Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சம் ஏங்குதே..

நெஞ்சம் ஏங்குதே.. 11 1

நெஞ்சம்  ஏங்குதே…



Advertisement

   அத்தியாயம் -11

Advertisement

Advertisement

  மொழி   தன் பெற்றோர்  இவ்வளவு சீக்கிரம் தனக்கு மாப்பிள்ளை பார்ப்பார்கள் என்று  எதிர் பார்க்க வில்லை அவள்..

Advertisement

அவள் சில நிமிடம் அதிர்ச்சியாகி நின்றவள்.

பின்பு சுதாரித்து, அனைவரையும் அழைத்து அமர வைத்தாள்.

இதை ரிஷி பார்த்துக்கொண்டு இருந்தானே தவிர ஒரு வார்த்தை பேசவில்லை வந்தவர்களிடம்…

குழந்தைகளை தன் பெற்றோர் கையில் கொடுத்து விட்டு, கிச்சன் நோக்கி சென்றாள் மொழி..

பேர பிள்ளைகளை தேவகியும், ஐப்பனும் கொஞ்சிக்கொண்டிருக்க.

மொழி  அனைவருக்கும் டீ போட்டு எடுத்துக்கொண்டு வந்தவள், ரிஷியை தவிர அனைவருக்கும் கொடுத்தாள்.

ரிஷி ஹாலிலே அமர்ந்து லேப்டாப்பில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான்..

அவனை யாரும் கண்டுகொள்ளவில்லை..

சாத்விக்கும், ஆத்விக்கும் புதிதான வந்த  ஆட்களை பார்த்து குதித்துக்கொண்டிருந்தனர்.

வந்தவர்கள் அவர்களை தூக்கி  கொஞ்ச, அந்த சந்தோஷசத்தில் குதித்து, சிரித்து கையை காலை ஆட்டிக்கொண்டிருந்தனர்..

ஆத்விக் மொழியை பார்த்தால்  போதும், “உம்ம், மா” என்று  சத்தம் கொடுத்து மொழியை தூக்க சொல்லி அழைப்பான்…

தூக்கியதும் பால் கொடுக்க வேண்டும் அவனுக்கு, அவளின் மார்பில் முட்டி  முட்டி அழுவான்.

அவன் மொழியிடம் தாவியதும், சாத்வீக்கும், மொழியிடம் போக வேண்டும் என்று அழுக தயாராக..

சுதா சாத்வீக்கை தூக்கி வைத்து கொண்டவர் . “மொழி நைட் சாப்பாடு ரெடி பண்ணிட்டாங்களா என்று பாரு மா,”என்று அவளை அனுப்பி வைக்க.

“சரி அத்தை” என்றவள் ஆத்விக்கை தூக்கிய படியே  பின்பக்கம் சமையல் நடந்து கொண்டிருக்கும் இடத்தை நோக்கி செல்ல.

“இப்போ வந்து விடுகிறேன்” என்ற சுதா சாத்விக்கை தூக்கிக்கொண்டு செல்ல.

ராமமூர்த்தி மொழியின் பெற்றோரிடம் பேசிக்கொண்டிருந்தார்.

பின்பக்கம் வந்த மொழி இரவு உணவு தயாராக இருப்பதை பார்த்தவள். அதை சுதா விடம் சொல்ல வர.

சுதா மொழியின் பின் வந்தவர்… “சாப்பாடு தயாராகி விட்டதா”? என்று கேட்க.

“எல்லாம் ரெடியா இருக்கு அத்தை” என்றவளை,  “வா” என்று.

பின்வாசல் வழியே   மாடிக்கு மொழியை  அழைத்து வந்தார் சுதா..

“எதுக்கு அத்தை இந்த பக்கம்” என்று மொழி கேட்க.

” வா உன் பிள்ளைகளுக்கு பசிக்குது மொழி,  கீழே எல்லாரும் இருக்காங்க, நீ எப்படி பிள்ளைகளுக்கு பசியாற்ற முடியும்”  என்று  மாடிக்கு அழைத்து வந்தவர்.

அங்கே இருந்த  ஒரு  அறையை திறந்த, “இந்த ரூம்ல தான் தொட்டில் கட்டி இருக்கேன் மொழி.

இந்தா உன் பிள்ளைகளுக்கு பசியாற்று” என்று தன் பேரப்பிள்ளைகளை அவளிடம் கொடுத்தவர்.

அந்த ரூம்பில் உள்ள ஏசியை ஆன் பண்ணி விட்டு. “பிள்ளைகள் தூங்கியதும் கூப்பிடு” என்று சொல்லி விட்டு கீழே சென்றனர்.

 மொழி குழந்தைகளுக்கு பால் கொடுப்பது சுதா, ராமமூர்த்தியை தவிற வேற யாருக்கும் தெரியாது. அதனால யாருக்கும் தெரியாமல் மருமகளை மாடி அறையில் அழைத்து கொண்டு வந்து விட்டு சென்றார்..

அந்த அறையில் உள்ள கட்டிலில் அமர்ந்தாள் மொழி, குழந்தைகள் இருவருக்கும்  பசி போல.  என்று மொழி கட்டிலில் அமர்ந்ததும்.

 இரு பிள்ளைகளும் அவளின்  புடவையை  பிடித்து  இழுத்து “மா, மா, ங்கா” என்று  மழலை  மொழியில் பேச.

 “என் தங்க குட்டிங்களா

பசிக்குதா  கண்ணா”  என்றவள். அவளின் புடவையை  விலக்கி  முதலில் ஆத்வீக்கை   தூக்கி வைத்து பசியாற்ற.

அவனை தூக்கி பால் கொடுப்பதை பார்த்த சாத்வீக் , தன்னை தூக்க வில்லையே என்று அழ தயாராக.

“டேய் வாயை திறந்திராத” என்றவள்.

மறுபக்கம் அவளின் உடையை விலகி அவனையும்  தூக்கி வைத்து  அவனுக்கும் பசியாற்ற.

உடல் சிலிர்த்தது அவளுக்கு..

 தான் பெறாத   மழலை செல்வங்களை பார்த்து சுகவலியில் சிரித்தாள் மொழி..

ஆத்விக் பால் குடிப்பதை நிறுத்தி விட்டு மொழியின் முகத்தை பார்த்து சிரிக்க.

“டேய் ஒழுங்க குடிடா, சிரிக்காத,  அப்பறம் கொஞ்ச நேரத்தில் என் புடவையை  பிடிச்சு மா என்று இழுப்ப படவா, குடி, பால் குடிச்சிட்டு தூங்கு”  என்று மகனின் தலை கோத. அது மொழியிடம்  சிரித்து விளையாடி கொண்டே முண்டி, முண்டி பசியாற்றி தூங்கியது..

 சாத்வீக்கும் பால் குடித்த படியே தூங்கி விட.

பிள்ளைகளை தன் மடியிலே அப்படியே  படுக்க வைத்திருந்தாள் மொழி, கண்ணீல் இருந்து கண்ணீர் அருவி போல   கொட்டியது, ..

எல்லாம் இந்த ரிஷியால்..

ஏன் ரிஷி இப்படி பண்ணுறீங்க நான் என்ன செய்தேன் உங்களை என்று நினைத்தவளுக்கு செத்து விட தோன்றியது.

மடியில் உள்ள கனம் அவளை  யோசிக்க வைத்தது, இந்த பிள்ளைகளை விட்டு எனக்கு வேற வாழ்க்கையா, ஆத்விக், சாத்விக் தன் உயிராக போனார்கள்.. இவர்களை தவிற எனக்கு வேற வாழ்க்கையா? என்றவள்.. பிள்ளைகளின் தலை கோதி முத்தமிட்டவள்.

தொட்டிலில் அவர்களை படுக்க வைத்து விட்டு. கதவை சாத்தி விட்டு கீழே  வந்தாள்.

பச்சை வண்ண கலர் காட்டன் புடவையை  உடுத்தி இருந்தாள் மொழி..

சரவணனின் கண், மொழியை  ரசித்து பார்த்தது..

“எல்லாரையும்  சாப்பிட   கூப்பிடு மொழி”  என்று சுதா சொல்ல.

தன் உறவினர்களை சாப்பிட  கூப்பிட்டாள் மொழி.. குழந்தைகள் எப்படியும் எழுந்து கொள்ள  இரண்டு மணி நேரமாவது ஆகும் என்றவள் அதற்குள் அனைத்தையும் முடித்து விட்டு அவர்களை பார்க்க செல்ல  வேண்டும் என்று நினைத்திருக்க..

அனைவரையும் உண்ண அழைத்தாள்.

அனைவரும் வந்தனர்.

சரவணன்  “வேலை இருக்கு மொழி நான் கிளம்புறேன் உன்னை பார்க்கத்தான் வந்தேன்”,   என்று  சொல்லி அவன் கிளம்ப..

“அட… வாங்க மச்சான் இது  நம்ம வீடு” என்று அவனின் கையை பிடித்து இழுத்து சென்றாள் மொழி உண்பதற்க்கு.

இதை பார்த்த ரிஷிக்கு பத்திக்கொண்டு வந்தது, மச்சானா, மச்சான் அந்த மைதா மாவு இவளுக்கு  மச்சானா?,  தூ அப்போ நான் யாருடி உனக்கு, என்று ஆத்திரம் வந்தது அவனுக்கு…

 ரிஷியை  யாரும் சாப்பிட அழைக்கவில்லை, அவனாகத்தான் சாப்பிடும் இடத்தை நோக்கி வந்தான்.

 ராமமூர்த்தி மகனை பார்த்துவிட்டு “வாடா நாமளும் சாப்பிடலாம்” என்று அழைக்க.

  அனைவரையும்  உட்கார வைத்த  மொழி சமையல் செய்பவரை பரிமாற  சொல்லிக் கொண்டிருந்தாள்.

 அவள் தன் புடவை இடுப்பில் சொருகிக்கொண்டு அனைவரையும்  வேலை வாங்கிக் கொண்டிருப்பதை பார்த்தபடியே தான் வந்தான் ரிஷி.

 ஐயப்பன் மகளை  “நீயும் வாடா சாப்பிடு” என்று  அழைக்க.

 “வேண்டாம் பா நான் அப்புறம் சாப்பிடுகிறேன், நீங்க முதல்ல சாப்பிடுங்க'” என்றால் மொழி.

 சுதா மொழியை பார்த்து  “உன் பிள்ளைகள் முளிச்சுப்பாங்க நீயும் சாப்பிடு” என்று சொன்னவர்.

 பின்பு  சரவணனையும் வேலுச்சாமியையும் பார்த்து “உன் அக்கா பிள்ளைகள்”  என்று மாற்றினார்..

 சரவணன் பக்கத்தில் ஒரு இடம் காலியாக இருக்க சுதா  அங்கேயே மொழியை  அமர வைத்தார்.

“ரெண்டு பேரும் பேசிக்கிட்டே சாப்பிடுங்க” என்றவர்  மருமகளுக்கு  பரிமாற சொல்லிவிட்டு செல்ல..

 மொழிக்கு சரவணனை  ரொம்ப பிடிக்கும்.

  தாய்மாமன்  மகன் என்ற முறையில் மட்டுமே.

 இருவரும் அவர்கள் வாழ்வில் நடந்த சில விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

 எதிரிலிருந்து ரிஷிக்கு பத்திக்  கொண்டு வந்தது..

சாப்பிட அமர்ந்தவன், மொழியும், சரவணனும் அருகில் அமர்ந்து பேசுவதை பார்த்தவனுக்கு ஆத்திரம் தலை கேற.

எழுந்து சென்று விட்டான்,, ராமமூர்த்தி “டேய் ரிஷி ஏன் எழுந்து போற, சாப்பிடு” என்று  அவர் அழைக்க.

அதை காதில் வாங்கிக் கொள்ளாதவன் சென்று விட.

ஐய்யப்பனுக்கு மொழி, சரவணனிடம் பேசுவதை பார்த்து சந்தோஷப்பட்டார், மகள் திருமணத்திற்க்கு சம்மதம் சொல்வாள் என்று அவருக்கு  நம்பிக்கை வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!