ராமனும் பரமசிவனும் தங்கள் பகையை வீட்டோடு நிறுத்திக் கொள்ளாமல் தொழிலிலும் தொடர்ந்து கொண்டிருந்தனர்.
Advertisement
ராமன் வாதாடும் வழக்குகளில் நிச்சயம் பரமசிவன் தான் எதிர்தரப்பு வக்கீலாக இருப்பார் என்பது சர்வ நிச்சயம்.
அதே போல் தான் பரமசிவனின் வழக்குகளில் அவருக்கு குடைச்சல் குடுக்கவே ஆஜராவார் ராமன்.
Advertisement
Advertisement
இவர்கள் இருவரைப் பற்றி தெரிந்த நீதிபதி கூட, இவர்களுடைய கேஸ் என்றால் கொஞ்சம் பீதி அடைவது வழக்கமாகிவிட்டது.
இப்போது இவர்கள் காரில் சென்று கொண்டிருக்கையில் காலப்பயணம் செய்து அவர்களின் இனிமையான தருணங்களை நினைவடுக்குகளில் மீட்டிப் பார்த்து மகிழ்ச்சியாக இருந்த வேளை அது பொறுக்காமல் ராமனிற்கு அவருடைய புது ஜூனியரிடம் இருந்து கால் வந்தது.
Advertisement
வண்டி ஓட்டிக் கொண்டிருப்பதால் போனை காருடன் கனெக்ட் செய்து ஸ்பீக்கர் வழியாக அவர் பேச,
” ஹலோ சார் நாம மோசம் போய்ட்டோம் சார்.. ” என்று எடுத்த எடுப்பிலேயே எந்தவொரு முகாந்திரமும் இல்லாமல் அவன் பேச,
எரிச்சலடைந்த ராமன், “என்னன்னு தெளிவா சொல்லுயா ..காலங்காத்தால கடுப்பேத்தாம” என்று தன் ஜுனியரிடம் காய்ந்தார் ராமன்.
மறுபக்கம் குரலைச் செருமிக் கொண்ட அவன் பயத்துடனே, ” சார் இப்போ புது கேஸ் வந்துச்சுல” என்று அவன் தயங்க,
” ஆமா அந்த அண்ணன் தம்பி சொத்து பஞ்சாயத்து… அதான் அது அவங்க அப்பா சம்பாதிச்ச சொத்து அவரே கைப்பட இது தன்னோட பெரிய பையனுக்கு தான்னு எழுதி வச்சிருக்க டாக்குமெண்ட்ஸ் நம்ம கிட்ட இருக்கே அப்பறம் அதுல என்ன பிரச்சனை உனக்கு” என்று பரமசிவன் அருகில் இருப்பதை மறந்து விட்டு அவர் கூறிவிட,
அவனோ தயங்கிக் கொண்டே, ” அது வந்து சார்” என்று இழுத்தான்.
” டேய் இப்போ உனக்கு என்ன பிரச்சனை.. ஒழுங்கா சொல்றதுன்னா சொல்லு.. இல்லை போனை வை” என்று எரிச்சலானார் ராமன்.
“பரமசிவன் சார் இப்போ நம்ம கிளையண்ட் அவங்க அப்பாக்கே பிறக்கலை .. அவர் ஒரு அனாதை .. அவரை அடாப்ட் பண்ணி வளர்த்தாங்க அப்படின்னு போலியா ஒரு சர்டிஃபிகேட் ரெடி பண்ணி சப்மிட் பண்ணிருக்காரு சார்” என்று அவன் ஒரு வழியாய் சொல்லி முடிக்க,
அதை கேட்டுக்கொண்டிருந்த ராமனிற்கும் பரமசிவனிற்கும் இத்தனை நேரமாய் இருந்த ஒரு இதமான மனநிலை சட்டென்று அறுந்து விழா, ராமனோ கண்களில் ஏறிய சிகப்புடன் தன் பக்கவாட்டில் அமர்ந்திருந்த பரமசிவனை முறைத்துவிட்டு போனை கட் செய்தவர் தன் கோபத்தை எல்லாம் காரின் வேகத்தில் காட்டினார்.
அப்போது தான் இவர்களை எண்ணி மகிழ்ச்சியில் இருந்த பெண்களோ, இப்போது , “இதுங்க தேறாதுங்க” என்று வெதும்பி போய் அமர்ந்துவிட்டனர்.
ராமன் சென்ற வேகத்திற்கு பத்தே நிமிடத்தில் மருத்துவமனை வந்து விட, மதுரம் அடுத்த நாடகத்திற்கு தயாராகினார்.
காரை விட்டு இறங்கியதும் உள்ளிருந்த வார்ட்பாயை அழைத்து ஸ்டரெட்சர் மூலம் வாசுதேவ கிருஷ்ணனை உள்ளே அழைத்துச் சென்றனர்.
அப்போது அஸ்வத் ஒரு இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக ஆபரேசன் தியேட்டரில் இருக்க, வினோத் தான் விஷயம் கேள்விப்பட்டு அரக்க பறக்க ஓடி வந்தான்.
“அய்யோ தாத்தாக்கு என்னாச்சு பாட்டி நேத்து நைட்டு கூட மொட்டை மாடியில” என்று அவன் பதட்டத்தில் தங்கள் குட்டை வெளிக்கொண்டு வரப் பார்க்க,
ராமனும் பரமசிவனும் அவனை சந்தேகமாக பார்த்து வைத்தனர்.
அவன் காலை நங்கென்று மிதித்த மதுரம், ” அய்யோ நேத்து என்ன டா நேத்து இன்னைக்கு காலையில கூட மொட்டை மாடியில வத்தல் காய போட போன என் வள்ளல் பெருமானை என் கண்ணால பார்த்தேனே … அதுக்குள்ள இப்படி படுத்த படுக்கையா கெடப்பாருன்னு நான் நினைச்சு பார்க்கலையே” என்று தன் நடிப்பை அவிழ்த்து விட்டு வராத கண்ணீரை துடைத்துக் கொண்டிருக்க,
“போதும் அம்மா.. சும்மா வீட்டுல இருந்து இதே பாட்டு பாடிகிட்டு இருக்க.. உன் சத்தத்தை கேட்டே அவருக்கு ஏதாவது வந்துரும்” என்று பரமசிவன் கண்டிக்க,
“கொஞ்சம் ஓவரா போய்ட்டோமோ” என்று நினைத்த மதுரம், ‘ போவோம் யார் கேட்கப் போறா ‘ என்று தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டார்.
” டேய் இப்படி மச மசன்னு நிக்காம முதல்ல இவரைக் கூட்டிட்டு போய் எல்லா ஜெராக்ஸும் எடுடா” என்று அவர் வினோத்தை விரட்ட,
அவரை வினோதமாக பார்த்து வைத்த வினோத், ” பாட்டி உங்களுக்கு என்னாச்சு.. அது ஜெராக்ஸ் இல்லை.. எக்ஸ் ரே.. முதல்ல இவருக்கு ECG தான் எடுக்கணும்” என்று அவன் மருத்துவனாய் மாறி விளக்க,
‘ அய்யோ படுத்துறானே ‘ என்று நொந்து கொண்ட மதுரம், ” அதான் என்னன்னு உனக்கு புரிஞ்சதுல போ போய் என்னத்தையோ எடுத்து என் புருஷனை காப்பாத்து.. உங்களோட போராடி எனக்கு கிறு கிறுன்னு வருது.. அடியே சீதா எங்கடி இருக்க கொஞ்சம் தண்ணீ கொண்டுவா ” என்று அவர் மயக்கம் போடுவதைப் போல் அங்கிருந்த நாற்காலியில் பொத்தென அமர்ந்து விட்டார்.
“அய்யோ அத்தை என்னாச்சு” என்று தனமும் சீதாவும் இவரை கவனிக்க, வினோத் அதற்குள் வாசுதேவ கிருஷ்ணனிற்கு வைத்தியம் பார்க்க அழைத்து சென்றிருந்தான்.
வாசுதேவ கிருஷ்ணன் காரில் வரும்போது எங்கே கண்ணை திறந்து தன் திட்டத்தை கெடுத்து விடுவாரோ என்று பயந்த மதுரம் வண்டியில் ஏறியவுடனே அவர் வாயில் தூக்க மாத்திரையை போட்டிருந்தார்.
அதன் விளைவால் அவர் மயக்கத்தில் இருக்க, இவர்களின் திட்டத்தை அறியாத வினோத்தோ முதலில் அவருக்கு ‘Vitals’ செக் செய்தான்.
அதாவது இரத்த அழுத்தம், ஆக்சிஜன் லெவல் மற்றும் ஹார்ட் ரேட் அனைத்தையும் பரிசோதித்து பார்க்க, அனைத்தும் நார்மலாக இருந்தது.
சற்று குழம்பியவன், அடுத்ததாக ECG எடுத்து பார்த்தால், அதுவும் நார்மலாக இருக்க , பின்பு ஏன் இவர் இன்னும் மயக்கத்தில் இருக்கின்றார் என்று முற்றும் குழம்பியவன் பின் தலை முதல் பாதம் வரை அனைத்து விதமான டெஸ்ட்களையும் எடுத்துப் பார்த்து விட, அனைத்தும் கூறிய விஷயம் ஒன்றே ஒன்று தான்.
வாசுதேவ கிருஷ்ணன் இன்னும் இருபது வருடங்களுக்கு எந்த ஒரு நோய் நொடியும் இல்லாமல் ஆரோக்கியமாய் வாழ்வார் என்று ரிப்போர்ட் கூறிவிட, அந்த ரிப்போர்ட்டில் ஒரு கண்ணும் , அங்கு கட்டில் மேல் இன்னும் மயக்கம் தெளியாமல் படுத்திருந்த வாசுதேவர் மேல் இன்னொரு கண்ணும் வைத்திருந்த வினோத்திற்கு பைத்தியம் பிடித்தது.
“எல்லாமே நல்லா இருந்தும் இவர் ஏன் இன்னும் மயக்கமாவே இருக்காரு.. அய்யோ மண்டை காயுதே.. ” என்று அவன் தனக்குத் தானே புலம்பிக்கொள்ள, அருகில் நின்றிருந்த நர்ஸ் அவனை வித்தியாசமாக பார்த்தாள்.
‘ ஹிஹி ‘ என்று அவன் சிரித்து மழுப்ப, அவளும் ஒரு நக்கல் புன்னகையுடன் அவனை நோக்கி, ” நீங்க ஏன் சார் அவர் மயங்கிருக்காருன்னு நினைக்கிறீங்க.. ஏன் அவர் தூங்கிட்டு இருக்க கூடாது” என்று அவள் தெளிவாய் யோசிக்க,
” அட ஆமால்ல.. எனக்கு இது தோணவே இல்லை பாருங்களேன்” என்று அவன் கூற,
‘ நீயெல்லாம் ஒரு டாக்டர் ‘ என்பது போல் ஒரு லுக் விட்ட அந்த செவிலியர் , ” அப்போ இவரோட ரிலேட்டிவ்ஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணிரலாமே சார்” என்று கூற, அப்போது தான் அவனிற்கு இது பாட்டியின் திட்டமாக இருக்குமோ என்கிற ஐயம் தோன்ற,
” இல்லை இல்லை வேண்டாம்.. நான் பார்த்துக்கிறேன் … நீங்க யார்கிட்டயும் எதுவும் சொல்லாம கிளம்புங்க” என்று அவளை விரட்டியவன், பின் வெளியே எட்டிப் பார்த்தான்.
ராமன் தன் வழக்கு விஷயமாக யாருடனோ போனில் உரையாடிக் கொண்டிருக்க, பரமசிவன் மதுரத்திற்கு உணவு வாங்கி வர கேன்டீன் வரை சென்றிருந்தார்.
இதுதான் சரியான சமயம் என்று பாட்டியை தனியே அழைத்தவன், ” ஏய் பாட்டி இது உன்னோட பிளானா?? உன் வீட்டுக்காரர் குத்துக்கல்லாட்டம் நல்லா தான் இருக்காரு .. உன்னால எவ்ளோ டைம் வேஸ்ட்” என்று அவன் முறைத்துக் கொண்டே கேட்க,
” அடடே அதையே அரை நாள் கழிச்சு தான் கண்டுபிடிச்சுருக்க.. நீயல்லவோ ஒரு நல்ல டாக்டர்.. உன்னை மாதிரி ஊருக்கு ஒரு டாக்டர் இருந்தா போதும்.. ஊருல ஒருத்தன் உயிரோட இருக்க முடியாது” என்று அவனை வாரினார் மதுரம்.