அவள் புறமாய் நன்றாக திரும்பி, சம்மணமிட்டு அமர்ந்து “கமலி, அந்த வீட்டை கட்ட எவ்வளவு கஷ்டபட்டேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். அவ்வளவு கஷ்டபட்டு வீட்டை கட்டி, அதை ஈசியா வித்துடுவனா என்ன?” என கேட்க
“அப்போ விக்கலையா?” இவள் கேட்டதற்கு ஆணித்தரமாய் இல்லையென மறுத்தான் கிரி “அது போக இந்த வீடு, வாடகை வீடும் இல்லை கமலி.. நம்பளோட சொந்த வீடு” என இவன் புதிர் மேல் புதிர் போட
சில நொடிகள் குழப்பத்தை காட்டிய இவள் விழிகள் “ப்ராபர்ட்டி வாங்குறதில் தப்பில்லை, ஆனால் இதை ஏன் மறச்சு செய்யனும். வெளிப்படையா சொல்லிட்டே செஞ்சிருக்கலாமே” இவள் கேட்டிட,
“அம்மா, அக்கா பத்தி எல்லாம் தெரிஞ்ச நீயே இப்படி பேசலாமா கமலி!” என நிறுத்தி “அன்னைக்கு சித்தப்பா உங்கிட்ட சொன்னது கொஞ்சம் தான்” சிறிது இடைவெளி விட்டு “முதலில் பாரின் போனப்போ கம்மியான சம்பளம் தான் கமலி. ஆனால் அதையும், கடன் அடைக்கனும்னு சொல்லி மொத்தமா வாங்கி வச்சுப்பாங்க அம்மா. அங்க என்னோட செலவுக்கெல்லாம் அண்ணன் தான் தருவான்.
Advertisement
அப்புறம் சம்பளம் ஏறினாலும், கடன் அடஞ்சாலும் அம்மா, ராஜி இரண்டு பேருமே அளவுக்கு அதிகமா செலவு பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.
ராஜியோட, அம்மாவோட குணம் தெரிஞ்சே, சித்தப்பா என்னை அப்பப்போ அலர்ட் பண்ணிடுவாங்க. வீட்டு செலவு, வீட்டு லோன் போக மிச்சத்தை அப்படியே சித்தப்பாக்கு அனுப்பிடுவேன். அவர் கோல்ட், சில்வர்னு அப்போ நிறைய இன்வஸ்ட் பண்ணிடுவாரு. விலை இப்போ குறைஞ்சிடும்னு தெரிஞ்சு சரியான நேரத்தில் வித்து, என்னோட பணத்தை ஒன்னுக்கு இரண்டு மடங்கா மாத்திட்டாரு. இதுக்கு இடைப்பட்ட காலத்தில் தான் ஒரு வீட்டை கட்டுனேன், நமக்கு கல்யாணம் ஆனப்போ தான் ஏற்கனவே கட்டின இந்த வீட்டை, வாடகைக்கு விடலாம்னு வாங்கி போட்டேன்.
ஆனால் நடுவுல ராஜி, அம்மாகூட சேர்ந்துட்டு உனக்கு துரோகம் பண்ணது நானே எதிர்பார்க்காதது தான்” பெருமூச்செழுந்தது இவனில் “ராஜி பண்ண பிரச்சனையில் வீட்டை விக்கனும்னு தான் முடிவு பண்ணினேன், ஆனால் என்னோட உழைப்பு, உன்னோட நகைன்னு எல்லாமே வேஸ்டா போகும். நிதானமா யோசிச்சேன். அந்த வீட்டை அட்வான்ஸ் வாங்கிட்டு, வாடகைக்கு விட ஏற்பாடு பண்ணினேன். இதை வாடகை வீடுன்னு சொன்னதால தான் ராஜியும், அம்மாவும் இப்போ வரை அமைதியா இருக்காங்க. இல்லைன்னா.. நாம நினைக்காததெல்லாம் நடந்திருக்கும்!” நிதர்சனத்தை இவன்பேச, அமைதியாய் கேட்டு கொண்டிருந்தவளால் அவன் கூற்றை மறுக்கவும் முடியவில்லை.
Advertisement
“அதுக்காக, உழைச்சு சம்பாத்தியம் பண்ணி முன்னேறினதை கூட..” இவள் அதற்கு மேல் சொல்லாமல் விட
Advertisement
“ப்ச்.. நான் வேற என்ன பண்றது? மகனோட அருமை தெரில.. பணத்தோட அருமையும் தெரில.. நான் பணம் மட்டுமே சம்பாதிக்கிற மிஷின் இல்லைனு ப்ரூப் பண்ணனும் தானே!”
இவன் பேச பேச, நம்ப மாமியார் தான் இவருக்கு நிஜமான அம்மாவா என கூட தோன்றி தொடங்கிவிட்டது கமலிக்கு.
“அன்னைக்கு நான் கூட நினைச்சேன்.. பாரின் வேலை, எப்படி பர்ஸில் ஆயிரம் ரூபாய் கூட இல்லாமல் இருக்கீங்கன்னு!” இவள் கூற
Advertisement
“அதையேன் கேட்கிற, நம்ம மேரேஜ் டேட்க்கு முந்தின மாசம் தான் வீட்டு லோன் முடிஞ்சது கமலி. அது போக சேவிங்க்ஸ்ல இருந்து நிறைய கல்யாணத்துக்கு எடுத்தாச்சு. சரி இந்த மாசம் லோன் பணம் மிச்சமேன்னு கொண்டு வந்தா, மேரேஜ்க்கு முந்தின நாள் செந்தில் பார்ட்டி வைக்கனும் ஒரே ஆர்ப்பாட்டம். நான் வேற உன்ன பார்த்த டிப்ரஷனில் என்ன பண்றேம்னு தெரியாமல் கார்டை எடுத்து நீட்டிட்டேன். மனுஷன் எல்லாத்தையும் ஸ்வைப் பண்ணியே கரச்சிட்டான். நயா பைசா இல்லை.. நான் என்ன பண்றது. வீட்டு செலவுக்கு பணம் இல்லைனு அம்மா டார்ச்சர் வேற.. இது அன்னைக்கு மட்டுமில்ல கமலி அடிக்கடி நடக்கும். அப்போலாம் வேலையும் குடுத்து சம்பளமும் குடுக்குறது அந்த ஒர்க்ஷாப் வச்சிருக்குற ப்ரண்ட் தான்”
மற்ற பேச்சுகளை காற்றில் விட்டவள் “அப்போ, என்னை பார்த்தா உங்களுக்கு டிப்ரஷனலாம் வருதா?” இவள் முறைக்க, இவனோ ‘எவ்ளோ சீரியஸாய் பேசிட்டு இருக்கேன். இவ எதை தேடி கண்டுபிடிச்சிருக்கா பாரு’ என நினைத்தபடி
“அது.. பர்ஸ்ட் டைம் உன்னை பார்க்கும் போது மட்டும் தான் அப்படி ஃபீல் ஆச்சு..” உண்மையை பேசுகிறேன் பேர்வழி என இவன் உடைத்து பேச, கமலிக்கோ பொறுமை போய் கொண்டிருந்த்து.
இவனோ அதை சட்டென கவனித்து, நெற்றியிலேயே அறைந்து கொண்டு “சாரி கமலி.. நான் பண்ணின எதுக்குமே எந்த நியாயமும் சொல்ல முடியாது, அப்படி சொல்லி தப்பிச்சா நான் மனுஷனே கிடையாது” சொல்லிக்கொண்டே, சோபாவின் நுனியில் இருந்த அவள் விரல்களை வலுக்கட்டாயமாய் எடுத்து தன் இரு கைக்குள்ளும் புதைத்து கொண்டு “என்னால இப்போதைக்கு, மன்னிப்பை மட்டும் தான் கேட்க முடியும்..” இவன் மனம் திறந்து பேசிட
நக்கலாய் இதழ் வளைத்தவள் “இப்ப தான் சாரி கேட்கவே தோணுதுல்ல. ரொம்ப சீக்கிரம் ரீயலைஸ் பண்ணிடீங்க” விரக்தியில் வந்து விழுந்தது வார்த்தைகள்
பிடித்த விரல்களை தன் நெஞ்சில் வைத்து அழுத்தி “நீ என்கிட்ட பேசாமல் இருந்தியே அப்போவே ரியலைஸ் பண்ணிட்டேன் கமலி. அதுக்கு பிறகு தான் இதுக்கு மேலயும் அமைதியா இருக்க முடியாதுனு தோண ஆரம்பிச்சிடுச்சு.
எனக்காக காத்திருக்கிற உனக்கு என்ன செய்ய போறேன்னு தெரியமா ரொம்பவே அல்லாடிபோயிட்டேன் கமலி” என்றான் உண்மையான வார்த்தைகளோடு.
“இவ்வளவு அல்லாடினவர்.. சாரின்ற ஒரு வார்த்தையை என்கிட்ட ஏன் சொல்லலை.. இப்போ சொல்ல முடியும் போது அப்போவே சொல்றதுக்கு என்ன?” கேட்டுவிட்டு அவன் நெஞ்சில் இருந்த தன் கையை விலகிக்கொண்டாள் கமலி.
“ஏன் சொல்லியிருந்தா அடுத்த பிளைட்பிடுச்சு என்னை தேடி வந்து இறங்கி இருப்பியோ!” காட்டமாய் கேட்டான் கிரி.
“கண்டிப்பா மாட்டேன்” சிறிதும் யோசிக்காமல் பதிலுறைத்தவள் அவன் முகம் போன போக்கை கண்டு “எனக்காக என்ன பண்ணிடீங்க.. நான் உங்களை தேடி பறந்து வர்றதுக்கு” என்றாள் இன்னும் கடுமையாக
“எனக்காக என்ன பண்ணிடீங்கன்னு நீ கேட்ட தானே.. நீ என்னடி எனக்காக பண்ணின!” இவள் கேட்ட கேள்வியை இவளுக்கே கேட்டான் கிரி்
ஏதோ பதில் சொல்ல வாயெடுத்தவளை தடுத்து “வெயிட்லாஸ் உனக்காக தான் பண்ணினன்னு என்கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்க” அவர் வார்த்தைகளால் அவளுக்கு விபூதி அடித்து “இப்போ சொல்லு எனக்காக என்னடி பண்ணின” என்றான் ஆக்ரோஷமாய்
“போனில் பேசி பேசி மூனு, நாலு மாசமா, உனக்கு என்னை பழக்கபடுத்திட்ட கமலி. லவ்வோட, லஸ்ட்டோட நாம என்னைக்குமே பேசினதில்லை, ஆனால் பேசினோம், நேரம் போனது தெரியாமல் பேசினோம்.
பேசினது மட்டுமில்லாமல் வீடியோ காலில் ஒன்னா சேர்ந்து சாப்பிட்டிருக்கோம். வகைதொகை பார்க்காமல் சண்டை போட்டிருக்கிறோம். இப்படி உன் குரல் கேட்கவே தினம் தினம் உன் போன் கால்க்காகவே காத்திட்டு இருப்பேன்.
“சாப்பிட்டிங்களானு” நீ கேட்குற அந்த கேள்விக்காகவே ஓடி வருவேன்.
எனக்காக ஒரு உயிர் இங்கே காத்திட்டு இருக்குதுன்றதே அவ்வளவு சந்தோஷமா இருக்கும் கமலி.
ஒரு மூனு மாசமா எனக்காக எல்லாமே பண்ணிட்டு, திடீர்னு சண்டை போட்டு.. சின்ன இடைவேளையை ரொம்ப பெரிசா மாற விட்டுட்ட கமலி” கோபம் கொழுந்துவிட துவங்கிவிட்டது.
அத்தனையையும் கேட்டவள் “நீங்க தானே நம்பிக்கையில்லாமல் பேச வேண்டாம்னு சொன்னீங்க.. அதான் நான் பேசலை” என்றாள் பட்டென
“அப்போ.. நம்பிக்கை வரவே இல்லைனு தானே அர்த்தம், நம்பிக்கை இல்லாமல் போறதுக்கு, நான் என்ன மூனாவது மனுசனா. உன் புருஷன்டி நான்” இதை சொல்கையில் குரல் நடுங்கியது கிரிக்கு.
“நம்பிக்கையில்லாமல் பொண்டாட்டி இருந்தான்னா, உண்மையா இருக்குற எந்த ஆம்பளையும் பேசதன்னு தான் சொல்வான்” நடுங்கிய குரல் இறுதியில் சக்தியிழந்தது.
“கிரி இதில் அதிகமா பாதிக்கப்பட்டது நானும் தான் கிரி. ஏதோ உங்களோட பேசாமல் நான் மட்டும் சந்தோஷமா இருந்த மாதிரி தெரியுது உங்க பேச்சு” இவள் அவனுக்கு மேல் சக்தியிழந்தாற்போல் பேசினாள்.
“ஹ..” விரக்தியாய் சிரித்தவன் “தன்னை தானே ஐசோலேட் பண்ணிகிறதுக்கும், நீ தனியா தான் இருந்தாகனும்னு ஒதுக்கி வைக்கிறதுக்கும் வித்யாசம் இருக்கு கமலி” இவள் விழிகளை பார்த்து கூறி
“இதில் முதல் ரகம் நீ, இரண்டாவது ரகம் நான். உனக்காவது ஒரு ஈகோ இருந்தது. வெயிட்லாஸ் பண்ணனும், நம்பளை கேலி செஞ்சவங்க மூஞ்சில கரிய பூசனும்னுன்ற அந்த ஈகோ இருந்திருக்கும். அந்த ஈகோ இருக்கும் போது மத்த இழப்பெல்லாம் பெரிசா தெரியாது.
ஆனால் நான்! தனியா போன்னு எங்க வீட்டில் தான் தண்ணி தெளிச்சு அனுப்பி வைச்சிட்டாங்க. நல்லா பேசிட்டு இருந்த நீ கூட, ஒரு கட்டத்தில் அம்மா, ராஜி மாதிரி என்னை ஒதுக்கி தானே வச்ச!
சாப்பிட்டனா, தூங்கினேனே, இருக்கனா, செத்தனானு கூட பார்க்காமல் நீயும் இருந்தா, நான் எங்கடி போவேன். யாருகிட்ட போய் ஆறுதல் தோடுவேன்” என இரைந்தவன் “கடைசியில், நம்பிக்கை வந்து என்னைக்காவது ஒரு நாள் எனக்கு நீ போன் பண்ணுவேன்ற என்னோட நம்பிக்கை தான்டி போயிடுச்சு.. ஒன்னுமே இல்லாமல் போயிடுச்சு” கண்களில் அத்தனை வலி அவனிடம்.
Super super super