Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சம் ஏங்குதே..

நெஞ்சம் ஏங்குதே.. 12 3

” டேய் சும்மா இருடா நீ,  அவளை இப்ப விட்ட, அடுத்து  பிடிக்க முடியாது”  என்று  அவர் சொல்ல.

 ஐயப்பனுக்கும் பேரப்பிள்ளைகள் அழுததும்  மனது பொறுக்கவில்லை “தேவகி மொழியை விடு” என்றார்.



Advertisement

 “ஏங்க  எல்லாரும்  அவ இஷ்டத்துக்கு போறீங்க அவ வாழ்க்கை என்னாகிறது” என்று  மகளின் கையை  விட்டு  தேவகி அழுக..

Advertisement

 மொழியின்   கையை  தேவகி விட்டவுடன் வேகமாக ஓடியவள் தன் இரண்டு பிள்ளைகளையும்  தூக்கிக் கொண்டாள்.

Advertisement

 தேவகி மொழி வாழ்க்கையை பற்றி புலம்புவதை அனைவரும் கேட்டுக் கொண்டிருக்க.

Advertisement

 மொழியோ தன்  இரண்டு பிள்ளைகளை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

 பிள்ளைகள் அழுவது குறையவே இல்லை,  மொழியை தேவகி அடிப்பதை பார்த்து  பயந்துவிட்டார்கள்,,

 மொழி தங்களை விட்டுப்  விலகி போனதும் இன்னும் அழுதனர்.

 மொழி  பிள்ளைகளை தன் தொளில் தூக்கிக்கொண்டு சமாதானம் பண்ண அப்போதும் இரு குழந்தைகளும் அழுது கொண்டிருந்தனர்.

 மொழியும்  குழந்தைகளை  சமாதான பண்ணிக்கொண்டு கொஞ்ச தூரம் நடந்து வந்திருந்தாள்.

 மொழியின் பின்னாடியே ரிஷியும்  வந்திருந்தான்.

 அவனுக்கு இன்னும் மொழி  ஏன் இப்படி செய்தாள், இது சாத்தியமா, என்   குழந்தைகளுக்காக அவள் வாழ்க்கையே  தியாகம் பண்ணியிருக்கிறாளே…

இவளை வீட்டை விட்டு துரத்த நான்  என்னவெல்லாம்  கொடுமைப்படுத்தினேன்.

 மனம்  ஐயோ என்று  கூப்பாடு போட்டது ரிஷிக்கு.

 மொழிப் பிள்ளைகளை வைத்து  சமாதான பண்ணிக்கொண்டே சிறிது  தூரம் வந்திருந்தாள்.

 பிள்ளைகள் அழுகை  கூடியதே தவிற  குறையவே இல்லை.

 இவர்கள் இருவருக்கும் பால் கொடுத்தால் தான் அடங்குவார்கள் என்று நினைத்தவள் தூரமாக வந்துவிட்டதை  அப்போதுதான் உணர்ந்தாள்.

 ஐயோ இங்கே எப்படி  பிள்ளைகளுக்கு பால் கொடுப்பது என்று யோசித்தாள்,  அங்கு ஒரு பெரிய புளியமரம் ஒன்று இருக்க அதன் பக்கத்தில் வேகமாக சென்றாள்.

 அப்போது தான் பின்னாடி திரும்பி பார்த்தாள் மொழி,   ரிஷி வந்து கொண்டிருந்தான் அவள் பின்னாடி.

 அவனைப் பார்த்து முறைத்தவள், முகத்தை  திரும்பிக் கொண்டு தன் பிள்ளைகள் இரண்டு  பேரை வைத்துக் கொண்டு நடக்க.

 அந்த புளியமரத்து பக்கத்தில் மறைவாக வந்தவள் யாரும் வருகிறார்களா  என்று பார்த்தாள்,  அப்படி பக்கத்தில் யாரும் இல்லை ரிஷி மட்டும் நின்றிருக்க,  அவனைப் பார்த்து “நீங்க போங்க” என்று சொன்னாள்.

 அவன் போக முடியாது என்பது போல் நிற்க.

 நீ எதை  கேட்ட இதை கேட்பதற்கு என்றவள் திரும்பி நில்லுங்க என்றாள்.

 அவனுக்கு  எதற்கு இப்படி சொல்லுகிறாள் என்று புரியவில்லை, இவள் எங்கேயாவது  தனியே சென்று விட்டாள் , எங்கே தேடுவது இவளை என்று அவளையே ரிஷி பார்த்துக் கொண்டிருக்க..

பிள்ளைகள் இருவரும் அழுது கொண்டே இருக்க.,

நீ எக்கேடாவது  கெட்டு  போ என்றவள்.

 மறுபடியும் யாரும் இருக்கிறார்களா என்று சுத்தி முத்தி பார்த்தாள் மொழி.

 அவள் ரிஷியை ஒரு மனிதனாக கூட நினைக்கவில்லை.

 அவள் மெல்ல தன் உடையை விலக்கி ஆத்விக்கை  முதலில் பசியாற்ற… அவன் அமைதியாகி விட.

இதை பார்த்த  சாத்விக் பெரும் குறலெடுத்து அழுதான், அம்மா எனக்கு பால் கொடுக்கவே வில்லை என்று.

“டேய்  இருடா சாத்வீக்” என்றாள்..

ரிஷி இதை பார்த்த படியே தான் இருந்தான்.

 தன் பிள்ளைகள் இரண்டும் அவளை என்ன செய்கிறார்கள் என்று பார்த்தபடியே இருந்தான் அவன்..

ஒரு கையில் சாத்விக்கை அணைத்து பிடித்தவள்..

 ரிஷியை   பார்த்து “உங்க துண்ட குடுங்க” என்றாள்.

 எதற்கு இவள் கேட்கிறாள் என்றவன் அவள் அருகில் வந்து அவன் தோளில் போட்டிருந்த பட்டு வேஷ்டி துண்டை அவளிடம் கொடுக்க.

 அதை ஒரு கையில் வாங்கி தன் தோளின் மீது விரித்து போட்டவள் மறுபுறம் இருந்த ஆடையை நீக்கி சாத்வீக்கை தூக்கி அவள் மடியில் வைத்துக் கொண்டு பசியாற்ற.

 ரிஷி இந்த காட்சியை பார்த்து தன் தலையில் கை வைத்து அப்படியே மொழிபக்கத்தில் அமர்ந்து கொண்டான்.

அவள் தன் இரண்டு பிள்ளைகளை எப்படி கஷ்டபட்டு வளர்த்திருக்கிறாள்,,

 உன்னை  உன்னை  நான் இப்படி படுத்தி எடுத்து விட்டேன்.

 நீ இல்லை என்றால் என் பிள்ளைகள் என்ன ஆவார்கள்..

 உன் தியாகத்துக்கு நான் என்னடி செய்வேன்..

 என்னை மேலும் மேலும்  தர்ம சங்கடம் படுத்துகிறாயே நீ.

 ஆத்விக் அழுகையை நிறுத்திவிட்டு மொழியை பார்த்து சிரிக்கத் தொடங்கினான்.

 அவளின் முகத்தைப் பார்த்து அவன் சிரிக்க..

 அவளோ “ஒழுங்கா குடிடா”என்று அவனை செல்லமாக மிரட்ட,

அவனோ தனது பால் பற்களை காட்டி மொழியை பார்த்து  சிரித்தவன்,

 முதல் முறையாக  மொழியை பார்த்து “அம்மா…. அம்மா…” என்று சொல்லி சிரிக்க.

ஆத்விக்  எப்பொழுதும் ‘மா’ என்று தான் அழைப்பான் இப்போது  ‘அம்மா’ என்று அழைத்ததும் மொழிக்கு  அழுகை  தாங்க முடியவில்லை.

குழந்தையை அணைத்து முத்தமிட்டாள்.

அவன்    மீண்டும் “அம்மா” என்று சொல்ல.

 தன் இரண்டு குழந்தைகளை  மார்போடு சேர்த்து அணைத்து கொண்டவள் கதறி அழுதாள்.

மனதில் எனக்கு இவர்கள் மட்டும்  போதும், வேற  யாரும் எனக்கு தேவை  இல்லை என்று தோன்றியது,

குழந்தைகள் அம்மா என்றதும், அவ்வளவு மகிழ்ச்சி மொழிக்கு, ஆனால் அதை உணர்ந்து, சந்தோஷபட கூட   தன்னால் முடியவில்லையே என்ற வருத்தம் பெரியதாக இருக்க..

தன் பெற்றோர் தன்னை பிள்ளைகளிடமிருந்து பிரித்து விடுவார்களோ என்றவளுக்கு, அப்படி ஓர் அழுகை வந்தது..

அவள் அழுவதை தாங்க முடியாத ரிஷி அவள் தலையை  தன் தோள் அணைத்துக்கொண்டான்…

சிறிது நேரம் அழுதவள், நிமிர்ந்து ரிஷியை பார்க்க,

அவன் கண்ணும் கலங்கி இருந்தது.

“மொழி” என்று ரிஷி ஏதோ பேச வர…

அவனை தடுத்தவள்.

“ஏன் நந்து எல்லாரும் இப்படி  என்னை டார்ச்சர் பண்ணுறீங்க. நீங்க இந்த நாலு மாசமா, என்னையா வச்சு செஞ்சீங்க, நிம்மதியா சாப்பிடவிடல, தூங்க விடல, என்னை உங்க வீட்ட விட்டு துரத்த, என்னவெல்லாம் செய்தீங்க,, தாய் இல்லாத என் அக்கா பிள்ளைகளை பார்க்குறது அவ்வளவு பெரிய தவறா, நான் என்ன பண்ணேன் எல்லாருக்கும், என்னை ஏன் எல்லாரும் துன்பபடுத்துறீங்க” என்று அவள் தேம்பி அழுத படியே பேச.

அவனோ அமைதியாக இருந்தான், என்ன சொல்லுவான் அவன் , மொழியை அவன் வீட்டை விட்டு துரத்த என்னென்ன செய்தான் என்று அவனுக்கு தானே தெரியும்..

அவன் இவ்வளவு தொந்தரவு கொடுத்தும், அவள்  அசயாமல் இருந்ததுக்கு காரணம் இப்போது தானே  அவனுக்கு தெரிகிறது..

தன் பிள்ளைகளை அவள் உடலை வருத்தி, யாரும் செய்ய துணியாததை செய்து வளர்த்திருக்கிறாள்,

நான் அவளை என்ன செய்திருக்கிறேன், தன்னை ஏமாற்றியதற்கு அவளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று அவளை எவ்வளவு துன்ப படுத்திருக்கிறேன்,

நான் எல்லாம் மனிதனே இல்லை, என்று தோன்றியது..

“எனக்கு ஒரு உதவி பண்ணுறீங்களா”?

என்று ரிஷியை பார்த்து மொழி கேட்க.

என்ன என்பது போல் அவன் அவளை பார்க்க..

“இவங்க இரண்டு பேரையும் எனக்கு கொடுத்துடுங்க, எனக்கு வேற யாரும்  வேண்டாம், நானும் என் இரண்டு பிள்ளைகளும் எங்கேயாவது போயிடுறோம்”,.

என்றவள் தேம்பி, தேம்பி அழ.

“வச்சுக்கோ இவங்க இரண்டு பேரையும்  நீயே வச்சுக்கோ, உனக்கு இல்லாத உரிமை யாருக்கு இருக்கு, இனி நான் பாத்துக்கிறேன் அழாத” என்றான் ரிஷி..

மொழிக்கு  இவனா பேசியது என்பது போல் ரிஷியை  பார்த்தாள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!