அறம் காக்கும் அன்பு 13
அத்தியாயம் 13
திருமணம் முடிந்து அனைவரும் மறுபடியும் இவர்கள் வீட்டிற்கு வந்தனர். சுந்தர்ராஜன் ஒரு வாரம் இங்கே இருப்பதாக முன்னமே கூறிவிடவே மற்ற மூவரும் அன்று இரவு ட்ரெயினுக்கு புறப்படுவதாக இருந்தது.
Advertisement
“நீங்களும் கொஞ்ச நாள் இருங்களேன் பாட்டி” என்றான் வல்லபன்.
“நீ ஒருத்தன் தான்டா, இந்த வீட்ல என்னை இருக்க சொன்னது”, என்று அவன் கன்னத்தை வழித்து முத்தம் கொஞ்சினார் பரிமளா.
Advertisement
Advertisement
“இந்தாங்க பாட்டி அம்மா உங்களுக்கு கொடுக்க சொன்னாங்க” என்று ஒரு பையை கொண்டு வந்து கொடுத்தாள் வீர்யா.
“என்ன இது?”
Advertisement
“உங்களுக்கு தட்டடை ரொம்ப பிடிக்கும்னு அத்தை சொல்லி இருந்தாங்க. அதான் அம்மா செஞ்சு கொடுத்து விட்டாங்க”
“தேங்க்ஸ் ம்மா“
“நீங்களும் தாத்தாவோட எங்ககூட கொஞ்ச நாள் இருங்க பாட்டி” என்றாள் வராஹி இப்பொழுது.
“நான் போயிட்டு அடுத்த மாசம் உங்க அத்தைக்கு எக்ஸாம் சமயத்துல வரேன் வரா”
அதை கேட்டதும் மணிமேகலை முகத்தில் புன்னகை விரிந்தது.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் ஆட்டோவில் சாம்பவியின் அப்பா அம்மா இருவரும் வந்து இறங்கினார்கள்.
“வாங்க வாங்க மாமா” என்று ஓடி சென்று அவர்களை வரவேற்றான் ஹரி.
“என்ன வரா , உங்க சித்தப்பா முயலும் ஆமையும் கதையில வர முயல் மாதிரியா? இவ்வளவு நேரம் தூங்கிட்டு, இப்ப ஆட்டோ சத்தம் கேட்டதும் பாய்ந்து ஓடுறாங்க” என்றாள் வீர்யா.
“சும்மான்னு இரு வீரு” என்றாள் வராஹி அவசரமாக.
ஆனாலும் வீர்யா கூறியது அனைவருக்கும் கேட்கவே செய்தது.
பின் பெரியவர்கள் அனைவரும் உள்ளே செல்ல, பிள்ளைகள் அங்கே வாசலிலே நின்று விளையாடினார்கள்.
சம்பிரதாய நல விசாரிப்புகளுக்கு பின், “சம்பந்தி நான் நேரடியா விஷயத்துக்கு வர்றேன்” என்று ஆரம்பித்தார் சடகோபன்.
“வாங்க வாங்க..” என்றார் சுந்தர்ராஜன் பதிலுக்கு.
அவர் உர்ரென்று “எங்க அண்ணன் பையன் விஷால் இருக்கான் இல்ல? நீங்க கூட நேத்து பார்த்தீங்களே?” என்று ஆரம்பித்தார்.
“ஆமா பார்த்தேன்.. அவருக்கு என்ன?”
“அவருக்கு போன வருஷம் தான் விவாகரத்து ஆச்சு..”
“ஓ “
“அவருக்கு ரெண்டு பசங்க.. பசங்களை இவர் பொறுப்புல தான் கோர்ட்ல கொடுத்திருக்காங்க “
“ஓ “
“நான் நம்ம மணி பொண்ணு பத்தி எங்க அண்ணன் கிட்ட சொல்லி வருத்தப்பட்டேன்”
“என் பொண்ணை பத்தி நீங்க எதுக்கு உங்க அண்ணன் கிட்ட சொல்லி வருத்தப்பட்டீங்க? யாரும் பார்த்து வருத்தப்படற இடத்துல என் பொண்ணு இல்ல”
“நான் மணிமேகலையை என் பொண்ணு மாதிரி தான் நினைக்கிறேன்”
“ஓ “
இவர்கள் இருவரும் பேசினால், ஒன்றும் வேளைக்கு ஆகாது என்று புரிந்து, ராஜம் தான், “இல்ல அண்ணா, விஷால் நிஜமாலுமே ரொம்ப நல்ல பையன். அவன் முதல் சம்சாரத்து மேல தான் தப்பு. ரொம்ப கஷ்டப்பட்டுட்டான். அவனுக்கு நம்ம மணியை கல்யாணம் செஞ்சுக்க விருப்பம்னு கேட்கிறாங்க” என்று விஷயத்தை கூறினார்.
பரிமளாவிற்கு கோவத்தில் முகம் எல்லாம் சிவந்து விட்டது.
“என்ன பேச்சு பேசறீங்க.. அந்த பையனுக்கு அம்பது வயசு இருக்கும்.. அவனுக்கு போய் அதுவும் இரண்டாம் தாரமா எங்க பொண்ணை கேட்குறீங்க?” என்று பொங்கி விட்டார்.
“அம்பது எல்லாம் இல்ல.. நாற்பத்தி ஆறு வயசு தான் ம்மா ஆகுது” என்றார் சடகோபன்.
மணிமேகலைக்கு ஒருமாதிரியாக இருந்தது.. அவருக்கு இந்த பேச்சு ரசிக்கவில்லை.
அவர் கொஞ்சம் சங்கடமாக அமர்ந்திருந்தார்.
“இல்ல சம்பந்தி இது சரி வராது” என்றார் சுந்தர்ராஜன்.
“ஏன் ப்பா உடனே வேண்டாம்னு சொல்றீங்க.. நல்ல பெரிய இடம் ப்பா.. நிலம் வீடுன்னு எக்கச்சக்க சொத்து இருக்கு. அதுவுமில்லாமல் அந்த பையனும் நல்ல டைப் தான். நானே பேசி பார்த்தேன். மாமா நேத்தே என் கிட்ட சொன்னாங்க. நான் தான் உங்க கிட்ட பேச சொன்னேன்” என்றான் ஹரி.
“எப்பல இருந்து டா உனக்கு இவ்வளவு பாசம் வந்துச்சு உங்க அக்கா மேலே?” என்றார் சுந்தர்ராஜன் பல்லை கடித்துக்கொண்டு.
“எல்லாரும் என்ன தப்பாவே நினைக்கறீங்க.. என்னால தான் அக்கா வாழ்க்கை இப்படி ஆச்சுன்னு எனக்கும் ஒரு குற்ற உணர்ச்சி.. இப்ப அவங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சா, அதுவும் என் மூலமா அமைஞ்சா எனக்கு அந்த குற்ற உணர்ச்சி இருக்காது இல்ல?”
“மாப்பிள்ளை சொல்றது எவ்வளவு சரி சம்பந்தி.. நீங்களே யோசிச்சு பாருங்க .. நல்ல இடம்.. நம்ம பொண்ணை பத்தி தெரிஞ்சும் ஏத்துக்கிறாங்க?”
“யாரும் போனா போகுதுன்னு வாழ்க்கை கொடுக்கிற நிலைமையில் என் பொண்ணு இல்லை”
நிலைமை கை மீறி போவது போல தெரியவே, ராஜத்திற்கு பதற்றமாக போனது. அவர் மகளை பயத்துடன் பார்க்க,
“அவங்களுக்கு விருப்பம் இல்லைனு சொல்றாங்க தானே. ஏன் கட்டாய படுத்துறீங்க ? விடுங்க அப்பா” என்றாள் சாம்பவி.
“நீ எதுக்கு இப்ப இதுல தலையிடற?” என்று மகளை கடுமையாக முறைத்தார் சடகோபன்.
“எங்க வீட்ல பேச என் மருமகளுக்கு முழு சுதந்திரம் இருக்கு. அவ கருத்தை அவ சொல்றா? நீங்க எதுக்கு அவளை அதட்டுறீங்க?” என்றார் சுந்தர்ராஜன்.
“சின்ன பொண்ணுக்கு பெரியவங்க பேச்சு புரியாதுல சம்பந்தி?”
“உங்க மாப்பிள்ளைக்கு மட்டும் எல்லாம் புரியுமோ?”
சடகோபன் என்ன பதில் சொல்வது என்று தடுமாறினார்.
வழக்கம் போல ராஜம் பரவசமாக சுந்தர்ராஜனை பார்க்க ஆரம்பித்தார்.
அந்த கலவரத்திலும் ராஜத்தின் பார்வையை பார்த்து பரிமளா தலையில் அடித்துக்கொண்டார்.
சில நிமிடங்கள் அமைதிக்கு பிறகு,
“அண்ணன் பிள்ளைங்களையே பொறுப்பா பார்த்துக்கிட்டா நாளைக்கு அவர் பிள்ளைகளையும் நல்லா பார்த்துக்கும்னு தான் விஷால் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதே. கொஞ்சம் யோசிங்க சம்பந்தி. இதுனால எல்லாருக்கும் லாபம் தான்”
“லாப நஷ்டம் பார்க்க என் பொண்ணு என்ன பொருளா?”
“நீங்க குதர்க்கமா பேசுறீங்க?” என்றார் சற்றே எரிச்சலாக சடகோபன்.
“என் அண்ணன் பசங்களை நான் பார்த்துக்கலை சார், அவங்க தான் என்னை பார்த்துக்கிறாங்க.. சொல்லப்போனா நாங்க மூனுபேரும் சேர்ந்து புதுசா வாழ ஆரம்பிச்சிருக்கோம். உங்களுக்கு எல்லாம் சொன்னா புரியது. நீங்க சொல்றது சரி வராது விட்டுடுங்க” என்றார் மணிமேகலை திடமான குரலில்.
“எனக்கு புரியது ம்மா. நீ இந்த பிள்ளைங்க மேலே ரொம்ப பாசம் வச்சுட்ட.. திரும்ப இந்த பிள்ளைகளை தனியா விட்டுட்டு எப்படி கல்யாணம் செஞ்சுக்கிறதுன்னு யோசிக்கிற, அப்படி தானே? அதுக்கும் ஒரு வழி இருக்கு. இந்த பிள்ளைகளை நல்ல போர்டிங் ஸ்கூல்ல சேர்க்க ஏற்பாடு செய்யலாம். செலவு கூட விஷாலே பார்த்திக்கிறதா சொன்னாரு” என்றார் பெருமிதமாக.
வெளியே விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகளுக்கும் உள்ளே பேசுவது கேட்டது. ‘திரும்ப முதல்ல இருந்தா?’ என்று வராஹியும் வல்லபனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“இங்க பாருங்க சார்.. எங்க பசங்களை எங்க படிக்க வைக்கிறதுன்னு நாங்க பார்த்துக்கிறோம். எனக்கு இப்ப கல்யாணத்துல விருப்பம் இல்லை..” என்றார் மணிமேகலை காட்டமாக.
அவர் பரிமளாவையும் சுந்தர்ராஜனையும் பார்க்க, “எங்க பொண்ணு விருப்பம் தான்” என்று முடித்துக்கொண்டனர்.
அவர் அடுத்து ஹரியை பார்க்க,
“எதுக்கு இப்ப உடனே வேண்டாம்னு முடிவு செய்ற அக்கா? கொஞ்சம் யோசிச்சு சொல்லு” என்றான் மணிமேகலையிடம்.
“நான் இப்ப தான் விட்ட படிப்பை ஆரம்பிச்சிருக்கேன். இப்பொழுதைக்கு என் கவனம் எல்லாம் படிப்பிலே தான்..” என்றார் மணிமேகலை ஹரியை பார்க்காமல் பொதுவாக.
“சும்மா காமெடி பண்ணாத அக்கா.. என்ன படிப்புன்னு வெளிய சொல்ல முடியுமா? அரை கிழவி ஆகி பிளஸ் டூ பரீட்சை எழுத போறேன்னு சொல்லவே கேவலமா இருக்கு. அதை காரணம் சொல்லி கல்யாணம் வேணாம்னு சொல்றீயே?” என்றான் நக்கலாக.
அவன் பெரிதாக ஜோக் சொன்னதை போல சடகோபனும் சிரிக்க ஆரம்பித்தார்.. பிள்ளைகளும் வாசலில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.
“பளார்..” என்று ஒரு சத்தம்..
தன் முழு பலத்தையும் ஒன்று திரட்டி, ஓங்கி ஒன்று விட்டார் மணிமேகலை. ஹரி கன்னத்தை பிடித்து கொண்டு ஸ்தம்பித்து நின்று விட்டான்.
ஹரியின் சிவந்த கன்னம் மணிமேகலையிலின் அறையில் உடனே புசுபுசுவென வீங்க ஆரம்பித்து.
ஹரிக்கு நடந்ததை நம்பவே முடியவில்லை..
“அக்..” என்று தான் ஆரம்பித்தான்.
மறுபடியும் பளார் என்று விட்டார் ஒரு அறை. வலியில் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்து.
“மூச்.. ஒரு வார்த்தை இனி பேசினா அப்புறம் அவ்வளவு தான்..”
யாரும் பேசவில்லை.. பின் ட்ராப் சைலென்ஸ்..
ஹரி சிறுபிள்ளையாக அக்காவை பார்த்து நிற்க,
“சரியா சொன்ன ஹரி.. ஆனா பதினேழு வயசுல இந்த அறையை உனக்கு கொடுத்திருந்தா இப்ப அரை கிழவி ஆனப்புறம் பரீட்சை எழுதுற நிலைமை எனக்கு வந்திருக்காது”
அடுத்து ஐந்து நிமிடத்தில் ராஜமும் சடகோபனும் சத்தமே இல்லாமல் கிளம்பி விட்டார்கள்.
“உனக்கு எப்ப எல்லாம் குற்ற உணர்ச்சியா இருக்கோ அப்ப சொல்லு.. இப்படி ஒன்னு தர்றேன். அதுல உன் குற்றஉணர்ச்சி கொஞ்சம் குறையும். இனி என் வாழ்க்கையை பத்தி நீ எதாவது செய்ய நினைச்சா அவ்வளவு தான்” என்று கடுமையாக கூறினார் மணிமேகலை.
அதன் பிறகு கிளம்பும் வரை யாரும் எதுவும் பேசவில்லை. அமைதியாகவே ஊருக்கு புறப்பட்டனர் ஹரி சாம்பவி பரிமளா மூவரும்.
————–
அடுத்து வந்த நாட்கள் எப்பொழுதையும் போல சீராக சென்றது. பத்மா அம்மாவின் வைத்தியம் ஒருபக்கம், மணிமேகலையின் படிப்பு ஒருபக்கம், பிள்ளைளுக்கும் படிப்பு விளையாட்டு என்று பரப்பரப்பாக சென்றது நாட்கள்.
வந்தியத்தேவன் எப்பொழுதும் டீ கடைக்கு எல்லாம் செல்ல மாட்டார். அன்று காலையில் பத்மா அம்மா தூங்கிக்கொண்டு இருக்கவே அவருக்கும் தேநீர் தயாரிக்க கொஞ்சம் சோம்பலாக இருந்தது. சரி என்று அவர்கள் ஏரியாவில் இருந்து டீ கடைக்கு சென்றார்.
“வாங்க குட்டி மிலிட்டரி சார்” என்று உற்சாகமாக வரவேற்றார். என்னது குட்டி மிலிட்டிரியா என்று யோசனையோடு டீயை குடித்தார்.
“நீங்களும் பெரிய மிலிட்டரி சாரும் வந்ததும் நம்ம ஏரியா பக்கம் தப்பு பண்றவங்க யாரும் பயந்துட்டே வர்றது இல்லை சார்” என்றார் அவர் மீண்டும்.
“அதோ பெரிய மிலிட்டரி சாரும் வந்துட்டாங்களே..” என்றார் அங்கு வந்த சுந்தர்ராஜனை பார்த்து.
“வாங்க பெரிய மிலிட்டரி சார்” என்று மிகவும் உற்சகமாக வரவேற்றார்,
‘போச்சு..போச்சு.. ஒரிஜினல் மிலிட்டரி காரன் முன்னாடி இப்படி கூப்பிட்டு நம்மளை மாட்டி விடாம ஓய மாட்டான் போலயே..’ என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டு, “நான் கடைக்கு பால் வாங்க வந்தேன், அப்புறம் வர்றேன்” என்று ஓடியே விட்டார் மனிதர்.
“அம்மா குட்டி மிலிட்டரி சார்ன்னு கூப்பிட்டு கடுப்பேத்தறாங்க எல்லாரும்” என்று கூறிக்கொண்டே வீட்டுக்கு வந்தார் வந்தியத்தேவன்.
“ஏன்டா? அதுவும் ஒரு தினுசா நல்லா தான் இருக்கு”
“நம்ம வராஹியோட தாத்தாவும் ஆர்மில இருந்தவங்களா? எனக்கு தெரியலையே? நீங்க கூட சொல்லவே இல்ல?”
“மிலிட்டரியா? நீ வேற தேவ்.. அவர் எல்லாம் மிலிட்டரி ஹோட்டல்ல போய் சாப்பிட்டு வேணா வருவாரு.. அது நம்ம எதிர்த்த வீட்டு வாண்டும் அவ கூட சுத்திட்டு இருப்பானே அவ அசிஸ்டென்ட் அந்த பையனும் சேர்ந்து பார்த்த வேலை..” என்று முன்கதை சுருக்கத்தை கூறினார்.
“அட பாவிங்களா? எப்படி தான் அவங்க வீட்ல சமாளிக்கிறாங்களோ” என்றார் அவர் சிரித்து கொண்டே.
“அது வராஹி மேலே அவ்வளவு நட்பு அந்த பொண்ணுக்கு. நல்ல பொண்ணு டா”
“அப்படியே உங்களை மாதிரி இருக்கா”
———————-
சொன்னது போலவே மணிமேகலையின் பரீட்சையின் போது பரிமளா வந்துவிட்டார். அவர் வீட்டை பார்த்துக்கொள்ள மணிமேகலை முழு கவனத்தையும் படிப்பில் செலுத்தினார்.
பரீட்சைக்கு வந்தியத்தேவன் “நான் கூட்டிட்டு போறேன், எங்க ஆபிஸ் பக்கத்துல தான் நீங்க சொல்ற எக்ஸாம் சென்டர்” என்று கூறி அவரே மணிமேகலையை அழைத்து சென்றார்.
முதல் நாள் பரீட்சை அன்று காலையில் அனைவரும் வாழ்த்து கூற மணிமேகலைக்கு சங்கோஜமாக போய் விட்டது.
சங்கோஜத்துடன் காரில் ஏறி அமர்ந்துகொண்டார். பொதுவான பேச்சுகளோடு அவரை இலகுவாக்கினார் வந்தியத்தேன். எக்ஸாம் சென்டரில் அவரை இறக்கிவிட்டு,
“ஆல் தி பெஸ்ட் மேகா..” என்று ஒரு பேனாவை கொடுத்தார் வந்தியத்தேவன்.
“தேங்க்ஸ்..” என்று முகம் மலர கூறி வாங்கி கொண்டார்.
“நானே மதியம் வந்து பிக் பண்ணி வீட்ல விட்டுடறேன்”
“ஓகே..” என்று உடனே கூறி உள்ளே சென்றுவிட்டார். ஏன் எதற்கு என்று எல்லாம் கேட்கவுமில்லை யோசிக்கவுமில்லை. இருவருக்கும் இடையில் அழகான நட்பு ஏற்பட்டிருந்தது.
சொன்னதை போலவே மதியம் வந்து அழைத்து சென்றார்.
“எக்ஸாம் எப்படி செஞ்சீங்க?”
“நல்லாவே எழுதி இருக்கேன்”
“அடுத்து எக்ஸாம் எப்ப?”
“மூனு நாள் லீவ் இருக்கு..”
பேசிக்கொண்டே இருவரும் வீட்டுக்கு வந்தனர். இவர்கள் இருவரும் சேர்ந்தே வருவதை யாரும் தப்பாக எல்லாம் பார்க்க வில்லை.
ஆனால் பத்தும்மாக்கு தான் மூக்கில் வேர்க்க ஆரம்பித்து.
மாடிக்கு வந்த மகனிடம், “என்ன தேவ் இந்த நேரத்துல வீட்டுக்கு வந்திருக்க?”
“உனக்கு உடம்பு எப்படி இருக்குன்னு பார்த்துட்டு போலாம்னு வந்தேன்”
“ஓ சரி சரி.. உனக்கு என் மேல தான் எம்புட்டு பாசம்?” என்றார் நாடக பாணியில்.
“சாப்பிடுவோமா ம்மா?”
“டேய்.. காலையிலே என் கையால செஞ்சு கொடுத்தனுப்பின லன்ச் எங்க?
“லன்ச் பாக்ஸ் ஆஃபிஸ்ல மறந்து வச்சிட்டு வந்துட்டேன்”
“வயசானா ஞாபக மறதி வர்றது சகஜம் தானே”
“யாருக்கு வயசாகிடுச்சு.. உங்களை போய் பாசமா பார்க்க வந்தேன் பாருங்க என்ன சொல்லணும்”
“என்னன்னு சொல்லணும்?”
“நான் போய் அங்கேயே சாப்பிட்டுக்கிறேன்..”
“இரு இரு வந்தது வந்துட்ட ஒரு கிளாஸ் மோர் குடிச்சிட்டு கிளம்பு”
“சரி சரி..”
“அவரது யூகம் மட்டும் சரியாக இருந்தால் அவரை விட சந்தோசப்பட போவது யாருமில்லை.. ஏழுமலையானே.. நான் நினைச்சது நடந்தா கீழ் திருப்பதியில் இருந்து நடந்து உன்னை வந்துபார்க்கிறேன் அப்பா.. நல்லதே நடக்கணும்” என்று அப்பொழுதே திருப்பதி வெங்கடாச்சலபதிக்கு ஒரு அப்ளிகேஷனை போட்டு வைத்தார்.
“இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா இந்த அம்மா நம்மளை ஒரு வழி ஆக்கிடுவாங்க” என்று நினைத்துக்கொண்டு,
“நான் கிளம்பறேன் ம்மா” என்று ஓடியே விட்டார்.
