பத்மாவதி கதிருக்கு உணவை ஊட்டிமுடித்தவர்.. ரவியை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு..
Advertisement
சீதாவுக்கு இட்லி எடுத்துக் கொண்டு அவள் அறைக்கு வந்தார்.
Advertisement
சீதா அவள் இடுப்பை பிடித்தபடியே படுத்திருந்தாள்.
பத்மாவதி சீதா இடுப்பை பிடித்து கொண்டு படுத்திருப்பதை பார்த்தவர்.. “என்ன செய்து சீதா”? என்று கேட்டு அவளுக்கு இடுப்பு வலிக்கு சுடுதண்ணி வைத்து ஒத்தடம் கொடுத்தவர்.
சுடு தண்ணீரில் குளித்து வர சொன்னார்.
சீதாவுக்கு உணவை ஊட்டி விட சீதாவுக்கு கண் கலங்கியது.
தன் தாய் இருந்தால் தன்னை இப்படித்தான் பார்த்திருப்பாரோ என்று பத்மாவதியை, ஏக்கமாக பார்க்க.
” என்னடா” என்றவர் அவள் தலையை வருடி கொடுத்த பத்மா.
“மனசுல எதுவும் நினைச்சுக்காத வயித்துல புள்ள இருக்கு சரியா.
மதியம் நடந்தது மறந்துவிடுடா” என்றவர்..
சீதாவின் கையை பிடித்து “நீ மட்டும் கதிரை இன்னைக்கு பிடிக்கலைன்னா நான் என்னவாக இருப்பேன் என்று எனக்கே தெரியாது சீதா” என்று அவளின் கையை பிடித்து நன்றி சொல்ல..
“அத்தை”! என்று உரிமையாக கோபித்துக் கொண்டாள் சீதா.
கண்ணை துடைத்த கொண்ட பத்மாவதி “சரி படுடா, இது உன் வீடு, நீ இங்கேயே இருக்கலாம் சரியா”.
என்று அவர் வெளியே வர ..
சீதாவுக்கு குளித்து விட்டு வந்து உண்டதும், இதமான மன நிலையை தர படுத்ததும் தூங்கிவிட்டாள்..
நாகம்மா திண்ணையில் அமர்ந்து கொண்டு உண்டு கொண்டிருந்தார்.. ரவி தன் பீ ஏ விடம் போன் பேசிக்கொண்டே வெளியே வந்தான் அவனால் 4 நாட்கள் வரமுடியாது அங்கே உள்ள அனைத்து வேலைகளையும் தன் பீ ஏ வை பார்த்துக்க சொல்லிவிட்டு ஃபோன் பேசி முடிக்க..
தன்னை முறைத்துக் கொண்டிருக்கும் நாகம்மாளை பார்த்தவன்..
“என்ன அவ்வா என்னை பாசமா பாக்குறீங்க, ஏதாவது தர போறீயா” என்று கேட்டவன் அவர் அருகில் அமர..
“டேய் அடுத்தவன் பொண்டாட்டி தூக்குறது தப்பு டா இனிமே இப்படி பண்ணாத” என்று நாகம்மாள் சொல்ல..
நாகம்மாள் கன்னத்தை பிடித்து கிள்ளியவன், சிரித்துக் கொண்டே “நான் பண்ணது சரி தான் அவ்வா” என்று சொல்லி விட்டு உள்ளே சென்றான்..
ரவிக்கு நிறைய வேலைகள் இருந்தது ஹாலில் உட்கார்ந்து கொண்டு தன் லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்..
இரவு ஒரு மணி இருக்கும் சீதா கண்முளித்து எழுந்தவள் ஓய்வு அறைக்கு சென்று விட்டு வந்து தண்ணீர் குடிக்க,, தண்ணீர் அவளுக்கு பத்தவில்லை.. பத்மாவதி தண்ணீர் கொடுத்து விட்டு தான் சென்றார்.
அந்த தண்ணீர் அனைத்தையும் குடித்திருக்க கிச்சன் நோக்கி சென்றாள்.
ரவி ஹாலில் உட்கார்ந்து வேலை செய்வதை பார்த்துக் கொண்டே போனவள் மணியை பார்க்க மணி ஒரு மணி ஆகியிருந்தது.
இவன் என்ன பேய் மாதிரி ஒரு மணிக்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று அவனை பார்த்தபடி சென்றவளை “சீதா” என்று ரவி அழைக்க.
என்னவென்பது போல் அவன் எதிரில் வந்து அமர்ந்தாள்.
“உடம்பு வலி பரவாயில்லையா சீதா நல்லா தூங்குனியா” என்று கேட்க ..
“நல்லா தூங்குனேன் ரவி மறுபடியும் உடம்பெல்லாம் வலிக்குது என்னால படுக்க முடியல” என்று கூற.
லேப்டாப்பை மூடி வைத்தவன் நெட்டி முறித்தான்.
வீட்டில் இருப்பதால் சாட்ஸ்சும் சீவ்லெஸ் டி சர்ட்டையும் அணிந்திருந்தான் ரவி.
“சரி வா என்னோட பிரண்டோட மனைவி டாக்டர் தான் அவங்க வீட்டுக்கு போயிட்டு ஒரு ஊசி போட்டு வந்துடலாம்” என்று அவளை அழைக்க.
“இந்த நேரத்துலயா மணி ஒரு மணி ஆகுது ரவி” என்றாள்.
“அட வாம்மா போன் பண்ணி சொல்லிட்டு போகலாம் இன்ஜெக்ஷன் போட்டு வரலாம் தூங்கிடுவ” என்று அவளை அழைக்க..
“வேண்டாம் ரவி நைட்டு ரொம்ப லேட் ஆச்சு ” என்று சொல்ல..
“என்ன சீதா உன்னால தூங்க முடியல தானே அப்போ வா ஒரு இன்ஜெக்ஷன் போட்டு வரலாம்”.
தன் மொபைல் எடுத்து நண்பனுக்கு போன் போட, ரவி சொல்லியதை கேட்ட அவன் நண்பன்..உடனே வீட்டுக்கு வாடா என்று சொல்ல..
“வா சீதா” என்று அவளை அழைத்துக் கொண்டு வெளியில் வந்தான்.
நாகம்மாள் திண்ணையில் படுத்து தூங்கிக் கொண்டிருக்க அவரை சுத்தி கொசு நெட் போடப்பட்டிருந்தது.
“என்ன பாட்டி இங்கேயே தூங்குறாங்க அவங்களுக்கு ரூம் இல்லையா” என்று சீதா கேட்க..
“ரூம்பெல்லாம் இருக்கு சீதா இருந்தாலும் அவங்க திண்ணையிலதான் படுத்திருப்பாங்க, அப்பதான் அவங்க வீட்டுக்காரர் நைட் வந்து அவங்க கிட்ட பேசுவாங்களாம்” என்று ரவி சொல்லி சிரித்தவன்.
அவனின் புல்லட்டை தள்ளி கொண்டு வெளியில் செல்ல..
“கார்ல போலாமே” என்றாள் சீதா.
“காரை ஸ்டார்ட் பண்ணா எல்லாரும் முளிச்சிருவாங்க சீதா அதான் புல்லெட்டில கூட்டிட்டு போறேன், பக்கம் தான் வா” என்று அவளை அழைக்க.
சீதாவுக்கு அவனின் புல்லெட்டில் ஏற கஷ்டமாக இருந்தது, பின்பு உடல் வலிக்காக, மெல்ல ஏறி கம்பியை பிடித்து ரவியை தொடாத வாரு அமர்ந்து கொண்டாள்…
மெதுவாக சென்றான் ரவி, அவன் நண்பன் வீடு மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இருக்க வீடு வந்து சேர்ந்தார்கள்.
ரவியின் நண்பனின் மனைவி,
சீதா கர்பமாய் இருப்பதை பார்த்து அவளின் கையை பிடித்து செக்கப் ரூம்பிற்கு அழைத்து சென்றாள்.
அவளை செக் பண்ணி பார்த்து விட்டு, “நல்லா தூங்கி எழுந்தாலே உடம்பு வலி சரியாகிரும்” என்று தூக்கத்திற்கும், உடல் வலிக்கும் சேர்த்து இன்ஜெக்ஷன் போட்டு விட..
இருவரும் அவர்களிடம் நன்றி சொல்லிவிட்டு மீண்டும் புல்லட்டில் கிளம்பினார்கள்..
வரும் வழியிலே ஒரு தள்ளுவண்டி கடைமுன்னாடி நிப்பாட்டினான் ரவி.
சீதா என்னவென்று கேட்க “இங்கே பருத்தி பால் நன்றாக இருக்கும் சீதா, வா” என்று ஒன்றை வாங்கி அவளிடம் கொடுத்தவன் இன்னொன்றை வாங்கி அவனும் பருகினான்..
சீதாவிற்கு அந்த பருத்திப்பால் மிகவும் பிடித்திருந்தது “இன்னொன்று வாங்கி தாயேன் ரவி” என்று கேட்டு பருகினாள்.
ரவி சிரித்தபடியே வாங்கி கொடுத்துவிட்டு அவள் குடித்து முடித்ததும் அவளை அழைத்துக் கொண்டு செல்ல..
பாதி வழியிலே மருந்து செலுத்தியதால் தூங்கி இருந்தாள் சீதா..
தன் முதுகின் மேல் பாரமாக இருப்பதை உணர்ந்த ரவி.
” சீதா சீதா” என்று அழைக்க சீதாவிடமிருந்து எந்த ஒரு வார்த்தையும் இல்லை.. .
தூங்க்கிட்டா போல என்று.. சிரித்தபடியே வண்டியை மெதுவாக செலுத்திக் கொண்டே வீடு வந்து சேர்ந்தான்…
வீடு வந்ததும் சீதாவை மெல்ல எழுப்ப சீதாவோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.. “சீதா” என்று ரவி அழைத்துப் பார்க்க சீதா எழுந்து கொள்ளாவேயில்லை,, சரி தான் நன்றாக தூங்கட்டும் என்று மெதுவாக வண்டியில் இருந்து இறங்கியவன்.. அவளை அப்படியே தோள் மீது தூக்கி சுமந்து கொண்டு அவள் அறைக்கு வர.
நாகம்மாள் ரவி சீதாவை தோளில் சுமந்து கொண்டு வருவதை பார்த்தவர்.
இவன் என்ன சும்மா, சும்மா இந்த சீதாவை தூக்கிட்டு போறான்..காலையில மருமகளிடம் சொல்லி, இதுக்கு ஏதாவது ஒரு முடிவு கட்டணும் என்றார்.
சீதாவை பெட்டில் படுக்க வைத்தவன். ஏசியை ஆன் பண்ணி, லைட்டை ஆஃப் பண்ணி விட்டு, அவளுக்கு ஒரு போர்வையை போர்த்தி விட்டவன் விலகும் போது “ரவி” என்றாள் சீதா.
ரவி சீதா முகத்தருகே வர.
கண் மூடிய படியே இருந்தாள் சீதா..
ரவிக்கு சீதாவா தன்னை அழைத்தது என்று அவளையே பார்த்திருக்க.
” ரவி ட்ரெயின் வருது ரவி, ரவி ட்ரெயின் வருது” என்று புலம்ப..
ரவிக்கு அன்று நடந்த அந்த சம்பவம் சீதாவை இன்னும் எவ்வளவு பாதிக்கிறதா என்று யோசித்தவன்..
“ஒன்னும் இல்ல சீதா ட்ரெயின் எல்லாம் வரல நீ பேசாம படு நிம்மதியா தூங்கு”என்று அவளை தட்டிக் கொடுக்க..