ராமமூர்த்திக்கு ஒரே மகன் ரிஷிநந்தனுக்குத் தான் நாளை திருமணம்…
தன் மனைவி சுதாவை திட்டிக் கொண்டிருந்தார் ராமமூர்த்தி.
“என்னதான் நெனச்சிட்டு இருக்கான் உன் மகன் நாளை கல்யாணத்த வச்சி கிட்டு இன்னும் வந்த பாடு இல்ல, அவன் கிட்ட நீ நல்லா கேட்டியா? அவன் இஷ்டப்பட்டு தான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டானா”? என்றார் மனைவி சுதாவை பார்த்து. .
“ஏங்க அவன் சொல்லி தான் நாமலே பொண்ணை இங்கே பார்த்தோம் இப்ப வந்து இப்படி கேட்டா எனக்கு என்ன தெரியும்”?..
“அப்ப ஏண்டி உன் பையன் இன்னும் வரல”?.
“அவன பத்தி தான் உங்களுக்கு தெரியுமே பிசினஸ், பிசினஸ் , வந்துருவான்” என்றவர்..
மகனுக்கு சுதா ஃபோனில் அழைக்க..
போனை எடுத்த ரிஷி.
“அம்மா இன்னும் டூ ஹவர்ஸ்ல வந்துடுவேன்” என்றவன் போனை கட் பண்ணிவிட்டான்…
நாம பேசறதுக்குள்ள கால கட் பண்ணிட்டான் பாரு..
அப்பனா மாதிரியே வந்து இருக்கான் மகன். என்று கணவனையும், மகனையும் திட்டிய சுதா கல்யாண வேலையை பார்க்க..
“என்ன உன் மகனுக்கு ஃபோன் போட்டியா”? என்றார், ராமமூர்த்தி.
” பண்ணிட்டேன், பண்ணிட்டேன் இன்னும் ரெண்டு மணி நேரத்துல வந்துடுவாணாம்” என்றார்.
“எங்க இருக்கான்னு கேட்டியா எந்த ஊர்ல இருக்கனாம்”. என்றவரை சுதா முறைக்க..
அப்படியே அப்பனும் , மகனும் எல்லாத்தையும் கேட்டவுடனே எல்லாத்தையும் நம்ம கிட்ட சொல்லிடுவாங்க, ஆளை பாரு என்று கணவனை முறைத்தவர்..
“போன் போட்டா அம்மா என்னம்மா எதுன்னு கேட்கணும், டூ ஹவர்ஸ்ல வரேன்னு சொல்லி போனை கட் பண்ணுறவன்கிட்ட என்னத்த கேட்க சொல்றீங்க,, உங்க மகன் வருவான் உட்காந்து நல்ல விசாரிச்சு கேட்டுக்கோங்க,, எனக்கு ஆயிரம் வேலை இருக்கு,, என்னை விடுங்க சாமி” என்று கையெடுத்து கும்பிட்டவர் கல்யாண வேலையை பார்க்க சென்றார்.
“உன் மகன் எங்க இருக்கான்னு தாண்டி கேட்டேன் அதுக்கு ஏண்டி இப்படி பண்ற” என்றார் மனைவியை பார்த்து..
சுதா கல்யாண வேலை பார்க்க கீழே வந்திருந்தார், அவருக்கு கல்யாண வேலைகள் தலைக்கு மேல் இருந்தது.. நேற்று வரை அவருக்கு எந்த பிரச்சனையுமில்லை மொழி கூட இருந்து, உதவி செய்தாள், இன்று அவள் கிளம்பி இருக்க, அவருக்கு ஒரு கை உடைந்தது போல இருந்தது, அவர்கள் சென்னையில் இருந்து வந்து, ஒரு வாரம் ஆகிறது.
இந்த ஊரில் அவருக்கு அவ்வளவு பழக்கமில்லை..
ஒவ்வொன்றுக்கும் கேட்டு விசாரித்து ஆட்களை அனுப்பி வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்.
கல்யாணம் எல்லாம் பெண் வீட்டுக்காரர்களே செய்கிறார்கள் தான், இருந்தாலும் அவர்களுக்கு என்று வாங்க சில பொருட்கள், வேலைகள் இருக்குமே..
அதே ஊரைச் சேர்ந்த அந்த ஊரின் கோவில் கணக்கு தாரர் மகள் அருள் ஜோதியைத்தான் ரிஷி நந்தனுக்கு திருமணத்திற்க்கு பேசி முடித்திருந்தார்கள்..
ரிஷிநந்தன் அருளை பிடித்து தான் பெண் கேட்க சொன்னான்..
அவன் கேட்க சொல்லி மூணாவது மாதத்தில் இதோ நாளை திருமணம் என்று முடிவாகி அனைத்தும் வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது.
ரிஷி அவன் நண்பர்களோடு டெல்லியிலிருந்து காரில் வந்து கொண்டிருந்தான்..
ரிஷி ஒரு பில்டிங் பில்டர்ஸ் வேலை செய்து கொண்டிருக்கிறான்..
பெரிய பெரிய மல்டி ஸ்பெஷல் அடுக்கு மாடி கட்டிடம் கட்டும், தொழில் செய்து வருகிறான்.
ராமமூர்த்தியும் சுதாவும் சென்னையில் இருக்க இவனோ ஊரு, ஊருராய் சுற்றிக் கொண்டிருக்கிறான்.
அவனுக்கு என்றும் தனியாக எந்த ஊரிலிருந்து பிசினஸும் இல்லை.
இன்ஜினியரிங் படித்து முடித்து பாரின் சென்று, பல அடுக்கு கொண்ட மாடியை கட்ட படித்து வந்தவன்,, இங்கே பல பில்டர்ஸ் பழக்கம் வைத்து பல ஊர்களில் பில்டிங் கட்டி கொடுத்து வருகிறான்..
முதலில் தட்டு தடு மாறியவன் இந்த இரண்டு வருடங்களாக இவனுக்கு என்று ஒரு நல்ல பெயர் உள்ளது..
எந்த ஊர்காரர்களும் இவனிடம் வந்தால் போதும் அந்த மண்ணை சோதித்து விட்டு எத்தனை மாடி வீடு கட்டலாம் எவ்வளவு பெருசாக கட்டலாம் என்று அழகாக பிளான் போட்டு கட்டித் தந்து விடுவான்..
ராமமூர்த்தியும் பில்டர்ஸ் தான் , தந்தையை போலவே மகனும் அதே தொழிலில் உள்ளான்.
ராமமூர்த்தி இரண்டு, மூன்று மாடி பில்டிங் என்று சின்னதாக கட்டி கொடுத்துக்கொண்டு இருக்க.. ரிஷியோ 25 மாடி 30 மாடி 10 மாடி என்று பெரியதாக கட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறான்…
கனவுகள் மின்ன தன் காதலியை திருமணம் முடிக்கப் போகும் சந்தோசத்தில் ரிஷி வந்து கொண்டு இருந்தான்.
அவனின் நண்பர்கள் அவனை கேலி கிண்டல் செய்து கொண்டே வர.
அவன் கல்யாணம் நடப்பதிற்குள் அவனின் அனைத்து வேலையும் முடித்து விட்டு வர. மிகவும் டயர்ட் ஆக இருந்தான்..
சீட்டில் கண் மூடி சாய்ந்திருக்க அவனை கேலி செய்து கொண்டே அவனின் நண்பர்கள் வந்தனர்..
அவனோ மெல்ல சிரித்துக் கொண்டே அருளை நினைத்துக் கனவு கண்டுக்கொண்டு வந்தான்.
அவளைப் பார்த்து இரண்டு வருடமாகின்றது, அவளை தனக்கு கல்யாணத்துக்கு பேசி உறுதி செய்து, பூ வைத்த நாளன்று அவளை பட்டு புடவையில் தன் அம்மா தனக்கு அனுப்பிய அருளின் புகைப்படத்தை தன் போனில் பார்த்தவனுக்கு வெட்கம் வந்தது.
அருள் என்று மனதில் ஜபம் போல அவள் பெயரை சொல்லிக்கொண்டிருந்தவனுக்கு..
எப்போதுடா நாளை திருமணம் முடியும்,, எப்போது அருளை பார்ப்போம் என்று ஆவல் தோன்ற..
இன்னும் ஒரு நாள் தானே என்று மனதை அடக்கி கொண்டிருந்தான்.
அவள் பார்வை வீச்சில் இரண்டு வருடமுன் விழுந்தவன், இன்னும் எழவில்லை.
அப்படி அவன் மனதில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறாள் அருள்,..
அருள் ஜோதி..
அவள் பெயர் அருள் என்று தான் முதலில் இவனுக்கு தெரியும்..
கல்யாணம் பத்திரிக்கையில் அவளின் முழுபெயரை பார்த்த போது தான் அவள் பெயர் அருள் ஜோதி என்று தெரியும்.
அவளின் முழுபெயரை தெரிந்தவுடன் அவளுக்கு ஜோ என்று செல்ல பெயரும் வைத்து மனதில் அழைத்துக்கொண்டிருந்தான்..
இந்த கிராமத்தில் இப்படி ஒரு தேவதையா என்று தான் அவன் முதல் பார்வையில் அவளை பார்த்தது.
“ஓய் என்ன சைட் அடிக்கிறியா?” என்று தான் அவள் இவனிடம் முதல் கேள்வி கேட்டது..
“ஓய் உன் பெயர் என்ன”? என்று முதன் முதலில் அவளைப் பார்த்து இவன் பேசியது ஞாபகம் வர..
இருவரும் அப்படி ஒன்றும் பேசி பழகி காதலை பரிமாரி கொள்ளவில்லை.
சில நாள் பழக்கம் தான், ஒரு சில வார்த்தைகள் மட்டுமே அவர்கள் உரையாடலாக இருக்க..
அருளின் பார்வையை வைத்து அவளை கண்டு கொண்டான் ரிஷி..
அருளுக்கும் அப்படித்தான்..
இதோ பெரியவர்களா நிச்சயம் செய்து நாளை கல்யாணம் என்று இருக்க,, தன் காதல் நிறைவேறிய கனவுகளோடு வந்து கொண்டிருந்தான் ரிஷி…
“டேய் கனவு கண்டதெல்லாம் போதும் எங்களுக்கு ஒரு டீ யை வாங்கி கொடு” என்று அவன் நண்பர்கள் கேட்க.
“நல்ல கடையை பார்த்து நிப்பாட்டுங்கடா” என்றான் ரிஷி..
ரிஷிநந்தன் அதிகம் பேசுவது கிடையாது, தேவைக்கு பேசுவான்,
ஆனால் அருள் அப்படி இல்லை நன்றாக பேசுவாள், சிரித்து சிரித்து பேசுவாள், குதர்க்கமாக பேசுவாள் பைத்தியம் பிடிக்க வைப்பாள், அடவடி சரவெடி.
அவளின் எதார்த்தமான பேச்சு அழகான சிரிப்பு அதுவே அவளை முதலில் ஈர்த்தது ரிஷிக்கு..
அதிகம் பேசமாட்டான் ரிஷி.
ஆனால் அருள் அப்படி கிடையாது..
“டேய் அந்த டீக்கடை நிப்பாட்டுங்கடா” என்று ரிஷி நண்பன் சொல்ல..
அனைவரும் இறங்கி டீ யை வாங்கி பருகிக் கொண்டிருந்தனர்..
ரிஷியின் பக்கத்தில் வந்த ஒரு சிறிய பெண் இந்தாங்கள் மாமா இன்று ஒரு அழகிய பூங்கொத்தை ரிஷியிடம் கொடுக்க.
அந்த பூங்கொத்தை வாங்கி பார்த்தவன் ” நன்றி யாரு குடுத்தா”? என்று கேட்பதற்குள் அந்த சிறுமி ஓடியிருந்தாள்.
அழகாக இருந்தது அந்த பொக்கே,, பார்ப்பதற்கு ஏதோ இந்த ஊரில் நுழைந்தவுடனே அவனுக்கு ஒரு கிடைத்த வரவேற்பு என்று தோன்ற.. அந்த பூங்கொத்தை பார்த்து தடவிக் கொண்டிருந்தேன் அதில் “சாரி.. வாழ்த்துக்கள்” என்று எழுதி இருக்க..
குழம்பி போனான் ரிஷி, இதை யாரு எனக்கு கொடுத்தா? எதுக்கு சாரி, வாழ்த்துக்கள் என்றவன், தனக்கு பொக்கே கொடுத்த சிறுமியை தேடினான், எங்கேயும் அந்த குட்டி பெண் இருப்பதாக தெரியவில்லை..
தன் தோளை குழக்கி கொண்டவன்.
சூடான தேனீரை பருகினான்.
அந்த சிறுமியிடம் பொக்கையை கொடுத்தவளோ கனத்த மனதுடன், தன் கண்ணீல் அவனை நிறைத்த படியே திருநெல்வேலி எல்லையை கடந்து சென்று கொண்டிருந்தாள்.
ரிஷி தன் நண்பர்களே, ஒரு நல்ல ஹோட்டலில் தங்க வைத்தவன் வீடு நோக்கி சென்றான்..
மகனை ஆரத்தி எடுத்து உள்ளே விட்டார் சுதா..
ராமமூர்த்தி தான் மகனை பார்த்த முறைத்து நின்றார்..
சுதா கணவனை பார்த்து முறைத்து “முறைக்கிறதுக்கு எல்லாம் நேரமில்லை இங்கே, ரிஷி வேகமாக குளிச்சிட்டு வர சொல்லுங்க பூஜை முடிஞ்சு மண்டபத்துக்கு கிளம்பனும்” என்று அவர் சொல்ல..
ரிஷி அவனுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று குளித்து வந்தான்.
சுதா பூஜைக்காக அனைத்தையும் ரெடி பண்ணி வைத்திருந்தார் சொந்த பந்தங்கள் அனைவரும் இருக்க,,,
பொண்ணுக்கு வாங்கிய புடவை, தாலி, நகை, பையனுக்கு வாங்கிய உடை அனைத்தும் அங்கே இருக்க அவர்கள் பூஜை செய்து மண்டபத்துக்கு கிளம்பி இருந்தார்கள்..
மண்டபம் பெரிய மண்டபமாக பிடித்திருந்தார்கள் அருள் ஜோதி வீட்டினர்..
ரிஷிக்கே ஆச்சர்யம் இந்த ஊரில் இப்படி ஒரு மண்டபமா சென்னையில கூட இவ்வளவு பெரிய மண்டபம் கிடைக்காது என்று மண்டபத்தை சுற்றி பார்த்தான்..
மண்டபத்தின் முன்னாடியே பெரிய பெரிய பேனர்களில் ரிஷியும் அருள்ஜோதியும் இருக்கும் புகைப்படங்கள் பேனராக இருக்க.
அருள்ஜோதியை பார்த்து ரசித்துக் கொண்டே தான் உள்ளே வந்தான்…
மாப்பிள்ளை வந்ததும் அந்த மண்டபமே கொஞ்சம் சத்தமாக இருந்தது மாப்பிள்ளை வந்துவிட்டார் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க, என்று சத்தம் எழுப்ப..
அருள் ஜோதியின் அத்தை ஒருவர் ஆரத்தி எடுத்துக்கொண்டு வந்தவர்.
முறையாக ரிஷி நந்தனை ஆரத்தி எடுத்து மண்டபத்தின் உள்ளே அழைத்து சென்றார்கள்.
கொஞ்சம் கூட்டமாகத்தான் இருந்தது..
ரிஷி மணமகன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
இன்னும் அவன் அருள்ஜோதியிடம் போனில் பேசி இருக்க வில்லை..
அவளின் நம்பர் கூட அவனிடம் இல்லை..
பெண்ணின் தம்பி குகன் வந்து மச்சான் என்ற முறையில் ரிஷியிடம் “நான் அருள் தம்பி குகன், ஏதாவது வேண்டும் என்றால் என்னிடம் சொல்லுங்க மச்சான்”, என்ற இளைஞனை பார்த்த ரிஷி,
மெதுவாக அவனிடம் “உங்க அக்காவை நான் பார்க்கணும், பேசணும்” என்றான்..
“இப்ப பார்க்க முடியாதே மச்சான் சொந்தக்காரங்க எல்லாம் அக்கா கூட இருப்பாங்களே, போன்ல வேணா பேசுறீங்களா, அக்கா போன் நம்பர் தரேன்” என்றான்.
“அதை முதலில் கொடுடா என் மாப்பிள்ளை” என்றவன் போன் நம்பரை வாங்கி ‘ஜோ மை லவ்’ என்று சேவ் செய்தவன்.
உடனே அருளுக்கு அழைக்க அவளோ, போனை தன் ஹேன் பேக்கில் வைத்திருக்க.
போன் ரிங் கேட்க வில்லை அவளுக்கு.
பல முறை அருளுக்கு ரிஷி அழைக்க.அருளுக்கு போன் சத்தம் கேட்க வில்லை…
ரிஷிக்கு அவளிடம் பேசி ஆக வேண்டும் ஆசை வர.. குகனை அழைத்து இருந்தான்.
“உங்க அக்கா போன் போட்டா எடுக்க மாட்டேங்குறா” என்றான் ரிஷி…
“அப்படியா மச்சான்”, என்றவன் அக்காவுக்கு அழைக்க..
ரிங் போயிக்கொண்டே இருக்க, அருள் போனை எடுக்க வில்லை..
“நான் போய் சொல்லுறேன் மச்சான்”, என்றவன்.
மணமகள் அறைக்கு சென்றவன், அக்காவின் காதில் “மச்சான் போனில் கூப்பிடுறார், எடுத்து பேசு, உன் போன் எங்கே” என்று கேட்க.
” போனா, அது என் ஹேன் பேக்கில் இருக்குடா” என்றாள்.
அக்காவின் ஹேன் பேக்கிலிருந்த போனை எடுத்து கொடுத்தவன், “பேசு” என்பது போல் ஜாடை காட்டி விட்டு செல்ல…
இந்த கூட்டத்தில் எப்படிடா பேச என்றவளுக்கு ஏசி ரூம்பிலும் வேர்த்தது…
அழகுக்கலை பெண்கள் அருளை அலங்காரம் பண்ணிக்கொண்டிருக்க, அவளின் அறையில், சொந்தம் பந்தம், தோழிகள் என்று பலபேர் இவளை பார்த்துக்கொண்டிருக்க.
போன் அடித்தது, போனை ஆன் பண்ணி எப்படி பேச, சுத்தி இத்தனை பேர் இருக்கிறார்களே என்று யோசித்தாள்.
போன் மீண்டும் மீண்டும் ஒலிக்க..
ரிஷி என்னை தப்பாக நினைத்துக் கொள்வாரே என்று நினைத்தவள்.
“ஒரு நிமிஷம்” என்று அழகு கலை பெண்ணிடம் சொன்னவள்.
போனை ஆன் பண்ணி தன் காதில் வைத்து,,
“ஹலோ ஹலோ கேட்குதா” என்று காது கேட்காது போல் பேசிய படியே வெளியில் செல்ல,,..
“ஜோ” என்றிருந்தான் ரிஷி அவளை.
அவனின் ஜோ என்று அழைப்பு அவள் உயிர் வரை செல்ல..
“ஹலோ” என்றிருந்தாள் அருள் ஜோதி..
“ஜோ உன்னை பாக்கனும் டா” என்றான்..
அவளோ அவனிடம் என்ன பேச, என்று தெரியாமல் முளித்த படியே நிற்க…
“ஜோ உன்னை பார்க்க ஆசை இருக்கடா, நீ எங்கே இருக்க. ” என்றான்.
அவளோ “ம்ம், ம்ம்” என்று மட்டும் பேச..
“பக்கத்துல ஆளுங்க இருக்காங்களா” என்றான்.
அவளோ “ஆமாம்” என்றாள்.
“அதெல்லாம் எனக்கு தெரியாது, நான் இப்பவே உன்னை பார்க்கனும்” என்றான்..
அருளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை., இவளோ மேல் மாடியில் இருந்தாள், மணமகள் அறை சின்னதாக இருக்க, மாடியில் உள்ள பெரிய அறையில் இருந்தாள்..
மணமகன் அறையில் ரிஷி இருந்தான்.
அவனின் தவிப்பை உணர்ந்தவள்.
“ஒரு நிமிசம்” என்றவள்.. போனை அனைக்காமலே, அறையில் உள்ள பெண்களை பார்த்து.
“சித்தி என் பிரண்ட், ஒருத்தி கீழே என்ட்ரன்ஸ்ல இருக்க நான் கூட்டிட்டு வர்ரேன்”, என்றவள்.
போனில் ரிஷியிடம் “நான் என்ட்ரன்ஸ் வர்ரேன்” என்று கூறி செல்ல..
ரிஷி அவன் அறையிலிருந்து வெளியில் வந்தான்.
ரிஷியின் கண் மண்டப வாசல் பக்கம் நோக்கி சென்றது,..
மாடியில் இருந்து வேகமாக வந்தாள் அருள்..
பட்டு புடவை மட்டும் அணிந்து பாதி அலங்காரம் மட்டும் முடித்திருக்க.
வேகமாக வந்தவள் மண்டப வாசலில் நிற்க..
அவளின் போன் ஒலித்தது “கார் பார்க்கிங் வா, இங்கே பேச முடியாது” என்று..
“சரி” என்றவள் கார்பார்கிங் செல்ல.
மகள் வேகமாக நடந்து வருவதை பார்த்த தேவகி, “என்னடி இங்கே”? என்று கேட்க.
“அது அது” என்று உளரியவளை. பார்த்தவர்.
“நீ எதுக்கு இப்போ கீழே வந்த”?, என்றார், “அது ரிஷி மச்சான் பேச கூப்பிட்டாங்க”..
ரிஷி என்று முதலில் முளித்தவர்.
“மாப்பிள்ளையா”?, என்றார்,
அவள் “ஆமாம்” என்று தலையாட்ட…
அவர் கையில் இருந்த சூஸ் டம்புளரை மகளின் கையில் கொடுத்தவர்,, “மாப்பிள்ளைக்கு கொடுத்து, பேசிட்டு சீக்கிரமா வந்திரு” என்று மகளின் கன்னத்தை தொட்டு தட்டி விட்டு தேவகி செல்ல.
அருளுக்கு எந்த தடையும் இல்லாமல் ரிஷியை பார்க்க ஆசையாக சென்றாள்..