Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சீதா கல்யாண வைபோகமே..

சீதா கல்யாண வைபோகமே.. 25 2

 “நாங்க ரெண்டு பேரும் லாஸ்ட் இயர் காலேஜ் படிச்சிட்டு  இருந்தோம் அப்பதான் புதுசாக வந்து ஜூனியர் பொண்ணு தான் மஞ்சூரி ரொம்ப அழகா இருப்பா தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்தா,,  அவளை சில பசங்க ரேகிங் பண்றப்போ நானும் கதிரும் தான் அவளை காப்பாற்றினோம்,..

 அதனால அவ எங்களுக்கு நன்றி சொல்லிட்டு போயிட்டா,ஆனா கதிருக்கு அந்த பொண்ண ரொம்ப புடிச்சியிருந்தது..



Advertisement

 அந்த  பொண்ண அடிக்கடி தேடி போய் பாத்துட்டு வந்தான் கதிர்,  அந்த பொண்ணும் கதிர் கிட்ட நல்லாதான் பேசினா..

Advertisement

 ரெண்டு பேரும் லவ் பண்ணாங்க.

Advertisement

நாங்க  கேம்பஸ்ல   வேலைக்கு செலக்டாகி நாங்க ரெண்டு பேரும் ஃபாரின் போயிட்டோம்,.

Advertisement

 ஃபாரின் போனாலும் அப்பப்போ வந்து மஞ்சரிய பாத்துட்டு தான் வருவான் கதிர்..

 மஞ்சரி படிப்ப  முடிச்ச உடனே கல்யாணம் பண்ணலாம்னு பேசி இருந்தான்,, அதே மாதிரி அவ படிப்பு முடிச்ச உடனே அவங்க வீட்ல போய் நாங்க பேசினோம் அவங்க வீட்ல ஒத்துக்கல,,   கதிர் வீட்டுலையும் ஏத்துக்கல,, நான்தான் அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சேன்..

 அப்ப தான் நானும் கதிரும்  சொந்தமா சிங்கப்பூர்ல கம்பெனி ஆரம்பித்து  இருந்தோம்..

 கதிர்ஹாசனும், மஞ்சரியும் ரெண்டு பேரும் கல்யாணம் ஆகி நல்லா தான் இருந்தாங்க..

 மஞ்சரியும் புதுசா ஒரு கம்பெனில வேலைக்கு சேர்ந்தா..

 வேலைக்கு சேர்ந்த சில மாதத்திலே அவ கர்பமான ..

 அவளால வேலையையும்,, குடும்பத்தையும்  சரியா கவனிக்க முடியல அடிக்கடி கோபப்பட்டு கதிர் கிட்ட சண்டை போடுவா..

 கதிர் ரொம்ப பொறுமையானவன் பொறுமையா தான் போவான்,, மஞ்சரி பிரக்னன்டா இருக்குறதால  தான் இப்படி நடந்துக்கிறான்னு சொல்லி அவனே வீட்டு வேலையெல்லாம் பார்த்தான்,, அவளை ரொம்ப நல்லா பாத்துக்கிட்டான்..

 அவ அடிக்கடி தேவையில்லாம கதிர்கிட்ட சண்டை போட்டா வெளியே கூட்டிட்டு போனு சொல்லுவா கதிரோ முடிஞ்ச அளவுக்கு அவளை வெளியே கூட்டிட்டு போவான்,,

 இருந்தாலும் நாங்க புதுசா பிசினஸ் ஸ்டார்ட் பண்ணதால அவனால அவ கூட அதிகமான நேரம்   ஸ்பென் பண்ண முடியல..

 சண்ட ரொம்ப அதிகமாச்சு நான்தான் ரெண்டு பேருக்கும் போய் சமாதானம் பண்ணி வைப்பேன் என்னை பார்த்தா அவ ரொம்ப பேச மாட்டா அமைதி ஆகிடுவா.

 மஞ்சரி வீட்ல ஏத்துக்காதனால கதிரோடு அம்மா டெலிவரிக்காக சிங்கப்பூர்  வந்து இருந்தாங்க..

 நல்லபடியா  ஆண் குழந்தை பிறந்தது.. குழந்தை பிறந்தவுடன் கொஞ்சம் அமைதியா இருந்தா மஞ்சரி, குழந்தைக்கு ஆறு மாசம் ஆன உடனே வேலைக்கு போறேன்னு சொன்னா .

 கதிரோ வேலைக்கு போக  வேண்டாம் குழந்தையை பார்த்து கிட்டு வீட்டில் இருக்க சொல்ல..

 “என்னை நீ அடிமைப்படுத்துறியா நான் வேலைக்கு போவேன் என்று சொல்லி அடம்  பண்ணி வேலைக்கு போக தயாரானாள் மஞ்சரி.

 ஆறு மாச குழந்தையை வச்சிட்டு  ரொம்ப கஷ்டப்பட்டான் கதிர்,,  அதனால அவங்க அம்மாவை இங்க கூட்டிட்டு வந்து குழந்தையை பார்க்க சொல்ல..

  ஆனா அதுக்கு மஞ்சரி  சம்மதிக்கல குழந்தையை க்ரெஷ்ல விட்டுட்டு போவேன்னு  சொன்ன.

 கதிர் அதுக்கு ஒத்துக்கல..

 சண்டை சண்டை பயங்கர சண்டை ரெண்டு பேரும் கொஞ்ச நாள் பிரிஞ்சி இருந்தாங்க..

 குட்டிகதிரை கதிர்ஹாசன் தான் பார்த்துக் கொண்டிருந்தான்..

 திடீர்னு எனக்கு போன் போட்டான்..

 “என்னடா நான் கேட்டேன்”..

“எனக்கு வாழவே பிடிக்கலடா என் பையன நீ பார்த்துக்கிறியா” என்று கேட்டான்.

 எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல..

 “நான் பாத்துக்குறேன் டா நீ வருத்தப்படாத மஞ்சரி சீக்கிரம் வந்துருவா”  என்று நான் சொன்னேன்.

 “அவ வர மாட்டாடா..

 அவ புதுசா இன்னொரு பையனை மேரேஜ் பண்ண போறான்னு” சொன்னான்.

 “என்னால நம்ப முடியல ஏய் நீ சரியா பார்த்தியா, கேட்டீயான்னு” என்று நான் கேட்டேன்..

 “இல்லடா  அவ இன்னொரு பையன் கூட, ஒரே வீட்டுல தங்கி இருக்கா, அதை நான் பாத்துட்டு தான் வந்தேன் ” என்றான்..

 “டேய் ஒழுங்கா பாத்தியா அவ கிட்ட போய்  பேசுனீயா” என்றேன்.

 “நான் போய் கேட்டேன் டா,, என்று சொல்லிவிட்டு குலுங்கி குலுங்கி அழுதான் கதிர் ஹாசன்”.

 “எதுக்கு இப்ப அழுகுறேன்னு” கேட்டேன்..

 “அவள நான் திருப்தி படுத்துலியாம், அதனால வேற ஒருத்தன் கூட போயிட்டேன்னு , என்கிட்டேய் சொல்லுறடா,, நான் அவளை நல்லா  தான்டா வச்சு இருந்தேன், அவ என்கிட்ட சொல்லி இருக்கலாமே,, என்னால இதை தாங்க முடியலடா அவமானமா இருக்கு” என்று அழுதவனை..

” டேய்  நீ அழாதே அவ போய்ட்டா என்ன,,  நம்ம இன்னொரு பொண்ண பார்த்து உனக்கு கல்யாணம் பண்ணலாமுன்னு” சொன்னேன்.

 “நாலு, அஞ்சு வருஷம் லவ் பண்ணவளே என்னை விட்டுட்டு போயிட்டா,, இன்னொருத்தி வந்து என்னையும், குழந்தையை பார்த்துப்பாலா போடா” என்றவன்  விரக்தியாக பேச..

 “சரி நீ அமைதியா இரு நான் வரேன்” என்று நான் போறதுக்குள்ள அவன் இறந்து போயிருந்தான்.

 “எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல எல்லோருக்கும் சொல்லி வர வெச்சேன்,,.

 கதிர் இறந்தத என்னால தாங்க முடியல..

 ரொம்ப கஷ்டப்பட்டேன் வேதனைப்பட்டேன் என்னால கதிர் இறந்ததிலிருந்து மீண்டும் வரவே முடியல சின்ன வயசுல இருந்து கூடவே இருந்தவனா அவன் இல்லாமல் என்னால் ஒண்ணுமே முடியல பிசினஸ் கூட என்னால பாக்க முடியல..

 குட்டிக்கதிரையும் கதிரோடு அம்மா தூக்கிட்டு போயிட்டாங்க.

 ஒரு வருஷம் கழிச்சு எல்லாத்தையும் கொஞ்சம் மறந்து பிசினஸ் எல்லாம் சரி பண்ணிட்டு, இந்தியாவுக்கு கதிரை பார்க்க வந்தேன்.

 கதிர் வீட்டுக்கு வந்த, அங்க கதிர் அம்மாவும் இல்ல,, கதிரும் இல்லை..

 கதிர்ஹாசனோட அண்ணி மட்டும் தான்  அந்த வீட்டுல இருந்தாங்க.. கதிரை பத்தி கேட்க  அவங்க சொல்லிய பதில் எனக்கு சரியாக படல.

 அதனால தான் பக்கத்துல கதிரை பற்றி  விசாரிச்சேன்.

 கதிர்ஹாசனோட அம்மா அடிக்கடி கோயில் சுற்றுலா போவாங்களாம்,  அதனால கதிர பாத்துக்க முடியலையாம்.

 அதனால பக்கத்துல உள்ள அனாதை ஆசிரமத்தில் கொண்டு போய் விட்டு இருக்காங்க ,, எனக்கு மனசே ஆரல என்  நண்பன் கதிர்ஹாசன் பையனை  எப்படி  அனாத ஆஸ்ரமத்தியில்  விடலாம் என்று கோபம் எனக்கு..

 அந்த அனாதை ஆசிரமத்தை  தேடி போனேன்… என்றவன்..

 கண்மூடி சோபாவில் சாய்ந்து கொள்ள.

“என்னாச்சு ரவி” என்றாள்…

 “வேண்டாம் சீதா” என்றான் கண் கலங்கிய படியே..

 “சொல்லு ரவி என்ன ஆச்சு கதிருக்கு”  என்றாள்.

 “வேண்டாம்” என்றான்  ரவி..

 “நீ சொல்லு கதிர் எப்படி தூக்கிட்டு வந்த சொல்லு” என்றான்..

 ரவி தன்னை சரி பண்ணிக் கொண்டவன்..

 ” நான் அந்த அனாதை ஆசிரமம் இருக்கும் இடத்தை தேடி போனேன்,ஏதோ குழந்தை அழுகிற சத்தம் கேட்டுட்டே இருந்தது.. நான் கதிரை விசாரிச்சு கிட்டு இருந்தேன்,,  அப்பதான் ஒரு ரூம்ல கதிர் இருக்குறத சொன்னாங்க அந்த  ரூம் கதவை திறந்து பார்த்தேன்.

 கதிர்  டிரஸ் இல்லாம இடுப்பில் கயிறு கட்டி வச்சிருந்தாங்க.  அதே இடத்தில்  கதிர்  ரெஸ்ட் ரூம் போயிருந்தான்.

 அவன் உடம்பெல்லாம் அசிங்கமாக இருந்தது, ஒரு  தட்டில் சாப்பாடு போட்டு ஒரு  ஓரமாக வைத்து இருந்தார்கள் அவனுக்கு அந்த தட்டுல சாப்பாடு எடுக்க முடியல அழுதுகிட்டே அந்த தட்டை பார்த்து பார்த்து பசியில அழுதுகிட்டு உட்கார்ந்திருந்தான்.. அதை பார்த்த  எனக்கு  எப்படி இருந்திருக்கும் சீதா,, பசியில அந்த தட்டை பார்த்து  அழுதுட்டு இருந்தவனை பார்த்து, எனக்கு எவ்வளவு வேதனையா இருந்துச்சு தெரியுமா..

 அப்படியே அவன பாத்துட்டு உட்கார்ந்து அழுதேன், என்னை  பார்த்துட்டு பசியில அந்த தட்டை எடுத்து தர சொல்றான் ஜாடையில்  என்னிடம், அப்போ அவனுக்கு இரண்டு வயசு இருக்கும்.

 தூக்கிட்டு வந்துட்டேன் யாரு என்ன சொன்னாலும் நான் கதிர விடுறதா இல்லை,,  என் நண்பன் பையனை என் பையனை போல வளர்க்க ஆரம்பிச்சிட்டேன்,, வெரி கோபம் ஏன் இந்த குழந்தைக்கு இப்படி பண்ணிவிட்டார்கள் தாயும் இல்லை தந்தையும் இல்லை..

 வெருப்பு கோபம் பெண்களைப் பார்த்தாலே பிடிக்காம போயிருச்சு,, அவங்க அவங்க, ஆசைக்கு குழந்தைகள் பலியா?, மஞ்சரி பண்ணது தப்புன்னா? என் நண்பன் பண்ணது அத விட  பெரிய தப்பு, அவ போயிட்டா என்ன, இவனாவது குழந்தையை நல்ல படியா, பார்த்திருக்கனுமில்லையா,..

 எல்லா பெண்களும் சுயநலவாதி என்று நினைத்துவிட்டேன் சீதா உன்ன பாக்குற வரைக்கும்..

 என்றவன்  சீதாவை அணைத்துக் கொண்டு அழுதான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!