ரஞ்சிதா சித்தார்த்தை தன் மடியில் படுக்க வைத்து, அவனது தலைமுடியை வருடியபடி,“ஒரு காட்டுல நிறைய மிருகங்கள் சந்தோஷமா வாழ்ந்துட்டு இருந்துச்சாம்…” என்று கதையை ஆரம்பித்தாள்.
“அங்கே ஒரு அழகான மான் இருந்துச்சாம். அது ரொம்ப அழகா துள்ளித் துள்ளி ஓடுமாம். காட்டுல இருக்கிற எல்லா இடத்துக்கும் போய் விளையாடுமாம்.”
சித்தார்த்தின் கண்கள் விரிந்தன.
Advertisement
“மன்… மன்…” என்று இரண்டு கைகளையும் தலையில் வைத்து கொம்பு போல காட்டினான்.
“ஆமா… நம்ம சித்து குட்டி மாதிரி துறுதுறுன்னு ஓடிக்கிட்டே இருக்குமாம் அந்த மான்.”
சித்தார்த் களுக்கென்று சிரித்தான்.
Advertisement
ஒருநாள் அந்த மான் காட்டுக்குள்ள ரொம்ப தூரம் போயிடுச்சாம். அப்போ…ஒரு பெரிய புலி…அந்த மானை பிடிக்க தூரத்த அந்த மான் இன்னமும் வேகமா ஓடுச்சாமா.
Advertisement
“புலி!” என்று கேட்டவுடன் சித்தார்த் எழுந்து உட்கார்ந்து, ‘உர்ர்ர்ர்…’என சத்தம் எழுப்பினான்.
ரஞ்சிதா மகனை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.
“மான் ஓடுச்சு… ஓடுச்சு… ஓடுச்சு…” என்று சொல்லிக் கொண்டே தன் கைகளால் ஓடும் மானைப் போல காட்டினாள்.கொஞ்ச தூரத்துல ஒரு பெரிய மரம் தெரிய அதுக்கு பின்னாடி மான் ஒளிஞ்சுக்கிச்சாம்.
Advertisement
“அந்த மரத்துக்கு மேலே யார் இருந்தாங்க தெரியுமா?”
சித்தார்த் அவளை ஆர்வமாகப் பார்த்தான்.
“மங்கி!”எனச் சொல்ல
“மங்கி!” என அவனும் கைகளைத் தலையில் வைத்து தாவுவது போல செய்தான்.
“அந்தக் குரங்கு மரத்துல உட்கார்ந்துகிட்டு மாங்காயை சாப்பிட்டுட்டு இருந்துச்சாம். மான் ஓடி வந்து, ‘குரங்கு அண்ணா… என்னை புலியிடமிருந்து காப்பாத்துங்க!’ன்னு கேட்டுச்சாம்.”
“குரங்கு என்ன பண்ணுச்சு தெரியுமா?”
சித்தார்த் ஆவென அவளைப் பார்க்க…
“அது ஒரு பெரிய மாங்காயை எடுத்துப் புலி மேலே தூக்கிப் போட்டுச்சாம்!”
சித்தார்த் “ஹா… ஹா…” என்று சிரித்தான்.
“புலி கோபமா மேலே பார்த்துச்சு. அப்போ… அங்கே ஒரு கரடி வந்துச்சாம்!”
“கர்டி!”என சித்தார்த் இரண்டு கைகளையும் உயர்த்தி கரடியைப் போல காட்டினான்.
கரடி வந்ததும் புலி கொஞ்சம் பயந்துச்சாம். ஏன்னா அந்தக் கரடி ரொம்ப பெரிசு. அது ‘க்ர்ர்ர்…’ ன்னு சத்தம் போட்டுச்சாம்.
அனைத்தையும் சித்தார்த் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.
“அப்போ அங்கே ஒரு சின்ன முயல் வந்துச்சாம்.”
“ரிப்பிட்…”
“ஆமா. அந்த ரேபிட் ரொம்ப புத்திசாலியாம். அது புலியிடம் போய்… ‘புலி அண்ணா… நீங்க ரொம்ப தைரியசாலிதான். ஆனா அந்தக் குகைக்குள்ள இருக்கிற சிங்கத்துக்கு முன்னாடி நீங்க தைரியசாலியா இருக்க முடியுமா?’ ன்னு கேட்டுச்சாம்.”
சித்தார்த் கண்களை இன்னும் பெரிதாக்கினான்.
ரஞ்சிதா சிரித்தபடி“ அப்போ காட்டுல ஒரு பெரிய சத்தம் கேட்டுச்சாம்.”
ஆஆஆஆஆ…!என்று சிங்கம் கர்ஜிப்பது போல சித்து சத்தம் போட…
ரஞ்சிதா சிரித்தபடி, “ஆமாம்! அந்த சத்தம் கேட்டதும்…புலி அப்படியே ஓடிடுச்சு!”
“மான் சந்தோஷமா துள்ளிச்சாம். குரங்கு மரத்துல இருந்து கீழே குதிச்சுச்சாம். கரடி கையைத் தட்டுச்சாம். முயல் துள்ளித் துள்ளி ஆடுச்சாம்.”
அப்போ எல்லாரும் சேர்ந்து என்ன பண்ணாங்க தெரியுமா?
சித்தார்த் ஆவலுடன் அவளைப் பார்த்தான்.
“ஆட்டம் போட்டாங்க!” என ரஞ்சிதா அவனது கைகளைப் பிடித்து ஆட்டினாள்.
சித்தார்த் களிப்பில் சிரித்துக் கொண்டிருந்தான்.
அப்போது திடீரென்று, “அம்மா… பெரட்!” என்றான்.
ரஞ்சிதா ஒரு நொடி அவனைப் பார்த்து சிரித்துவிட்டு,“அடடா… காட்டுல பேரட் இல்லையே!”என்றாள்.
சித்தார்த் அவளை விடுவதாக இல்லை.
“பேரட்! பேரட்!”என வம்பிழுக்க…
“சரி சரி… அதையும் சேர்த்துக்கலாம்!”
என்று அவனது கன்னத்தைத் தட்டியபடி
“அந்தக் காட்டுல ஒரு அழகான பச்சைக் கிளியும் இருந்துச்சாம். அது மேலே பறந்துகிட்டே.. “கீச்..! கீச்..!”னு கத்தி ஏதாவது ஆபத்து வந்தா எல்லா மிருகங்களுக்கும் எச்சரிக்கை கொடுக்குமாம்.”
சித்தார்த் உடனே, இரண்டு கைகளையும் இறக்கையாக மாற்றி “கீச்..! கீச்..!” என்று கத்தினான்.
“ஆமாம்… நம்ம சித்து குட்டி மாதிரி பச்சகிளியும் கத்துமாம்!”என சிரித்தாள்.
சித்தார்த் அவளது கழுத்தைக் கட்டிக்கொண்டு,
“ஆ ஊ வென” ஏதேதோ உளறி தூங்கிப் போனான். ரஞ்சிதாவும் அவனை அணைத்தபடி தூங்கினாள்.
அருகில் படுத்திருந்த ராஜீவன், இத்தனை நேரமும் அமைதியாக அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.
கதையைவிட… அந்தக் கதையைச் சொல்லிக் கொண்டிருந்த தாயையும், அதைக் கேட்டுக் கொண்டிருந்த மகனையும் தான் அவனது மனம் கவனித்துக் கொண்டிருந்தது.
அந்த வீட்டில் தான் இல்லாமல் போனதாக உருவகம் செய்து வைத்திருந்த ஒரு உலகம்… அவன் கண் முன்னாலேயே இத்தனை அழகாக இயங்கிக் கொண்டிருப்பதை அன்றுதான் முதன்முறையாக பார்க்கிறான்.
அடுத்த நாள் மாலை ராஜசேகர் குடும்பம் ராஜீவன் வீட்டில் குழுமினர். ராம மூர்த்திக்கு செய்ய வேண்டிய சடங்குகளை பற்றி விவாதித்துக் கொண்டிருக்க…
சித்தார்த் ஜெகனின் வண்டிச் சாவியை எடுத்துக் கொண்டு தன்னை வெளியே அழைத்துச் செல்லும்படி அவனது கையை பிடித்து இழுத்துக் கொண்டிருந்தான்.
“ஜகா..வா… ஜகா…” என மீண்டும் மீண்டும் அழைக்க…ரஞ்சிதா அவனது கன்னத்தை கிள்ளி” பேரு சொல்லி கூப்பிடுவையா பெரிப்பானு கூப்பிடு” என அதட்டினாள்.
வேண்டுமென்றே எல்லோர் பெயரையும் சொல்லி வந்தவன் ராஜீவனிடம் வந்ததும்,மூக்கை சுருக்கி, முகத்தை அஷ்டகோனலாய் வைத்து பேட்பாய்!என்றான்.
சித்து ராஜீவனை அதுவரைக்கும் பார்த்து இல்ல… திடீரென வந்து என்தம்பிக்கு கொள்ளி வைக்கறதே பார்த்தும்…அவன் இவனை தன்னோட தாத்தாவை தன்கிட்ட இருந்து பிரிக்க வந்த கெட்டவனு அவன் மனசுல பதிஞ்சு வெச்சுகிட்டான்…
அவனுக்கு இதெல்லா புரியறே வயசு இல்ல. அவன் மேல தப்பு இல்லதா…ஆனா இவ்வளவு தூரம் நீங்க ரெண்டு பேரும் அவனுக்கு எதையும் புரிய வைக்க முயற்சி கூட பண்ணாமா இருக்கறதுதான் தப்பு….
தந்தை மகன் உறவு எலியும் பூனையுமா இருந்தா நல்லாவா இருக்கும்… இன்னையோட இப்படியே முடியறே பந்தம் இல்லையே…
ரஞ்சிதா,” நீ சித்துகிட்ட இதுதான் உங்க அப்பானு சொல்லி புரிய வை”என்றார்.
மெளனமாக தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.
தனக்கும் தன் தந்தைக்குமான உறவும்… அவரின் மறைவுக்குப்பின் தான் அனுபவிக்கும் வேதனையும் வெளியே சொல்ல முடியாமல் மனதுள் குமறிக் கொண்டிருப்பவனுக்கு நன்றாகவே அவர் சொல்வது புரிந்தது.
நவீனோடு கிச்சு கிச்சு மூட்டி கெக்கபெக்கா வென சிரித்து கொண்டிருக்கும் சித்தார்த்தை பார்த்தான்.தன்னிடம் ஒட்டாமல் தன் அண்ணன் தம்பியிடம் அவன் உரிமையாய் பழகுவது சிறிய எரிச்சலை தந்தது. அந்த எரிச்சலுக்கு என்ன பெயர் வைப்பது?ஏன் அவ்வளவு கடுப்பு வருகிறது?எனத் தெரியாமல் கூட்டத்தின் நடுவே அமர்ந்திருந்தான்.
தன்னை விரோதி போல பார்த்து… ஆசையாய் அள்ளிக் கொஞ்ச அருகில் சென்றால் கூட திமிறிக் கொண்டு ஓடி அன்னையின் முந்தானையில் ஒளிந்து முட்டைக் கண்களால் “என்னை நெருங்காதே!” என எச்சரிக்கை செய்யும் மகன் முன் தோற்றுத்தான் போனான்.
கடந்த ஒரு வாரமாய் மகனின் குறும்பும்.. துள்ளலும்…அவனை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல தோன்ற…ராம மூர்த்தியின் வார்த்தைகள் அடிக்கடி காதில் உறைப்பதாய் தோன்றியது…
“ராஜீவா ஒருவாட்டி வந்து உன் பையனே பாருடா.அவன் செய்றே குறும்பெல்லாம் பார்த்தா அவனே பார்த்துட்டே இருக்கனும் போல இருக்கும்டா”என்ற வார்த்தைகள் உண்மை போலும் என உணர்ந்தான்.
சித்தார்த்தை இழுத்து ராஜீவன் முன் நிறுத்தி…”பேட் பாய் இல்ல…அப்பா” என்றாள் தீபா.
நோ… பேட்பாய்… தாத்தா… என மீண்டும் அவனது அருகில் சென்று தன் கைகளால் அவனை அடிக்க ஆரம்பித்தான்.
அவனை பிடித்து மீண்டும் ராஜீவன் முன் அமர வைத்து…. “அப்பா” என ஜெகன் கூற…
“நோ…அப்பா… அப்பா.. என எங்கோ பார்த்தபடி ,அப்பா…
என டீவி சோகேஸின் அருகில் சென்று டிராவை திறக்க முயற்சி செய்து… அதைப் பார்த்தபடி, அப்பா…. என்றான். ஏதோ நியாபகம் வந்தவனாய்.
“அப்பா அங்க எங்கடா இருக்காரு?இங்க இருக்காரு பாரு” என ராஜீவனை காட்டி ஆர்த்தி அவனை தூக்க முயல திமிறிக் கொண்டு கீழிறங்கி… மீண்டும் அப்பா… அப்பா… எனக் கூறிக் கொண்டே அந்த டிராவை திறக்க முயற்சி செய்தான்.
அதுல என்ன இருக்கு ரஞ்சிதா?என ராஜ சேகர் கேட்க…
“அதோட சாவி மாமா கிட்டதா இருக்கும்” என்றாள்.
ஜெகன் ராம மூர்த்தியின் அறையில் தேடி, அந்த சாவியை கண்டுபிடித்து…அந்த டிராவைத் திறந்தான்.
ராஜீவன் ரஞ்சிதா திருமண புகைப்படம் உள்ளே இருந்தது. டிராவினுள்ளே இருந்து அதை எடுக்க இரண்டு கைகளையும் தட்டி வாயில் வைத்துக் கொண்டு களுக் எனச் சிரித்தான் சித்து.
பின் இரண்டு கால்களையும் அகல விரித்து,நடுவில் அந்த ஆல்பத்தை வைத்து,அப்பா…அம்மா…தாத்தா…ஆத்தா…என ஒவ்வொருவரையும் சரியாக அடையாளம் காட்டி…பின் உதட்டை பிதுக்கியபடி “சிட்டு நோ….”என்றான்.
இதுவரை ரஞ்சிதா அந்த ஆல்பத்தை ஒன்றிரண்டு முறை பார்த்திருக்கிறாள். பின் அவனின் கண்டுகொள்ளாத குணத்தால் வெறுத்து அதை பார்ப்பதை நிறுத்தி விட்டாள். ராஜீவனோ அதை ஒருமுறை கூடப் பார்த்ததில்லை.
ஆனால் ராம மூர்த்தி அப்பாவை பற்றி தன் பேரன் தெரிந்து கொள்ள வேண்டும் என ஒவ்வொரு இரவும் அவனுக்கு இந்த புகைப்படத்தை காட்ட…தன் அப்பாவாக அவன் தன் மனதில் பதித்து வைத்திருப்பது…
உர்ரென கடுப்புடன் நிற்கும் ராஜீவனைத்தான்.
வாழ்க்கை மீண்டும் ஒரு சந்தர்ப்பம் தந்தால் ஒரு அழிரப்பரை எடுத்துக் கொண்டு தன் திருமணத்தை அழிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு,இன்று தன் மகன் அந்த நிகழ்வைதான் உண்மையாக்க விரும்புகிறான் என்ற காலத்தின் கணக்கை உணர்ந்து வாயடைத்தான்.
‘உரென’ வைத்திருக்கும் தன் முகத்தைப் பார்த்து அவனுக்கே கொஞ்சம் வெட்கமாகத்தான் இருந்தது. இப்படி காலத்திற்கும் இந்த ஃபோட்டோ நின்று பேசும் எனத் தெரிந்து இருந்தால்… “கொஞ்சமாவது சிரித்து இருக்கலாம்” என எண்ணிய போது அவனது மனச்சாட்சி அப்போ இந்த திருமண பந்தத்தை நீ ஏத்துக்கிட்டே என்ற கேள்வியை கேட்க…
அவனது குரங்கு மனம் இல்லை… இல்லை.. ஆயிரம் இருந்தாலும் இது எனக்கு பிடிக்காத கட்டாய திருமணம்தான் என முரண்டு பண்ண…
அதுசரி பிடிக்காத திருமணம்தான்…. பிடிக்காத திருமண பந்தத்துல பையன் மட்டும் எப்படி வந்தான்….அது மட்டும் பிடிச்சிருந்துச்சா….
என்ற கேள்வியை முன் வைக்க…
பிடிக்காத திருமணம் என சொன்னவனால்….
பிடிக்காத மனைவி என்று சொல்ல முடியவில்லையே…. அதன் விளைவுதான் மகனோ என்ற எண்ணம் அவன் மூளையின் நாலாபக்கமும் ஓட… உண்மையை ஏற்றுக் கொள்ள மனமில்லை…இந்த கூட்டத்தின் நடுவே அமர்ந்திருந்திருந்தால் முகமே தன்னை காட்டிக் கொடுத்துவிடும் என எண்ணி தப்பிக்க உள்ளே செல்ல முயன்றான்.
“ராஜீவா,எங்க எழுந்திட்டே உட்காரு… இன்னொரு முக்கியமான விஷயம்” என ராஜசேகர் அவனை அமர வைத்தார்.
“ஒரு குழந்தை பிறந்த பதினோரு மாசத்துல பிறந்த முடி எடுக்கறது நம்ம குடும்ப வழக்கம்.நீ வரனும்னு மூர்த்தி இவ்வளவு நாளா காத்துட்டு இருந்தான். இனியும் இதை நீ தாமதப்படுத்த வேண்டாம்.இதுல சித்தார்த்தோட உடல் நலமும் முக்கியம். ஒன்றரை வருஷமா பிறந்த முடி எடுக்காம இருந்தா…அது அவனுக்கு பாதிப்பை தரும்.”என்றார்.
“என்ன என் சித்துக்கு பாதிப்பா…”என தந்தையாக அவன் மனம் பதறியது. நொடியும் தாமதிக்காது வலுக்கட்டாயமாக தன் பையனை அருகில் இருக்கும் பார்பர் ஷாப்பிற்கு தூக்கிச் சென்று மொட்டை போட்டான்.
மொட்டை தலையுடன் அழுது கொண்டே சிவந்த கண்களுடன் வந்த மகனையும், அப்பாவாக கடமையை நிறைவேற்றிவிட்டதாக கர்வமாக நின்ற கணவனையும் பார்த்து கோபம் தலைக்கேற…எரித்துவிடும் பார்வையை ராஜீவனை நோக்கி வீசினாள் ரஞ்சிதா.