Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சம் ஏங்குதே..

நெஞ்சம் ஏங்குதே.. 7 2

டைம் பார்த்தான் இரவு  எட்டு மணி,..

 தந்தை தாய்க்கு போனில் குகன்  அழைத்தான்.



Advertisement

 அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கேட்க.

 அழைப்பை  ஏற்றவுடன் ” எங்கம்மா இருக்கீங்க” என்றான்

Advertisement

Advertisement

“நாங்கள் சென்னையில பிளைட் ஏறிட்டோம் பா குஜராத்திற்கு இன்னும் இரண்டு மணி நேரத்தில் வந்து விடுவோம்”என்று அவர் சொல்ல.

“நீங்க திருநெல்வேலி  போகலையா” என்றான்.

Advertisement

“மொழி தான் சென்னையில இருக்க சொன்னா பா” என்று தேவகி   சொல்ல…

 “சரி சீக்கிரம் வாங்க”  என்றவன் போனை வைத்திருந்தான்..

 அவன் நின்றிருக்கும்  தோரணையை பார்த்து ரிஷிக்கு  கஷ்டமாக இருக்க,

 ராமமூர்த்தி வெளியே வந்தார் மகனை பார்க்க,  “டேய் அருள்மா உன்ன கேட்கிறா,  சீக்கிரம் வா”என்று அவர் கூப்பிட்டவர்.

குகன் நின்று இருப்பதை  பார்த்து “நீ எப்ப வந்தா குகா, உள்ள வாப்பா” என்றார்  ராமமூர்த்தி.

அவன் கண்களை துடைப்பதை பார்த்தவர்.

ரிஷியை  பார்த்து “விசயத்தை சொல்லிட்டியா” என்று கேட்க.

 ஆமாம் என்பது போல் மகன் தலையாட்ட.

குகன் தோளை  தட்டிக் கொடுத்தவர்.

” அக்காவிற்கு விஷயம் தெரியாது, அவ நல்லா இருக்குற மாதிரியே  பேசிறு” என்றார்.

சரி என்று குகன் உள்ளே வர..

 ஒரு குழந்தையை தன் பக்கத்தில் படுக்க வைத்து தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் அருள்ஜோதி.

 குகன் அமைதியாகவே உள்ளே வந்தான்.

  தம்பியை பார்த்தவுடன் “டேய் வாடா”  என்றாள் ஜோதி. அவன் அமைதியாகவே நடந்து வர.

 “வா வந்து குழந்தையை பாரு” என்றாள்  மெதுவாக.

 மனது கல்லாக்கி கொண்டு மெல்ல சிரித்தபடியே  அக்காவின் அருகில் வந்தான்.

 ஆனால் என்ன  கட்டுப்படுத்தியும் கண் கலங்கி இருந்தது  அவனுக்கு.

 அவன் சந்தோஷத்தில் கலங்குகிறான் என்று புரிந்து கொண்டு அருள்ஜோதி “டேய் அழாம பாருடா குழந்தையை” என்றாள்..

 கண்களை துடைத்தவன் கைகளை நீட்ட.

 சுதா குகன்  பிடித்துக் கொள்ளுமாறு குழந்தையை அவன் கையில்  கொடுத்தார்..

 குழந்தை பார்த்தவன்  மெல்ல சிரிக்க.

“அப்பா, அம்மா எப்போ வர்றாங்க” என்றாள்.

 “இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க” என்றான்.

 “மொழி வர்றாள டா, நான் மொழியை பாக்கணும் அவளுக்கு போன் போட்டு வர சொல்லு” என்றாள் அருள்ஜோதி..

 “சரிக்கா” என்றவன்  குழந்தையை  சுதாவிடம் கொடுத்துவிட்டு வெளியில் சென்று மொழிக்கு போனில் அழைக்க..

 அவளோ உற்சாகமா தம்பி  அழைப்பை ஏற்றவள்.. “டேய் ஹாஸ்பெட்டல்  போயிட்டீயா குழந்தையை பார்த்தீயா, அக்கா எப்படி இருக்கா”?.என்று கேட்க..

 “அக்கா, நீ எப்ப இங்க வர” என்றான்.

 “நான் எப்படி  டா அங்க வர முடியும் ரிஷி இருப்பாரே, உனக்கு எல்லாம் தெரியும் தானே டா”  என்று கூற.

 “அக்கா நான் சொல்றத அமைதியா கேளு அழக்கூடாது, கத்தக்கூடாது,  பொறுமையா கேளு, நான் சொல்றத புரிஞ்சுக்கோ சீக்கிரம் கிளம்பி வா” என்றான்.

 “என்னால ரிஷியை   நேருல பேஸ் பண்ண முடியாது டா என் நிலைமை நீ புரிஞ்சுக்கோ குகா, நான் ரிஷி முன்னாடி வர முடியாது” என்றாள்..

“அக்கா இங்க  இருக்கிற நிலைமை புரிஞ்சுக்கோ..

 ஜோ”, என்றவனுக்கு அழுகை வர.

 “டேய் என்னாச்சு ஏன் அழுவுற”? என்றால் அருள்மொழி.

 “பெரிய அக்கா” என்றவன் அழ.

 “டேய் அழாதடா எனக்கு பயமா இருக்கு எதுக்கு அழுகுற”?.

 பெரியா  அக்காவுக்கு ஆக்சிடென்ட் ஆகி தான் குழந்தைகளை எடுத்திருக்காங்க.

 இப்ப அக்கா நம்மல விட்டு போயிடுவா போல..

 நீ வாயேன்” என்றான்.

 “என்ன குகா சொல்ற சுதா அத்தை குழந்தை பிறந்து   ஜோதி நல்லா இருக்காங்கன்னு தானே சொன்னாங்க” என்றாள் மொழி

 ” அவ இப்ப கூட நல்லா தானே என்கிட்ட   பேசினா,  ஆனா இன்னும்  கொஞ்ச நேரம் தான் இருப்பா இன்னைக்கு விடியற்காலை அதுக்குள்ள எல்லாம்  முடிஞ்சிரும் நீ மொழி” என்றான்..

 “டேய் நீ சொல்லு சுத்தமா புரியல” என்று சொல்ல, டாக்டர் சொல்லியதை  மடமடவென்று அவளிடம் சொல்ல..

 “உண்மையா  தான் சொல்றியாடா” என்று கதறி அழுதாள் மொழி.

 “அக்கா அழுவதற்கு இது நேரமில்லை உனக்கு அக்கா பார்க்கனுமுன்னா  சீக்கிரம் கிளம்பி வா” என்று கூற.

 ” என்னால் எப்படிடா அவளை வந்து பார்க்க முடியும், நீ உண்மை தான் சொல்லுறீயா டா”, என்று அவள் மீண்டும்  அழ.

அந்த நேரம் ராமமூர்த்தி வெளியில் வர.

 “இராமமூர்த்தி மாமா கிட்ட வேணா கேட்டுப்பாரு” என்றவன் ராமமூர்த்தியிடம்  குகன் ஃபோனை கொடுக்க.

 போனை வாங்கிய ராமமூர்த்தி “மொழி” என்றார்.

 “மாமா குகன்  சொல்றது எல்லாம் உண்மையா’? என்றால் கண்ணில் நீரோடு.

 “கடைசியா உன்  அக்காவை  வந்து ஒரு தடவை வந்து  பார்த்துட்டு போயிருமா” என்று அவரும் சொல்ல.

 “ஐயோ எல்லாரும் இப்படி சொல்றீங்களே அவளுக்கு ஒன்னும் ஆகாது மாமா” என்றாள்..

 “ஏத்துக்கிறது கஷ்டமா தான் ம்மா இருக்கும் கொஞ்சம் சீக்கிரம் வாயேன் என்றார்.

 “என்னால முடியாது மாமா என்னால முடியவே முடியாது மாமா” என்றவள்  போனை அனைத்து வைத்துவிட்டாள்.

 “என்னாச்சு மாமா” என்று ராமமூர்த்தியிடம் குகன் கேட்க.. “போனை ஆஃப் பண்ணிட்டு அழுவுது போலப்பா”  என்றார்…

 சரி சிறிது நேரம் கழித்து கூப்பிடலாம் என்றான்…

 சுதாவும், அருள்ஜோதியும் பேசிக்கொண்டே இருந்தனர் ரிஷி அருள் ஜோதியின் பக்கத்தில் சேர்  போட்டு அமர்ந்திருந்தான்.

அவ்வப்போது அவளின் இதயத் துடிப்பை மானிட்டரில் பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.

 அது சரியாகத்தான் துடித்துக் கொண்டிருந்தது..

 குழந்தைகள் அமைதியாக தூங்கிக்கொண்டிருந்தனர்…

 சரியாக 11 மணிக்கு அருள் ஜோதியின் பெற்றோர் வந்தனர்.

 தூங்கிக்கொண்டு  இருக்கும் மகளை  பார்த்தவர்கள் குழந்தகளை பார்த்து சந்தோஷபட்டு.

 குழந்தையை தூக்கி வைத்து கொஞ்சி கொண்டிருந்த  தாய் தந்தை சத்தம் கேட்டு மெல்ல கண்விழித்தாள் அருள்ஜோதி.

 மகள் கண் முழித்ததையும் பார்த்தவர், அவளின் தலைகோத வர, அப்போது தான், மகளின் தலையில் உள்ள கட்டை பார்த்தவர்கள், “என்ன தலையில கட்டு, என்னடா ஆச்சு” என்று கேட்க.

 “ஒன்னும் இல்லப்பா சின்ன கட்டு தான் சரியா போயிடும்” என்றாள் அருள் ஜோதி..

 “இவ்ளோ பெரிய கட்டா இருக்கு சின்ன ஆக்சிடென்ட் சொல்லுற என்றனர் ஜோதியின் பெற்றோர்.

 “அது ஒன்னும் இல்லப்பா என்று சொல்லும் போதே மூச்சு வாங்கியது” அருள்ஜோதிக்கு.

 “என்ன பண்ணுது ஜோ, என்று முதலில் அவள் அருகில் வந்தது ரிஷி தான்.

 “எனக்கு ஒன்னும் இல்லை  மூச்சு வாங்குது தண்ணி வேணும் தண்ணி தாங்க” என்று கேட்க.

 அங்கே உள்ளே நர்சிடம் கேட்டான் “தண்ணி கொடுக்கலாமா” என்று.

 “கொஞ்சமா கொடுங்க ரொம்ப கொடுக்காதீங்க”  என்றாள் நர்ஸ்.

ரிஷி  மானிட்டரை பார்க்க அதுவோ சர சர  சரவென இறங்கியது.

 “நீ கொஞ்சமா தண்ணீர் குடி” என்று கொஞ்சமாக தண்ணீர் ரிஷி அவளுக்கு கொடுக்க,  அதை குடித்தாள் ஜோதி..

 “மொழி எங்கப்பா மொழி வரலையா  என்று ஐயப்பனை பார்த்து   கேட்டாள் அருள்ஜோதி…

 “அவள்  குழந்தைக்கு பெயர் வைக்க வரேன்னு சொன்னமா இப்ப வர முடியாதுன்னு சொல்லிட்டா” என்றார் தேவகி.

 “எனக்கு இப்பவே  அவளை பார்க்கணும் வர சொல்லுங்க” என்றளுக்கு   மூச்சு  வாங்கிய படியே பேச.

 “உனக்கு ஏன்  இப்படி மூச்சு வாங்குது டாக்டரை வர  சொல்லுங்க” என்று தேவகி கத்த.

 ஐயப்பனுக்கு ஒன்றும் புரியவில்லை.

 எதுக்கு மகளுக்கு  இப்படி மூச்சு வாங்குது என்றே  அவரும் பார்த்திருந்தார்.

 “ஏங்க போங்க டாக்டர் கூட்டிட்டு வாங்க பாப்பாக்கு மூச்சு வாங்குது” என்று தேவகி  சொல்ல.

 சுதாவும்  பயந்தார் ஏன் இப்படி மூச்சு வாங்குது மருமகளுக்கு  என்று.

 ஐயப்பன் வேகமாக சென்று அங்க உள்ள டாக்டரை அழைத்து வர.

தேவகி  “அருளே, அருளே” என்று கத்தும் சத்தத்தை தான் அவர் கேட்டார்..

 சாகும்போது கூட ஜோதியின் வாயில் மொழியை பார்க்கணும், மொழியை வர சொல்லுங்க அத்தான்” என்று அவள் கேட்க.

 குகன் முகத்தைத்தான் ரிஷி பார்த்தான்.

 உடனே குகன் அருள் மொழிக்கு அழைக்க.

 போனை எடுத்த மொழி “அக்காக்கு என்னடா? அக்கா நல்லா ஆயிட்ட தானே”? என்றாள் மொழி.

 “அக்கா உன்னை  அருள் ஜோதி   கேட்கிற சீக்கிரம் வா” என்றான்.

 “என்னால முடியாதுடா” என்றாள் மொழி..

 தம்பியை பார்த்த ஜோதி “மொழி  வரலையா” என்றாள்.

 குகன் “இல்லை” என்று தலையாட்ட.

 “மா” என்றாள் தேவகியை பார்த்து.

 “என்னடா என்று கலங்கியபடி அவர் பக்கத்தில் வர..

 சுதாவை பார்த்து “அத்தை” என்றாள்.

“உனக்கு ஒன்னும் ஆகாது டா அமைதியா படு” என்றார் அவர். அவருக்கும் பயமாக இருந்தது.

 பக்கத்தில் இருந்த அனைவரையும் உறவு முறை  சொல்லி அழைத்தவள்.

 “அத்தான்” என்று ரிஷியை  பார்த்து மூச்சு வாங்கியபடியே அழைக்க.

 அவனோ அருள் ஜோதி மூச்சு வாங்குவதை பார்க்க முடியாதவன் அவளை  தூக்கி அணைத்துக் கொண்டு  கதறி அழுதான், “என்னை விட்டுட்டு போயிடாத ஜோ” என்று

 “பிள்ளையிங்க,  பிள்ளையிங்க”, என்றாளே தவிற  வேற வார்த்தை வரவில்லை.

கடைசியாக அவனை நிமிர்த்து பார்த்தவள்.

“மொழி, பிள்ளையிங்க”….. என்று ஏதோ சொல்ல வந்தவளின்  மூச்சு மெல்ல நின்று போனது…..

ரிஷியின் மார்பில்  தன் உயிரை விட்டிருந்தாள் அருள்ஜோதி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!