Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

93. Anonymous - முள் மீது தூங்கினேனே

முள் மீது தூங்கினேனே 33 2

“அப்படியே போகனும்னா என் பொணத்துக்கு கொள்ளி வச்சிட்டு போனு சினிமா டயலாக் பேசிட்டு இருக்காங்க. இப்படி மென்டல் டார்ச்சர் குடுத்தா மகனா நான் அனுபவிக்கலாம், ஆனால் கமலி!” என நிறுத்தி”என்னை விரும்புனது தான் அவ செஞ்ச பாவமா! மனுசன கிறுக்கா படுத்துறாங்கடா”  “கடைசயில எங்கிட்ட இருக்குற ஒரே நிம்மதி அவ தான். அவளையும் பிரிச்சுவிட்டாச்சு. நா.. நான்.. தான்.. அனா..தையா நிக்க போறேன்” சொல்கையிலேயே கலங்கிய கண்கள் வெடிக்க தயாராகிட, சோபாவை விட்டு எழுந்தவன், அறைக்குள் புகுந்து கதவை அறைந்து சாத்தினான்.

ராஜி திடுக்கிட்டு நிற்க, வசந்தா கிரியின் புது புது அவதாரத்தில் திணறி நின்றிருக்க, செந்திலும் ராஜியும் தான் அறைக்கு விரைந்தனர்.

கதவின் அருகே வேகமாக சென்று “ஏதுவும் பண்ணி தொலைஞ்சிடாதடா” செந்தில் வெளியே இருந்தே கத்தயபடி கதவில் கை வைக்க, வெறுமனே சாத்தபட்டிருக்க, பட்டென திறந்தது கதவு. உஃப் என வாயை குவுத்து காற்றை வெளியேற்றினாள் ராஜி.

“டேய் கிரி..” என அறைக்குள் செந்தில் வர,



Advertisement

“கதவை சாத்திட்டு போடா.. சாகுற ஐடியாலாம் இல்லை. என் கமலியை அப்படியே விட்டுட்டு போயிட மாட்டேன்” உள்ளிருந்தபடியே இவன் கத்த,கதவை வெளிப்புறமாய் சாத்திவிட்டு இவன் திரும்ப, அந்நேரம் உள்ளே வந்தாள் கமலி, பின்னோடு கர்ணனும். வந்தான்.

‘இவ எப்படி வந்தா’ என விழி பிதுங்கி பார்த்திருக்க

சிதறி கிடந்த டிராலி, அதிலிருந்த கிரியின் உடைகள், முகம் சரியில்லாத மூவர் என நொடியில் வட்டமடித்து திரும்பியது கமலியின் விழிகள். ஏதோ சரியில்லை என கர்ணனும் உணர்ந்து கொண்டான்.

Advertisement

“கிரி எங்கண்ணா” செந்திலிடம் கமலி கேட்க.

Advertisement

“ஏய், அவனை எதுக்கு நீ கேட்குற.. முதல்ல நீ எதுக்கு இங்க வந்த! போடி வெளியே!” என வசந்தா கத்த

கமலியோ புழுவைப் பார்ப்பது போல பார்த்து வைக்க, அவள் பார்வையில் என்ன கண்டாரோ “என் புள்ள உன் கூட வர மாட்டான், போடி வெளிய” வசந்தா கமலியை மிரட்ட

“ண்ணா..” என கமலி குரல் கொடுத்ததில் கர்ணா, செந்தில் இருவருமே “சொல்லு கமலி” ஒன்றுசேர கூறிட

Advertisement

இருவரையும் நிதானமாய் திரும்பி பார்த்து, “கிரியை கடத்த சொன்னா எனக்காக கடத்திட்டு வருவீங்களா” என கேட்க

“எங்க, எப்போனு சொல்லு, அந்த தடிமாட தூக்கிட்டு வந்துடுறேன்” என செந்தில் கூற

“வர மாட்டேன்னு சொன்னானா, கை காலை ஒடிச்சாவது தூக்கிட்டு வந்துடுறேன். நீ ம் னு சொல்லு” என கர்ணா சட்டை கையை மடித்துவிட்டபடி கூற,

அவ்வளவு தான் அவளது அதிகபட்ச விவாதமே.. ‘நான் என் கிரியை கடத்தி கூட செல்வேன். உன்னால் என்ன செய்துவிட முடியும்’ உன் கிட்ட பேசுறதெல்லாம் வேஸ்ட்டு.. என ஒரு பார்வையை விட,

“ஏய் என்ன திமிரா..என்னை மீறி நீ எப்படி அவன் கூட வாழ்றன்னு நான் பார்க்குறேன்” வசந்தா எகிற

“எங்க வாழ்க்கையை முடிவு பண்ண வேண்டியது நாங்க, நீங்க இல்லை” சொல்லிவிட்டு கிரி இருந்த அறைக்கு இவள் விரைய, ‘அட்ரா.. சக்க’ மாமியாருக்கு ஏத்த மருமக..என நினைத்து கொண்டான் செந்தில்.

அறைக்குள்ளே, கமலி தார் தாராய் கிழித்து போட்ட அதே டீசர்ட் இன்று அவன் மார்பில் கிடக்க, கட்டிலில் மல்லாந்து கிடந்தான் கிரி.

மார்பில் கிடந்த டீசர்ட்டை விரல்கள் வருடிக்கொண்டிருக்க, எதிராக சுவற்றில்  மாட்டப்பட்டு இருந்த, கமலியின் போட்டோவில் பதிந்து கிடந்தது இவன் பார்வை.

சிறு வயதிலிருந்து எத்தனையோ இக்கட்டான சூழ்நிலைகளை கையாண்டவனுக்கு அவன் தாயை கையாள்வது கொடுமையிலும் கொடுமையாக இருந்தது.

தன் பிள்ளையை தாயே கொடுமை படுத்தும் அநீதியெல்லாம் எனக்கு மட்டும் தான் நிகழ்கிறதா? முதலில் தன் மகனை கொடுமை படுத்துகிறோம் என அம்மாவிற்கு தெரிகிறதா இல்லையா!

அம்மா கொடுக்கும் கஷ்டங்களை எல்லாம் கொடு கொடு என வாங்கி தோளில் போட்டு கொள்ளவும் முடியவில்லை. இனி கொடுக்காதே என்னால் முடியவில்லை என மறுக்கவும் முடியவில்லை. மறுத்தால், அதை வாங்கி கொள்ள இன்னொருவர் வேண்டுமே! திடீரென சுமையை தோள் மாற்றி கொள்ள வேரொருவரை எங்கே சென்று தேடுவான்.

அப்பாவும் இல்லை, அண்ணன், தம்பி யாரேனும் இருந்தால் தோள் கொடுத்திருப்பானோ என்னவோ!

நிம்மதியாக இருக்கலாம் என சொந்த நாட்டிற்கு வந்தால், கத்தார் வாழ்க்கையே பரவாயில்லையோ என தோன்ற தொடங்கிவிட்டது கிரிக்கு.

சில சுயநலமில்லாத ஆண்களின் வாழ்க்கை, சுயநலமிக்க பெண்களின் கையில் மாட்டி அந்தரத்தில் ஆட வைத்து பந்தாடிக் கொண்டிருக்கின்றன. அதில் கிரியும் ஒருவனே!

கத்தாரிலிருந்து வந்து ஒரு வாரம் தான் ஆகின்றது. இதற்குள் கமலி தனக்கு எத்தனை முக்கியம் என்பதையும் தெரிந்து கொண்டான். தாய்க்கு தான் எத்தனை முக்கியமில்லாதவன் என்பதையும் தெரிந்து கொண்டான்.

தாயை பற்றி எண்ணிக் கொண்டிருந்தவனுக்கு, கமலி என்ற பெயரே இடியை இறக்கியது அவனுள்.

இத்தனை முட்களுக்கு நடுவிலும், மலர்ந்து வாசம் வீசும் அந்த ஒற்றை மலருக்காக தவமிருக்கிறான். நெருங்கவும் முடியாமல், பறித்து தன்னோடு வைத்து கொள்ளவும் முடியாமல், நீ இருக்குமிடத்திலேயே பத்திரமாக இருந்து கொள் என விட்டு வரவும் முடியாமல் நெஞ்செல்லாம் அடைத்து கொண்டு வந்தது கிரிக்கு.

கமலிக்கு நான் என்ன செய்ய போகிறேன்! என நினைக்க நினைக்க  முகம் இறுக துவங்கியது. கண்கள் செவ செவ என சிவந்தது. இப்போவோ, அப்போவோ என கண்ணீரை கொட்ட தயாராய் இருந்தது.

பரந்து விரிந்த அந்த நெஞ்சம் இத்தனை அழுகையையும் அடக்க தானா? மூச்சு முட்ட வெம்பி கொண்டிருந்தது அவன் இதயம்.

கிளிங் என்ற சத்தத்தோடு கதவு திறந்து கொண்டது. அந்த சத்தத்தில் கண்ணீர் தேங்கிய கண்களை கைகளால் மறைத்து  “செந்தில் போ.. இங்க இருந்து.. எதுவும் பேசுற நிலைமையில் நானில்லை” செந்தில் என நினைத்து இவன் கிட்டதட்ட கத்த, கதவு படாரென திறக்கபட்டதில் சுவற்றில் போய் அடித்து திரும்பியது கதவு.

அந்த சத்தத்தில் இவன் வாசலை பார்த்திட, எதிரில் நிழலாடியது. அந்த நிழல் செந்திலுக்கு சொந்தமானதில்லை என உணர்ந்தான் கிரி. ‘கமலி’ கலங்கிய கண்களுக்குள் பிக்செல்லாய் விழுந்தாலும் கமலியை கண்டு சட்டென எழுந்தமர்ந்தான் கிரி.

கலங்கிய கண்களை தோள்களில் அழுந்தத் துடைத்து, விழித்து பார்க்க கொஞ்சம் கொஞ்சமாய் தெளிவானது கமலியின் முழு உருவமும்.

இமை தட்டி விழித்தால் மறைந்திடுவாளோ என திறந்த கண் மூடாமல் பார்த்திருக்கையிலேயே அவனை நெருங்கியது இவள் உருவம்.

கட்டிலில் இவன் அமர்ந்திருக்க, எதிரில் நின்றவள் நிஜம் தானா என இன்னுமே சந்தேகத்துடன் பார்த்திருக்க, கன்னம் பழுக்க வந்து விழுந்தது பளார் என்ற சத்தத்துடன் ஒரு அறை.. ‘அறைக்கு வெளியே நின்றிருந்தவர்கள், கிரி’ என பதற

“விட்டுட்டு போனா, என்னை கொன்னுட்டு போ.. இல்லை நான் உன்னை தேடி வந்து கொல்லுவேன்னு சொன்னேனா இல்லையா!” பேசிக்கொண்டிருந்தவள், அவனின் மறு கன்னத்திலும் பளாரென அறைந்தாள்.

எதற்குமே அசையாமல் இருந்தவன், கமலியின் முகத்தை மட்டுமே இமைக்காது பார்த்திருக்க, நெஞ்சம் முழுக்க அடைத்திருந்த வேதனை முட்டி மோதிக்கொண்டிருந்தது.

“ஏண்டா விட்டுட்டு வந்த.. நான் உனக்கு வேணாமா” சட்டை காலரை இரு கையாலும் பிடித்து கொண்டு ஆக்ரோசமாய் கேட்டவள்

“ஆனால்.. ஆனால்.. நீ இல்லாமல் என்னால இருக்க முடியாதே.. பைத்தியம் ஆகிடுவேன்டா” ஆக்ரோஷமாய் கத்தி கொண்டிருந்தவளின் இடையோடு கைபோட்டு இழுத்து, வெடித்த அழுகையை இவள் வயிற்றில்  புதைத்து கொள்ள, கண்ணீரால் நிறைந்தது அவள் வயிறு. அதிர்ந்து போனாள் கமலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!