Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆசை மீறும் நேரம்

ஆசை மீறும் நேரம் 22.1

அத்தியாயம் 22

செல்வியை கோவையிலுள்ள பிரபல மருத்துவமணைக்கு அழைத்து வந்திருந்தான் பொற்செல்வன். ‘நான் நல்லாத்தான் இருக்கேன், ஹாஸ்பிட்டலுக்கு போக வேண்டாம், ரோஜா தோட்டத்திற்கு போகனும்’ என்று பெரிய ஆர்பாட்டம் செய்தாள்.

‘அம்மா ஒரே வாரத்துல கல்யாணம் வைக்க சொல்லிட்டாங்க, டாக்டர்கிட்ட அப்பாய்மண்ட் வாங்கியாச்சு, கல்யாண டைம்ல ஹெல்த் ரொம்ப முக்கியம், வித் இன் செகண்ட்ல தூங்கிடற, தாலி கட்டும்போது நீ பாட்டுக்கு தூங்கிட்டா மொத்தமும் ஸ்பாயிலாகிடும். டாக்டர்கிட்ட போய்ட்டு வந்து ரோஜா தோட்டம் போலாம்’ என்று சாமாதானம் செய்து அழைத்து வந்திருந்தான்.

மருத்துவமணை சென்றதும் ‘ஸைக்யாட்ரிஸ்ட்கிட்டயா? நானென்ன பைத்தியமா?” என்றவளுக்கு கண்கள் கலங்கிவிட, ‘பைத்தியம்தான் ஸைக்யாட்ரிஸ்ட்கிட்ட வருவாங்களா? லூசு’ என திட்டியவன்,



Advertisement

“உன் ப்ராப்லத்தை ஃபேமலி டாக்டர்கிட்டதான் முதல்ல சொன்னேன், அவர்தான் ஸைக்யாட்ரிஸ்ட்டை பார்க்க சொன்னார். பெருசா ப்ராப்லம் இருக்காதுனும் சொன்னார். ப்ளீஸ் செல்வி, எனக்காக செக் பண்ணிடலாம். நம்ம மேரேஜை அப்போதான் என்னால முழுசா என்ஜாய் பண்ண முடியும்’ என்றான் கெஞ்சலாக.

பொற்செல்வனுக்காக சம்மதித்த போதும், ’தூங்கினது ஒரு குற்றமா?’ என மருத்துவரை பார்க்கும் வரை முணகிக்கொண்டேதான் இருந்தாள்.

மருத்துவரை காணும் நேரமும் வந்தது. வழக்கமான கேள்விகளுக்கு பின்னே, “எப்பொழுதெல்லாம் செல்வி கோபப்படுவாள்?” என்றார் மருத்துவர்.

Advertisement

“தந்தைப் பற்றிய நினைவு வரும்போது கோபம் கொள்வாள். சில காலம் பொற்செல்வனோடும் கோபமாக இருந்தாள், தற்போது சமாதானம் ஆகிவிட்டாள்” என்றார் சாம்பவி.

Advertisement

“எந்த நிகழ்விற்கு பின்னே சட்டென உறங்கினாள்?”

“திருமணம் நிச்சயத்த அன்றும், தற்போது தந்தையை கண்ட பிறகும்” என்று அன்றைய தினத்தின் நிகழ்வுகளை சொன்னான் பொற்செல்வன்.

இரண்டு தினங்களாக செல்வியிடம் இது குறித்த கலந்தாய்ந்த மருத்துவர், “செல்விக்கு ஏதும் பெரிதாய் பிரச்சனை இல்லை, ஆனால் பேசிக்கொண்டிருக்கும்போதே சட்டென உறங்குவதற்கான காரணம் அறிய மீண்டும் நாளை கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்றார்.

Advertisement

சாம்பவி பயந்து கொள்ள, “பயப்பட வேண்டாம் ஆன்ட்டி, பெஸ்ட் டாக்டர் இவங்க” என்றான்.

செல்வியின் ஆய்விற்கு பின்னே, பொற்செல்வன், மற்றும் சாம்பவி மட்டும் வந்திருந்தனர். செல்வியின் தந்தையை கேட்டார் மருத்துவர்.

தாமோதரன் மருத்துவமணையில்தான் இருந்தார். “அவர் வெளில இருக்கார், எங்ககிட்ட சொல்லுங்க” என்று சாம்பவி சொல்ல, “செல்வியின் நிலையை அவளின் தந்தை கட்டாயமாக தெரிந்துகொள்ள வேண்டும், அவரையும் வர சொல்லுங்க” என்றார் மருத்துவர்.

தாமோதரன் வந்த பின்னே, “செல்வி பனிரெண்டாம் வகுப்பு முடிக்கும் வரை உங்க மேல கோபம் இருந்தாலும் நிறைய ஏக்கமும் இருந்திருக்கிறது. பிறந்த நாள், பண்டிகை நாள்களில் நான் இல்லாமல் தந்தையால் எப்படி நிம்மதியாக இருக்க முடிந்தது என்று நிறைய ஆதங்கப்பட்டிருக்கிறாள்.

தகப்பனின் அன்பிற்கும் அணைப்பிற்கும், நண்டு குட்டி என்ற கொஞ்சலுக்கும், நெற்றி முத்தத்திற்கும் நிறைய ஏங்கியிருக்கிறாள்.

பனிரண்டாம் வகுப்பு முடிந்ததும், அண்ணனை சிறந்த கல்லூரியில் சேர்த்தியது போல, தன்னையும் கல்லூரியில் சேர்த்த அப்பா நிச்சயம் தன்னை தேடி வருவார், தனக்காகவாவது அன்னையிடம் சமாதானம் பேசுவார் என்று நிறைய எதிர்பார்த்திருந்தாள்.

அந்த நேரம் செல்வியின் தந்தை வீட்டிலிருந்து சாம்பவிக்கு அழைப்பு வந்தது. பேசியது தாமோதரன் வீட்டின் பணிப்பெண். சாம்பவி என நினைத்து, தாமோதரன் வேறொரு பெண்ணோடு வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றிருப்பதையும், அப்பெண்ணிற்கு புது வீடு வாங்கி கொடுத்திருப்பதையும் சொல்லி, இனியும் தாமதிக்க வேண்டாம், தயவு செய்து வீட்டிற்கு வாருங்கள் என்றுசொல்ல, கேட்டிருந்த பதினேழு வயதே ஆன செல்விக்கு சித்தம் கலங்கிய நிலைதான்.

அப்பாவிற்கு என் ஃப்யூச்சரை பத்தின கவலை இல்லை, நானும் அம்மாவும் தேவை இல்லை. எங்களை இப்படி ஏமாத்துவார்னு நினைச்சே பார்க்கலனு சொல்லி ரொம்ப அழுதாங்க. செல்வியை கன்ட்ரோல் பண்ணவே ரொம்ப நேரம் ஆகிடுச்சு.

அழுகை நின்னதும் ஆத்திரம் வந்துடுச்சு. இதெல்லாம் தெரிஞ்சும் என் தாத்தா பாட்டி அப்பாவை தண்டிக்கல. தண்டிச்சிருந்தா வீடு வாங்கி கொடுக்குற அளவுக்கு பழக்கம் வளர்ந்திருக்காது. தாத்தா பாட்டியால தண்டிக்க முடியலைனா என் அம்மாக்கு கால் பண்ணி பேசியிருக்கலாமில்ல? அதையும் செய்யல.

அதுக்கு என்ன அர்த்தம்? அவங்களுக்கும் இதுல சம்மதம், என் அம்மாவை யோசிக்காம பையன் சந்தோசம் முக்கியம்னு நினைச்சிட்டாங்க. இல்லைனா பையன் நாசமா போனாலும் பரவாயில்ல, என் அம்மாக்கு கால் பண்ணி பேசக்கூடாதுனு ஸ்ட்ராங்கா இருந்திருக்காங்க.

அவ்வளோ பெரிய தப்பை பண்ணிட்டு எவ்வளோ தைரியம் இருந்தா என் அம்மாவை பார்க்க வருவார்? எல்லாம் பணம் கொடுத்த தைரியம். அவர்கிட்ட பணம் இருக்குன்றதை விட, என் அம்மாகிட்ட பணம் இல்லைன்ற தைரியம்தான் அவரை இவ்வளோ கேவலமா நடந்துக்க வச்சிருக்கு.

அவர் பணத்தை அவரே வச்சிக்கட்டும். பணத்தால எதை வேண்டும்னாலும் சாதிக்கட்டும். என் அம்மாவையும் என்னையும் இனி வாங்கவே முடியாது. எங்களுக்கு அவரும் வேண்டாம், அவர் பணமும் வேண்டாம். நானும் மன்னிக்கமாட்டேன், என் அம்மாவையும் மன்னிக்க விட மாட்டேன், என் அப்பாவை என் அம்மா மன்னிச்சிட்டா இந்த செல்விக்கு அம்மாவும் கிடையாது. தாமோதரன் குடும்பத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லனு” ரொம்ப கோபமா பேசினாங்க”

தாமோதரன் கண்களில் கண்ணீர் வழிய, சாம்பவிக்கு பெரும் தவிப்பாக இருந்தது. மருத்துவர் சொன்னதெல்லாம் நடந்த நிகழ்வுகள். ஆனால் இதனால் மகளுக்கு என்ன என்பதுதான் சாம்பவியின் கவலை.

தாமோதரனிடம் “எஸ்… செல்விக்கு மன அழுத்தம் அதிகமா இருக்கு. நீங்க உங்க மகளோட உறவாட நினைச்சா, செல்வியோட மன அழுத்தம் அதிகமாகி ஸ்கிஸோஃப்ரேனியா, ஐ மீன்… மன அழுத்தம் மனச்சிதைவு நோயா மாற கூட வாய்ப்பிருக்கு. அப்படி ஆகிட்டா தினமும் டேப்லட் எடுக்கும் நிலை வரும்.

செல்வியோட அண்ணன் இளவரசன், அப்பா தப்பானவர்னு தெரிஞ்சும் அம்மாகிட்ட வராம அப்பாக்கு சப்போர்ட் பண்றார்னு அவரையும் செல்விக்கு பிடிக்காமத்தான் இருந்தது.

அம்மாக்காக கஸ்டம்ஸ் ஆஃபீஸர் ஆகியிருக்கார்ன்ற ஒரே காரணம்தான் இளவரசனை மன்னிச்சு ஏத்துக்க வச்சிருக்கு. பதிமூணு வயசுலயிருந்து செல்வியோட பதினேழு வயசு வரை உங்களுக்காக காத்திருந்திருக்காங்க. அந்த ஃபோன் காலுக்கு அப்புறம் பேசும்போது, எந்த இடத்திலயும் அப்பானு சொல்லல. உங்களை அப்பானு சொல்லிக்க அசிங்கப்படுறாங்க.

இன்ஃபேக்ட் உங்களோட சண்டைபோட கூட பிடிக்காமத்தான் இருந்திருக்காங்க. பொற்செல்வன் சொன்ன காரணத்துக்காக மட்டும்தான் உங்களை ஃபேஸ் பண்ணியிருக்காங்க. உங்க மகளோட சமாதானம் ஆக இது சரியான நேரம் கிடையாது.

இந்த டைம்ல உங்களுக்கு யார் சப்போர்ட் பண்ணினாலும் அவங்களையும் வெறுப்பாங்க. இப்போதைக்கு நீங்க செல்விகிட்டயும், அவங்கம்மாகிட்டயும் இருந்து விலகியிருக்கிறதுதான் செல்விக்கு நல்லது” என்றார்.

சாம்பவியிடம் “செல்வி டிப்ரஸன்ல இருக்கும்போது, பொற்செல்வன்கிட்ட வேலைக்கு அனுப்பியதுதான் நீங்க செய்த பெரிய நல்ல விசயம். பொற்செல்வனோட அணுகுமுறையும், தோழமையும்தான் செல்வியை டிப்ரஸன்லயிருந்து வெளில வர வச்சிருக்கு.

வேலை செய்யிறவங்ககிட்ட நீங்க பழகுற விதம், அவங்ககிட்ட காட்டுற அக்கறை, உழைப்பிற்கேற்ற சம்பளம் கொடுக்குறதுனு உங்களோட கேரக்டர் செல்வியை இம்ப்ரஸ் பண்ணியிருக்கு. ரொம்ப என்ஜாய் பண்ணி உங்களோட வேலை செய்திருக்காங்க.

உங்களை மட்டுமில்ல, உங்க ஃபேமலி மெம்பர்ஸ் எல்லாரையும் செல்விக்கு பிடிக்கும். ஏழை, பணக்காரனு பார்க்காம எல்லார்கிட்டயும் சகஜமா பழகுவாங்க. உங்க பேரண்ட்ஸ் மருமகள்களை பார்த்துக்கிறதும், அன்பு காட்டுறதும் செல்விக்கு ரொம்ப பிடிச்சிருந்திருக்கு.

செல்வியோட தாத்தா பாட்டி அப்படி இருக்க மாட்டாங்களாம். செல்வி அம்மாவை ரொம்ப கஷ்டப்படுத்துவாங்களாம். குடும்பம்னா பொற்செல்வன் குடும்பம் போலத்தான் இருக்கனும், மேன்லினா அது பொற்செல்வன்தான்ற அளவுக்கு உங்க மேலயும், உங்க ஃபேமலி மேலயும் ரொம்ப மதிப்பு வச்சிருக்காங்க.” என்றவர்,

தாமோதரனிடம் சாம்பவி இருவரிடமும் “நீங்க வெளில இருங்க, பொற்செல்வன்கிட்ட பேசனும்” என்றார்.

“என் பொண்ணுக்கு மனநோய் மாதிரி ஏதும் இல்லைதானே?” என சாம்பவி தவிப்போடு கேட்க, “இல்லை, ஆனா கேர்ஃபுலா ஹேண்டில் பண்ற ஸ்டேஜ்ல இருக்காங்க. அவங்களுக்கு பிடிக்காததை செய்தாலோ, நியாபகப்படுத்தினாலோ ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளாகிடுவாங்க” என்றார்.

தன்னைப் பற்றிய ரகசியம் அனைத்தும் மகளுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கவில்லை தாமோதரன். சாம்பவி தன்னோடு இல்லாததை தாள முடியவில்லை. எத்தனை பெரிய தொழிலதிபர் நான். என்னோட வாழ உனக்கு கசக்குதா? போனா போடீ… நீ இல்லைனாலும் நான் வாழ்வேன் என்று அந்த நேரம் மனைவியை எதிரியாக நினைத்தார்.

புதுப் பெண்ணோடான பழக்கம் பேரின்பத்தை கொடுத்தது. பணத்திற்காக பழகுபவர்கள் எப்படியும் இருப்பார்கள் என்று கூட அறிய முயலவில்லை. ஆசையாக நெருங்கும் நேரம் உன்னைப்போல் இவள் முகம் திருப்புவதில்லை. தன் வருகையை வரமாய் நினைக்கிறாள்.

தாமோதரனை பொறுத்தவரை சாம்பவி வீட்டை விட்டு வெளியேறியதுதான் பெரும் குற்றம். இன்னும் சில வருடம் கழித்து மகளின் திருமணத்திற்கு தன்னிடம்தானே வந்தாக வேண்டும் என்று இருமாப்போடு இருந்தார்.

இன்று மருத்துவர் சொன்ன பின்னேதான் மகள் தன்னை எத்தனை எதிர்பார்த்திருக்கிறாள் எனப்புரிந்தது. மனைவி மீதுள்ள கோபத்தில் மகளை விட்டுவிட்டேனே… என்ற வேதனையோடு தாமோதரன் வெளியேறினார்.

பொற்செல்வனிடம் எதற்கு தனியாக பேச வேண்டும்? மன அழுத்தத்தில் இருக்கும் செல்வி திருமண வாழ்விற்கு சரியானவள் இல்லை என்று சொல்வாரா? என்று பயமானது சாம்பவிக்கு.

மருத்துவரின் பேச்சை கேட்டாவது கணவன் மனம் மாறுவாரா? இல்லை சொத்து கொடுப்பேன் என்று பிடிவாதம் செய்து செல்வியின் மனநிலையை சோதிப்பாரா? அப்படி ஏதும் மன அழுத்தம் அதிகமாகி மனநோய் வந்தால் பொற்செல்வன் என்ன முடிவெடுப்பான்? பொற்செல்வனின் பெற்றோர் என்ன சொல்வார்கள்? என்ற வேதனையோடு சாம்பவி வெளியேறினார்.

“செல்விக்கு உங்க மேலயும் நிறைய கோபம் இருந்திருக்கு. இப்போ கோபம் குறைஞ்சு வருத்தமா மாறியிருக்கு” என்றார்.

மருத்துவர் தனியே பேச நினைக்கும்போதே தன்னைப் பற்றிய செல்வியின் மனநிலையை பொற்செல்வன் கணித்துவிட்டான். “ம் தெரியும், செல்விக்கு ப்ரப்போஸ் பண்ணிட்டு வேற பொண்ணை நிச்சயம் பண்ணிட்டேன், அது செல்வியை ரொம்ப ஹர்ட் பண்ணியிருக்கு” என்றான்.

“ஓ… அப்படிங்களா? கோபம் இருந்தது, இப்போ இல்லைனு சொன்னாங்களே தவிர, எதனால கோபம்னு எத்தனை முறை கேட்டும் சொல்லவேயில்ல. பொற்செல்வன் மேல கோபம் இருந்தாலும் எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். நல்லவர். அவரை சுத்தியிருக்கவங்களை நல்லா பார்த்துப்பார். குடும்பத்து ஆள்கள் மேல பாசமா இருப்பார்னு ஒரே பாராட்டு” என்றார் மருத்துவர்.

“சடர்னா தூங்கிடறதை நினைச்சுதான் கொஞ்சம் பயந்துட்டேன். சின்ன ப்ராப்லத்தை கவனிக்காம விட்டு பெருசாக்கிடக் கூடாதுனுதான் உங்ககிட்ட கூட்டிட்டு வந்தேன். தேங்க் காட், பெருசா ஏதும் ப்ராப்லம் இல்லை. பை டாக்டர்” என்று எழுந்தான் பொற்செல்வன்.

“மேரேஜ் வெய்ட் பண்ணி பண்ணிக்கிறிங்களா?”

“நோ டாக்டர். முடிஞ்சவரை சீக்கிரம் பண்ணிப்பேன்”

“சடர்னா தூங்கினாலும் தூங்கி எழுந்த பின்னாடி அவங்க பிகேவியர் நார்மலா இருக்கிறது நமக்கு பாஸிட்டிவான விசயம்தான். ஆனா செல்வி அவங்கப்பாவால ரொம்ப மன அழுத்தத்துல இருக்காங்க. இப்படி டைம்ல கல்யாணத்தை தள்ளி போடத்தான் நாங்க சஜஸ்ட் பண்ணுவோம், ஆஃப்டர் மேரேஜ் அவங்க பிகேவியர் எப்படியிருக்கும்னு சொல்ல முடியாது”

“அவங்கப்பா விசயத்துல மன அழுத்தத்துல இருக்கானும், என்மேலே வருத்தத்துல இருக்கானும் இங்க அழைச்சிட்டு வரும் முன்னாடியே எனக்கு தெரியும். அதுக்காக மேரேஜை தள்ளி போட்டா இன்னும் மோசமாகிடுவா”

“செல்வியை நல்லா புரிஞ்சி வச்சிருக்கிங்க, நீங்க பயந்துக்கிறிங்கன்ற ஒரே காரணத்துக்காகத்தான் ஹாஸ்பிட்டல் வர சம்மதிச்சாங்களாம். நான் கேக்குற கேள்விகளுக்கும் கோவப்ரேட் பண்ணினாங்களாம். மத்தபடி அவங்க ரொம்ப ஸ்ட்ராங்குனு அவங்களுக்கு தெரியுமாம்”

“ஹா ஹா, உண்மைதான். அவ ஸ்ட்ராங் கேர்ள்தான், நான் பார்த்துக்கிறேன் டாக்டர்” என்று வெளியே வந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!