இது என்ன மொழி அண்ணி குழந்தைகளுக்கு பால் கொடுக்குறாங்க அப்போ குழந்தைங்க, இவங்க குழந்தையா? என்றவள் வேகமாக சென்று தன் அம்மா ராதாவிடம் இதை அப்படியே சொல்ல.
Advertisement
“நீ சரியா பாத்தியா” என்று மகளிடம் கேட்க.
“அம்மா நான் நல்லா பார்த்தேன் அண்ணி அந்த பிள்ளைகளுக்கு பெத்த தாய் மாதிரி பால் கொடுத்தாங்க” என்றாள்.
Advertisement
Advertisement
அவ்வளவுதான் ராதாவுக்கு பயங்கர கோபம்,
தேவகியின் அருகில் வந்தவர், “என்ன தேவகி இரண்டாம் தாரமா என் பையனுக்கு உன் பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுக்க நீ நினைக்கிறியா” என்று தேவகியை பார்த்து ராதா கேட்க.
Advertisement
“என்ன சொல்றீங்க அண்ணி எனக்கு ஒன்னும் புரியல” என்றார் தேவகி.
“உன் பொண்ணுக்கு தான் புருஷன் கல்லு மாதிரி நிக்குறானே” என்று பக்கத்தில் நின்றிருந்த ரிஷியை காட்டியவர்,
“பின்பு எதுக்குடி சரவணனை உன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ண கேட்டீங்க” என்றார்.
“அண்ணி நீங்க என்ன சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியல தப்பா பேசதீங்க” என்றாள் தேவகி மீண்டும்..
“உன் பொண்ணு அந்த பிள்ளைகளுக்கு பால் கொடுக்கிறாளாம்” என்றார் மெதுவாக.
“அப்ப பிள்ளைங்க அவளுக்கு பிறந்தது தானே என்று அர்த்தம்..
அப்புறம் எதுக்கு சரவணனை மொழியை கட்டி வைக்க நினைக்குற, அசிங்கம் புடிச்சவளே” என்று தேவகியை திட்ட.
ரிஷிக்கு ஏதோ தன்னை வைத்து தான் பேசுகிறார் என்று தெரிந்தவன் அவர்கள் அருகில் வர..
ராதா அவனைப் பார்த்தவர் “இதோ நல்லா தானே இருக்கான் புருஷன் மாதிரி அப்புறம் எதுக்குடி உங்களுக்கு இரண்டாவது புருஷன். ஒரு புருஷன் உன் பொண்ணுக்கு பத்தாதா என் பையனும் வேணுமா” என்று கேட்க.
ரிஷிக்கு கோபம் வந்துவிட்டது அவர் மொழியை ஏதோ தப்பாக பேசுகிறாய் என்று புரிந்து கொண்டவன் “பார்த்து பேசுங்க மொழியை”. என்றான்.
“என்ன நான் தப்பா பேசினேன் , நீ கல்யாணம் பண்ண உன் பொண்டாட்டி செத்துட்டா, உன் மச்சினிச்சிக்கு பிள்ளை கொடுத்துட்டு, அவள என் பையன் தலையில் கட்டி வைப்பீங்களா” என்றார்.
“ஹலோ பார்த்து பேசுங்க மொழிக்கும், எனக்கும் ஒன்னும் இல்ல, குழந்தைகள், எனக்கும், அருள் ஜோதிக்கும் பிறந்தவங்க” என்றான்.
“அவ குழந்தையை பெக்காமத்தான், நீ பெத்த உன் பசங்களுக்கு அவ தாய் பால் கொடுத்து கொண்டு இருக்கிறாளா”? என்று கேட்க.
ரிஷிக்கு ஒன்றும் புரியவில்லை என்ன பால் கொடுத்தாள் மொழி? இந்த பொம்பள ஏன் இந்த மாதிரி எல்லாம் பேசுது, ஒன்றும் புரியாமல் அவன் முழித்து கொண்டிருக்க..
தேவகிக்கு புரிந்து விட்டது, ராதா பேசியதின் அர்த்தம்.
அனைவரும் ராதா சத்தம் கேட்டு அவர்கள் பக்கத்தில் வர, மொழியும் ஆத்வீக்கை இடுப்பில் வைத்துக்கொண்டு வந்தாள்.
தேவகி மகளை பார்த்தவர் “வாடி” என்று இழுத்துக்கொண்டு தனியே சென்றவர்…
“நீ குழந்தைகளுக்கு தாய் பால் கொடுக்குறீயா டி” என்றதும்
அதிர்ச்சியான மொழி அம்மாவுக்கு எப்படி தெரிஞ்சது என்று யோசித்தவள் சுதாவை பார்க்க.
“அங்கே என்னடி பார்வை கேட்டதுக்கு பதில் சொல்லு” என்றார் தேவகி மகளிடம்.
மொழிக்கு அம்மா என்ன சொல்லுவாரோ என்று பயந்தவள், அமைதியாக நிற்க.
“சொல்லு மொழி” என்று மறுபடியும் தேவகி கேட்க..
“ஆமாம்” என்று தலையாட்டி இருந்தாள் மொழி..
“அது எப்படி நீ தாய் பால் கொடுக்க முடியும், குழந்தை பிறந்தால் தானே பால் கொடுக்க முடியும்” என்று தேவகி கேட்க.
“அது அப்படி இல்லம்மா, குழந்தை பெறாமலே தாய் பால் குழந்தைங்களுக்கு கொடுக்கலாம், அதுக்கு டிரிட்மென்ட் இருக்கு, அதை நான் பண்ணிக்கிட்டேன், குழந்தைங்க நைட்டுல பசிக்கு அழுகுற என்னால பார்க்க முடியலம்மா, அதுக்காக தான் நான் இந்த முடிவை எடுத்தேன்”, என்றவள்.
அவள் என்னென்ன செய்தாள் என்று தேவகியிடம் சொல்ல,..
தேவகிக்கு எங்கேயிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை மொழியை அடி வெழுத்து விட்டார்,.
“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா நீ இப்படி ஒரு காரியத்தை பண்ணுவ கல்யாணம் ஆகாத பொண்ணு நீ இப்படி பண்ணலாமாடி” என்று முதுகிலும் கன்னத்தில் மாறி மாறி மொழியை அடிக்க.
சுதா எவ்வளவு தடுத்தும் அவர் கேட்கவில்லை, மொழியிடமிருந்த குழந்தையை தூக்கி அவரிடம் கொடுத்தவர் மீண்டும் மொழியை போட்டு அடிக்க.
ஆத்விக் மொழியை அடிப்பதை பார்த்து “மா ” என்று கத்தி அழுதான்.
ராமமூர்த்தி சாத்விக்கை வைத்திருந்தார்.
தேவகி மொழியை அடித்ததும் ஐயப்பனும், குகனும் ஓடி வந்து அவரை தடுக்க பார்க்க..
அவர்கள் சொல்வதை காதில் கேட்காத தேவகி மொழியை போட்டு அடித்து கொண்டிருந்தார்.
குகன் அம்மாவை பிடித்த இழுத்துக் கொண்டவன் “எதுக்குமா அடிக்குறீங்க மொழியை” என்று கேட்க ..
“அவ என்ன காரியம் பண்ணி வச்சிருக்கன்னு பாருடா.
அவ பண்ண காரியத்தால ராதா அண்ணி என்னென்ன பேசுறாங்க தெரியுமா இவளுக்கு இந்த அவமானம் தேவை தானா அக்கா அக்கா என்று அவ பிள்ளைக்காக இவ வாழ்க்கையை அழிச்சுக்கிட்டு இருக்காடா, ஐ யோ இவளை என்ன செய்ய.
என் இரண்டு பொண்ணுங்க வாழ்க்கையும் போச்சே.. நான் இதை எப்படி சரி பண்ணுவேன்” என்று தேவகி அழுக.
சுதா அவரிடம் இருந்து குழந்தையை ரிஷியிடம் கொடுத்துவிட்டு தேவகியின் பக்கத்தில் வந்து ஏதோ பேச வர.
“அண்ணி நீங்க ஏதுவும் சொல்லாதீங்க நீங்களே அவளுக்கு உடந்தை தானா, உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்தா இப்படி பண்ண விட்டுயிருப்பீங்களா, இவ இப்படி பண்றது உங்களுக்கு தெரிஞ்சவுடனே , நீங்க முதல்ல என்கிட்ட தானே சொல்லி இருக்கணும்,.
என்கிட்ட நீங்க இதை பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லல இப்ப யாரோ சொல்லித்தான் எனக்கு தெரியுது. அவங்க எவ்வளவு அசிங்கமா மொழியை பேசுறாங்க தெரியுமா, இதை நான் அவங்களுக்கு எப்படி சொல்லி புரியவைப்பேன், அவங்க மொழியை தப்பா பேசுறாங்க”.. என்று தேவகி மகள் பேர் கெட்டு விட்டதே என்று அழுக..
குகனுக்கும், ஐயப்பனுக்கும் ஏன் தேவகி இவ்வளவு கோபப்படுகிறார் என்று புரியவில்லை ஏதோ நடந்திருக்கிறது என்று தெரிய.
என்னவென்று நிதானமாக அவர்கள் கேட்க அனைத்தையும் சொல்லிவிட்டார் தேவகி..
ஐயப்பனுக்கு குழப்பமாக இருந்தது அது எப்படி கல்யாணம் ஆகாது பிள்ளை என்று அவரும் யோசிக்க
தேவகி ஐயப்பனிடம் சொன்னார் “எனக்கு அப்பவே இவ மேல சந்தேகமா இருந்தது, நம்ம பெரிய பாப்பா இறந்து ஒரு வாரத்திலேயே இவ அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு போனா.
நான் என்னன்னு கேட்டதுக்கு எனக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னா, எனக்கு அப்பவே இவ ஏதோ தப்பு பண்ணுறான்னு தோணுச்சு மறுபடியும் கேட்டேன், காசு ரொம்ப செலவு பண்ணா, அப்பவே எனக்கு டவுட்டா இருந்துச்சு, இவ என்கிட்ட பொய் சொல்லி ஏமாத்தி இருக்க, இவள என்ன செய்ய”.
என்று அவர் புலம்ப.
ரிஷிக்கு இப்பொழுது தான் விஷயம் புரிந்தது.
அவனுக்குமே சந்தேகமாத்தான் இருந்தது, இது எப்படி சாத்தியம் என்று அவனும் யோசித்துக் கொண்டிருக்க.
“போதும்டி போதும் நீ பண்ணதெல்லாம் போதும் கிளம்பு, அக்கா, அக்கா பிள்ளைங்கன்னு, உன் வாழ்க்கையை நாசம் பண்ணது எல்லாம் போதும், நாங்க பாக்குற பையனை கல்யாணம் பண்ணிட்டு நிம்மதியை வாழ பாரு, கிளம்பு” என்றவர், மகளை பிடித்து இழுத்துக் கொண்டு செல்ல..
யார் என்ன கேட்பது, சொல்வது என்று அனைவரும் அதிர்ச்சியில் அமைதியாக இருந்தார்..
“மா.. மா” என்று மொழி அவர் இழுப்பிற்கு பின்னாடியே செல்ல..
ஆத்விக்கும், சாத்விக்கும் அழுதிருந்தார்கள் மொழியை இழுத்துக் கொண்டு செல்வதை பார்த்து.
பிள்ளைகள் அழுததும் தேவகியின் கையில் இருந்து விலகியவள் குழந்தைகள் அருகில் ஓடி வர.
தேவகி விடவில்லை ‘”வா போலாம் போதும் அவங்க குழந்தை அவங்க பாத்துப்பாங்க, உன் வாழ்க்கையை நீ பாரு ஒரு பொண்ண அவங்க குடும்பத்துல கொடுத்து, அவ செத்தது போதும் ,..
வா நீ” என்று மொழியை இழுத்துக் கொண்டு போக…
பிள்ளைகள் அழு குரலை மொழியாள் கேட்கவே முடியவில்லை அவர்கள் இருவரும் “ம்மா, ம்மா” என்று மொழியை பார்த்து பிள்ளைகள் அவளிடம் வர அழுக….
“அம்மா என்னை விடுங்க மா என்னை விடுங்க “என்று மொழியும் அழுக.
குழந்தைகள் அழுதும் தேவகி மனதை கல்லாக்கி கொண்டவர் மொழியை இழுத்தபடியே சொல்ல.