Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா கல்யாண வைபோகமே.. 21 2

ரவி ஆர்வமாக அவள் வயிறை பார்த்த படியே அமர்ந்திருக்க, சீதா சிறிது நேரம் கழித்து  தூங்கி விட்டவள்.

மீண்டும் புலம்ப ஆரம்பித்து இருந்தாள்..



Advertisement

அவள் புலம்புவது அவனுக்கு புரியவில்லை தூக்கத்தில் அவள் வயிற்றை தடவி கொடுத்தவள்..

“தூங்குங்க குட்டீஸ் எனக்கு தூக்கம் வருது”, என்று அவள் வயிற்றில் உள்ள பிள்ளைகளுக்கு தட்டி கொடுத்தாள்.

Advertisement

Advertisement

சீதா வயிற்றில் குழந்தைகள் சுற்றி வருவதை பார்த்தவன், அவன் கையை வைக்க.

குழந்தை துடிப்பதை அவன் கையை உணர்ந்த நொடி ரவியின் உடல் சிலிர்த்தது,, ரவிக்கு அவன் கையை எடுக்கவே விரும்பம் இல்லை இரண்டு கையை சீதாவின் வயிற்றில் வைத்திருக்க, குழந்தைகள் சுத்தி வருவதை நன்றாக உணர்ந்தவனுக்கு குழந்தையின் தலையை நன்றாக உணர்ந்தான், தேங்காய்  போல ஒரு இடத்தில் மட்டும் உருண்டையாக தெரிய, அதை தொட்டு பார்த்து உணர்ந்தவன், குழந்தைக்கு முத்தம் வைத்து விட்டு குழுங்கி அழுதான்,..

Advertisement

 என் பிள்ளைகள் என் பிள்ளைகள் என்று  அவள் வயிற்றைத் தொட்டு பார்த்தவனுக்கு, அவ்வளவு சந்தோஷம் உலகத்தே வென்று விட்டது போல் ஒரு நிம்மதி, திருப்தி. சீதாவின் வயிற்றில் முத்தமிட்டவன் சீதாவின் வயிற்றிலுள்ள குழந்தைகள் அசைவதை  வீடியோ எடுக்க ஆரம்பித்தான்..

 நீண்ட நேரமாக தன் பிள்ளைகளோடு இருந்தவன் சீதா தூக்கம் கலைந்து விடுமோ என்று எண்ணி சீதாவிற்கு நெத்தியில் முத்தம் வைத்து “சாரிடா” என்று.. அவள் கன்னங்களில் முத்தமிட்டு அவன் விலக பார்க்க.

“ரவி” என்றாள் சீதா.

 தூக்க கலக்கத்தில் கூட தன்னை உணர்ந்தவளின் தலைகோதி விட்டவன்….

 சிறிது நேரம் அவளை பார்த்து விட்டு தன் அறைக்கு செல்ல….

 நாகம்மாள் ஓய்வு வரைக்கு வந்தவர் ரவி அவன் அறையில் இருந்து வெளியே வந்ததை பார்த்தவர்..

 இவன் என்ன இந்த சீதா பொண்ணு இருக்கிற ரூமில் இருந்து வருகிறான் என்று பார்த்தார்…

 மறுநாள் அழகாய் விடிந்தது,,

 சீதா நன்றாக தூங்கி எழுந்தாள்.

 நம்ம  ஹாஸ்பிடலுக்கு போயிட்டு பைக்கில் வரும் போது பருத்தில் பால் குடிச்சிட்டு  வந்தோமே, பிறகு   எப்போ வந்து படுத்தோம் என்று யோசித்தவள் அப்படியே  பெட்டில் அமர்ந்திருக்க..

 கதிர் வந்து சீதாவை பார்த்தவன் “பத்மா அவ்வா சீதா ஆண்ட்டி முழிச்சிட்டாங்க” என்று கத்த.

 சீதா கதிரை பார்த்து  ” குட் மார்னிங் வாடா கண்ணா” என்று அழைக்க..

 “என் நேம் கதிர் ஆன்ட்டி கண்ணா இல்லை” என்றது குழந்தை..

  “வா கதிர்”  என்று சீதா  அவளின்  இரண்டு கைகளை விரித்து அழைக்க அழகாக அவள்  பெட்டின் மேல்  ஏறி அவள் மடியில் வந்து  அமர்ந்து கொண்டான்.

 அவன்  தலையை  கோதியவள் “எப்படா எழுந்த”? என்று கேட்க .

 “நான் அவ்வா கூடவே எழுந்துட்டேன்” என்றான்..

 “பால் குடிச்சியா” என்று சீதா  பாசமாக கேட்க.

” ரெண்டு டம்ளர் பால் குடிச்சேன் ஆன்ட்டி ” என்றான்..

 பத்மா ஒரு பெரிய டம்புளரில் சீதாவுக்கு பால் கொண்டு வந்து தர..

 “தேங்க்யூ ஆண்ட்டி”  என்று அதை வாங்கி டேபிள் மேல் வைத்தவள்..

ஓய்வு அறைக்கு சென்று அவளின் தேவைகளை முடித்து முகம் கழுவி வந்தவள்..

பால் எடுத்து பருகியவள்.

 “பால் ரொம்ப டேஸ்டா இருக்கு ஆண்ட்டி.. ” என்று சீதா கூற.

 “நம்ம மாட்டு பாலு டா பின்னாடி இருக்குல்ல அந்த மாட்டுப்பால் தண்ணியே கலக்காத மாட்டுப்பால் ரொம்ப நல்லா இருக்கும் டெய்லி குடி உன் ஹெல்த்துக்கு ரொம்ப நல்லது” என்றால் பத்மா..

 மிகவும் ரசித்து குடித்தால் பாலை  சீதா..

 “உனக்கு என்ன  சமைக்கட்டும் சீதா” என்று பத்மா கேட்க..

“நீங்க எது சமைச்சாலும் எனக்கு பிடிக்கும் ஆண்ட்டி”  என்றாள்..

 பத்மா கிச்சன் நோக்கி செல்ல.

 கதிரை இடுப்பில் தூக்கிக் கொண்டு திண்ணைக்கு வந்து அமர்ந்தாள் சீதா.

 சீதா  வெளியே வந்து அமர்ந்ததும்  கதிர் கோழியை பார்த்துவிட்டு “கொக்கக்கோ”  என்று சொல்லி கோழி பின்னாடி ஓடிவிட..

 பேத்தியை பார்த்த நாகம்மாள் “நல்லா தூங்கினியா சீதா” என்றார்.

 “நல்லா தூங்குனேன் பாட்டி நடுராத்தியில   கொஞ்சம் பெயின்னா இருந்தது ரவி தான் ஹாஸ்பெட்டலுக்கு கூட்டிட்டு போயிட்டு வந்தாரு” என்று கூற.

 “ஓ ஹாஸ்பிடலுக்கு போய்ட்டு வந்தீங்களா” என்றார்.

 இருவரும் பேசிக் கொண்டே இருக்கும் போதே வெங்கட் வெளியில் இருந்து வந்தவர் சீதாவை பார்த்து “நல்லா தூங்கினியாமா”? என்று கேட்க.

 தலையை “ஆமாம்” என்று ஆட்டினாள் சீதா.

 தன் கையில் இருந்த கவரை எடுத்து நாகம்மாவிடம் தந்து விட்டு உள்ளே செல்ல..

 நாகம்மாள்  என்னவென்று பிரித்துப் பார்த்தார்.

 அதில் அவர்கள் ஊரில் ஸ்பெஷலான தட்டு  வடை இருக்க ..

 மகனைப் பார்த்து சிரித்தவர் “இந்த சீதா உனக்கு தான் வாங்கிட்டு வந்திருக்கான் நல்லா இருக்கும் சாப்பிடு” என்று சீதாவிடம் தட்டு வடையை கொடுக்க.

 “என்ன பாட்டி  இது?” என்று சீதா பார்க்க..

  “சீதா இது தட்டு வடை, அரிசி மாவில் செய்தது.

 நிறைய வெங்காயம், பச்சை மிளகாய்,  பூண்டு காஞ்ச மிளகாய், கல்லபருப்பு, உலுந்தன் பருப்பு, மல்லிவிதை, சீரகம், எள்ளு என்று எல்லாம்  போட்டு நன்றாக இருக்கும்”.என்று நாகம்மாள் கூற

 மொறு மொறுவென்று இருந்த தட்டு வடை  இரண்டை  சாப்பிட்டாள்  சீதா.

  சீதா தட்டு வடையை  சாப்பிடுவதை பார்த்த கதிர்  வேகமாக ஓடி வந்தவன் நாகம்மாள் மடியில் அமர்ந்து கொள்ள நாகம்மாள் கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டினார் கொள்ளு பேரனுக்கு…

 சீதா இரண்டு தட்டு வடையை உண்டு முடித்ததும் இன்னொன்று நீட்டினார் நாகம்மாள்..

” போதும் பாட்டி”  என்று சீதா சொல்ல..

 “மாசமாய் இருக்கிற பிள்ளை எதுவும் வேண்டாம் சொல்லக்கூடாது இன்னொன்னு சாப்பிடு, உன் மாமன் உனக்குக்குதான் வாங்கிட்டு வந்திருக்கான், எனக்கு எல்லாம் பல்லு இல்லை இதை சாப்பிட” என்று கொடுக்க அதையும் சாப்பிட்டாள் சீதா.

 வயிறு மனமும் நிறைந்திருந்தது சீதாவிற்கு.

 பத்மா திண்ணைக்கு வந்து “இந்தா சீதா” என்று ஒரு பௌவுலை நீட்ட..

” இது என்னத்தை”  என்றாள்..

 “கீரை சூப்புடா குடி” என்று கொடுக்க.

 “ஐ யோ என் வயிற்றில் இடமில்லை அத்தை, இப்பதான் நீங்க பால் குடுத்தீங்க, பாட்டி தட்டு வடை கொடுத்தாங்க இப்ப மறுபடியும் சூப்பா,   நான் எப்படி சாப்பிடுவது” என்றாள்.

” ரவிதான் சொன்னான்  டா டாக்டர் நீ ரொம்ப வீக்கா இருக்குற   டெய்லி, பால், சூப் காய்கறிகள் நல்லா சாப்பிட கொடுக்கனுமுன்னு  சொன்னான்”  என்று பத்மா கூற.

 ரொம்ப அக்கறை தான் இவனுக்கு என்மேல்..

 என்று அவனை திட்டியவள்.

 ‘அப்புறமா குடிச்சுக்குறேன் அத்தை” என்று சொல்ல..

நாகம்மாள்  பேத்தியிடம்   “ஒரு சின்ன பௌவுல் கீரை சூப் தானே  குடி சீதா,

குடிமா”  என்று சொல்ல..

  கோழிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே குடித்தாள் சீதா.

 வீட்டு வாசல் முன்னாடி போலீஸ் சீப்பும்,,ஒரு காரும் வந்து நிற்க.

 நாகம்மாள்  போலீஸ் சீப்பை பார்த்தவர்.

மகனை  நோக்கி கத்தி இருந்தார் “வெங்கட் போலீஸ் சீப் வந்து இருக்குடா” என்று கத்த.

போலீஸ் சீப்பில்  இருந்து போலீஸ்காரர்கள்  இரங்க,

 காரில் இருந்து ரவி கிருஷ்ணனின் மனைவி  மீனலோச்சனி இறங்கியிருந்தாள்..

 பத்மா, வெங்கட், நாகம்மாள்,கதிர் சீதா அனைவரும்  வெளியில் நிற்க.  ரவியோ ஆழ்ந்த தூக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தான் ..

 ரவி கிருஷ்ணனின் மனைவி வெங்கட் வீட்டு வாசல் முன்னாடி வந்தவள்..

“உங்களை  எல்லாம் நான்  சும்மா விடமாட்டேன் என் புருஷன் கைய கால ஒடச்சி, கொலை பண்ண முயற்சி பண்ணி இருக்கீங்க உங்க எல்லார் மேலையும்  நான் போலீஸ்ல புடிச்சு கொடுக்கிறேன் எங்க அந்த ரவி என் புருஷன் அடிச்சவன் கையை நான் உடைக்கிறேன்” என்று கத்த..

 ரவி சத்தம் கேட்டு மெதுவாக எழுந்தவன் சாவகாசமாக எழுந்து கொட்டாவி விட்டபடியே வெளியில் வந்து நிற்க…

 “டேய்”  என்று ரவியை அடிக்க போனா மீனலோச்சனியை , தடுத்த வெங்கட்.

 “உன் புருஷனை கொல்லாமல் விட்டோமே,  அத நெனச்சு சந்தோஷ படு,,. நீயும் உன் புருஷனும் இனிமே இந்த  பக்கமே வரக்கூடாது கிளம்பு” என்றார்.

 “என் புருஷன் நீங்க எப்படி அடிக்கலாம்,”.. என்றாள்..

 “அவன் பண்ணதுக்கு  அவனை கொன்னு இருக்கணும்” என்றார் பத்மா.

 “அத்தை!  நீங்களா? இப்படி பேசியது”  என்று பத்மாவை கிருஷ்ணன் மனைவி ஆச்சரியமாக பார்க்க.

 “ஆமா நான் தான் அவனை பெத்தவ.. என் வயிறு கலங்கிருச்சு, என் வயித்த,  கலங்கடித்துவிட்டான் உன் புருஷன்,, போதும் அவனை நான் பெற்றதும் போதும் அனுபவிச்சது  போதும் உங்களுக்கு சேர வேண்டியது எல்லாம் நாங்க கொடுத்துட்டோமே. இனிமே எங்க வீட்டு பக்கம் கூட நீங்க வராதீங்க” என்றார் பத்மா..

 “எல்லாரும் சேர்ந்து எங்களை அடிச்சு விரட்டுறீங்களா. எல்லாம் இந்த புதுசா வந்த சொந்தக்காரியாள”

 என்று கேட்க.

 சீதாவுக்கு பக்கென்று  இருந்தது, நான்  எங்கேயிருந்து  இவங்க நடுவுல வந்தேன், என்னை இழுத்து ஏன் பேசுகிறாள் இந்த பெண்னென்று சீதா அமைதியாக பார்க்க.

 “உங்களையெல்லாம்   நான் சும்மா விட மாட்டேன்.

 இன்ஸ்பெக்டர் அரெஸ்ட் பண்ணுங்க” என்று வெங்கட்டையும்,ரவியும் காண்பிக்க..

 அந்த இன்ஸ்பெக்டர் எதிர்க்கட்சியாளாக இருக்க வெங்கட்டையும் ரவியும் கைது,, பண்ண வந்தார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!