக்கு கல்யாணம், நாளைக்கு இங்க கோவா கடல்ல பெரிய சிப்புல வச்சு ரிஜப்சன் நடக்குது, என் ப்பிரண்ட்ஸ் எல்லாம் வருவாங்க அவங்களை எல்லாம் பாக்க போகனும், கல்யாணத்துக்கு வரலன்னு கோபமா இருப்பாங்க, நீயும் வர்ரீயா, நீ பெரிய சிப்ப பார்த்தது இல்லை தானே, “. என்றான்..
சீதா “பார்த்தது இல்லை” என்று கூறியவள்…
“நான் வரலை சார் நீங்க உங்க பிரண்ட்ஸ் கூட போய் என்ஜாய் பண்ணிட்டு வாங்க, நான் எதுக்கு”. என்றாள்.
“நீயும் என் பிரண்ட் தான் டா. நீயு பிரண்ட், பயந்தாங்கோலி பிரண்ட். ” என்று அவளை கேலி பண்ணி ரவி சிரிக்க..
அவனின் கையில் ஒரு அடி அடித்திருந்தாள் சீதா.
அவள் அடித்ததை பார்த்து ரசித்து சிரித்தவன்.
“இப்படி உரிமையா என்னை யாரும் அடிச்சது இல்லா சீத் பேபி, உன்கிட்ட ஏதோ இருக்க பேபி.. யூ ஆர் ஸ்பெஷல் ப்பர் மீ டா பேபி டால்” என்றவன், அவளின் தலையை மெல்ல தட்டி விட்டவன்..
“வா போலாம்” என்றவனுக்கு..
“சீத் பேபி நாளைக்கு உன் இந்திரா சேனா படம் ரிலீஸ் சோ, நம்ம இரண்டு பேரும் சேர்த்து உன் படம் பார்க்க முதல்ல சோ போலாமா”? என்று ரவி கேட்க..
அவளின் முட்டை கண்ணை விரித்து பார்த்தவள், “முதல்ல சோ பார்க்க முடியமா”? என்றாள்.