Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

93. Anonymous - முள் மீது தூங்கினேனே

முள் மீது தூங்கினேனே 30 3

அவ்வளவு தான் அதற்காகவே காத்திருந்தார்ப்போல, “ராஜி என்ன நடக்குது இங்க. கமலியா இது.. இப்படி வந்து நிக்கிறா! சும்மாவே கிரி கமலிக்கு அப்படி கொடி பிடிப்பான். இனி.. இனி.. நினைச்சுக்கூட பார்க்க முடியல ராஜி” வசந்தாவின் பேச்சிலேயே தெரிந்தது பதற்றம்.

‘இந்தா ஆரம்பிச்சுட்டங்கல்ல’ உஃப் என வாயை குவித்து காற்றை வெளியே தள்ளினான் செந்தில்.

“அழகான பொண்ணை முடிச்சு வச்சா தனியா பிரிச்சு விட்ருவான்னு தானடி, நீ இவளை தேடி புடிச்சு கிரிக்கு முடிச்சு வச்ச. ஆனால் இப்போ இவ இருக்குறதை பார்த்தா..” என்ன சொல்ல வந்தாரோ,

“ம்மா..” என ராஜி சத்தம் போட்டதில் சொல்லாமலேயே விட்டார். ஆனாலும் தொடர்ந்தது பேச்சுகளும் ஏச்சுக்களும், “முன்னையாவது இவள் அசிங்கமா இருந்தா, நமக்கு வேலையே வைக்காமல் கிரியே தள்ளி போயிடுவான். ஆனால் இப்போ எனக்கு நம்பிக்கையே போச்சுடி, ஒரு நாள் இல்லை ஒரு நாள் கண்டிப்பா என்னையே என் வீட்டில் இருந்து பத்தி விட்ருவா போல” வசந்தா புலம்ப புலம்ப,



Advertisement

‘ஒரு காலத்தில் கிரியின் வம்சம் தலைக்குமோ தலைக்காதோ’ என தன்னிடம் சண்டையிட்ட தாயா இன்று இப்படி புலம்பிக் கொண்டிருக்கிறார் என்ற அதிர்வில் இவள் செந்திலை பார்க்க

அவனோ ‘நான் தான் சொன்னேனே..’ என ஒரு பார்வை பார்த்து வைக்க, ராஜியின் நிம்மதி போனது.

“இவ எப்படி பத்திவிடறானு நானும் பார்க்குறேன். முதல்ல எப்படி இவ கிரி கூட வாழ்றான்னு பார்க்குறேன்” வசந்தா என்ன பேசுகிறோம் என தெரியாமல் பேசி வைக்க “ம்மா..” என ராஜி அதட்டிய அதே நேரம்

Advertisement

“ஏன் வாழறதுக்கு முன்னாடியே டைவர்ஸ் எதுவும் வாங்கி கொடுக்க போறீங்களா” என்ற குரலில் திடுக்கிட்டு மூவருமே திரும்பிட “நீங்க எப்போ லாயருக்குலாம் படிச்சீங்க” மேலும் கேட்ட கமலியின் குரலில், அதிர்ச்சியாகினர் தாயும் மகளும்.

Advertisement

“சொல்லுங்கத்தை” கமலியின் விடாத கேள்வியில் வசந்தாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் அப்படி வெடிக்க, ‘ஏன் தான் இங்கே வந்தோமோ’ என ராஜி தலையில் அடித்து கொள்ளாத குறையாக அமர்ந்திருக்க, ‘நல்லா கேளு’ என செந்தில் வேடிக்கை பார்த்தான்.

“என்ன காரணம் சொல்லி எங்க இரண்டு பேரையும் பிரிச்சு விட போறீங்க!” கமலியின் இந்த தைரியத்தில் வெறியானார் வசந்தா

“அழகா இருக்கோம்ன்ற திமிரில் ஆடுறியா!” என வார்த்தைகளை விட

Advertisement

“இல்லையே”என மறுத்து “கிரி என் மேல வச்சிருக்கிற காதலில் தான் ஆடுறேன்!” இவள் சொன்ன பதிலில் ஆடிப்போனார் வசந்தா. ராஜி தலையை குனிந்து கொள்ள, சிரிப்பை அடக்குவது பெரும் பாடாகிப்போனது செந்திலுக்கு.

“அந்தளவுக்கு மயக்கி வச்சிருக்கல்ல நீ”

“புருஷன் தன் பொண்டாட்டிகிட்ட மயங்கி கிடக்குறது தப்பில்லையே” விடவில்லை கமலியும்.

“அம்மா அம்மானு உயிரா கிடப்பான். இப்படி அவனை பொண்டாட்டி தாசனா மாத்தி வச்சிருக்க” ஆநங்கம் அடங்கவில்லை அவருக்க

“ஹ.. கிரி.. பொண்டாட்டி தாசன் தான். ஆனால் லவ் பண்ணி, வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணி, மத்தவங்களை பத்தி கொஞ்சமும் யோசிக்காமல், மனைவியோட சந்தோஷத்துக்காவே, தன்  குடும்பத்தையே டீலில் விட்டு வந்த எங்க மாமா அளவுக்கு பொண்டாட்டி தாசனில்லை கிரி” இவள் பேசியதில்..

“நீ என்ன என் புருஷனை பேசுறது” ஒன்றாக ஒரே மாதிரி வார்த்தைகளாக அட் எ டைமில் ராஜியும், வசந்தாவும் கேட்டிட, செந்தில் விழி விரித்து பார்த்திருந்தான்  செந்திலின் பாடு கொண்டாட்டமானது.

கமலி சொன்ன வார்த்தைகள் கிரியின் அப்பாவோடும், செந்திலோடும் அப்படியே ஒத்து போக, இரு மனைவி மார்களும் திகைத்து போயினர்.

“உங்க காதலுக்காக, உங்க மாமியார் குடும்பத்தை நீங்க இழக்கலாம். நான் இழக்க கூடாதா அத்தை. நியாயம் எல்லாத்துக்கும் ஒன்னு தானே!” பெரும் பாராங்கல்லை அசால்ட்டாய் இறக்கி.

“குடும்ப பொண்ணு மாதிரியா பேசுற? நீ!”

“ஓ.. அப்போ நீங்க, உங்க மக லாம் குடும்ப பொண்ணு இல்லையா! நல்லதுக்கே காலம் இல்லை அத்த.. தனி குடுத்தனம் போறவங்க நல்லவங்க.  போகதவங்க கெட்டவங்க ல்ல..!” உதட்டை பிதுக்கி கொண்டு கேட்டவள், முகம் சடுதியில் மாறி

“என்னையும் கிரியையும் பிரிச்சு வச்சிடலாம்னு நீங்க நினைக்கிறது இதுவே கடைசி முறையா இருக்கட்டும். இல்லை நீங்க இன்னும் இப்படியே தான் இருப்பீங்கன்னா, நாங்களும் தனி குடித்தனம் போய்க்கிறோம்” என இவள் கூற, இவளின் தைரியம் வசந்தாவிற்கு கடுங்கோபத்தை கிளப்பிட கொடுத்திட

“தனியா போறியா, வேற வீடு பார்த்து போய்க்கோ, நீ என்ன என்னை பார்த்துகிறது, எம்மவ பார்த்துப்பா என்னை” அப்போதும் தனக்கான ஒரு வீட்டை தன் பெயரில் எழுதிவிட்டு, வீராவேசமாய் பேசிய வசந்தாவை,

ஒரு லுக் விட்டவன் ‘அப்போ உங்கம்மா சாகுற வரை நான் பட்னி தான் போல’ ராஜியின் காதருகில் குனிந்து முனுமுனுத்தான் செந்தில்.

ராஜி அவனை வெட்டவா குத்தவா என பார்த்து வைக்க ‘ஹ.. நான் செத்தாலும் பட்னி தான் போல’ இவன் மேலும் சொல்ல, நறுக்கென அவன் தொடையில் கிள்ளி வைத்தாள் ராஜி.

“ஸ்.. பாவி” வாய்க்குள்ளே அலறி, வலித்த இடத்தை தடவி விட்டான் செந்தில்.

“அப்படியா.. சொல்றீங்க” என வசந்தாவிடம் ஒரு பார்வையை விட்டு “அண்ணி நீங்க பார்த்துப்பீங்களா.. ரொம்ப சந்தோஷம் அண்ணி” என்றவள், செந்திலிடம் திரும்பி

“அண்ணா, ப்ரணவ், ப்ரணிதாக்கு பால் கொண்டு வரவான்னா, அதை கேட்க தான் வந்தேன்” போன வேகத்தில் இவள் திரும்பி வந்ததற்கான காரணத்தை இவள் கூறிட

“பிரணவ் சாப்பாடு சாப்பிட்டுப்பான் கமலி, பிரணிதாக்கு பீடிங் பாட்டில் எடுத்துட்டு வந்தாச்சு” என்றிட சரியென தலையசைத்துவிட்டு “அப்போ நான் டீ மட்டும் எடுத்துட்டு வரேன்” அங்கிருந்து கிளம்பினாள் கமலி.

“அம்மா.. நீ கொஞ்சம் வாய மூடிட்டு இரேன்மா.. பிரச்சனையை பெரிசு பண்ணிடாத!”

“ஏண்டி அப்போ நீ என்னை பார்த்துக்க மாட்டியா!” அவர் கவலை அவருக்கு. அந்நேரம் சரியாய் கிரி அங்கு வந்து சேரந்தான்.

அய்யோ அடுத்து இவனா! கமலியனாலும் ஒரு கேட்டகரில சேர்க்கலாம், இவனை எதிலயுமே சேர்க்க முடியாதே! ராஜி திகைத்து நிற்க “அடுத்து உன் தம்பிடி” வாய் கொள்ளா சிரிப்போடு செந்தில் பேச

அவனை வேண்டு மட்டும் முறைத்து வைத்தாள் ராஜி. “உன் தம்பி முகத்தில ஒரு தேஜஸ் தெரியுதுடி.. பய இப்போ தான் காதலிக்கவே ஆரம்பிச்சிருக்கான் போல!” விடாது செந்தில் பேசிக்கொண்டிருக்க

“இதெதுக்கு என்கிட்ட சொல்றீங்க!” கடுகடுத்தாள் ராஜி.

“அப்படியாவது இரண்டு பேரும் வாய மூடுறீங்களான்னு பார்க்க தான்” புல் பார்மில் இருந்தான் செந்தில்.

“ஐய்யா, சாமி.. நானோ அம்மாவோ அவன் காதலுக்கோ, காதலிக்கோ ஒரு நாளும் இடைஞ்சலா இருக்க மாட்டோம்” இவள் உறுதி கொடுக்க

“அப்போ என் காதலுக்கும் இடைஞ்சலா இருக்க மாட்டீங்கன்னு உறுதி கொடுடி” இவன் கேப்பில் ஆட்டோ ஓட்ட

“இப்போ என்ன எங்கம்மா தானே உங்களுக்கு பிரிச்சனை, ஆசரமத்துல கொண்டு போய் சேர்த்துடறேன் போதுமா” உணர்ச்சி கொந்தளப்பில் இவள் சற்று சத்தமாய் பேசிட, செந்திலுக்கு சிரிப்பை அடக்குவதே பெரும் பாடாய் போனது.

ஆனால் அதற்குள் கொந்தளித்துவிட்டார் வசந்தா “என்னடி,  அவளை விட நீ் மோசமா இருக்க! அவளாவது தனி குடித்தனம் தான் போவேன்னு சொன்னா.. நீ என்னை ஆசரமத்துல சேர்க்குற வரை போயிட்ட, மகளாடி நீயெல்லாம்” என கத்த துவங்கிய வசந்தாவின் வாயை சட்டென கைகளால் அடைத்து

 “நீ சாகுற வரை உன்னை நான் பார்த்துக்கிறேன் மா.. வாய் தவறி வந்துடுச்சு.. மன்னிச்சிடு” என ராஜி சரண்டர் ஆக,

“இல்லை நீ மாத்தி மாத்தி பேசுற.. நான் இனி உன்னை நம்ப மாட்டேன். கிரி திட்டுனாலும், கை நிறைய பணம் கொடுத்து என்னை பார்த்துப்பான். இரண்டு வசவு வாங்கிட்டுனாலும் நான் அவன் கூடவே இருந்துக்கிறேன்..” வசந்தா பேச

“கிரி, நீ கடைசி வரை பிரம்மச்சாரி தாண்டா” ராஜியின் காதில் விழும்படியே இவன் பேச “அவன்.. அவன்..” என இழுத்தவள் “அதெல்லாம் வாழ்ந்திருப்பான், நீங்களா ஏதாவது சொல்லாதீங்க” ராஜி திக்கி திணறி பேச

“ஆத்தாளும், மகளும் எங்கடி வாழ விடுறீங்க! அவனை!” செந்தில் இம்முறை நிஜமாகவே கோபம் கொண்டிட

“எல்லாம் உங்களால தான்” என செந்திலின் மேல் பழியை போட

“எங்கிட்ட வந்த, வகுந்துடுவேன். எனக்கே விபூதி அடிக்க பாரக்குறல்ல” செந்தில் இவள் காலை வார, மூஞ்சியை தூக்கி வைத்து கொண்டாள் ராஜி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!