Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சம் ஏங்குதே..

நெஞ்சம் ஏங்குதே.. 10 1

நெஞ்சம் ஏங்குதே…



Advertisement

 அத்தியாயம் 10

Advertisement

Advertisement

காரை நிதானமாக ஓட்டிக்கொண்டு வந்தான் குகன்,   கார்  திருநெல்வேலி நோக்கி   செல்லவில்லை..

Advertisement

அருள் மொழிக்கு கொடுத்த சென்னை  பிளாட்டுக்கு தான் வந்தனர்.

 “திருநெல்வேலி போலாம்  குகன்” என்று  ஐயப்பன் கூற..

 “விடியற்காலை  கிளம்பலாம் பா,,  இப்ப நைட் ஆயிடுச்சு” என்றான் குகன்.

 மொழி கத்தி, அழுது ஆர்ப்பாட்டம் எல்லாம்  பண்ணவில்லை அமைதியாக அழுது கொண்டே வந்தாள்.

 மகள் அழுவதை தாங்க முடியாத தேவகி.

 “கொஞ்ச நாள் ஆகட்டும் பாப்பா ஒரு பிள்ளையை வேணா நாம தூக்கிட்டு வந்து வளர்க்கலாம்”.. என்று மகளிடம் சமதானமாக கூற,, அவளோ பதில் பேசவில்லை.

 அமைதியாக இருந்தாள்..

 வீட்டுக்கு வந்ததும் அமைதியாக சென்று அவள் ரூமில் படத்து விட.

எல்லோருக்கும் அப்பாட என்று இருந்தது மொழி செயல்,,

 ஹோட்டலில் உணவு வாங்கிட்டு வந்த குகன். அக்காவை  சாப்பிட  எழுப்ப.

 அவளோ கண்களை மூடி படித்திருந்தாள்,   பேசவே யில்லை தம்பி எவ்வளவு அழைத்தும் பதில் சொல்லவில்லை மொழி..

 நாளைக்கு திருநேல்வேலி கிளம்பனும் என்று  அனைத்தையும் எடுத்து வைத்தவர்கள்  உண்டு விட்டு படுக்க  சென்றனர்….

 மொழி அமைதியாக கண் மூடி இருந்தவள் அவளுக்கே தெரியாமலே தூங்கியும் விட்டாள்

 அவள் எழுந்து  பார்த்த போது மணி 12.. டூ..

 கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்தாள் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க, வெளி  கதவை மெல்ல திறந்தவள். தன் போனையும் பர்சையும்  எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டாள் ரிஷி வீட்டிற்கு…

 மொழி  வெளியில் வந்த போது ஒரு ஆட்டோ சென்று கொண்டிருக்க,  அந்த ஆட்டோவை பிடித்து ஏறி ரிஷி வீடு வந்து சேர்ந்து விட்டாள்.

 மொழி வீட்டினர்  சென்றதும் சுதாவும் ராமமூர்த்தியும் குழந்தைகளை பார்த்துக்கொண்டிருந்தனர்..

ரிஷி ஹாலிலேயே தான் அமர்ந்திருந்தான்..

 குழந்தைகள் மாற்றி மாற்றி பசிக்கு அழ..

 பாலை நன்றாக ஆற்றி சுதா கொண்டு வந்து குழந்தைகளுக்கு  கொடுக்க.. குழந்தைகள் பாலை குடிக்க வில்லை  துப்பி துப்பி வைத்தனர்..

 எதுக்கு அழுறாங்க பசிக்குமே பின்பு ஏன் பாலை குடிக்கவில்லை என்று சுதா தோளில் போட்டு தட்டிக் கொடுக்க.

 பிள்ளைகள் மீண்டும் சத்தமாக அழ ஆரம்பித்தனர், ஒரு குழந்தை அழுததும் இன்னொரு குழந்தையும் சேர்ந்து  அழ ஆரம்பித்தது..

 ராமமூர்த்தியும்,  சுதாவும்  ஆளுக்கு ஒரு பிள்ளையை   தோளில்  தூக்கி போட்டு  தட்டிக் கொடுக்க சிறிது நேரம் அழுது கொண்டே   தூங்கினர்..

 “எதுக்குமா இப்படி அழறாங்க”  என்று  ரிஷி கேட்க..

 “சின்ன பிள்ளைகள் அப்படித்தான்பா அழுவாங்க, சில பிள்ளைங்க ஒரு மாசம் அழும்,  சில பிள்ளைகள் மூன்று மாதம் அழும்” என்றவர் தோளில் போட்டு  தட்டி கொடுத்துக்கொண்டே இருக்க  குழந்தைகள் அழுது கொண்டே தூங்கி  விட சுதா குழந்தைகளை  தொட்டிலில் போட்டவர்.

 “எதுக்குடா மொழியை  அப்படி பேசினா, எதுக்கு அந்த பிள்ளையை வெளியே தள்ளி கதவு சாத்துன” என்றார்..

 “அவ வேண்டாம்மா,  நம்ம  பிள்ளைகளை  நாமலே வளத்துக்கலாம் , நாளைக்கு காலை ரெண்டு பேர  வர சொல்லி இருக்கேன் அவங்க பிள்ளைகளை நல்லா பாத்துப்பாங்க நீ கூட இருந்து பாத்துக்கோ,  நீ உன் உடம்பையும்  பாத்துக்கோ மா” என்றான்..

 “பகலில் ஓகே டா நைட்டு பிள்ளைகளை எப்படிடா பாத்துக்குறது” என்று கூற..

 “அதுக்கும்  ஆளை  வர  சொல்லியிருக்கேன் இவங்க ரெண்டு பேர் போனதும் அவங்க ரெண்டு பேரும் வருவாங்க குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்கு” என்றான்.

 “இது சரியா வருமா ரிஷி அவங்க நல்லா பாத்துப்பாங்களா” என்று சுதா கேட்க..

 “நல்லா பார்க்கலன்னா,  வேற ஆள வர சொல்லுவோம் நீ எதுக்கும் பயப்படாத குழந்தைகளை நல்லா பாத்துக்கலாம்” என்று  மகன் கூற.

 “சரி” என்று சுதா நைட்  அனைவரும் சாப்பிட்டு விட்டு  தூங்க செல்ல..

 சரியாக பதினொரு  மணி போல குழந்தைகள் எழுந்து அழ ஆரம்பித்தனர்..

 சுதா பாலையாற்றி குழந்தைகளுக்கு கொடுக்க இரு குழந்தைகளும் பாலை குடிக்க வில்லை,பாலை குடிப்பது போல் குடித்து  துப்பி துப்பி வைக்க..

 சுதா குழும்பி போனார்  என்ன ஆச்சு பிள்ளைங்களுக்கு பாலை நல்லாதானே குடிச்சிட்டு இருந்தாங்க என்று குழம்பியவர்,  பிள்ளைகள்  பசியில் அழுவதை பார்த்து அவருக்குமே அழுகை வந்தது..

 இந்த பிள்ளைகளை நான் எப்படி வளர்க்க போறேன் என்று சுதா அழுக.

 ரிஷி பிள்ளைகள் விடாமல் அழுகவும்  அவனும், பிள்ளைகள் அருகில்  வந்திருந்தவன்..

 சுதா அழுது கொண்டிருப்பதை பார்த்து..”‘நீங்க  ஏம்மா அழுகுறீங்க” என்று கேட்க “பிள்ளைகள் பால் குடிக்க மாட்டேங்கிறாங்க ரிஷி..

இதைத்தான் மொழியும் கொடுப்பா,  அவ கொடுத்தா குடிச்சிடுவாங்க நான் கொடுத்த குடிக்க மாட்டேங்குறாங்க குழந்தைகள்” என்று சுதா அழ.

 “ஏதாவது உடம்பு  சரியில்லையாமா நாம வேணா  ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாமா” என்று ரிஷி  கேட்க.

“இல்லடா குழந்தைங்க  பசிக்குதாண்டா அழுவுறாங்க  எனக்கு தெரியுது.. பிள்ளைகள் வயிரை   பாரு எல்லாம் ஒட்டி போயிருக்கு என்றவர், குழந்தைகளின் வயிறை தொட்டு பார்த்து, கண் கலங்கியவாறு தோளில் போட்டு தட்டி  கொடுக்க ராமமூர்த்தியும் ஒரு பிள்ளை எடுத்து தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார்..

 குழந்தைகளின்  அழுகை கூடிக் கொண்டே போக, ரிஷிக்கே  பாவமாகி போய்விட்டது குழந்தைகளின் பக்கத்தில் சென்று “ஏண்டா அழுகுறீங்க  என்ன பண்ணுது உங்களுக்கு..

  பால் குடிக்க வேண்டியது தானே, பாட்டி பால் கொடுக்குறாங்க தானே” என்று அவர்களிடம் பேச அதுவோ பசியில்  கண்ணை மூடிக்கொண்டு வீல்,  என்று கத்தி அழ.

 சுதாவுக்கு இன்னும் பயம் கூடியது மறுபடியும்  புதியதாக பாலை எடுத்து ஆற்றி வந்து மறுபடியும் குழந்தைகளுக்கு கொடுக்க..

குழந்தைகள் பாலை தட்டி விடுவது போல் துப்பி துப்பி வைக்க என்னடா எனக்கு ஒன்னும் புரியலையே என்று சுதா பயந்து  போனார்..

 அந்த நேரம் பார்த்து  யாரோ ரிஷியின் வீட்டின்  கதவை டம் டம் என்று தட்டும் சத்தம் வர.

 “யாரு இந்த நேரத்துல”? என்று சுதா  “போய் பாரு  ரிஷி ” என்று  சொல்ல..

 ரிஷி தான் வந்து கதவை திறந்திருந்தான்,  அந்த நேரம்  மொழியை அவன் எதிர்பார்க்கவில்லை.

மொழி பதற்றத்தோடு   வாசலில் நிற்க…

 அவளை பார்த்ததும் “எதுக்கு வந்த”? என்று அவன் கேட்க.

 அவள் அவன் பேச்சைக் காதிலே வாங்கிக் கொள்ளவில்லை அவன் கதவை திறந்ததும் குழந்தைகள் அழும்  சத்தம் கேட்டு குழந்தைகள் இருக்கும் அறைக்கு அவள் ஓடி போக.

“ஏய் எங்க போற, வெளியே போ”, என்று அவளின் கை பிடித்து இழுத்து வெளியே வந்தான்.

 “ரிஷி ரிஷி ப்ளீஸ், ப்ளீஸ் ரிஷி குழந்தைகளை நான் பார்க்கனும்,  ரிஷி ரிஷி ரிஷி” என்று அவள் ஆயிரம் ரிஷி போட..

 “என் பேரு ரிஷி என்பது  உனக்கு ஞாபகம் இருக்கா  டி” என்றவன் ஆத்திரத்தில் அவள் கையை பிடித்து இழுத்து வந்தவன் அவளை  வெளியில் தள்ள..

“ரிஷி  ப்ளீஸ் ரிஷி பிள்ளைகளை என்னை பார்க்க விடுங்க ரிஷி” என்று   அவனின் காலை பிடித்து இருந்தாள்.

 “சீ என்னை தொடாதே, தொடாதடி நம்பிக்கை துரோகி” என்றான்..

 “ரிஷி  என்னை என்ன  வேணா சொல்லுங்க ரிஷி ஆனா  குழந்தைகளை மட்டும் பார்த்தாகனும் வேண்டாம்  சொல்லாதீங்க, குழந்தைகள் அழுவுறாங்க ப்ளீஸ் ரிஷி”  என்றாள்.

 “யாரடி நீ?  என் குழந்தையை  நீ எதுக்குடி பாக்கணும் உனக்கு என் பிள்ளைகளும்  என்னடி சம்பந்தம், கிளம்பு,  உன் மூஞ்சியிலயே நான் முழிக்க கூடாதுன்னு இருந்தேன் நம்பிக்கை துரோகி, உன்னால தாண்டி என் வாழ்க்கையே வீணா போச்சு.

 நீயும் வாழாமல் என்னையும் வாழ விடாமல் உங்க அக்கா வாழ்க்கையும் சேர்த்து கெடுத்து. என் வாழ்க்கையும் கெடுத்து ..

 என்னைய துரோகி ஆக்கிட்டியேடி..

  என் மேல கொலப்பளி  விழுற மாதிரி ஆக்கிட்டல நீ, இப்போ  எதுக்கு இங்க வந்திருக்க மிச்சம் உள்ள என் உயிரை எடுக்கவா? உன் மூச்சுக் காத்து கூட என் பிள்ளைங்க  மேல படக்கூடாது கிளம்பு”  என்றான்..

 “ரிஷி ப்ளீஸ் ரிஷி   என்னை என்ன வேணாலும் சொல்லுங்க எனக்கு அதை பத்தி எல்லாம் பிரச்சனை இல்ல. என்னை அடிக்கணும்னா கூட அடிச்சுக்கோங்க, பிள்ளைங்க அழுகுது பிள்ளைங்க”  என்றவள்  அவன் பேச்சைக் காதில் வாங்காமல் அவள் வீட்டின் உள்ளே ஓட பார்க்க அவளை மறுபடியும் பிடித்து இழுத்து இருந்தான் ரிஷி.

 அவளோ அவன் பிடித்து இழுத்ததும் “ப்ளீஸ் ரிஷி” என்று கையெடுத்து, கும்பிட்டவள்  “ப்ளீஸ்  ரிஷி பிள்ளைங்களை  என்னை பார்க்க  விடுங்க.”

 என்று அழுதாள்,  அவள் அழுவதை  பார்த்து அவனுக்குமே  பாவமாக இருந்தது..

 எதுக்கு இவள் இப்படி வந்து என்னிடம் கெஞ்சிக்  கேட்டு  கொண்டிருக்கிறாள்.. அவளுக்கு வளமான எதிர்காலம் வெளியில் காத்திருக்கும் போது, ஏன் என் பிள்ளைகளுக்காக,   இந்த நடு ராத்திரி வந்திருக்கிறாள்  இவள் என்ற அவன் யோசிக்க..

 ஒரு நிமிடம்  ரிஷி யோசிக்க டக் என்று அவன் கையில் இருந்து விலகியவள் பிள்ளைகள் ரூமை நோக்கி ஓடினாள்.

 சுதாவும் ராமமூர்த்தியும் அழும்  குழந்தையை தூக்கி சமாதானம் பண்ணிக் கொண்டிருக்க..

சுதாவுக்கு மொழியை பார்த்ததும் உயிர் வந்ததது  போல இருந்தது,.

 குழந்தைகள்  அழுவதை பார்த்த மொழிக்கு நெஞ்செல்லாம் பதறியது..

“மொழி குழந்தைங்க பால் குடிக்க மாட்டேங்குறாங்க, கொஞ்சம் என்னன்னு பாரு மா”  என்று சுதா சொல்ல..

 ராமமூர்த்தியிடமிருந்த  குழந்தையை  வாங்கியவள்,..

 “மாமா கொஞ்ச நேரம் வெளியே இருக்கீங்களா” என்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!