Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா கல்யாண வைபோகமே 20 2

நாகம்மாளுக்கு எழுந்து வர முடியவில்லை கால் வலி அதிகமாக இருப்பதால், சத்தம் போடுவது கேட்டாலும் சரியாக புரியவில்லை,,.

இவர்கள் சண்டையை பார்த்து கதிர் சத்தமாக அழ.



Advertisement

“டேய் வாயமூடு அனாத பயலே” என்று கதிரை கிருஷ்ணன் திட்ட…

Advertisement

பத்மாவதிக்கு கோபம் வந்து விட்டது, “யார அனாதையின்னு சொன்ன?, நாங்க செத்தா எங்களுக்கு நெய் பந்தம் பிடிக்க போறது  எங்க பேரன் தான், எங்க பேரனையா அனாதையின்னு சொன்ன?, உன் தம்பி சட்டப்படி இவனை தத்தெடுத்து இருக்கான், இவன் அனாதை இல்ல, நீ தான் அனாதை பயலாக போற..

Advertisement

உறவுகளோடு அருமை தெரியாம, பணம், பணமுன்னு பணத்தாசை பிடிச்சு அழையிற நீதான்டா அனாதை, உன்கிட்ட காசு இருக்குற வரைதான் உன் பொண்டாட்டி உன்ன வச்சு இருப்பா, உன்கிட்ட காசு இல்லன்னு தெரிஞ்ச நொடி உன்ன தொறத்தி விடுவா பாரு” என்று மகனிடம் பத்மா கோபமாக பேச.

Advertisement

“யாரு தான் அனாதை ஆக போறேனா, இவன் இருக்கபோய் தானே பேரன், பேரன்னு கொஞ்சுறீங்க, இவன் இல்லாம போயிட்டா, என் பிள்ளைகளை வந்து பார்ப்பீங்க தானே” என்றவன் கோபம் கண்ணை மறைக்க.

கதிரை பத்மாவதியிடமிருந்து பிடுங்கியவன், கதிரை தலைகீழாக தொங்க விட.

கதிர் வீழ்லேன்று கத்த, “இவனை கொன்னுடுறேன்”   என்றவன்..

அங்கே இருப்பவர்கள் என்ன செய்ய போகிறான் என்று   உணர்வதற்க்குள், கதிரை தலைகீழாக பிடித்தவன் சுவரில் தூக்கி வீச,..

“ஐயோ என்ன பேரன்” என்று பத்மா நெஞ்சை பிடித்தபடியே அப்படியே அதிர்ச்சியில் நெஞ்சை பிடித்து கீழே அமர்ந்து விட்டார்,.

சீதாவுக்கு கிருஷ்ணன் ராட்சசன் போல தெரிந்தான், அவன் எதிரில் நின்றவள் அவன்  என்ன செய்யபோகிறான் என்று தெரிந்தவள் வேகமாக ஓடி கதிரை தன் மார்போடு அணைத்து பிடித்தவள், கீழே அப்படியே அமர்ந்து விட்டாள்.

வெங்கட்டுக்கு மகன் செய்த செயலால் பயந்து போனவர் சீதா அருகில் வர..

ரவிதேஸ்சா புயலென உள்ளே வந்திருந்தான், அவன் சென்னைக்கெல்லாம் சொல்லவில்லை, பக்கத்து தெருவில் உள்ள நண்பன் வீட்டில் தான் இருந்தான், அவன் ஏற்கனவே  நாளை செல்லத்தான் டிக்கெட் போட்டிருந்தான், சீதாவுக்கு நான் இருந்தால் தொந்தரவாக இருக்கும் என்று எண்ணி உடனே வீட்டை விட்டு கிளம்பி நண்பன் வீட்டில் இருந்தான்,,.

இவன் சத்தம் கேட்டு ஊரில் உள்ளவர்கள், வெங்கட் அய்யா  மூத்த பையன் வந்து சண்டை போடுறான் என்று பேசியதை கேட்டவன், வீட்டில் உள்ள சி, சி டி  கேமரை பார்க்க, கிருஷ்ணன் கோபமாக வெளி வாசலில் நின்று  சீதாவை முறைத்து பார்த்தது வீட்டினுள் கோபமாக சென்றது, தெரிந்தது,,.

உடனே நண்பன் வீட்டிலிருந்து ஓடி வந்திருந்தான்.

இவன் வந்து அண்ணனிடம்  என்ன வேண்டுமென்று  கேட்க வர..

கதிரை தலைகீழாபிடித்திருந்தவனை பார்த்து “ஏய்” என்று ஓடி வர.

அதற்குள் கதிரை தூக்கி எறிந்திருந்தான்.

சீதா கதிரை பிடித்ததும் ஆசுவாசம் ஆனவன்,  வந்த வேகத்தில் கிருஷ்ணனை நெஞ்சில் ஒரு மிதி மிதிக்க. பறந்து போய் விழுந்தான் கிருஷ்ணன், ரவிக்கு இருந்த ஆத்திரத்தில், அண்ணனை மிதி, மிதி என்று மிதித்தவன் தன் மகனை தூக்கி எறிந்த இரண்டு கையையும் உடைத்திருந்தான், ரவிதேஸ்சாவை யாரும் தடுக்கவில்லை அவன் கையை ஒடைத்தான்,

கிருஷ்ணன் உயிர் போகுற மாதிரி கத்தியிருந்தான்..  ரவி அவன் ஒரு காலையும் உடைத்தவன், அவனை செத்த  நாய்மாதிரி காலை பிடித்து வெளியே இழுத்து வந்தவன், “இவனை தூக்கி கொண்டு போய் அவன் பொண்டாட்டி வீட்டுல போடு” என்று சொல்ல.

கிருஷ்ணணோடு வந்த டிரைவர், கால் கை உடைந்து இரத்த வெல்லத்தில் கிடந்த கிருஷ்ணனை தூக்கி கொண்டு ஹாஸ்பெட்டல் ஓடினான்.

சீதா கதிரை இறுக்கமாக அணைத்திருந்தாள்.

வெங்கட் சீதாவிடம் வந்து “சீதா, சீதா” என்று அழைக்க.

அவளோ நடந்து சம்பவத்தில் இருந்து இன்னும் வெளியே வர வில்லை, வெங்கட் கூப்பிட்டும் அவள் அப்படியே கதிரை அணைத்தவாரே அமர்ந்திருக்க.

மனைவியை சென்று பார்த்தார் வெங்கட், பத்மா நெஞ்சி கைவைத்தவர் அப்படியே சீதாவையும் கதிரையும் பார்த்து வாறே மூச்சு வாங்க அமர்ந்திருக்க…

வேகமாக சென்ற வெங்கட் தண்ணீர் கொண்டு வந்து பத்மாவுக்கு கொடுத்தார்.

அதை வாங்கி கூட அவரால் குடிக்க முடியவில்லை.

தனது கையை சீதாவை  காட்டி ஏதோ சொல்ல வர அவரால் பேச  முடியவில்லை ..

ரவி கிருஷ்ணனை வெளியே சென்று போட்டு வந்தவன் உள்ளே வர.வெங்கட் மனைவி அருகே நின்று

தண்ணீர் கொடுப்பதை பார்த்தவன்.

சீதா அருகே மண்டியிட்டு “சீதா, சீதா”. என்று அவளின் தோளை தோட.

ரவியின் குரலை கேட்டு நிமிர்ந்தவளுக்கு மூச்சு, வாங்கியது..

 மூச்சு வாங்கிய  சீதாவை பார்த்தவன், “ஒன்னுமில்லை  சீதா, ஒன்னுமில்லை” என்றவன், அவளை தேற்ற.

“ரவி, ரவி, ரவி” என்றாளே தவிற பேச முடியவில்லை அவள்  மூச்சு விட சிரமபடுவதை பார்த்தவன் அவளை அணைத்து முதுகை நீவி விட,..

கதிரை அவள் விடவே இல்லை, அடைகாக்கும் கோழிபோல் அவனை தன் மார்போடு அணைத்து வைத்திருந்தவளுக்கு, நான் கதிரை பிடிக்காமல் இருந்திருந்தால், என்ற யோசித்த நொடி, உடல் தூக்கி போட்டு உதர, அவளின் உணர்வுகளை புரிந்து கொண்டவன் அவள் முதுகை நீவி விட.

மெல்ல மூச்சை  விட்டு, விட்டு சரிபடுத்தியவள். கிருஷ்ணனை தேட அவன் இல்லை என்று நிம்மதியாக  மூச்சு விட்டவள்.

கதிரை தன் மார்பில் இருந்து பிரித்து பார்க்க, அவனோ மயங்கி இருந்தான்.

“கதிர் கதிர்” என்று சீதா கத்த.

கதிரை பார்த்த ரவி “கதிர் டேய்”  என்று அவனின் கன்னத்தை தட்ட.

அவன் விழிக்காமல் இருக்க, ஓடிபோய் தண்ணீர் கொண்டு வந்த ரவி கதிரில் முகத்தில் தெளிக்க,  அப்பவும் கண் முளிக்காமல்  கதிர் இருக்க,.

“ரவி ஹாஸ்பெட்டல் போலாம்” என்று சீதா சொல்ல.

“சரி” என்றவன், அவனை தோளில் தூக்கி போட்டு  சீதாவை எழுப்பி விட்டான், பத்மாவதி பித்து பிடித்தது போல் இருக்க, வெங்கட் “நான் பாத்துக்கிறேன், நீ கதிரை ஹாஸ்பெட்டலுக்கு கூட்டிட்டு போங்க” என்று சொல்ல..

சீதாவை அழைத்துக்கொண்டு வேளியே வர.

நாகம்மாள் அழுது கொண்டிருந்தார், “என் குடும்பத்தில் ஏன் தான்  இப்படி நடக்குது” என்று, ரவியின் தோளில் கதிரை பார்த்தவர், “என்னாச்சு  கதிருக்கு” என்று கேட்க.

“கதிருக்கு உடம்பு சரியில்லா, ஹாஸ்பெட்டல் போறோம்”, என்ற சீதாவும் ரவியும் காரில் வேகமாக செல்ல.

பக்கத்தில் இருந்த ஹாஸ்பெட்டலுக்கு  வேகமாக வந்து சேர்ந்தனர் இருவரும், சீதா கதிரை விடவே இல்லை காரிலும்  கதிரை  அணைத்து வைத்திருந்தவள் கதிரிடம் பேசியபடியே வந்தாள்..

டாக்டர் கதிரை  செக் பண்ணி பார்த்து விட்டு , “பயந்து  மயங்கிட்டான் போல, பீவர் வேற இருக்கு, ஒரு ஆன்டிபயாடிக் போட சொல்லுறேன், கண்முளிச்சதும் கூட்டிட்டு போங்க” என்று சொல்ல.

சீதாவுக்கு அப்போது தான் உயிர் வந்தது போல இருந்தது, கதிரை ஹாஸ்பெட்டலில் சேர்த்து, ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டு இருக்க.

சீதா கதிர் பக்கத்தில் சேரில் அமர்ந்திருந்தாள், ரவி கதிரின் தலையை வருடியபடியே அவன் பெட்டின் பக்கத்தில் அமர்ந்திருக்க.

“ரவி…” என்றாள் சீதா.

அவன் என்னவென்று சீதாவை பார்க்க.

“வயிரு வலிக்குது ரவி” என்றவள் பல்லை கடிக்க.

“என்ன சீதா, என்னம்மா பண்ணுது” என்றான்..,

“ரவி கதிரை அவன் தூக்கி போடும் போது வேகமா போய் புடிச்சேனா, வயித்துல அடி பட்ட மாதிரி வலிக்குது” என்று கண்கலங்கியவளை.

“இரு, இரு பயப்பிடாத, ஒன்னும் ஆகாது”, என்றவள்.

நர்ஸ்சை அழைத்து கதிரை பார்த்துக்கோங்க   என்று சொன்னவன், சீதாவை அழைத்துக்கொண்டு லேடி டாக்டரிடம் செல்ல.

அந்த லேடி டாக்டர்  சீதாவை செக் பண்ணி பார்த்து விட்டு, “பேபிஸ்க்கு மூவ்மண்ட் நல்லா இருக்கு பட் வலிக்குதுன்னு சொல்றீங்க, அதனால புல் ஸ்கேன் எடுத்து பார்த்திடுவோம்”, என்று கூறி..

சீதாவுக்கு அனைத்து பிளட் டெஸ்ட்  எடுத்து, ஸ்கேன் ரூம் அழைத்து சென்றனர்.

சீதாவுக்கு வயிறு வலியோட மார்பும் சேர்ந்து வலிக்க ஆரம்பித்து  இருந்தது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!