Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா கல்யாண வைபோகமே 20 4

அவன் ஏற்கனவே இரண்டு குழந்தைகள் என்றதும் ஆடி போயிருந்தவன், சீதா நான் சிங்கில் என்றதும் அவளை ஏக்கமாக பார்க்க.

டாக்டர் சீதாவின் அருகில் வந்து அவளின் கையை பிடித்து,,”பயம் வேண்டாம் சீதா குழந்தைகள் உங்க வயித்துல சூப்பரா வளருறாங்க, நீங்க பயப்படாமா போங்க” என்று சொன்னவர்.



Advertisement

“வயிறுல பெய்ன் சொன்னீங்க மே பி, ஏதாவது வெய்ட் உங்கமேல விழுந்ததா” என்று கேட்க,..

Advertisement

“ஆமாம்” என்று தலையாட்ட.

Advertisement

பயப்படுமாதிரி ஒன்னுமில்லை, நான் கொடுத்த மெடிசன் போட்டு, கொஞ்சம்  ரெஸ்ட் எடுங்க,, சரியாபோகும், ரொம்ப வலி தாங்க முடியல அப்படியின்னா நாளை ஹாஸ்பிடல் வாங்க பார்க்கலாம்” என்று கூற..

“தாங்யூ டாக்டர்”.. என்ற சீதா வெளியில் வர…

Advertisement

 சீதாவின் பின்னாடி வந்த ரவி.

“உன் கிட்ட கொஞ்சம் பேசணும் சீதா”..

 “கதிர் விஷயமா இருந்தா மட்டும் பேசுங்க,  என்னோட பர்சனல் லைப்ப  பத்தி கேக்குறதுக்கு  உங்களுக்கு எந்த  உரிமை  இல்லை “…

 “சீதா” என்றான்  அவளின்  கையைபிடித்து, “என்னை தொடறதுக்கு  கூட  நான் உங்களை அனுமதிக்கமாட்டேன், கையை எடுங்க” என்றாள்.

 “சீதா கோவப்படாத நான் சொல்றது பொறுமையா கேளுமா”..

 “உங்களுக்கும் எனக்கும் பேசுறதுக்கு ஒன்னும் இல்ல கதிர் விஷயமா இருந்தா மட்டும் பேசுங்க.  இல்லனா பேச வேண்டாம்” என்றவள்.  கதிர் இருக்கும் அறைக்கு  சென்று அமர்ந்து கொள்ள….

 சிறிது நேரம் யோசித்த சீதா  “எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா”?  என்று  கேட்க..

,”கேளு சீதா” என்றான் ரவி ..

 “கதிரை என்கிட்ட கொடுக்குறீங்களா நான் அவனை பார்த்துக்கொள்கிறேன்” என்று சீதா கேட்க..

 “நான் கேட்டது பதில் சொல்லு சீதா  கதிர் யாரு உனக்கு,, அவனுக்கும் உனக்கும்  என்ன உறவு முறை, என்ன சம்பந்தம், அவனை நீ எப்படி பார்த்துப்பா” என்றான்.

“உங்களை  விட நான் நல்லா பாத்துப்பேன், என்கிட்ட கூடுங்க  கதிரை” என்று சீதா  கேட்டதும்….

“அது முடியாது”, என்றான்.

“ஏன், ஏன் முடியாது, நான் இன்னைக்கு கதிரை  ஓடி போய் பிடிக்கலன்னா, கதிர் கதிர் ”  என்றவளுக்கு இன்று நடந்த விசயத்தில்  இருந்து மீல முடியாமல் அழுதவளை.

“இனி இந்த மாதிரி நடக்காம நான் பாத்துக்குறேன்” என்றான்..

“அதான் எல்லாம் நடந்து போச்சே, ஆமாம் அந்த ராட்சசன் என்ன ஆனான்”?.

யாரை சொல்லுகிறாள் என்று யோசித்தவன், தன் அண்ணனை என்று புரிந்து கொண்டவன்.

“அவன் கைகாலை ஒடச்சி போட்டாச்சு, அவன் எந்த ஹாஸ்பிடலில் வலியில கத்தியிட்டு இருக்கானோ”..

 “அப்போ அவன் சாகலை அப்போ திரும்பி வருவான், திரும்பி வந்து மறுபடியும் கதிரை  என்ன வேணாலும் செய்வான், “.

 “சீதா அப்படி எல்லாம் நடக்காது சீதா”.

 “அதான் எல்லாம்  நடந்து முடிந்ததே,  நான் மட்டும் ஒரு நிமிடம் செல்லாமல் இருந்தால் கதிரை  உயிரோடு இருந்திருக்க மாட்டான்” என்று சொன்னவளுக்கு உதடு  துடிக்க…

 “சரி நான் பாத்துக்கிறேன்”..என்றான் ரவி.

 “நீ எப்படி பார்த்திருப்பீங்க உங்களுக்கு நடிகை கூட சுத்தவே டைம்  சரியா இருக்கும்.. நீங்க எப்படி கதிரை பார்த்துப்பீங்க”? என்றதும்

 அவளைப் பார்த்து முறைத்தவன்

 “இனிமே இப்படி நடக்காது சீதா”

 “நான் உங்களை எல்லாம் நம்ப முடியாது கதிரை நான் நேபாளத்துக்கு  தூக்கிட்டு  போறேன்”, என்றாள்.

 “கதிரை மட்டும் இல்ல வேற யாருமே இனி நேபாளுக்கு போகுறது கஷ்டம்” என்றவன்.

 தன் போனை காட்ட.. அதிலிருந்து வீடியோவை பார்த்த சீதா அதிர்ந்து போனாள்.

 அதில் நேபாளத்தில் வெள்ளம் வந்து பல ஊர்கள் அடித்துச் செல்லப்பட்டதை பார்த்தவள் அதிர்ந்து போய் தன் வீடு பக்கம் இருக்கும் தன் உறவினர்களுக்கு ஏதாவது ஆகிவிட்டதோ என்று பயந்தவள்  தன் போனை  தேட.. அவள் போன் அவளிடத்தில் இல்லை..

 ரவியிடமிருந்து  போனை வாங்கியவள்   அவள் தங்கியிருந்த  உறவினர்ளுக்கு  போனை போட.

  அவர்கள் போனை எடுத்தவுடனே “என்ன ஆயிற்று” என்று சீதா கேட்க..

 அவர்கள் இருக்கும் இடத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தள்ளி தான் அந்த விபத்து நடந்திருக்கிறது அதனால் அவர்களுக்கும் ஒன்றும் ஆகவில்லை என்று சொல்ல நிம்மதியானாள் சீதா..

 “இங்கே இருக்கிற பல ஊர்கள்  சேற்றில் மூழ்கி சேதாரமாகி இருக்க. இங்கே எல்லாம் சரியாக பல மாதங்கள் ஆகும் சீதா,, இங்கே இப்போது யாராலும் வர முடியாது முற்றிலும் பல பாலங்கள்  இடிந்து அடித்து சொல்ல பட்டிருக்கிறது சீதா, நீ இனிமேல் இங்கே வர வேண்டாம்” என்று நேபாள உறவினர்கள் கூறி விட..

சீதா நேபாளத்தில் நடந்த அந்த கொடுர , வெள்ளத்தை பார்த்தவள், இறைவா இயற்கை இப்படி பல உயிர்களை  எடுத்து கொண்டதே, எத்தனை பேர் உயிர், வாழ்க்கை எல்லாம் போயிற்றே என்றவள் வருத்தமாக அமர்ந்திருக்க.

“சீதா, சீதா ஆண்ட்டி” என்று கதிர் கண்முளித்ததும்   சீதாவை அழைக்க..

கதிரை பார்த்தவள், “லட்டு கண்ணா” என்று வாறி அணைத்துக்கொண்டாள்..

ரவி இவர்கள் இருவரையும் பார்த்திருக்க..

சீதா கதிரை அணைத்து முத்தமிட்டவள்…

 “இப்போ ஓகே வாடா உனக்கு உடம்பு பரவாயில்லையா” என்று அவனை தொட்டு தடவி பார்க்க..

 “எனக்கு ஒன்னும் இல்ல ஆன்ட்டி நீங்க தான் என்னை கேச்  புடிச்சிட்டீங்களே” என்று அவளை   பார்த்து  சிரிக்க.

 அந்த சிரிக்கும்  குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டவள்.

 ரவியை காண்பிக்க “நானா” என்று தாவிக்கொண்டான் ரவியிடம்..

 தன் மகனை ஆசை தீர கொஞ்சியவன்..

 “வீட்டுக்கு போலாமாடா” என்று கேட்க..

“ம்ம்ம்ம்” என்று  தலையாட்டியவன்..

 “நானா அனாதையின்ன என்ன நானா”? என்று கதிர்  கேட்க…

 “அனாதை அப்படியின்ன  அப்பாக்கு ஒன்னு தெரியலையே டா,, உனக்கு யார் சொன்னா “?..

 “பெரியப்பா. பெரியப்பா சொல்லிட்டு என்னை தூக்கி போட்டுட்டாரு என்று அவன் சொல்ல..

 மகனை கட்டி அணைத்தவன் “அப்படி எல்லாம் இனி பேசக்கூடாது கதிர் அப்பா உனக்கு இருக்கேன்”  என்று சொல்ல..

 சீதா வாய் திருந்திருந்தாள்  “நானும் கதிரும் சென்னை போறோம்” என்று..

 “சீதா அப்புறம் பேசிக்கலாம் இப்ப வீட்டுக்கு போலாம்” என்று ரவி கூற.

 “இல்ல நீ எனக்கு கதிரை  கொடுத்தே ஆகணும் நானும், கதிரும்  சென்னைக்கு போறோம்” என்றாள்.

 ” அதுக்கு நான் சம்மதித்தாலும் எங்க அம்மா பத்மா சம்பாதிக்க மாட்டாங்க” என்றான்..

 “பத்மாவதி அம்மா கிட்ட நான் பேசுகிறேன் கதிர் இல்லாமல் நான் சென்னை போக மாட்டேன்” என்றாள்..

 “சீதா உனக்கு இப்போ உடம்பு சரியில்லை இப்படியே  டிராவல் பண்ண முடியாது எங்க வீட்டுக்கு வா கொஞ்சம் ரெஸ்ட் எடு கும்பாபிஷேகம் முடியட்டும், அதுக்கு அப்புறம்  எல்லாம் பேசி ஒரு முடிவு பண்ணலாம்” என்று சொல்ல..

 “நீ அப்புறமா என்னை ஏமாத்திட மாட்டியே” என்றாள்..

 “அம்மா தாயே, உன்னை ஏமாத்த என்னால முடியுமா வீட்டுக்கு வாம்மா”

 என்று இருவரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான்..

 பத்மாவதி திண்ணையிலே  அமர்ந்திருந்தார்..

நாகம்மாள் மருமகளிடம் புலம்பியபடியே பேசிக்கொண்டிருக்க.

ரவியின் கார் வீட்டில் நுழைந்ததும்,

பத்மாவதி ஓடி வந்து பேரனை தூக்கி கொஞ்ச..

 சீதா ரவியின்  கைபிடித்து மெதுவாக நடந்து வந்தாள்..

நாகம்மாளுக்கு ரவியையும், சீதாவையும் பார்த்து இவர்கள் இன்று சந்தித்தது போல இல்லையே.

ரவியை பற்றி நன்கு தெரிந்தவருக்கு, சீதா  ரவிக்குள் ஏதோ இருக்கிறது என்று யோசித்தார்.

பத்மா பேரனை தூக்கி கொஞ்சியபடியே வர.

வெங்கட் சத்தம் கேட்டு  வெளியே வந்தவர், சீதாவை பார்த்து நன்றி சொல்ல..

“பரவாயில்ல மாமா” என்றவள் நிற்க முடியாமல் கஷ்டபடுவதை பார்த்த ரவி..

“வா சீதா” என்ற ரவி அவளை தூக்கிக்கொண்டு அவன் அறைக்கு செல்ல…

மொத்த குடும்பமும் ரவி சீதாவை தூக்கி சென்றதை ஆவென பார்த்திருக்க.

“இப்போ எதுக்கு என்ன தூக்கிட்டு  வந்த”..

என்றாள் சீதா..

“உனக்குத்தான் நடக்க முடியலை தானே அதான்  தூக்கி வந்தேன்” என்றான்..

“என் ரூம்ல கொண்டு போய் விடு ரவி” என்றாள் சீதா.

“இதுவும் உன் ரூம் தான் கம்முன்னு இரு”, என்றவன்..

வெளியே வர, ரவியின் குடும்பம் அவனை ஆவென்று பார்க்க..

“என்ன”? என்றவன், “சீதாவுக்கு சாப்பிட கொடுங்க” என்றவன் கதிரை தூக்கிய படியே  கெஸ்ட் ரூம் சென்றான்.

நாகம்மாள் மருமகளை பார்த்து,

“உன் மகன் பண்ணுறது சரியில்லைடி, அடுத்தவன் பொண்டாட்டியை இப்படி தூக்குறது தப்பு, என்ன தான் அத்தை பொண்ணாக  இருந்தாலும்” என்று நாகம்மாள் புலம்ப..

“அத்தை அப்படியெல்லாம் பேசாதீங்க, சீதாவுக்கு நடக்க முடியல தூக்கிட்டு போயிருக்கான்”, என்று மகனை விட்டு கொடுக்காமல்  பத்மா பேச…

“என்னவோ உன் மகன்  நடந்துக்கிறது சரியில்லை  நான் அவ்வளவு தான் சொல்வேன்” என்றார் நாகம்மாள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!