“சீதா என் மகன் செய்த இந்த பாவத்தை நான் எங்கே போய் தொலைப்பேன், என் குடுப்பமே அழியபோகுதே, பெரிய பாவத்தை பண்ணி வச்சு இருக்கானே.
ஐயோ” என்று கதறி அழ.
வெங்கட் மனைவி கதறி அழவும் வேகமாக வந்தவர், “பத்மா அழாதே பத்மா, இந்த மாதிரி பிள்ளைகளை பெத்த நாம, அனுபவித்து தான் ஆக வேண்டாம், விதி படி நடக்கட்டும் விட, நீ அழுது உன் உடம்பை கெடுத்துக்காதே”.. என்றதும்..
“என்னால முடியல பாவ, என் இரண்டு பிள்ளைகளும் தப்பா போச்சே, என் வளர்ப்பு சரியில்ல, நானெல்லாம் இதை கேட்டு உயிரோடே இருக்க கூடாது, நான்செத்து போறேன் பாவ, என்னால இத தாங்க முடியல”..
என்று மனைவி கதறவும், வெங்கட் சமாதானம் பண்ண, ரவி பத்மா அருகில்வந்து அவரின் கையை பிடிக்க வர.
“பக்கத்துல வராத நீ, சீதா ஏமாத்த உனக்கு எப்படி மனசு வந்துச்சு, இந்த இரண்டு நாள்லே அவள் குணத்த பத்தி தெரியும் எனக்கு..
அவ மேல எந்த தப்பு இருக்காது, நீ தான் அவளை ஏமாத்தி இருக்க, போ, இங்கே இருந்து போ, என்மூச்சில முளிக்காத, போ ” என்றார் மகனை..
“அம்மா சாரிமா, சாரிமா தெரியாம பண்ணிட்டேன் மா”?..
“ஓ.. ஒரு பொண்ணோட வாழ்க்கையை தெரியாமா அழிச்சுருக்கா, அத வேற தெரியாம பண்ணிட்டேன்னு சொல்லுற..
நீ என்ன சின்ன பிள்ளையாட, தெரியாம தப்பு பண்ணுறதுக்கு, நீ செஞ்ச பாவம் என் புருஷன் தலையில் வந்து விழுந்துருக்கேன், என் புருஷன் எனக்கு வேணும், அவர் இல்லாமல் நான் இருக்க மாட்டேன் ” என்று பத்மா கதறி அழ.
திண்ணையில் அமர்ந்திருந்த நாகம்மாள் எழுந்து வந்தார்.
“அத்தை” என்று நாகம்மாளை அணைத்து அழுத்தார் பத்மா,,.
உங்க பையனுக்கு மரண கட்டம் இருக்காம், என்னால இத தாங்க முடியல அத்தையா, இவனுக்கு ஏதாவது நல்லது நடக்கணும் நெனச்சு ஜோசியரை கூப்பிட்டா, அவர் என் தலையில இடியை இருக்கிட்டு போயிட்டாரே.
நான் என்ன செய்வேன், அத்தையா”?.
என்று பத்மா அழ.
“நீ ஏன்டி அழற தப்பு பண்ணது உன் மகன், அவனே தான் இதுக்கு வழி சொல்லனும்.
டேய் ரவி” என்று அவனை அழைத்தவர்.
நீ இப்படி பண்ணுவேன்னு நினைக்கல.
போ, போ சீதா கிட்ட போயி மன்னிப்பு கேளு, அவளை கல்யாணத்துக்கு சம்மதிக்க வை, நீ செஞ்ச பாவத்துக்கு நீ தான் பாரிகாரம் பண்ணணும்..
ரவி சீதாவை பார்க்க.
“நீங்க தலை கீழ நின்னாலும், இது நடக்காது, “என்றாள் சீதா.
அம்மாடி சீதா என்று பத்மா சீதா அருகில் வர.
“வேண்டாம் அத்தை என்கிட்ட நீங்க எதுவும் கேட்காதீங்க, அதை என்னால மறுக்க முடியாது,..
நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்குறேன்,, உங்க பையன மட்டும் நான் கல்யாணம் பண்ண மாட்டேன்”.. என்றாள் உருதியாய்..
பத்மா சீதா சொல்லியதை கேட்டு இவளிடம் எப்படி சொல்லி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்குவது என்று பார்க்க…
நாகம்மாள் பேத்தி அருகில் வர.
சீதா நாகம்மாளை பார்த்து, “பாட்டி எதுவும் என்னிடம் கேட்காதீங்க என்னால முடியாது”, என்று கூற.
சீதா அருகில் வந்தவர் கண்ணீரோடு கையேந்தி நிற்க.
சீதா கீழே மடிந்து கதறி அழுதாள்,, “என்னை பாவி ஆக்குறீங்க, எல்லோரும்” என்று சீதா அழ..
நாகம்மாள் சீதாவிடம் கையேந்தி, என் மகன் உயிர் உன் கையில் தான் இருக்கு சீதா, என் மருமகள் தாலி பாக்கியத்தை காப்பாத்து, என் பேரனை கல்யாணம் பண்ணிங்கோ, என் வம்சத்தை நீதான் மரணகட்டத்தில் இருந்து காப்பாத்தனும்” என்றவர் சீதாவின் காலில் விழ போக.
“ஐ யோ பாட்டி’, என்று இரண்டு அடி தள்ளி போய் சுவறின் பக்கத்தில் அமர்ந்து சீதா அழுக.
ரவி ! பாட்டி பண்ணிய காரியத்தால் வேகமாக சென்று அவரை தூக்கியவன்,
“ஏன் அவ்வா இப்படி பண்ணுற, உன் வயசென்னா, நீ இப்படி பண்ணலாமா”?.
“என் கண்முன்னாடி என் குடும்பம் அழியுறதை என்னால எப்படி டா பார்க்க முடியும், நீ தப்பு பண்ணியிருக்க, அத சரிபண்ண ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது அத சரி பண்ண வேண்டியது எங்க கடமை தானே, நான் யார் காலில் விழுறேன் என் பேத்தி என் குலத்தை விருத்தி பண்ண வந்தவ கிட்ட தானே,, அவ என் கண்ணுக்கு சாமி மாதிரி தான் தெரியுற,, நம்ம குல சாமிடா அவ..
இந்த மண்ணுல பிறந்த ஒவ்வொரு பொண்ணு சாமிங்க தான்டா,, ஒரு உயிர பெத்து எடுக்குற ஒவ்வொரு பொண்ணு அவ குடும்பத்தோட சாமிடா,, எத்தனை வலியை அனுபவிச்சு ஒரு உயிர நம்ம குடும்பத்து பெத்து கொடுக்குற அப்போ அவ சாமி தானே.
நம்ம குடும்பத்தோட முதல் சாமி உங்க அம்மாடா, அவ வந்த நாளில் இருந்து, இது வரைக்கும் உன் அப்பன் சொல்லிய சொல்லை மீறியது இல்லை, எங்கே பிறந்து வளந்தாலும், அவ இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்து அவ கண்ணீர் விட்டு இப்படி அழுததை நான் பார்த்தது இல்லை, என் பத்மா எனக்கு சாமி மாதிரி என்றதும்.
“என்னால முடியாது பாட்டி, நான் சென்னை கிளம்புறேன்” என்ற சீதா.
வேகமாக எழுந்து அவள் அறைக்கு கிளம்ப போக.
நாகம்மாள் பேத்தியின் பின்னாடி சென்றவர்.
சீதாவின் கையை பிடித்தவர். “எங்க ஓடுற”.
“என்னால முடியல பாட்டி, இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா, நீங்க சொல்லுறதுக்கு நான் சம்மதம் சொன்னாலும் சொல்லியிருவேன், நான் போறேன்”,,
பேத்தியை அணைத்து கொண்டவர் “வா”, என்று அவளை அவள் ரூம் அழைத்து சென்றவர்.
அவளை தன் மடிமீது படுக்க வைத்தவர், யோசிடா என் பேரன் பண்ணியது மன்னிக்க முடியாத தப்பு, அந்த தண்டனையை உன் பிள்ளைகளுக்கு நீ கொடுக்க போறீயா,, இப்போ இளம் ரத்தம் அவன் செஞ்சத உன்னால மறக்க முடியல, அத நான் தப்புன்னு சொல்லல்ல, கொஞ்சம் வருஷம் கழித்து உன் பிள்ளைகள் அப்பா பெயர் தெரியாத பிள்ளைகளுன்னு ஊர் பேசும், உன் ஒழுக்கத்தை பத்தி பேசுவாங்க, உன்னை வாழ விடமாட்டாங்கடா, நான் சொல்லுற கேளு தனியா வாழுறது கஷ்டம், அதுக்காக ரவியை மன்னித்து அவன் கூட உடனே வாழுன்னு நான் சொல்லல்ல, அவனை அடி திட்டு, அவன் உன் புருஷன், அவன் செஞ்சதுக்கு தண்டனை கொடு.
உன் வயித்த உள்ள பிள்ளைகளை நீ தண்டிச்சிறாத. என்று அவள் தலை கோதியவர்.
பத்மா எனக்கு மருமக இல்ல பொண்ணுமாதிரி, அவ இல்லண்ணா இந்த குடும்பமே இல்ல, நீ இந்த வீட்ட விட்டு போன, அவ பாதி செத்து போன மாதிரி ஆகிறுவா..,
அவ இல்லாமா நாங்க இல்ல.
நீ என் பேரனை கல்யாணம் பண்ணிங்கோ, காலம் எல்லாத்தையும் மாத்தும், ரவியை வர சொல்லுறேன் இரண்டு பேரும் பேசி ஒரு முடிவு பண்ணுங்கா, என்றவர்.
வெளியே சென்று ரவியை அரைந்தவர், சீதாவை சமாதானம் பண்ணு, என்று அவனை ரூம்பிற்கு அனுப்பி வைக்க.
கனத்த மனத்தோடு சீதா இருக்கும் அறைக்கு சென்றான் ரவி.