Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

93. Anonymous - முள் மீது தூங்கினேனே

முள் மீது தூங்கினேனே 28 3

அவன் பேசுவதெல்லாம் கேட்கையில், தான் கவனிக்காமல் விட்ட இப்படி ஒரு கோணம் வேறு கிரியிடம் உள்ளதா என நொந்து போனாள் கமலி.

அப்படியானால் நிம்மதியில்லாமல் இவனும் தனிமையில் வெந்து நொந்தானா! என்ற அவளது கேள்விக்கு, அவன் மூலமாகவே ‘ஆம்’ என்ற பதில் சத்தமாகவே ஒலித்தது அவளுள்.

இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்களில்லை என்பது போல, தங்களுக்கு தாங்களே காயங்களையும் வலிகளையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

தங்களது காயங்களுக்கும், வலிகளுக்கும் தாங்கள் தான் மருந்து என்பதை மறந்தும் போனார்கள்.



Advertisement

மனதிலிருந்தவைகளை ஒட்டு மொத்தமாய் கொட்டியதாலோ என்னவோ, உடலை சரித்து, கால்களை சோபாவின் கைபிடியின் மேல் நீட்டிக்கொண்டு, அவள் மடியில் தலை சாய்த்தான் கிரி.

அவன் செயலில் “கிரி” என இவள் பதற

“அம்மா மடியில் கூட தூங்கினதில்லை கமலி ப்ளீஸ். கொஞ்ச நேரம் நீ எனக்கு வேணும்” இவனது ஏக்கம் கலந்த குரலில் அப்படியே இவள் அமைதியாகிவிட்டாள்.

Advertisement

இவ்வளவு நேரம் கிரியின் குரலாலும், கமலியின் குரலாலும்  நிறைந்திருந்த இடம் இப்போது போரமைதியோடு இருந்தது. ஓடும் காற்றாடியின் சத்தம் சவிர்த்து நிசப்த அமைதி தான் அங்கே.

Advertisement

இவன் தூங்கவில்லை, அமைதியில்லாமல் தவித்த மனதை அவள் கையில் கொடுத்து, ‘கொஞ்சம் அமைதி படுத்தேன்’ என அவள் பொறுப்பிலேயே விட்டு விட்டான்.

அதற்கு தகுந்தாற்போல், அவளிடம் உத்தரவு கேட்காமலேயே அவள் விரல்கள் தானாகவே அவனது தலை கோத தொடங்கிவிட்டது. அதுவே பெரிய ஆறுதலாய் தோன்றியது கிரிக்கு.

இப்படியே நீளாதா என ஆசை கொண்ட கனங்களை அடித்து விரட்டியது, கிரியின் போன். போனோ உள்ளே கட்டிலில் கிடந்தது. இவனோ அவள் மடியில் கிடந்தான்.

Advertisement

இவனை ஒதுக்கி எழுந்து சென்றாலோ, இல்லை போன் விடாது அடித்து கொண்டே இருந்தாலோ கண்டிப்பாக கிரி விழித்து கொள்வானே! என்ன செய்வது என யோசிக்கையிலேயெ எழுந்துவிட்டான் கிரி.

இவனே அவள் மடி விட்டு விலகி சோபாவில் தலை சாய்ந்து கொண்டு “போன் எடுத்து தாயேன் கமலி” எனவும் இவளும் எடுத்து வந்து அவன் கையில் கொடுத்தாள்.

அழைத்தது வசந்தா “சொல்லும்மா..” என அழைத்து முடிக்கும் முன்னே.. “மணி ஒன்பதரை ஆச்சுடா.. எப்ப தான் வீட்டுக்கு வருவ” என கேட்க

“நான் வீட்டில் தான் இருக்கேன்” என்றான் ஸ்வாதீனமாய்.

“டேய்..  ராஜீ வீட்டுக்கு வர சொன்னேன். நீ அனுப்பின பொருள் எல்லாமே வந்துடுச்சு. நீ வரலைன்னா நல்லாவா இருக்கும், கிளம்பி வாடா” என்றிட

“இல்லைம்மா வரலை” என இவன் முடித்து கொள்ள

“ஏண்டா இப்படி மூஞ்சில அடிச்ச மாதிரி பேசுற.. பால் காய்ச்சுனு ஏற்கனவே நானும் சொல்லிட்டேன், செந்திலும் சொல்லிட்டாரு.. இன்னும் என்ன?” ஊடேயே கேட்டது ராஜியின் குரல். வழக்கம் போல ஸ்பீக்கரில் பேசுகிறார்களா என நினைத்து கொண்டு

“என் பொண்டாட்டி கிட்ட சொல்லலை தானே. அவ இல்லாமல் எனக்கு அங்க வர இஷ்டமில்லைக்கா” நேடியாகவே இவன் பேச, கமலியின் விழிகள் வியப்பில் விரிந்தது.

“ஏன், நான் இல்லாமல், நீ போக கூடாதுனு உன் பொண்டாட்டி சொல்லிட்டாளா?” ராஜி பேச

“டிரிக்கரா பேசற வேலையை செந்திலோட நிப்பாட்டிக்க..க்கா என்கிட்ட இப்படி பேசாத.. இல்லை இப்படி தான் பேசுவன்னா, இனி என்கிட்ட பேச்சே வச்சுக்காத” கிரியின் பேச்சில், அதிர்ந்து ஒருவரை ஒழுவரை பார்த்து கொண்டனர் அம்மாவும் மகளும்.

“ஓ.. உன்கிட்ட, உன் பொண்டாட்டிகிட்ட னு தனி தனியா சொல்லி அழைக்கனுமா என்ன?” ராஜி விடாது பேசிட

“கமலியோட அப்பா, அம்மா இரண்டு பேருமே வளைகாப்பு பங்க்ஷனுக்கு நம்ப வீட்டுக்கே வந்து அழைச்சாங்க தானே, கூப்பிட்டே நீங்களாம் வரமுடியதுன்னு சொல்லிடீங்க. கூப்பிடாமல் அவ ஏன் வரணும்” இவன் கேட்டதிற்கு பதில் தான் இல்லை அந்த பக்கம்.

“அவளுக்காக.. என்னை ஒதுக்கி வைக்கிறியா.. கிரி” ராஜி வழக்கம் போல உருட்டிவிட

“அப்படி நீ் நினைச்சா அதுக்கு நான் ஆளில்லை. பால் காய்ச்சிட்டியா.. உன் குடும்பத்தை பாரு.. சந்தோஷமா இரு அது போதும்” “வேற எதுவும் பேசனுமா” என கேட்டு அவளிடம் பதிலில்லாது போக, போனை வைத்துவிட்டான் கிரி.

அவனை, விழிகள் தெறிக்க பார்த்தபடியே நின்றிருந்தாள் கமலி. “என்ன” என புருவம் உயர்த்தியவனிடம் ஒன்னுமில்லை என தலையசைத்து வைத்தாள்.

“கிளம்புறியா.. உன்னை உங்க வீட்டில் டிராப் பண்ணிட்டு போறேன்”  என்ற இவனது சம்பந்தமில்லா பேச்சில்

“எதுக்கு” இவளது பதற்றம் அப்படியே தெரிந்து போக

அவளை மேலிருந்து கீழ் வரை நிதானமாய் பார்த்து, எட்டி அவள் கை பிடித்து இழுக்க, திடீரென்ற இவன் செயலில் தடுமாறி இவன் மேலேயே வந்து விழுந்தாள் கமலி.

இவள் விலகும் முன்பே இரு கை கொண்டும் இறுக்கி, பார்வையாலேயே இவள் விழிகளை துளைத்தான். “கிரி” இவன் பார்வையின் வீச்சு, கைகளின் இறுக்கம் தாள முடியாமல் திணறினாள் கமலி.

“இவ்வளவு நேரத்தையும் வேஸ்ட் பண்ணிட்டு, ஷாக் வேறையா உனக்கு..” என கேட்டவன், அதே வேகத்தில் அவள் முகம் பற்றி இழுத்து அவள் நீண்ட கூர் மூக்கில் அழுத்தமாய் பற்கள் பதிய கடித்து அவளை அலற வைத்தான். வைத்தான். “படுத்துறடி..” என சொல்லிவிட்டு மீண்டும் கடித்து வைத்தான். இவளோ அவனிடம் மாட்டி கொண்டு விடுபடமுடியாமல் விழித்தாள்.

பின் அவளை நகர்த்தி, தன் அருகிலேயே அமர்த்திவிட்டு “கடைக்கு போகனும் கமலி.. அண்ணன் ஒத்தையிலேயே எப்படி சமாளிப்பான். போயாகனும்” பொறுமையாய் இவன் பதில் சொன்னதில், மனமே இல்லாமல் ‘சரி’ என தலையசைப்பதை தவிர வேறு வழியும் இவளுக்கு தெரியவில்லை.

“ஆரம்பிச்சிட்டா முழுசா நீ எனக்கு வேணும் கமலி. எடுத்தோம் கவிழ்த்தோம்னு… ப்ச்.. புரிஞ்சுக்கடி..” என்றவன்.. “கிளம்புவோமா” என கேட்டிட, சோபாவில் கிடந்த துப்பட்டா, போன் என அனைத்தையும் எடுத்து கொண்டு இவள் தயாராக, இவனும் தயாரானான்.

பின் மீண்டும் இருவரும் கமலி வீட்டிற்கு கிளம்பிவிட்டனர் பைக்கில். போகும் வழியில், கூல்ட்ரிங்க்ஸ் கடையை பார்த்தவன், என்ன நினைத்தானோ, அதன் முன் சென்று வண்டியை நிறுத்தினான் கிரி.

“என்ன! இங்க?”  கேட்டவளிடம்.. “வா” என அழைத்து சென்றான்.

“அன்னைக்கு பாசஸந்தி கேட்ட தானே. இன்னைக்கு வாங்கிக்க” என கடைக்குள் அழைத்து சென்றான்.

“பாசஸந்தி வேணாம்..” என மறுத்தவளிடம், ‘உட்கார்’ என இருக்கையை காட்டி எதிரில் இவனும் அமர்ந்தபடி “ஆரஞ்ச் சூஸ் சொல்லவா” என கேட்டான்.

“ம்.. இன்னைக்கு மாதுளம் ஜூஸ்” இவள் சொல்ல, எழுந்து சென்று இரண்டாய் ஆர்டர் சொல்லிவிட்டு வந்தமர்ந்தான்.

“பாசந்தி பிடிக்கும் தானே.. டயட்ல.. எப்போவாவது ஒரு நாள் சீட் பண்ணிக்கலாம் கமலி தப்பில்லை” அதிகமாய் டயட்டை கடைபிடிக்கிறாளோ என்ற எண்ணத்தில் இவன் பேச

“ஹையோ.. அப்புறம் கலோரீஸ பர்ன் பண்றதுக்கு நான் நாள் முழுக்க ஒர்க் அவுட்  பண்ணனும்.. வேணாம்பா” இவள் பதற

“ஆசைபட்டத சாப்பிடு கமலி. லிமிட்டா சாப்பிட்டா பிரிச்சனையில்லை” புரிய வைக்க இவன் முயற்சி செய்ய, இவளோ “கிரி, இதுல தலையிடாதீங்க ப்ளீஸ்” என்றுவிட்டாள் முடிவாக.

அவள் முகம் பார்ப்பதை விட்டு தலை குனிந்தபடி “விட்டுட்டுலாம் போக மாட்டேன்டி” அவளை நிமிர்ந்தே பாராமல் இவன் பேசிய வார்த்தைகள், அவள் மனதில் சாராலாய் விழுந்தது.

“நீ எந்தளவுக்கு சாப்பாட்டு பிரியைனு எனக்கு தெரியும் கமலி. வாழறதே அரை ஜான் வயிறுக்கு தான். வயித்துக்கு வஞ்சகம் பண்ணாதடி. அதுவும் நான் ஏதாவது சொல்லிடுவனோன்னு நீயாவே எதுவும் பண்ணிக்காத”

“ப்ச்.. பிடிச்சத சாப்பிடாமல் என்ன வாழ்கைனு எனக்கும் தோணுச்சு தான். ஆனா டயட்டில் ஒரு நாள் சீட்டிங்னு ஆரம்பிச்சா.. அப்படியே கன்ட்னியூ ஆகிடும் கிரி. இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்துக்கு என்ன மரியாதை” என நிறுத்த

இவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

“முன்னலாம் நடந்தாலே மூச்சு வங்கும், படிகட்டுலாம் ஏறினா.. சுத்தம் சொல்லவே வேண்டாம்.. ஆனால் இப்போ சுறு சுறுப்பா இருக்கேன், ஜாயின்ட் பெயின் இல்லை. படுத்தவுடனே தூங்கிடுறேன். அதுவே ஒரு பெரிய ரிலீஃப்பா இருக்கு கிரி.. மனசும் , உடம்பும் ரொம்ப பாசிட்டிவ்வா ஃபீல் பண்ணுது” அவளுக்குள் நடந்த மாற்றங்களை வரிசைகட்டியவள்  “நௌவ்.. டோட்டலி ஐ லவ் மை செல்ப் கிரி” இதை சொல்கையில் கமலியின் முகத்தில் தான் எத்தனை பூரிப்பு.

ஒருவரால் விரும்பப்படுவது ஒருவகையில் இன்பம் என்றால் தன்னை தானே விரும்புவது அதைவிட பேரின்பம் தானே. அதைவிட போதையும் இவ்வுலகில் வேறெதுவும் இல்லையே! அப்படி ஒரு போதையை கமலியின் முகத்தில் கண்டான் கிரி.

அவள் பேச்சையெல்லாம் ஒன்றுவிடாமல் உள்வாங்கியவன் “என்னை எப்போ கமலி லவ் பண்ணுவ” என்ற இவனது கேள்வியில்  விழிகளை மட்டும் உயர்த்தி இவனை பார்த்தாள்.

அந்த போதையை சிறிதும் மாற்றிக்கொள்ளாத அவள் விழிகள், “உங்களை லவ் பண்ணினதோட எபக்ட் தான்.. இப்போ என்னையே நான் லவ் பண்ணிட்டு இருக்கேன்” என்றிட.

இப்படி ஒரு பதிலை இவளிடமிருந்து எதிர்பார்க்கதவனுக்கோ ஷாக் அடித்தார்ப்போல் தான் இருந்தது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!