Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

93. Anonymous - முள் மீது தூங்கினேனே

முள் மீது தூங்கினேனே 27 4

அவனது அந்த அமைதியும், போட்டோவையே பார்த்திருந்த விழிகளும் ‘அப்பாடா நார்மல் ஆகிட்டான்’ என சற்று அதிகமாகவே நிம்மதியை கொடுத்துவிட, தலையை துவட்டியபடி வெளியே வந்தாள்.

இவள் வரும் அரவம் உணர்ந்து திரும்பி பார்க்க, ஸ்கை ப்ளு கலர் குவாட்செட்டில் இருந்தாள்.

ரசனைபார்வை அவள் மீது படிந்திட “இந்த டவலை மறந்து வச்சிட்டு போறது, டிரஸை மறந்து வச்சிட்டு போறது, இதெல்லாம் பண்ண மாட்டியா” என்றான் அவளை நோட்டமிட்டபடியே.

‘ம்க்கும் இவனாவது நார்மல் ஆகிறதாதவது?’ என மனதினுள் நினைத்தபடி “எப்போவுமே ஒர்க் அவுட் முடிச்சிட்டு குளிச்சிடுவேன். அதனால முன்ன கூடியே பாத்ரூமில் டிரஸ் எடுத்து வச்சிடுவேன்” இன்றும் அதையே செய்திருக்க, கிரியிடம் மாட்டாமல் தப்பிவிட்டாள் கமலி.



Advertisement

ஆனால் அவனா தப்பிக்க விடுவான், கமலியிடம் கிட்ட வா என தலையசைத்தான். ஆனால் அவளோ ஒரு இன்ச் கூட நகராமல் இருக்க, இவனே மெதுவாய் கமலியை நெருங்கினான்.

அவள் தாடை தொட்டு நிமிர்த்தினான், தாடையில் நால்விரல்களும் தாங்கிபிடித்திருக்க, பெருவிரல், அவள் இதழ்களை அழுத்தமாய் வருடி பின் அதை விட அழுத்தமாய் பிடித்து இழுக்க, உள்ளிருந்த முத்து பற்கள் பளிச்சிட்டது.

அதன் அழகை வியந்தபடி “கிளிப் போட்டியா” என கேட்டான்.

Advertisement

வெளி அழகை ஆராய்ந்தவன் இப்போது உள் அழகையும் ஆராய்ந்து பார்க்க வந்துவிட்டான்.

Advertisement

ஆராய்ந்த அவன் விரல்களை தட்டிவிட்டு, “இப்போ தான் கவனிக்கிறீங்களா, ரொம்ப சீக்கிரமா கண்டு பிடிச்சிட்டீங்க” என்றாள் சிறு கோபத்துடன்.

“அது பேக்கரி ஷாப்பிலேயே கண்டுபிடிச்சிட்டேன். நீயே காண்டுல இருந்த, இதுல நான் எங்க கேட்க?” என்றான் பிடறியை வருக்கொண்டு.

அவனை ஆராய்ந்தபடியே “ம்.. நீங்க ஊருக்கு வர்றதுக்கு கொஞ்ச நாள் முன்ன வரை கிளிப் போட்டிருந்தேன்”

Advertisement

“பல் எதுவும் ரிமுவ் பண்ணினாங்களா! ரொம்ப கஷ்டப்பட்டியா”  இவன் கேட்க

“பல் ரிமூவ் பண்ணலை. ஆனால் கொஞ்சம் கஷ்டபட்டேன் தான்” என்றாள் இவள்.

“அப்போ வெயிட் குறைக்க ரொம்ப கஷ்டப்பட்டியா!”

“ரொம்ப.. ரொம்ப… கஷ்டபட்டேன். இப்போவும் கூட கஷ்டபட்டுட்டு தான் இருக்கேன்” என்றவளுக்கு பதில் கூற முடியவில்லை இவனால். பேரமைதி நிலவியது அந்த அறைக்குள்.

அந்த முழுமையான அமைதியே, இந்த இடைபட்ட காலங்களின், அவளது வலி நிறைந்த தவ வாழ்வை புடம் போட்டு கூறிக்கொண்டிருந்தது.

சில பல கனங்கள் கடந்த அமைதியை கலைத்தாள் கமலி “இவ்வளவு காலையில் வந்திருக்கீங்க? என்ன விசயம் கிரி” இவள் பேச்சை திசைதிருப்பி வைக்க

ஆழ்ந்த மூச்சொன்றை எடுத்து கொண்டு “கர்ணா கடைக்கு வர சொன்னாப்ல இல்ல.. உன்னையும் அழைச்சிட்டு போகலாம்னு வந்தேன்” என கூறியவனுக்கு மனசாட்சி இடித்தது. ‘இங்கே என்ன வேலைக்கு வந்துட்டு, என்ன வேலை பார்த்துட்டு இருக்குற!’ என

ஆனால் கமலியோ நேரடியாய் கேட்டுவிட்டாள் “இனி அண்ணிக்கு எதுவும் செய்ய போறதில்லைன்னு சொன்னீங்க!” என

“அதுக்காக செய்முறை செய்யாமல் இருக்க முடியாதே! ஒரு வேளை அப்பா இருந்திருந்தா நானும் இவ்வளவு தூரம் இவளுக்கு செஞ்சும் இருக்க மாட்டேன். இப்போ வேற வழி இல்லை கமலி நான் செஞ்சு தானே ஆகனும்” என இவன் பேச

“நீங்க என்ன செய்யனுமோ செங்சிக்கோங்க! என்னை இதில் இழுக்காதீங்க” என்றிட

“அப்படிலாம் உன்னை விட முடியாது. அக்கா, வீட்டுக்கு தேவையான பொருள் எல்லாம் வாங்கனும், உன் அண்ணன் கடையில் தான் இருக்கானாம்.. நீயும் வா” என அழைத்தான் கிரி.

“உங்கக்காக்கு நீங்க செய்ங்க, நான் எதுக்கு. நான் வரலை” என இவளும்.

“பொறுப்பா பேசு கமலி. இனி நான் யாருக்கு எது செஞ்சாலும், அதுல உனக்கும் பொறுப்பிருக்கு. யாருக்கோ இருக்கும் போது, என்னோட அக்காக்கும் இருக்கனும் தானே. போய் கிளம்பி வா..” என்றான் கட்டளை போல.

சரியென்பது போல தலையசைத்து விட்டு, பீரோவில் தலையை கொடுத்து தேடிய உடையை எடுத்து கொண்டு பாத்ரூமிற்குள் சென்றாள்.

மீண்டும் உடை மாற்றி கொண்டு வெளியே வந்தவளை பார்த்து கண்கள் ஆசையாய் விரிந்தது கிரிக்கு.

“கமலி இது நான் எடுத்துட்டு வந்த அனார்கலி சுடிதார் தானே!” என இவன் கேட்டிட

“ம்.. டெய்லர்கிட்ட ஆல்டர் பண்ணி வாங்கிட்டேன்” என சொன்னவளை வாஞ்சையாய் பார்த்திருக்க, தலையை ஹெர் டிரையரில் காய வைக்க சென்றுவிட்டாள்.

இவனோ அவளை பார்த்தபடி சோபாவில் சென்று அமர, அங்கே இவன் கண்களில் மீண்டும் பட்டது இவனது டீசர்ட், இன்னுமே இதழ்கள் விரிந்தது.

கமலி என சத்தமாய் அழைக்க, இவளும் திரும்பி, என்ன என்பது போல் பார்த்துவைக்க “இது வச்சு என்னடி பண்ணுவ” மேலோட்டமாய் அதை பார்த்தபடி கேட்டு வைத்தான்.

அர்த்தம் நிறைந்த பார்வை ஒன்றை அவனிடம் பறக்கவிட “டீசர்ட்டை மட்டும் எடுத்து வச்சுகிற.. டீசர்ட்டுக்கு சொந்த காரனையும் கொஞ்சம் எடுத்து வச்சுக்கலாம்ல” என முனுமுனுக்க,முனுமுனுத்தான்.

அது அவள் காதுகளில் சரியாய் சென்று விழுந்திட “ஓ.. எடுத்து வச்சிக்கலாமே” இவள் சீரியஸாய் சொல்ல

‘என்ன பொசுக்குன்னு பதில் சொல்லிட்டா’ இவ இப்படியெல்லாம் பதில்சொல்றவ கிடையாதே! என டீசர்ட்டை கையில் எடுத்து விரித்து பார்க்க அதுவோ கத்தரிகோலால் ஆங்காங்கே வெட்டபட்டு கிழிபட்டு கிடந்தது.

திகைத்து போன இவனோ, அவளை பார்த்து, “என்னடி இப்படி கிழிச்சு வச்சிருக்க” என கேட்க

“அதுவா.. நேத்து நைட் ‘இப்போதைக்கு சரின்னு சொல்லிட்டு, அப்புறம் விட்டுட்டு போயிட்டா என்ன செய்வன்னு கேட்டீங்கல்ல’ “

“ஆமாம்.. அதுக்கு?”

“அதுக்கு தான் ‘என்ன செய்வேன்னு’ சின்னதா டிரெயிலர் காட்டிருக்கேன்” என்றாளே பார்க்கலாம், திறந்த வாய் மூடவில்லை கிரி.

“முதல்ல டீசர்ட்டில் டிரை பண்ணிட்டு அப்புறம் உங்க கிட்ட வந்தா, தடுமாற்றம் இருக்காதுல்ல” என சேர்த்து சொல்லிட, பல வித அர்த்தங்களை உணர்ந்தான் கிரி.

அவளது பொஸசிவ்னஸ்சை அந்த நொடி முழுதாய் உணர்ந்தான் கிரி. சட்சட்டென ஏதேதோ மாற்றங்கள் உடலில் நிகழ்ந்திட  அதை கண் மூடி சோபாவில் சாய்ந்தபடி அனுபவித்தான் கிரி.

‘உங்களை தேடி வந்து கொன்னுடுவேன்’ என்ற நேற்றைய வார்த்தைகள் இப்போது இந்த நிமிடம் சொல்லப்பட்டது போல உடல் சிலிர்த்து அடங்கியது.

நிமிர்ந்து பார்த்தே பேசமாட்டேன் என் நிற்பவள் கமலி. அப்படிபட்டவள், கை நீட்டி அடிக்கிறாள், கொல்வேன் என மிரட்டுகிறாள், அதற்கு பிள்ளையார் சுழி போடுவது போல டீசர்ட்டை வெட்டி கிழித்து வைத்திருக்கிறாள்.

ஆனால் இதற்கெல்லாம் காரணம் என்ன? எல்லாமே அவன் மீதான உரிமை போராட்டம் தானே! உரிமை கொண்டாட துவங்கிவிட்டால் அதில் பெண்களோடு போட்டி போடுவது என்பது இயலாத காரியமென இவன் உணர்ந்து கொண்டான்.

அதற்குள் இவளும் தலையை காய வைத்து அழகாய் பின்னலிட்டுக்கொண்டு கிளம்பி இவனருகே வந்தாள். “போலாமா” என இவள் கேட்க, மெதுவாய் கண் விழித்தவன், அந்த அழகிய ராட்சசியை உள்வாங்கியபடி, “போலாமே” என்றான். கமலி முன் செல்ல பின் தொடர்ந்தான் கிரி. பிறகு மல்லிகாவிடம் சொல்லிகொண்டு இருவருமே பர்னீச்சர் கடைக்கு கிளம்பிவிட்டனர்.

********

வண்டியை எடுக்கையில் தான் கவனித்தான், அந்த டீசர்ட் தன் கையில் இருப்பதை. கமலியும் கூட கவனம் வைக்காமல் இவன் பின்னே நின்றிருக்க, சட்டென அதை டேங்க் கவரில் திணித்துவைத்தான் கிரி.

அதன் பின் கிரியின் பைக்கிலேயே இருவரும் ஒன்றாகவே கர்ணாவின் கடைக்கு வந்து இறங்கினர். இரண்டடுக்கு கொண்ட பெரிய கடை அது. கீழே வீட்டு உபயோகப்பொருட்கள் இருக்க, மேல பர்னீச்சர்கள் இருந்தது. கடையை சுற்றி வருகையிலேயே கட்டில், மெத்தை, சோபா, மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின், பிரிஜ் என இவன் ஒவ்வொன்றாய் சொல்லி கொண்டே வர, கமலி அதன் கலர், டிசைனை தேர்வு செய்து வைத்தாள். கமலியின் தேர்வுகள் கிரிக்கும் பிடித்து போய்விட, அனைத்தையும் தேர்வு செய்த பின்பு பில் போட சொல்லிவிட்டான்.

“கிரி, அதெல்லாம் வேண்டாம். எடுத்துட்டு போங்க பார்த்துக்கலாம்” என கர்ணா, பணம் வாங்க மறுத்திட

“மத்தவங்களுக்கு என்ன பில்லோ, அதையே போடுங்க கர்ணா. இல்லைன்னா நான் வேற கடையை பார்த்துப்பேன்” கிரி உறுதியாக நின்றதில், கமலி அவனை பெருமிதமாய் பார்த்து வைக்க.

கர்ணனோ  சரியென தலையசைத்து பில் போட்டு கிரியிடமிருந்து பணத்தை வாங்கி கொண்டான் கர்ணா.

“உங்க சிஸ்டர் அட்ரஸ் குடுங்க கிரி. ப்ரி டெலிவரி பண்ணிடலாம்” எனவும் அட்ரஸையும் கொடுத்து விட்டான் கிரி.

“இன்னும் ஒன் அவரில் போயிடும் கிரி” என உறுதி கொடுத்தான் கர்ணா.

“அப்புறம் கர்ணா, கமலியை கொஞ்சம் வெளியில கூட்டிட்டு போயிட்டு வரட்டுமா” என கேட்டவனிடம்

“உங்களுக்கு இல்லாத உரிமையா கிரி, உங்க அக்கா வீட்டுக்கு அழைச்சிட்டு போறீங்களா.. போயிட்டு வாங்க” என கமலியையும் பார்த்து வைக்க.

‘அவளோ.. அங்கையா’ என அதிர்வோடு கிரியை பார்த்து வைக்க, ‘ஆமாம் அங்க தான் போறோம்’ என என இவனும் பார்த்து வைக்க, இவளுக்கு சுண்டி போனது முகம்.

அதன்பின், கர்ணாவிடம் சொல்லி கொண்டு, அவளை அழைத்து கொண்டு கிளம்பிவிட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!