Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா கல்யாண வைபோகமே 20 3

சீதா பிளட் டெஸ்டுக்கு கொடுத்து விட்டு, ஸ்கேன் எடுக்க செல்ல.

சீதாவை  வேற உடை மாற்றி வர சொல்லி அனுப்பியிருந்தார்கள், அவளுக்கு வயிறு வலியால் உடை கூட மாற்ற முடியவில்லை மெல்ல வலியை தாங்கி அந்த  ப்ளு நிற உடையை மாற்றியவளுக்கு உடையின் பின்னாடி  உள்ள நாட் போட முடியவில்லை, சீதா நர்ஸை அழைக்க, அங்கே நர்ஸ் இல்லை ஸ்கேன் எடுக்கும் ஆள் மட்டுமே இருக்க.



Advertisement

சீதா நர்ஸை அழைக்கும் சத்தம் கேட்ட ஸ்கேன் எடுப்பவர்,.

Advertisement

“உங்க வெய்ப் கூப்பிடுறாங்க” என்று ரவியை அழைக்க.

Advertisement

ரவிக்கு “என்னையா”? என்றவன், தயங்கிய படியே சீதா இருந்து தடுப்பு  அறைக்கு செல்ல.

அவளோ நிற்க முடியாமல் வயிறு வலியால் குனிந்து நின்ற தோற்றத்தை பார்த்தவன், “சீதா” என்று உள்ளே வர.

Advertisement

நர்ஸை வர சொன்னா இவன் வர்ரான், என்று நினைத்தவள்.

“நர்ஸ் இல்லையா ரவி” என்றாள்.

“என்ன சீதா சொல்லு” என்றதும் “பின்னாடி நாட் போடுனும் நர்ஸை வர சொல்லுங்க'” என்றாள்.

 “நாட் மட்டும் தானே” என்றவன் அவனே அவள் முதுகுபுறம் திரும்பி  நாட் போட்டுவிட.

இவன்னா… என்றவள் அவனை முறைத்து பார்க்க.

“உனக்கும், எனக்கும் ஏதாவது ஒலிவு மறைவு இருக்கா என்ன” என்றவன் ஸ்கேன் எடுக்க அழைத்து சென்றான்..

சீதா அவனை முறைத்தவாறு தான் சென்றாள்.

 ஸ்கேன் எடுக்கும் இடத்தில் அந்த ஸ்கேன் எடுக்கும் மெஷின் ஹைட்டாக இருக்க, சீதாவை மெல்ல பிடித்த படியே  தூக்கி விட்டான்.

சீதாவால் ஸ்கேன் எடுக்கும்  அந்த பெட்டில் மல்லாக்க  கூட படுக்க முடியவில்லை, வலியில் சிரம பட்டவளை மெல்ல  அவளை அணைத்தது போல, ரவி  சீதாவை  மெல்ல கட்டிலில் படுக்க வைத்தான்.

சீதாவால் படுத்திருக்க கூட முடியவில்லை இடுப்பு வலிவேற இருக்க.. வலியில் முணங்கிய படியே படுக்க ஸ்கேன் எடுத்து முடித்தனர்.

பின்பு சீதாவை ரவி மெல்ல எழுப்பி கூட்டிட்டு வந்தவன், அவளுக்கு உடை மாற்ற உதவி செய்து அழைத்து வந்தான்.

ஸ்கேன் ரூம்பை விட்டு வெளியே வந்ததும், ரவியின் கையை உதறியவள், “ரொம்ப அட்வாண்ட்டேஜ் எடுத்துக்காத, ரவி என்னால முடியல அதான், நீ எல்பு பண்ணுறதுக்கு விட்டேன், இதையே சாக்கா வச்சு, என்கிட்ட வரதா, நீ எனக்கு யாரோ தான், “…என்றவள்,.

கதிர் இருக்கும் அறைக்கு சென்று அமர்ந்து விட்டாள்.

சீதா தன் கையை உதரிய இடத்திலே அப்படி நின்றான் ரவி,,.

அவனுக்கு  கண்கலங்கி இருந்தது.

சீதாவுக்கு உடை மாற்றும் போதுதான் அவளின் வயிறை பார்த்தான் ரவி.மிக பெரியதாக இருந்தது வயிறு, வயிற்றின் மேலே பல கோடுபோல மார்க் இருந்தது, வயிறு பெரிதாக  மாறுவதால் வந்த மாற்றம் என்று புரிந்து கொண்டான்.

எவ்வளவு அழகாய் இருந்த பெண், இன்று தன் பிள்ளையை சுமந்து கொண்டு  அவள் அழகை இழந்திருக்கிறாள்..

தன்  சினிமா வாழ்க்கையை  விட்டு,  தன் எதிர் கால வாழ்க்கைவிட்டு, நண்பர்களை விட்டு, எங்கேயோ நாடு விட்டு, நாடு சென்று ஒலிந்து வாழ காரணம் என்ன, நான் கேட்ட கேள்வியா,,.. என்னால தான் எல்லாம், நான் அன்று சீதாவை தொட்டது தப்பு, அவள் தன் மேல் அளவு கடந்து பாசம் வைத்திருப்பதை தெரிந்தும், அவளை நான் அனுகியது தப்பு, எல்லாம் முடிந்து அவளை என்ன வேண்டுமென்று கொல்லாமல் கொன்றது மிக பெரிய தப்பு,.

உனக்கு தெரியதா, காசுக்காக தன்னோடு ஒரு நாள் கழிக்கும் பெண்களுக்கும், தன் மேல் ஆசை  மோகம் மட்டும் வைத்து தன்னை நாடி வரும் பெண்களுக்கும்,,  சீதாவுக்கும்   உனக்கு வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாதா,

எவ்வளவு தூய அன்போடு நெறுங்கினாள் சீதா உன்னை, ஆனால் அந்த அன்பு காதல் உன்கிட்ட இருந்தத, உன் தேவைக்கு தானே அவளை நீ அனுபவித்தாய் என்று அவன் மூளை சொல்ல.

இல்லை, இல்லை அவளை நானும் தூய அன்போடு தான் நெறுங்கினேன், சீதாவை எனக்கு அவ்வளவு பிடிக்கும், அவள் அளவிற்கு எந்த பெண்ணையும் நான்  நெசித்தது இல்லை, சீதாவை தான் அப்படி கேட்டு இருக்க கூடாது,.

தப்பு பண்ணிட்டேன் எல்லா பெண்களிடம் கேட்பது போல் அவளிடமும்  என்ன வேண்டும் என்று கேட்டு விட்டேன், அவள் எவ்வளவு  வேதனையோடு என்னை பார்த்து நீ சொல்லுற புரியல ரவி மறுபடியும் சொல்லு என்று கேட்டதும், மீண்டும் என்னவேண்டும் கேட்டதும், எப்படி துடித்தாள், கண்ணீரோடு தன்னை விட்டு சென்ற நாள் கண்முன்னே வர.

 நான்  என் பணத்தை பார்த்து வரும் பெண்களை போல  உன்னையும்  தப்பா நினைத்து விட்டேன் சீதா..

 என்ன செய்வது என் சூழ்நிலை அப்படி, நான் சந்தித்த பெண்கள் அப்படி, என் நண்பன் ஒருவன் அவன் மனைவி செய்த துரோகத்தால் உயிரையே விட்டான், என்னை சுத்தி பல பெண்கள் அப்படி இருப்பதால் உன்னையும் நான் அப்படி தப்பாக நினைத்து விட்டேன்,,.

 பணத்துக்காக  என்னவெல்லாம் செய்யும்  பெண்களை பார்த்தேனே தவிர.

 உன்னை மாதிரி ஒரு நாள் மட்டுமே  என்னோடு  இருந்துவிட்டுவந்து, இப்படி  ஏழு மாதம் எந்த உதவியும் இல்லாமல் குழந்தையை சுமந்து, என்னை வந்து ஏன்டா இப்படி பண்ண, என் குழந்தைக்கு நீதான் அப்பா, எனக்கு வாழ்க்கை குடு என்று கேட்காமல், பணம் குடு என்று என்னை மிரட்டாமல், தன்னை ஒதுக்கி வைத்து என்னுடைய கணவர் நேபாளத்தில் இருக்கிறார் என்று ஊரை நம்ப வைத்து தனியா வாழ்கிறாயே  கண்ணம்மா..

 உனக்கு நான் என்னடி செய்வேன்?.

 நான் வேண்டாமா உனக்கு.

 ஆனால் எனக்கு நீ வேண்டுமே..

 உன்னை தொட்டதிலிருந்து ஒரு பெண்ணையும் என்னால் தொட முடியவில்லை சீதா.

 அதற்கு காரணம் இன்று கூட என்னால்   அறிய முடியவில்லை.

 என் மனம் முழுக்க நீ தான் இருக்க சீதா,, அதை நான் எப்படி சொல்வேன்.. நீ எப்படி  என்னை புரிந்து கொள்வாய் .

 நான் என் அன்பை சொன்னால் என்னை பார்த்து நீ சிரிப்பாய்.

 உன் மேல் வைத்த அன்பை சொல்ல கூட எனக்கு யோகியதை இல்லை..

 எப்படிப்பட்ட துரதிஷ்டசாலி நான்.

 என் மேல் உனக்கு கோபம் இல்லையா சீதா. என்னை அடிக்க தோணலையா சீதா,  சத்தம் போட தோணலையா என் வாழ்க்கையே போச்சு, என்னை நீ இப்படின்னு பண்ணிட்ட என்று என்னிடம் கோபமாக கேட்க மாட்டாயா?..

 உன் அன்பை புரிஞ்சிக்காத  பாவி நான்..

 என்ன செய்து நான் உன்னை அடைவேன் சீதா..

 உன்னை பிடித்திருக்கிறது என்று சொல்லக்கூட என்னால் முடியவில்லையே சீதா.

 பெற்ற பிள்ளையை விட்டுவிட்டு தன் சுகத்திற்காக செல்லும் பெண்களை பார்த்து  இருக்கிறேன்..

 இன்று என் பிள்ளையை  சுமந்து கொண்டு என் அடையாளம் வேண்டாம், பணம் வேண்டாம் என்று வாழும் உன்னை நான் எப்படி விடுவேன் சீதா..

 என் நண்பனின் மகனையே  நான் விடவில்லை.. என் பிள்ளையையும்  உன்னையும்  விட்டு விடுவேனா சீதா.

நீ  என்னை  எவ்வளவு காயப்படுத்தினாலும் உன்னை விட்டு நான் இனி செல்ல மாட்டேன் சீதா என்று முடிவு எடுத்தவன்..

 சீதா இருக்கும் அறை நோக்கி செல்ல போக..

 “சார் ஸ்கேன் ரிப்போர்ட் வந்துருச்சு..

 மேடம்மை  கூட்டிட்டு டாக்டரை பார்க்க வாங்க” இன்று நர்ஸ் கூறிவிட்டு செல்ல ..

 ரவி சீதாவை அழைத்துக் கொண்டு டாக்டரை பார்க்க சென்றான்…

சீதா டாக்டர்  என்ன சொல்வார்களோ  என்று பதட்டமாக  வர.

“வாங்க” என்று இருவரையும் அமர சொன்னார், அந்த லேடி டாக்டர்.

ஸ்கேன் ரிப்போர்டை பார்த்துவிட்டு , “பேபிஸ் நல்லா இருக்காங்க சீதா, ஒரு பிரச்சனை இல்ல” என்றார்.

 “நீங்க நல்லா பாருங்க டாக்டர், எனக்கு  ஸ்டொமக் பெய்ன், செஸ்ட் பெயின், பேக் பெயின் எல்லாம் இருக்கு.. என்னால  உட்கார கூட முடியல, என் பேபிஸ் நல்லா இருக்காங்க தானே,”.

“சீதா உங்க இரண்டு பேபிஸ்சும் நல்லா இருக்காங்க”.. என்றதும்..

சீதாக்கு அப்பாட என்றிருந்தது, இருந்தாலும் “வேற டெஸ்ட் ஏதாவது எடுக்கனுமா?  டாக்டர் சொல்லுங்க அதையும் நான் எடுத்துடுறேன், எனக்கு என் பேபிஸ்  தான் எல்லாம், அவங்களுக்கு ஏதுவும் ஆகா கூடாது, பிலீஸ் டாக்டர்   வேற எந்த டெஸ்ட் இருந்தாலும் சொல்லுங்க அதை நான் எடுத்துடுறேன்” என்று சீதா கூற..

“சீதா ஏன் இவ்வளவு பயம்”.. என்று டாக்டர் கேட்டதும்.

“எனக்குன்னு யாருமில்லா டாக்டர் என் குழந்தைகள் மட்டும் தான் எனக்கு சொந்தம் , அப்பா, அம்மா இல்ல, என் தம்பி மட்டும் தான், சொந்தமுன்னு சொல்லிக்க யாருமில்லை டாக்டர், கடவுள் எனக்கு குடுத்த கிப்ட் இவங்க, அவங்களை  நான் நல்லா பாத்துக்கனும் டாக்டர்” என்றதும்.

“உங்க ஹஸ்பண்ட் பக்கத்துல இருக்கும் போது இப்படி யாருமில்லையின்னு பேசுறீங்க சீதா” என்றதும்..

“இவர் என் ஹஸ்பண்ட்   இல்ல டாக்டர், எனக்கு ஹஸ்பண்டே இல்ல நான் சிங்கில் மதர்”..

என்று சீதா சொன்னதும், யாரோ தன்னை செருப்பால் அடிப்பது போல இருந்தது ரவிதேஸ்சாவுக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!