ட்ரெயின் ரவியையும், சீதாவையும் மோதுவது போல் பக்கத்தில் வருவதை பார்த்த ஜூலியும், கண்மணியும் “ஐயோ! ரவி, சீதா” என்று கத்தி கதறி தலையில் கைவைத்து கீழே குனிந்து அமர்ந்து அழ.
Advertisement
நொடி வினாடியில் ட்ரெயின் சீதாவையும், ரவியையும் கடந்து சென்றிருந்தது..
சீதாவுக்கு நாம அவ்வளவு தான் செத்தோம், என்று நினைத்தவள், ட்ரெயின் பக்கத்தில் வரவும் பயத்தில் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.
ட்ரெயின் அவளை கடந்து சென்றதும், நான் செத்துட்டேன், என்று நினைத்தவள்..
“ஆ… ” என்று கத்த…
அவள் ஆவென்று கத்தியது ட்ரெயின் வந்ததை பார்த்து இல்லை.
ரவி அவள் தொடையில் அடித்த அடியில்.
ரவிக்கு தெரிந்தது சீதாவின் காலை தன்னால் எடுக்க முடியாது என்று, அவளாகவே எடுத்தால் தான் உண்டு என்று நினைத்தவன்.
ட்ரெயின் அருகில் வரும் வரை காத்திருந்தவன், ட்ரெயின் பக்கத்தில் வரவும், சீதாவை இறுக அணைத்திருந்தவன்.
அவனின் பலத்தை எல்லாம் அவன் கையில் ஏந்தி ஓங்கி சீதாவின் தொடையில் ஒரு அடிக்க..
அவன் அடித்த அடியில் வலிதாங்காமல், விறுட்டென்று அவள் காலை தண்டவாளத்தில் இருந்து அவள் காலை அவளே வேகமாக வலி தாங்க முடியாமல் எடுக்க.
சீதா அவளின் காலை எடுத்த அடுத்த நொடி.
ரவி அவளை இழுத்துக்கொண்டு கீழே விழுந்தான்.. ட்ரெயின் அவர்களை கடந்து சென்றிருந்தது..
சீதாவின் உடல் நடுங்கி கொண்டிருக்க, ட்ரெயின் சத்தம் அவளை அச்சுறுத்த, அப்படியே ரவியின் அணைப்பில் இருந்தாள்..
ரவிக்கு மூச்சு பலமாக வாங்கியது.
அவன் வாழ் நாளில் இவ்வளவு பெரிய ரிஸ்க் எதிலும் எடுத்தது இல்லை, சீதாவை தன்னோடு அணைத்து வைத்திருந்தவன்.
அவளுக்கு ஒன்றும் இல்லை, என்று அவன் மனதை ஆஸ்வாசம் படுத்தி கொல்ல..
மெல்ல இயல்புக்கு திரும்பியவனுக்கு
மனதில் ஆயிரம் கேள்விகள்! சீதாவை உனக்கு இவ்வளவு பிடிக்குமா? ரவி என்று அவனிடம், அவனே கேள்விகள் கேட்டுக்கொண்டவன், சீதாவுக்காக உயிரை விட துணிந்தாயா? என்று.
ஜூலியும், கண்மணியும் நிமிர்ந்து பார்க்க.
ரவி சீதாவை அணைத்த படியே தண்டவாளத்தின் பக்கத்தில் விழுந்து கிடப்பதை பார்த்தவர்கள்,, ரவிக்கும், சீதாவுக்கு என்னவாகிற்றோ என்று பயந்து கொண்டே பக்கதில் வர ட்ரெயின் அவர்களை கடந்து சென்றிருந்தது.
ஜூலியும், கண்மணியும் ரவியையும், சீதைவையும் பார்த்து அவர்களுக்கு அடி பட்டிருக்கிறதா என்று பார்க்க அப்படி ஒன்றும் தெரியவில்லை.
அப்பாட என்று பெருமூச்சை விட்டவர்கள்.
“ரவி, சீதா” என்று அவர்களை தொட்டு தடவி, நிகழ் காலத்துக்கு கொண்டு வர, ரவி சீதாவை விட்டு ப்பிரிய,,..
கண்களை இறுக மூடி இருந்த சீதா.
“ரவி நீ போ, ரவி நீ போ” என்று சொல்லிக்கொண்டு இருந்தாள்.
அவளுக்கு நான் செத்து விடுவேன் என்று உறுதியாக தெரிந்து விட்டது, ரவியேன் தன்னோடு சேர்ந்து சாகவேண்டும் என்று நினைத்தவள் போ ரவி, போவென்று சொன்னாலும் அவன் கேட்க வில்லை அவளை இறுதி வரை காப்பற்றியாக வேண்டும் என்று அவன் போராடுவதை பார்த்தவளுக்கு, இதயத்தை ஏதோ தடம் புரல்வது போல் வலி வர, ரவி போ, ரவி போ என்று அவள் வாய் சொன்னாலும், அவளின் மனம் எப்படியாவது தன்னை காப்பாற்றி விட மாட்டானா என்று எண்ணம் தோன்ற,, கடைசி நிமிடம் வரை தன்னோடு நின்ற அவனை என்ன சொல்வது ,
அதுவும் சீதா அவனை போவென்று சொன்னதும் அவளை பார்த்தானே ஒரு பார்வை,, உன்னை விட்டுட்டு நான் எங்கடி போவேன் என்று அந்த பார்வையில் அவனின் நேசத்தில் ஆழத்தை புரிந்து கொண்டவள், கண்களை இறுக மூடிக்கொண்டாள், அவன் எப்படியாவது தன்னை காப்பாற்றி விடுவான் என்று..
நூல்லிடையில் உயிர் தப்பியவனுக்கு இன்னும் படபடப்பாக இருக்க, சீதாவை முதலில் தொட்டு தடவி பார்த்தான், சீதா கண்திறக்கவே இல்லை.
அவள் உடம்பில் அடி ஒன்றுமில்லை என்றவன் அவளை மீண்டும் அணைத்து “சீதா” என்று கண்ணீர் விட.
ஜூலியும், கண்மணியும் கூட அழுதிருந்தனர், ரவி அழுததும் நண்பனை அணைத்து அவர்களும் அழ.
மூன்று பேரும் சீதாவை இறுக்கியதும், மெல்ல கண்விழித்தவளை.
“சீதா, சீதா உனக்கு ஒன்றுமில்லை” என்று அனைவரும் கேட்க.
சீதா நான் உயிரோடு இறுக்கேனா, என்று அவளை அவளே தொட்டு பார்த்து தெரிந்து கொண்டவள்.
ரவி கண்ணீல் நீரோடு அவளை பார்த்து சிரிக்க.
அடுத்த நோடி அவனை பாய்ந்து வந்து அணைத்திருந்தாள் சீதா.
ஜூலியும், கண்மணியும் அவர்களை பார்த்து சிரிக்க..
ரவியை அணைத்தவளுக்கு அழுகை வர.
ரவியை அணைத்து, சீதா குழுங்கி அழுதாள்…
கண்மணியும், ஜூலியும் இருவருக்கும் தனிமை கொடுத்து விட்டு தள்ளி சென்று அவர்களின் கணவன் மார்களை ஜீப்பை எடுத்துக்கொண்டு வர சொல்லிக்கொண்டிருந்தனர்..
ரவிக்கு சீதா அழுததும், ‘சீதா ஒன்னுமில்லடா, பயப்புடாதா” என்றவனுக்கு இதயம் பயங்கர வேகமாக துடிக்க., சீதாவின் இதயதுடிப்பை உணர்ந்தான் அதுவும் வேகமாக துடிக்க. “ரிலாக்ஸ் டா” என்று அவளை அவன் சமாதானம் பண்ண,,.
அவனிடமிருந்து பிரிந்தவள் நன்றியோடு அவனை பார்க்க.
அவனோ அவளை ஆசையாக பார்த்தான், இருவரின் பார்வை ஒருவர் மீது, ஒருவர் இருக்க.
“ஐயோ! சீதா காலில் ரத்தம்” என்று கண்மணி சொன்னதும் தான்…
ரவி சீதாவின் மேல்லிருந்த பார்வையை விலக்கினாள்..
சீதாவின் காலை பார்க்க, ரத்தம் வந்துகொண்டிருந்தது,, வேகமாக தன் கைகுட்டையை எடுத்த ரவி ரத்தம் வந்து கொண்டிருந்த, சீதாவின் கால் கட்டை விரலை ரத்தம் வராமல் அலுத்தி பிடித்தான்…
ரவியின் கைகுட்டை நனைந்து ரத்தம் வெளியே வர, ஜூலி தன்னுடைய கனமான கைகுட்டையை எடுத்து ரவியிடம் கொடுத்தவள், “அலுத்தி பிடி ரவி” என்று சொல்ல.
ரவி ஜூலி கொடுத்த கைகுட்டையை சீதாவின் காலில் இறுக்கமாக கட்டிவிட..
ரமேஷ் ஜீப்போடு இவர்களை அழைத்து செல்ல வந்தான்.
ரவி ரமேஷ்சை பார்த்ததும்,, “வா சீதா ஹாஸ்பிடல் போகலாம் ரத்தம் நிக்கமாட்டேங்குது” என்று சொல்லி சீதாவை எழுப்ப, அவளால் எழ முடியவில்லை.
கட்டைவிரலில் பட்ட காயம், வலியை தர.. எழுந்து நிற்க கஷ்டபட்டவளை தன் கைகளில் அள்ளி கொண்டான் ரவி.
சீதா எதுவும் சொல்ல வில்லை, காரில் வரும் போது கூட. தன் மடியில் தான் அவளை வைத்திருந்தவன், சீதாவின் காலை சீட் மீது வைத்திருந்தான், கீழே தொங்க போட்டான் ரத்தம் வருமே என்று..
பக்கத்தில் உள்ள ஒரு சிறிய ஹாஸ்பெட்டலுக்கு சீதாவை அழைத்து வர.
டாக்டர் சீதாவின் காயத்தை பார்த்து விட்டு, “காயம் டீப்பா இருக்கு ஒரு ஐஞ்சு தையல்லாவது போடனும், வேற எந்த பிரச்சனை இல்ல”, என்றவர், சீதாவுக்கு தையல் போட, வலியில் கத்தியவளை தன்னோடு இறுக்கி வைத்திருந்தான் ரவி.
இஞ்சங்சன் போட்டவர், “இரண்டு நாள் காலை கீழ ஊன கூடாது, வலிக்கும் ” என்றவர் வலிக்கு மாத்திரை கொடுத்து விட்டுசெல்ல.
ஜூலிக்கு எல்லாம் தன் மகள் ஸ்வீட்டியால தான் என்று நினைத்தவள்..
“சாரி சீதா, சாரி மா” என்று அவளிடம் மன்னிப்பு கேட்பது போல் அவளின் கையை பிடித்துக்கொள்ள.
“ஜூலி வருத்த பட வேண்டாமே, ஏதோ என் நேரம் சரியில்ல, விடு ஜூலி” என்றாள் சீதா.
ஸ்வீட்டி சீதாவிடம் வந்து “சாரி ஆண்ட்டி” என்று கூற.
குழந்தையை அணைத்து முத்தமிட்டவள்.
“ஆண்ட்டி நல்லா இருக்கேன், ஆண்ட்டிக்கு ஒன்னும் இல்லை” என்று குழந்தையை அணைத்துக்கொண்டாள்.
அனைவரும் ஹாஸ்பெட்டலில் இருந்து ரூம் வந்தனர்,,.
ரவி சீதாவை நடக்கவே விட வில்லை தன் கையில் தூக்கிய படியே காரில் சீதாவை ஏற்றினான் பின்பு ரூம்பிற்கு அவனே அவளை தூங்கி வந்தவன் அவன் அறையில் அவளை அமர வைத்தான்..
கண்மணியின் கணவர் அனைவருக்கு உணவு வாங்கி வந்தார்,, சீதா வேண்டாம் என்று சொல்ல.. ஜூலி சீதாவை கட்டாயபடுத்தி உண்ணவைத்தவள்.. “ரவி சீதாவுக்கு மாத்திரை கொடு அவ ஓய்வு எடுக்கட்டும், நாங்க ரூம் போறோம்” என்றவள்.
“சீதா ஏதாவது வேணுமுன்னா கூப்பிடு இப்போ தூங்கு” என்று அனைவரும் கிளம்பிவிட…