“சார் அவர் அரசியல பெரியாள் அவரை போய் நீங்க ஒன்னும் பண்ண முடியாது” என்று இன்ஸ்பெக்டர் கூட வந்த கான்ஸ்டபிள் கூற.
“யாரா இருந்தா என்ன அவங்க மேல கொலை வழக்கு போட்டு கேஸ் போட்டு இருக்காங்க அதனால நான் அரெஸ்ட் பண்ணுவேன்” என்று இன்ஸ்பெக்டர் வெங்கட்டையும் ரவியும் அரெஸ்ட் பண்ண வர அந்த ஊர் மக்கள் எல்லாம் வந்து சூழ்ந்து கொண்டனர்.
Advertisement
“எங்க வெங்கடேஷ் அய்யாவை அரஸ்ட் பண்ணி நீ இந்த ஜீப்பை எடுத்துட்டு வெளியே போயிடுவியா?” என்று அவருடன் அரசியலில் இருப்பவர்கள்,, பொது மக்கள் என்று அனைவரும் வெங்கட் வாசலின் முன்பு
கூடிவிட..
Advertisement
Advertisement
அனைவரையும் தடுத்த வெங்கட் “அவங்க கேஸ் கொடுத்து இருக்காங்க நாங்க போய் என்னன்னு பார்க்கிறோம்” என்றவர்..
” ரவி கிளம்பி வா” என்று சொல்ல..
Advertisement
“ஒரு நிமிஷம் பா” என்ற ரவி யாருக்கோ போன் போட..
இரண்டு நிமிடத்தில் அந்த இன்ஸ்பெக்டருக்கு போன் வந்தது அந்த இன்ஸ்பெக்டர் அந்த போனை பேசியவன்..
வெங்கடிடம் வந்து “சாரி சார் சாரி எங்கள மன்னிச்சிடுங்க, நீங்க யாருன்னு தெரியாம வந்துட்டோம்,,..
என்றவன் கிருஷ்ணன் மனைவி பார்த்து “மேடம் கேசை கோர்ட்டில் போய் பார்த்துக்கோங்க” என்று சொல்லி விட்டு இன்ஸ்பெக்டர் சென்று விட்டான்.
வெங்கட் மகனை ஒரு மெச்சுதல் பார்வை பார்த்தவர், “ஏண்டா கண்ணா இந்த இன்ஸ்பெக்டர் நம்மல என்ன பண்ணிடுவான் ஸ்டேஷன் போனால் என்ன? அவனால ஒன்னும் பண்ண முடியாது” என்றார்.
“நீங்க எதுக்குப்பா டேஷன் வரைக்கு போகணும் நீங்க என்ன தப்பு பண்ணீங்க” என்றான்..
“இப்படி பொறுப்பில்லாத மகனை பெத்துட்டேனே டா “?.
“அப்பா நீங்க எங்க ரெண்டு பேரையும் நல்லா தான் வளர்த்தீங்க,, அவன் புத்திகெட்டு போயி எல்லா பணத்தையும் தொழச்சா, நீங்க எப்படி அதற்கு காரணமாக முடியும்”
என்றான்..
கிருஷ்ணன் மனைவி அங்கேயே தான் நின்றிருந்தாள், அவளுக்கு தெரிந்த போலீஸ், பெரிய பதவியில் இருப்பவர்களை கொண்டு ரவியை உள்ள தல்ல திட்டம் போட்டு போன் பண்ணி பேச,, யாரும் உதவவில்லை அவளுக்கு,,. ரவியின் பெயரை கேட்டாலே, அவன்னா? அவனை ஒன்னும் பண்ண முடியாது என்று கூறி விட.. அவளுக்கு ரவியை ஒன்னும் பண்ண முடியவில்லை என்று ஆத்திரம்.
கோபத்தில் பத்மாவை பார்த்து, “நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்க” என்று சாபம் விட்டு செல்ல.
பத்மா மனம் உடைந்து போனார்,, தன் குடும்பத்தில் ஏன் தான் இப்படி நடக்கிறதோ, என்று..
நான் பெத்த பிள்ளை பணம் கேட்டு கொலை செய்யும் அளவுக்கு துணிந்து விட்டான், மருமகளோ சாபம் விட்டு செல்கிறாள், என்று மனமுடைந்த பத்மா அப்படியே திண்ணையில் அமர்ந்துவிட..
நாகம்மாள் மருமகளை பார்த்து “என்னாச்சு பத்மா”,?..
” மனசே சரியில்லா அத்தா,, நம்ம ஜோசியரை வீட்டுக்கு வர சொல்லி, நம்ம குடும்பத்தில் ஏன் இவ்வளவு பிரச்சனை வருது, அப்பறம் ரவி ஜாதகத்தை பார்த்து கல்யாணம் பண்ண, நல்லா நேரம் வந்துடுச்சான்னு பார்க்கலாமா” என்று கேட்க.
“ஊம்ம் வர சொல்லு” என்றார்.
ரவி தாயை முறைத்து பார்த்து “அதெல்லாம் வேண்டாம்,, கும்பாவிஷேக வேலையை பாருங்க”..
என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட..
அவன் கெடக்குறான் பத்மா நீ ஜோசியரை வர சொல்ல, என்னன்னு பாத்திருவோம்”,, என்று நாகம்மாள் கூற..
ஜோசியருக்கு போன் போட, அவரோ வெளியூர் வந்திருக்கிறேன் மதியத்திற்கு மேல் வருகிறேன், என்று கூறி விட.
பத்மா இரண்டு வேலையாட்களை வைத்து வீட்டைசுத்த படுத்தியவர்…
ஜோசியர் வரும் நேரத்தை எதிர் பார்த்திருந்தார், கதிர் மதியம் பசிக்குது என்று சொல்ல.
பேரனுக்கு செய்து வைத்த, பருப்பு சாதத்தை சீதாவிடம் தந்து அவனுக்கு ஊட்டி விட சொன்னவர்,,.
அனைவரையும் வேகமாக அழைத்து மதியம் உணவை பரிமாறியர்..
சீதாவுக்கு தட்டில் நிறையா உணவை பரிமாறியவர் சீதாவிடம் வந்து ஊட்காரு சீதா என்று அவளுக்கு காய் நிறைய வைத்து ஊட்டி விட போக..
“நானே சாப்பிடுறேன் அத்தை” என்று அவள் கூற..
‘நீ இவ்வளவு சாப்பிட மாட்ட.. காலையில கூட சரியா சாப்பிடல உட்கார்” என்று திண்ணையில அமரவைத்து ஊட்டி முடித்தவர்.
“சீதா சொன்னா தப்பா எடுத்துக்காத. ஜோசியர் வந்து போறவரைக்கும் நீ ரூம்லே இருமா மாசமா வேற இருக்க, அவர் பல இடத்து போயிட்டு வர்ரவரு, நீயும் கதிரும் ரூம்லே இருங்க”, என்று கூற.
“சரியத்தை” என்றவன் கதிரை அழைத்துக்கொண்டு அவள் ரூம் சென்றாள்..
கதிரும் சீதாவும், உண்டு முடித்து பேட்ரூம் வந்து இருவரும் பேசியபடியே தூங்கி விட…
ஜோசியர் சொன்ன மாதிரி மதியத்திற்கு மேல் பத்மாவதி வீடு வந்தார்,..
ஜோசியர் என்றால் சாதரணமான ஜோசியர் இல்லை அவருக்கு வயது 70 மேலே இருக்கும்.
ஜடமுடியோடு, காவி உடையணிந்து, கழுத்தில் அதிகமான ருத்ராட்சம் மாலைகள் இருக்க, நெற்றி முழுக்க திருநீர் பூசியிருந்தார் அவரை பார்த்த பத்மா, உணர்ச்சி வேகத்தில் கண்ணீரோடு அவர் காலில் விழ.
“அனைத்தும் கிடைகட்டும் மகளே” என்று வாழ்த்தியவர்.
அவருக்கென்று நடு வீட்டில் புதிதாக விரித்திருந்த விரிப்பில் சென்று அமர்ந்தவர், கையில் ரவியின் சாதகத்தை பத்மா கொண்டு வந்து கொடுத்தார்.
ஜோசியர் ரவிதேஸ்ஜாவின் சாதகத்தை பார்த்தவர், பார்த்து விட்டு சிரித்தார்.
“பின்பு என்ன கேட்கனும்” என்று கேட்க
“கல்யாணம் பண்ண யோகம் வந்திருக்கா என் மகனுக்கு” என்று பத்மா கேட்க.
அவரை பார்த்து சிரித்தவர்.
“கல்யாணம் எதற்கு பண்ணுவாங்கமா? “.என்றார்.
அவர் சொல்வது அங்கே உள்ளவர்களுக்கு புரியவில்லை. வெங்கட்டும் ஜோசியர் எதிரில் அமர்ந்திருக்க.
“என் மகனுக்கு ஒரு துணைவேண்டுமே, என் வம்சம் தலைக்க வேண்டாமா”?.
“உன வம்சம் தலைத்து பல மாதங்கள் ஆகிவிட்டது வெங்கட்”.
என்றார் ஜோசியர்..
பத்மாவுக்கு ஒன்றும் புரியவில்ல, அவர் புரியாமல் குழம்பாமாக அமர்ந்திருக்க.
ஹாலில் ஓரமாக அமர்ந்து வேலைபார்த்து கொண்டிருந்த ரவிக்கு வேர்த்து கொண்டியது.
இவர் என்ன படம் பார்த்தது போல் சொல்கிறார் என்று.
பத்மாவின் முகத்தை பார்த்தவர், “உன் வம்சம் ஒன்னுக்கு, ரெண்டா உருவாகி பல மாசமாகுது பத்மா, என்னை என்ன பண்ண சொல்லுற?, உன் மகனுக்கு கல்யாணம் பண்ண தேதி சொல்லட்டுமா,இல்லை உன் மகன் மனைவிக்கு வளைகாப்பு வைக்க தேதி சொல்லட்டுமா?” என்றதும்.
அங்கே பெரிய அமைதி.
பத்மா ரவியை பார்க்க.
அவன் ஜோசியர் சொல்லியதை கேட்டு ஆடிபோயி அமர்ந்திருந்தவன்.
பத்மா ரவியை பார்த்ததும் அவன் தலையை குனிந்து கொள்ள…
அழுதே விட்டார் பத்மா,, “நான் என்ன பாவம் செய்தேன் சுவாமி, இனி என்னென்ன வார்த்தைகளை நான் கேட்க வேண்டுமோ” என்று அழுக..
“அழுவதற்கு நேரமில்லை பத்மா”,.
“உன் மகன் பெரிய பாவ காரியத்தை செய்து விட்டு வந்திருக்கிறான், பெண்ணில் கண்ணீர் அவனை சும்மா விடாது, பெரிய தோஷமாகி இருக்கிறது உன் மகனுக்கு, தோஷம் பாவமாகி மரணகட்டம், வந்து சேர்ந்துள்ளது பத்மா,” என்றார்.
ஜோசியர் சொல்ல, சொல்ல பத்மாவுக்கு அழுவதை தவிற ஒரொன்று புரியவில்லை, அதில் ஜோசியர் மரணகண்டம் என்றதும் பயந்து போனவர்.
“என் ரவிக்கு ஏதாவது ஆகிவிடுமா!?. என்று கேட்க.
சிரித்த ஜோசியர், “பொற்றோர் செய்த பாவம் பிள்ளைகளுக்கு. உன் மகன் செய்த பாவத்தின் செயல் உன் கணவனை பலி வாங்க, மரண கண்டமாக காத்திருக்கிறது பத்மா.
உன் தாலிபாக்கியம் அந்தரத்தில் ஆடிக்கொண்டிருக்கிறது, உன் மகனுக்கும், உன் கணவனுக்கும் மரண கண்டம் நடந்து கொண்டிருக்கிறது.. காப்பாற்றி கொள் இருவரையும்,” என்றார்,.
“ஏதாவது பரிகாரம் உண்ட, சாமி” என்று பத்மா கேட்க.
செய்த பாவ காரியத்திற்கு தண்டனை உண்டு,, உன் மகன் ஜாதகத்தை பார்த்தேன், அவனுக்கு கல்யாணம் நடப்பது அவ்வளவு சுலபம் இல்லை, ரொம்ப கஷ்டம், அப்படி நீ கல்யாணம் பண்ணி வச்சாலும் அவனும், அவன்மனைவியும், சீதா ராம் போல் பிரிந்து தான் வாழ்வார்கள்..
“உன் மகன் தப்பை திருத்தி அவனுக்கு நல்ல வாழ்வை ஏற்படுத்தி கொடு,காலமாறலாம், ஆனால் உன் மகன் கல்யாணம் இரண்டு நாழிகைக்குள் நடக்கவில்லை என்றாள்.
அவன் செய்த பாவம் அத்தனையும் அவன் தந்தைக்கு சென்று, அதை நான் சொல்ல முடியாது பத்மா, உன் தாலி பத்திரம், நான் வருகிறேன் என்றவர்.
எழுந்து நிற்றார்..
கதிர் சீதா அறையில் இருந்து ஓடி வர.
ஜோசியர் எழுந்து வெளியே வர பார்க்க.
கதிர் என்ற படியே சீதாவெளியே வந்திருந்தாள்…
சீதாவை பார்த்த ஜோசியர், பத்மாவை பார்த்து, “உன் வம்சத்தை வீட்டில் பூட்டி வைத்து என்னிடம் வந்து கேட்கிறாய்”.
என்று கூற.
பத்மாவுக்கு ஒன்று புரியவில்லை, ஜோசியர் சீதாவை பார்த்து, “வாம்மா” என்று அழைக்க.