“இல்ல, இந்த மாதிரி மன அழுத்தம் இருக்கும்போது கல்யாணம் செய்துக்கமாட்டாங்களாம்” என்றவருக்கு கண்கள் கலங்கிவிட,
Advertisement
“ஓஹ்… நீங்க இப்படி நினைச்சிட்டிங்களா? எஸ்… டாக்டர் சொன்னாங்கதான், செல்வியோட நல்லதுக்காக மேரேஜை கொஞ்ச நாள் தள்ளி வச்சிக்கலாம்னு சொன்னாங்களே தவிர, மேரேஜ் லைஃப்க்கு செல்வி எலிஜிபிள் இல்லைனு சொல்லல” என்றான்.
“இல்ல தம்பி, வீட்டுல அமிர்தாம்மா, ஐயா என்ன சொல்றாங்கனு கேட்டுப்போம்”
“அவங்ககிட்ட நான் பேசிக்கிறேன், செல்வி அப்பா எங்க?”
Advertisement
“என்கிட்ட பேச வந்தார், உங்ககிட்ட பேச பிடிக்கலனு கத்தவும் போய்ட்டார்”
Advertisement
“சரி வீட்டுக்கு போலாம்” என்று வெளியேறினர். காரில் வரும்போதும் சாம்பவி முகம் வேதனையிலேயே இருக்க, “நீங்க இப்படி இருந்தா செல்வி பயப்படுவா ஆன்ட்டி” என்றான்.
“என் பொண்ணை இப்போவும் உங்களுக்கு பிடிச்சிருக்கா?” என்றார் பெரும் தயக்கத்தோடு.
“எப்போவுமே செல்வியை எனக்கு பிடிக்கும். எனக்கு பொண்டாட்டினா அது செல்வி மட்டும்தான்” என்றான்.
Advertisement
சாம்பவி முகம் நிம்மதியை காண்பித்தது. சாம்பவியை வீட்டில் விட்டுவிட்டு ரோஜா தோட்டம் வந்தான். நவீனாவும் செல்வியும் சுவாரஸிமாக பேசிக்கொண்டிருக்க, அவர்கள் முன்னே போய் நின்றவன், “இரண்டு பேரும் இப்படி வெட்டியா அரட்டை அடிக்கிறதுக்கு பதிலா ஆஃபீஸ் ஒர்க் பார்க்கலாமில்ல?” என முறைத்தான் இருவரையும்.
“நாங்க இரண்டு பேரும் இப்போ உங்க ஸ்டாஃப் கிடையாது” என்றாள் செல்வி.
“ஸ்டாஃபா இருந்திருந்தா கூட மன்னிச்சிருப்பேன், புருஷோத்தமன் குடும்பத்தையும், குடும்பத் தொழிலையும் காப்பாத்த வேண்டிய முதலாளிங்க இப்படி வெட்டியா அரட்டை அடிச்சிட்டிருக்கலாமா?”
இவன் பொய்யாய் முறைக்க, “இப்போ என்னவாம்? ஜாலியா கொஞ்ச நேரம் பேசிட்டிருந்தது தப்பா?” என்றாள்.
“அண்ணன் கால் பண்ணினாராம்? ஏன் அண்ணி அட்டன் பண்ணல?” என்று பொற்செல்வன் நவீனாவை கெஞ்சலாய் பார்க்க,
“லன்ச்சுக்கு வந்துடறேனு சொல்லிட்டு வந்தேன், பசிச்சிடுச்சு போல, அதான் கால் பண்ணியிருக்கார். நான் வரேன் செல்வி” என்று சிரிப்போடு அவ்விடம் விட்டு அகன்றாள் நவீனா.
“இப்போ எதுக்கு நவீனாக்காவை துரத்திவிட்டிங்க?”
“ஹாஹா… தெரிஞ்சிடுச்சா? ஊருக்கு வந்து இரண்டு வாரம் முடியப்போகுது, ஆனா நாம பேசிக்கிறது போன்ல மட்டும்தான்”
“எப்போப்பாரு அம்மா இருக்கும்போதே கூப்பிடுறிங்க, எப்படி வரது?”
“ம்ப்ச் ப்ளான் பண்ணி பேச இதென்ன பிஸ்னஸ் மீட்டா?” என அவளின் கைப்பிடித்தபடி நடைபோட, “ரோஜா தோட்டம் போலாமா?” என்றாள்.
“ம்ஹும், அங்க இப்போ வேலை செய்திட்டிருப்பாங்க, நாம வேற இடத்துக்கு போலாம்” என்று காரை நோக்கி சென்றான்.
“எங்க போறோம்? அம்மா லன்ச் சாப்பிட கூப்பிடுவாங்க”
“என்ன பண்ணிடுவேன் உன்னை?” என முறைக்க, “இல்ல நான் அப்படி நினைக்கல, நாம முன்னாடி ஃப்ரண்ட்ஸா இருந்தோம், இப்போ இப்படி இருக்க ஒருமாதிரி வெக்கமா இருக்கு” என்றாள் சங்கடத்தோடு.
“அது சரி… இதுக்கே வெக்கப்பட்டா? ஒரு வருசம் கழிச்சு கர்ப்பினி ஆன பின்னாடி வீட்டைவிட்டு வெளில வரமாட்டியோ?” என்றான் சிரிப்போடு.
இன்ப அவஸ்த்தையை மறைக்க, “என்ன பேசனும்?” என பேச்சை மாற்றினாள்.
“நிறைய பேசனும்” என்று அமர்ந்தவன், செல்வியையும் அருகே அமர்த்திக்கொள்ள, பிறகுதான் தென்னந்தோப்பிற்கு வந்திருப்பது புரிந்தது.
“நிஜமாவே பேசனுமா?”
“ம், நம்ம கல்யாண விசயமா பேசனும்”
“அதை பார்த்துக்க நீங்களும், என் அம்மா, ஆன்ட்டி எல்லாரும் இருக்கிங்க. என்கிட்ட ஏதும் கேட்காதிங்க. எந்த டென்ஷனும் இல்லாம நான் நம்ம கல்யாணத்தை என்ஜாய் பண்ணப்போறேன்”
“நிஜம்மாவா?” என்றான் சந்தேகப் பார்வையோடு.
“ஏன் ஏன் அப்படி கேட்குறிங்க?”
“இதெல்லாம் நீ உனக்குள்ளயே சொல்லிக்கிட்டிருக்க டைலாக். உண்மையா நீ பயங்கர டென்ஷன்ல இருக்க, அது தேவையில்லாதது, நான் பார்த்துக்கிறேன்”
செல்வியின் கண்கள் கலங்கிவிட, “ம்ப்ச்…” என தோளோடு அணைத்துக்கொண்டவன், “நீ எவ்வளோ ஸ்ட்ராங்னு உனக்கே தெரியல. உன் அளவுக்கு நான் கூட ஸ்ட்ராங் கிடையாது” என்றான்.
“எனக்காக உங்களை குறைச்சி சொல்லாதிங்க. எனக்கு பிடிக்கல”
“உண்மையைத்தான் சொல்றேன். அரண்மனையில பிறந்து இளவரசியா வளர்ந்த பொண்ணு, அப்படியே புரட்டி போட்ட மாதிரி குட்டி வீட்டுல ஒரு மிடில்க்ளாஸ் வாழ்க்கையை நிமிர்வா வாழ்ந்துருக்க. இப்போ வரைக்கும் வாழ்ந்துட்டும் இருக்க.
பதிமூணு வயசுலயே உன் அம்மாக்காக நீ நின்னுருக்க. உன் அப்பா மேல உள்ள வருத்தத்தை யார்கிட்டயாவது ஷேர் பண்ணியிருந்தா கொஞ்சமாவது ஸ்ட்ரெஸ் குறைஞ்சிருக்கும். ஆனா நீ அப்படி பண்ணல. உன் கஷ்டத்தை நீயே சுமந்திருக்க. அந்த வயசுல இதெல்லாம் ஃபேஸ் பண்றது சாதாரண விசயமில்ல.
இவ்வளோ ஸ்ட்ரெஸ்லயும் நல்லா படிச்சிருக்க. பழைய சொகுசான வாழ்க்கையை நினைச்சு ஏங்காம, நம்ம கம்பெனில வேலை பார்த்திருக்க. ஏனோதானோனு இல்லாம வேலையை நல்லா கத்துக்கிட்ட. பதிமூணு வயசுல எனக்கு இப்படி ஆகியிருந்தா உன் அளவுக்கு தைரியமா நான் இருந்திருப்பேனானு தெரியல”
“நவீனாக்காவோட ஜாலியா பேசிட்டிருந்தேன், பேசாம அவங்களோடவே இருந்திருக்கலாம்” என முறைத்தாள் செல்வி.
“ம்… உனக்கு பழசு பேசினா பிடிக்காதுனு தெரியும். ஆனா காரணத்தோடத்தான் பேசினேன், இவ்வளோ போல்டான பொண்ணு எதுக்கு உன் அப்பாவை நினைச்சு டென்ஷன் ஆகுற?”
“இல்ல, நான் டென்ஷன் ஆகல”
“அப்பா விசயத்துல நீ டென்ஷன் ஆகுறனு டாக்டர் சொல்றாங்க செல்வி. உன் லைஃப் பார்ட்னர் நான். என்கிட்ட கூட ஷேர் பண்ணிக்கமாட்டியா?” என்றான் தன்மையாகவே.
“அப்படி ஏதும் நடக்காம நான் பார்த்துக்கிறேன். நீ ரிலாக்ஸா இரு செல்வி”
“ம்” என்ற செல்விக்கு முழு நம்பிக்கை வரவில்லை என்பதை அவள் முகம் சொல்லியது.
“அப்படி எதாவது நடந்தா, என் செல்வி இவ்வளோ நாள் பட்ட கஷ்டத்துக்கு வேல்யூ இல்லாம போய்டாதா? அவர் செய்த தப்புக்கு தண்டனை கொடுக்குற அதிகாரம் எனக்கு இல்ல. ஆனா என் பொண்டாட்டியை எங்கேயும் தோற்க விடமாட்டேன்” என்றான் உறுதியாக.
இதைதான் செல்வி நினைக்கிறாள். பணம் இருக்கும் திமிரில்தானே அன்னையை துச்சமாக நினைத்து அத்தனை பெரிய தப்பை செய்தார்? அந்த பணம் மகளுக்கு உதவாமல் போகும்போதாவது உணர்வுகளின் மதிப்பு தெரியட்டும் என்று நினைக்கிறாள்.
ஆனால் தந்தை அத்தனை சுலபமாக ஒதுங்க மாட்டார். திருமணத்தில் கலாட்டா செய்து பொற்செல்வனின் குடும்ப கௌரவத்தை குலைத்திடுவாரா என்ற பயம் ஆட்கொள்ள செல்வியால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.
“என் அப்பாவைப் பத்தி தெரிஞ்சா ஆன்ட்டி என்ன நினைப்பாங்க?” என்றாள் அடுத்த கவலையாக.
“உன் அப்பாவைப் பத்தி என் அம்மாக்கு மட்டுமில்ல. நம்ம குடும்பத்துல எல்லாருக்கும் தெரியும். தெரிஞ்சுதான் அம்மா உன்னை எனக்கு கேட்டாங்க. தேவையில்லாம யோசிக்காத. பிரச்சனை வரும் வரும்னே யோசிச்சிட்டிருந்தா நிம்மதியா வாழ முடியாது” என்றான்.
“நீ சந்தோசமா கல்யாணப் பொண்ணு மாதிரி இருந்திருந்தா பொள்ளாச்சிக்கு வந்த அடுத்த வாரத்துலயே நம்ம கல்யாணம் முடிஞ்சிருக்கும்”
“நீங்க என்னை மத்தது யோசிக்க விடாம பண்ணுங்க”
“அதுக்கு நீ என் கூட இருக்கனும், எப்போ கூப்பிட்டாலும் அம்மா இருக்காங்கனு சாக்கு போக்கு சொன்னா என்னால என்ன பண்ண முடியும்?”
இவள் தவிப்பாக பார்க்க, “ஆன்ட்டிக்கு பயந்து நீ வரலைன்றது பொய், உனக்கு என்னோட டைம் ஸ்பெண்ட் பண்ண பிடிக்கும். ஆனா நீ இல்லாத நேரம் உன் அப்பா வீட்டுக்கு வந்துடுவாரோனு பயந்து வீட்டை விட்டு வெளில வரமாட்டேங்குற” என்றான்.
“இ… இல்ல” என்று சமாளிக்க நினைத்தவளுக்கு பொற்செல்வனின் பார்வையில் அது முடியாமல் போக, “சாரிங்க” என்று சரணடைந்தவள், “ஆன்ட்டி அம்மாகிட்ட டேட் சொன்னாங்களாம், எனக்கு அந்த டேட் ஓகேதான். அடுத்த வாரமே நாம கல்யாணம் செய்துக்கலாம்” என்றாள்.
“ஆனா எனக்கு அந்த டேட் ஓகே இல்ல. எந்த டென்ஷனும் இல்லாம உன் கண்ல என்னைக்கு கல்யாண ஆசையையும் சந்தோசத்தையும் பார்க்குறேனோ அன்னைக்குத்தான் டேட் ஃபிக்ஸ் பண்ணுவேன்” என்றதும் செல்வியின் கண்கள் கலங்கியது.
“அழறதுனால எதுவும் சரியாகாது செல்வி. உன் பிரச்சனையை என்கிட்ட விட்டா இரண்டே நாள்ல சரி பண்ணிடுவேன். உன் அப்பா தன்னால விலகிடுவார். எனக்கு அந்த வாய்ப்பை கொடுப்பியா?” என்றான்.
“உங்களை எதாவது பண்ணிடுவாரோனு எனக்கு பயமா இருக்குங்க, டி.எஸ்.பி, கலக்டர், எம்.எல்.எ னு நிறைய பெரிய ஆளுங்களோட லிங்க் வச்சிருக்கார்” என்றாள் கவலையாக.
“எனக்கு ஏதும் ஆகாது. கவலைப்படாத” என தேற்ற, பொற்செல்வனின் கையை இறுகப்பற்றிக்கொண்டாள்.
“இது ஒன்னு கத்து வச்சிருக்க. கையை மட்டும் டைட்டா பிடிச்சிக்கிறது” என்றான் முறைப்பாக.
“வேற என்ன பண்றது?”
“நாம ஃப்ரண்ட்ஸா இருக்கும்போது கையை பிடிச்ச. இப்போவும் அப்படியே இருந்தா?”
“இங்க வச்சு கட்டிபிடிக்கவா முடியும்?”
“உன்னை கட்டிப்பிடிக்க சொல்லல, என் உடம்புல டச் பண்ண கையை தவிர வேற இடமே இல்லையானு கேட்குறேன்” என்றதும் அதிர்ந்து விழித்தாள்.
“நெத்தில முத்தம் கொடுக்கலாம், கன்னத்துல தட்டிக் கொடுக்கலாம். என் நெஞ்சுல” எனும்போதே செல்வி இமைகள் படபடக்க, “என்மேல கோபம் வரும்போது என் நெஞ்சுல குத்தலாம், இல்லைனா நெஞ்சைப் பிடிச்சு தள்ளி விடலாம். இப்படி நிறைய இருக்குனு சொல்ல வந்தேன்” என்றான் குறும்போடு.
“அப்புறம் என் இடுப்பு” எனும்போதே, “போதும் போதும்” என்றாள் அவசரமாக.
சிரித்தவன், “சரி விடு. விட்டுப்போன பார்ட்ஸ் பத்தி இன்னொரு நாளைக்கு பேசலாம்” என்று எழுந்தவன், செல்வியின் கைப்பிடித்து எழ வைத்து “இப்படியே சிரிச்சிட்டிருக்கனும், நைட் வீடியோ கால் பண்ணினா பெட்சீட்க்குள்ள இருந்து பேசக்கூடாது. உக்கார்ந்து பேசனும். என் முகத்தை பார்த்து பேசனும். சரியா” என்றான்.
“ம்”
“சரி வா, உன்னை வீட்டுடறேன்” என்று செல்வியின் வீட்டினில் அவளை விட்டுவிட்டு, அலுவலகம் வந்த பின்னே தாமோதரனிற்கு அழைத்து பேச வேண்டும் என்றான்.
“எங்க வரனும்?” என்று தாமோதரன் மகிழ்வோடு சம்மதிக்க, “நேர்ல சந்திக்கலாம் டைம் இல்ல. விருப்பமும் இல்ல. ஃபோன்லயே பேசிடறேன். அடுத்த வாரம் எனக்கும் செல்விக்கும் கல்யாணம். செல்விக்கு விருப்பமில்லைனா நீங்க வரக்கூடாது. மீறி வந்து செல்வி ஹெல்த்துக்கு எதாவது ஆச்சுனா நீங்க சந்திக்கும் விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்” என்றும் சொல்லி இணைப்பை துண்டித்தான்.