விசாலாட்சி முகம் முழுவதும் புன்னகையுடன் முதல் புகைப்படத்தை பூபதியின் கையில் கொடுத்தார்.
“இந்தப் பொண்ணைப் பாரு… பேர் அவந்திகா. அமெரிக்கால பி.எஸ்.சி. படிச்சிருக்கா. இப்போதான் ஊருக்கு வந்திருக்கா. வீட்டுக்கு ஒரே பொண்ணு… பத்து ஏக்கர் தென்னந்தோப்பு… நல்ல வசதியான குடும்பம்.”
பூபதி புகைப்படத்தை ஒரு நொடி கூட பார்க்காமல் மேசையிலேயே வைத்துவிட்டான்.
அதையும் ஒரு பார்வை கூட பார்க்காமல் தள்ளி வைத்தவன்,காபி கோப்பையை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தான்.
விஸ்வநாதன் சிரித்தபடி மூன்றாவது புகைப்படத்தை எடுத்தார்.
“சரி… இந்தப் பொண்ணைப் பாரு. ரெண்டு டிகிரி முடிச்சிருக்கா. டீச்சரா வேலை பார்க்கிறா. ரொம்ப புத்திசாலி. குடும்பமும் நல்ல குடும்பம்.”
Advertisement
இந்த முறை பூபதி புகைப்படத்தை வாங்கினான்.
விஸ்வநாதனும் விசாலாட்சியும் அவன் முகத்தை ஆவலோடு பார்த்தனர்.
இருந்தும் விசாலாட்சிக்கு ஒரு பயம் “எங்கே இந்த பெண்ணை பிடித்திருக்கு என சொல்லி விடுவானோ?ஒன்றும் இல்லாதவளை என் மருமகளாக ஏற்க வைத்து விடுவானோ” என்ற எண்ணம்.
புகைப்படத்தை இரண்டு விநாடிகள் பார்த்தவன்…அதை மெதுவாக மேசையில் வைத்துவிட்டு,
பின் இருவரையும் நோக்கி” ஒரு பொண்ணோட போட்டோவை பார்த்து ஐந்து நிமிஷத்துல அவ வாழ்க்கை முழுக்க கூட வாழ முடியுமா முடியாதான்னு எப்படி முடிவு பண்ண முடியும்?”என்றான் அமைதியாக.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அவன் தொடர்ந்து, “எனக்கு கல்யாணத்துல எந்த எதிர்ப்பும் இல்லை… ஆனா… வாழ்க்கை முழுக்க என் கூட வரப் போறவளை, ஒரு போட்டோவைப் பார்த்து தேர்வு பண்ண என்னால முடியாது.”என்றான்.
அவன் வார்த்தைகளில் இருந்த முதிர்ச்சி, பெற்றோர் இருவரையும் சில நொடிகள் அமைதியாக்கியது.
அதன்பின் எதுவும் பேசாமல் அவன் அறைக்குச் சென்றான்.இருபது நிமிடங்களில் தயாராகி ஃபேக்டரிக்கு கிளம்பினான்…அவன் கிளம்பும் வரை அவனை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தனர் இருவரும்…
பின் விசாலாட்சி ஆழ்ந்த பெருமூச்சு விட்டார்.”இவன்கிட்ட நேரடியா கேட்டா சொல்ல மாட்டா…”
விஸ்வநாதனும் அமைதியாகத் தலையசைத்தார்.
“நம்ம பையன் மனசுல ஏதோ இருக்கு விசாலாட்சி. ஆனா அதை வெளியே சொல்லத் தயங்குறான்.”
“அதான் நானும் நினைக்கிறேன்.”
சில நொடிகள் அமைதியாக இருந்த விசாலாட்சி,”காமாட்சியை வரச் சொல்லலாமா? அவகிட்டதான் இவன் சின்ன வயசுல இருந்து எல்லா விஷயத்தையும் சொல்லுவான்.”என்றார்
அவர் கூறுவதை பூபதி அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.
“ஆனா… உன் மனசுக்கு பிடிக்காத யாரையும் உன் தலையில கட்டி வைக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை.”
அவன் பார்வை மெதுவாக அவரை நோக்கித் திரும்பியது.
“உன் மனசுல யாராவது இருந்தா… தயங்காம சொல்லுப்பா.நீ யாரை விரும்பினாலும்… அந்தப் பொண்ணு நல்ல பொண்ணா இருந்தா… இந்தக் குடும்பம் கண்டிப்பா உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கும்.உன் சந்தோஷம்தான் எங்களுக்கு முக்கியம்.”
அந்த வார்த்தைகள் பூபதியின் மனதை அசைத்தன.
அவன் கண்முன்… மருத்துவமனையில் ரத்த தானம் கொடுத்த பிருந்தாவின் முகம்…அவளது புன்னகை…அவளது மனிதநேயம்…ஒன்றன்பின் ஒன்றாக வந்து சென்றன.
“சித்தி…”என்று ஆரம்பித்தவன்…
அடுத்த வார்த்தையைச் சொல்ல முடியாமல் அமைதியாக நின்றான்.
அவன் தயக்கத்தைப் பார்த்தவர் “பரவாயில்லப்பா… இப்பவே பதில் சொல்லணும்னு அவசியம் இல்லை. ஆனா… ரொம்ப தாமதம் பண்ணிடாத. நல்ல விஷயங்களை தள்ளிப் போட்டா… சில நேரம் விதி நம்மள தள்ளி வச்சிடும்.”என்றார்
அவன் மெதுவாகத் தலையசைத்தான்.
அதன்பின் வீட்டில் இருக்க ஏதோ மாதிரி இருக்க…வெளியே செல்லலாம் என வீட்டை விட்டு வெளியே வந்தான்…
காரில் அமர்ந்து இன்ஜினை ஸ்டார்ட் செய்து….யோசனையாக அமர்ந்தான்.
“பிருந்தாவுக்கே இன்னும் என் மனசுல இருக்கறதே பத்தி சொல்லல… வீட்டுல எப்படி சொல்றது?” என்ற கேள்வி அவனைத் துளைத்தது.
அடுத்த நொடியே… “முதல்ல அவளுக்கு சொல்லணும்.”என்ற முடிவுக்கு வந்தான்.
காரின் ஸ்டீயரிங்கை இறுகப் பற்றியவன், நேராக…பிருந்தாவின் மருத்துவமனையை நோக்கி காரைச் செலுத்தினான்.
ஸ்டீயரிங்கில் இருந்த அவனது விரல்கள் இறுகப் பற்றியிருந்தன. எத்தனையோ தொழில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறான்… நூற்றுக்கணக்கான பேரின் முன் தைரியமாகப் பேசியிருக்கிறான். ஆனால் இன்று மட்டும் இதயம் வழக்கத்திற்கு மாறாக வேகமாகத் துடித்தது.
“இன்னைக்கு சொல்லலைன்னா… இனிமேலும் சொல்ல முடியாது…” என்று தனக்குத்தானே கூறிக் கொண்டான்.
மருத்துவமனையில் பிருந்தா தனது அவுட் பேஷண்ட் பிரிவை முடித்துவிட்டு, அடுத்த வார்டுக்குச் செல்ல மருத்துவமனை வழித்தடத்தில் நடந்தாள்.
ரிசப்ஷன் நர்ஸ் அவளை நோக்கி வேகமாக வந்தாள், “மேம்… உங்களைப் பார்க்க பூபதி சார் வந்திருக்காங்க.” என்றாள்.
அந்த பெயரைக் கேட்டதும் அவளது நடை தானாகவே நின்றது.
“பூபதியா?”என்ற கேள்வி ஆச்சரியமாக அவளுள் எழுந்தது.
“ஆமாம் மேம். தோட்டத்துல வெயிட் பண்றாங்க.”
அப்படி என்ன அவசர வேலையாக இருக்கும் என்று நினைத்தபடி, மருத்துவமனை தோட்டத்தை நோக்கி நடந்தாள்.
அங்கே…ஒரு பெரிய மரத்தின் நிழலில் நின்றபடி, இரு கைகளையும் பின்னால் கட்டிக்கொண்டு அமைதியாக இருந்தான் பூபதி.
அவள் அருகில் வந்த சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தவன், வழக்கம்போல் சிரிக்கவில்லை.
அவன் முகத்தில் இருந்த தயக்கத்தைப் பார்த்ததும், பிருந்தாவின் மனதில் ஏதோ விளங்காத பதற்றம் எழுந்தது.
“என்னாச்சு?” என்று மெதுவாகக் கேட்டாள்.
அவன் ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு,
“கொஞ்சம் பேசணும்…”என்றான்.
அவள் அமைதியாகத் தலையசைத்தாள்.
இருவரும் மருத்துவமனை தோட்டத்தில் இருந்த நடைபாதையில் மெதுவாக நடக்கத் தொடங்கினர்.சில நொடிகள்… இருவருக்குள்ளும் அமைதி மட்டுமே நிலவியது.அந்த அமைதியைக் கலைத்தவன் பூபதிதான்.
“பிருந்தா…”
“ம்…”
“என்னை உனக்கு பிடிக்கும்னு தெரியும்.”
அவள் புருவம் சுருங்கியது.அவன் என்ன சொல்லப் போகிறான் என்று புரியாமல் அவனைப் பார்த்தாள்.
சிறிது நேரம் வானத்தை வெறித்துப் பார்த்தவன், மீண்டும் பேச ஆரம்பித்தான்.
அந்த ஒரு வாக்கியம்… பிருந்தாவின் இதயத்தில் ஏதோ உடைந்தது போல இருந்தது.அவளது முகத்தில் இருந்த புன்னகை மெதுவாக மறைந்தது. கண்களில் ஒரு ஏமாற்றம் மின்னியது.
அதை அவன் கவனித்தான்.ஆனால் தொடர்ந்து பேசினான். “பொண்ணுங்க எல்லாம் நல்ல பொண்ணுங்கதான்…”
அவள் அமைதியாக நடந்து கொண்டிருந்தாலும், மனம் முழுவதும் சிதறிப் போயிருந்தது. “இவ்வளவு நாள்… நான் மட்டும் தானா காதலிச்சேன்?” என்ற கேள்வி அவள் நெஞ்சை நெருடியது.
சில நொடிகள் கழித்து பூபதி மெதுவாகச் சிரித்தான். பின்”ஆனா… எனக்கு அவங்க யாரையுமே பிடிக்கல… வாழ்க்கைத் துணைனு சொன்னதும் எனக்கு நினைவுக்கு வந்தது… நீ மட்டும்தான்.”
பிருந்தாவின் நடை தானாகவே நின்று விட்டது.அவள் மெதுவாக அவனை நோக்கித் திரும்பினாள்.அவன் அவள் கண்களை நேராகப் பார்த்தான்.
“அப்பதான் எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சுது.உன்னை மாதிரி ஒருத்தியைத்தான்… என் வாழ்க்கையில தேடிட்டு இருந்தேன்.”
அந்த வார்த்தைகளை கேட்ட,அவளது விழிகள் கலங்க ஆரம்பித்தன.
பூபதியின் குரல் இன்னும் மென்மையாக மாறியது.
“பிருந்தா…நான் உன்னைப் பார்க்காம பல நாள் இருக்க முடியும்.உன்கிட்ட பேசாம கூட இருக்க முடியும்.ஆனா…நீ இல்லாத ஒரு வாழ்க்கையை… என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியல.” என்றான்.
அந்த வார்த்தைகள் அவளது மனதில் ஆண்டுகளாகக் காத்திருந்த காதலுக்கு உயிர் கொடுத்தன.கண்களில் இருந்த கண்ணீர் முத்துக்கள், கன்னங்களில் வழியத் தொடங்கின. அவள் பேச முடியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
பின் அவன் மெதுவாக அவள் அருகில் வந்து,”என் மனசுல இருந்ததை… இத்தனை நாளா சொல்லாம இருந்தது தப்புதான்.ஆனா… இனிமேலும் சொல்லாம இருந்தா… என் வாழ்க்கையிலேயே அதுதான் மிகப் பெரிய தப்பா இருக்கும்.”
ஒரு நொடி அமைதியாக அவளைப் பார்த்தவன்… மெதுவாக தனது வலது கையை அவள் முன்னே நீட்டினான்.
அவனது கண்களில் காதலும், நேர்மையும் மட்டுமே இருந்தது.
“பிருந்தா…என்னை…என சொல்ல வந்தவன்…சிறிது தயக்கத்துடன் சிரித்தவாறு,”என்னை கல்யாணம் பண்ணிக்கறியா?”
என்று நேராகக் கேட்டான்.
அந்த நொடி… பிருந்தாவின் கண்களில் வழிந்தது கண்ணீர் மட்டுமல்ல… பல நாட்களாக மனதுக்குள் பூட்டி வைத்திருந்த காதலின் ஆனந்தமும் கூட.
பிருந்தா பதில் சொல்ல முடியாமல் அப்படியே நின்றாள். அவளது கண்களில் இருந்து மெல்ல மெல்ல கண்ணீர் வழியத் தொடங்கியது.
அவள் அழுவதைப் பார்த்த பூபதியின் இதயம் ஒரு நொடி நின்றது போல ஆனது.
“பிருந்தா…”என்று மெதுவாக அவளை அழைத்தான்.எந்தப் பதிலும் இல்லை.
அவள் இன்னும் அவனையே பார்த்து அழுது கொண்டிருந்தாள்.
அந்தக் கண்ணீருக்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் அவன் பதறிப் போனான்.
“என்னாச்சு…? பிடிக்கலன்னா… சொல்லிடு. நான் உன்னை எந்த விதத்திலும் கட்டாயப்படுத்த மாட்டேன்.”
அவனது குரலில் பதற்றம் தெளிவாகத் தெரிந்தது.
“ப்ளீஸ்… அழாத. உன் கண்ணீரை என்னால பார்க்க முடியல.”
அவள் மெதுவாக “இல்லை” என தலையசைத்தாள்.
பின் இரு கைகளாலும் கண்ணீரைத் துடைக்க முயன்றாள். ஆனால் துடைக்க துடைக்க மீண்டும் மீண்டும் கண்கள் கலங்கின.
அதைப் பார்த்த பூபதி மேலும் தவித்துப் போனான்.
“சாரி… நான் காதலை சொல்லி உன்னை கஷ்டப்படுத்திட்டேனா? இந்த விஷயத்தை மறந்துடு. நாம முன்னே இருந்த மாதிரியே எப்பவும் இருந்துக்கலாம்…”
என அவன் வார்த்தைகளை முடிப்பதற்குள்…
“இல்ல…” என்று அவள் மெதுவாகச் சொன்னாள்.
அவன் குழப்பமாக அவளைப் பார்த்தான்.
பின் பிருந்தா மெல்லச் சிரித்தாள்.
அந்தச் சிரிப்போடு கண்ணீரும் போட்டி போட்டுக் கொண்டு வழிந்தது.
“அழறது…உன்ன பிடிக்கலன்னு இல்ல…”
“அப்போ…?”
“ரொம்ப நாளா…”என சொல்ல வந்தவள் மீண்டும் குரல் உடைந்து நின்றாள்.
ஆழமாக மூச்சை இழுத்துக் கொண்டு,
“ரொம்ப நாளா… இந்த விஷயங்களை எப்படி உன்கிட்ட சொல்றதுனு தெரியாமதான்… அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தேன்.”என்றாள்.
அவள் சொன்ன அந்த ஒரு வாக்கியம்… பூபதியின் இதயத்தை முழுவதுமாக நிரப்பியது.அவன் நம்ப முடியாமல் அவளைப் பார்த்து, “உண்மையாவா…?” எனக் கேட்டான்
பிருந்தா வெட்கத்தோடு தலையைக் குனிந்தவாறு,
“உன்னை முதல் தடவை பார்த்த நாள்ல இருந்து இல்ல… இல்ல… என சிறிது இடைவெளி விட்டு, உன்னோட மனசைப் பார்த்த நாள்ல இருந்து… எனக்குள்ளே காதல் வந்துருச்சு” என்றாள் மெதுவாக.
அவன் சிரித்தபடி நெற்றியை மெதுவாகத் தடவிக் கொண்டு,”அடடா… இவ்வளவு நாளா நான் மட்டும்தான் லூசு மாதிரி லவ் பண்ணிட்டு இருக்கேன்னு நினைச்சேன்…”என்றான்
பிருந்தா உடனே அவனை முறைத்தவாறே,”யாரு லூசு?”என்றாள்.
“நாம ரெண்டு பேருமே…”என்று சிரித்தான்.
அவளுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
அந்தச் சிரிப்பில்…பல வருடங்களாக இருவரும் மனதுக்குள் புதைத்து வைத்திருந்த காதல், வார்த்தைகளைக் கடந்து ஒன்றாக இணைந்தது.
பிருந்தாவிடம் காதலை சொன்ன பிறகு…இருவரும் சில நொடிகள் எதுவும் பேசாமல் நின்றனர்.
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே… அந்த நிமிடத்தை மனதில் பதித்துக் கொண்டனர்.
“போகலாமா?” என்று மெதுவாகக் கேட்டான் பூபதி.
பிருந்தா பேசாமல் தலையசைத்தாள்.
இருவரும் ஏரிக்கரையை அடைந்து, அதை ஒட்டியிருந்த நடைபாதையில் மெதுவாக நடக்கத் தொடங்கினர்.
அந்த மாலை நேரத்தில் ஏரியின் நீர் தங்க நிறத்தில் மின்னியது. மெல்லிய தென்றல் வீசியது. தூரத்தில் சில குழந்தைகள் பலூன் பறக்கவிட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.
காதலை ஏற்றுக் கொண்ட சந்தோஷம் மனதில் இருந்தாலும்… பிருந்தாவின் கண்கள் மட்டும் நிமிடத்திற்கு ஒருமுறை சுற்றிலும் ஓடிக் கொண்டே இருந்தன.
அதை கவனித்த பூபதி…”என்னாச்சு?” என்றான்.
“ஒன்னுமில்லை…”
“அப்புறம் ஏன் இப்படி சுத்தி சுத்தி பாக்கிற?”
அவள் தயக்கத்துடன்,”யாராவது பார்த்துடுவாங்களோன்னு பயமா இருக்கு…”என்றாள்.
“பார்த்தா… என்ன?” என அவன் கேட்ட விதத்தில் எந்தப் பதற்றமும் இல்லை.
பிருந்தா அவனை முறைத்தபடி,”உனக்கு எல்லாம் ஈஸிதான். நான் ஒரு பொண்ணு. வீட்டுல என்னை எவ்வளவு நம்பிக்கையோட படிக்க வச்சு டாக்டர் ஆக்கிருக்காங்க தெரியுமா? யாராவது பார்த்து தப்பா பேசிட்டா…”என அவள் சொல்லிக் கொண்டிருந்ததை நிறுத்திவிட்டாள்.
பூபதி முகத்தை சீரியஸாக வைத்து, “பிருந்தா…”என அழைக்க…
“உன் அப்பா, அம்மா உன்னை டாக்டராக்கணும்னு கனவு கண்டு அதை நிறைவேற்றி இருக்காங்க. இனி உனக்கு ஒரு நல்ல வாழ்க்கைத்துணை அமைச்சு கொடுக்கனும்னு கனவு கண்டுட்டு இருப்பாங்க…நீ எப்படியும் அவங்களுக்கு கட்டுப்பட்டு அவங்க பார்க்கிற வாழ்ககைத்துணையே ஏத்துக்குவேனு நம்பிக்கையோட இருப்பாங்க…அந்த நம்பிக்கைக்கு எந்தக் களங்கமும் வர நான் விட மாட்டேன்.”
அவன் குரலில் உறுதி இருந்தது.
“இனிமேல் நாம சந்திக்கறதுல கூட ஒரு எல்லை இருக்கும். உன் டாக்டர் தொழில்… உன் கனவு… அதுதான் முதல்ல. அதுக்கப்புறம்தான் நம்ம காதல்.”
அந்த வார்த்தைகள் பிருந்தாவின் மனதை இன்னும் ஆழமாகத் தொட்டன.
“ஏன்… காதலிக்க ஆரம்பிச்சதும் பொறுப்பு வந்துருச்சா?” என்று குறும்பாகக் கேட்டாள்.
“ஆமா…”
“எப்படி?”
“இப்ப நான் உன்னை காதலிக்கிறவன் மட்டும் இல்ல… உன்னோட கனவுகளையும் காதலிச்சு… உன்னை பாதுகாக்க வேண்டியவனும்.”
அவன் கூறியதை கேட்டு வெட்கத்தோடு புன்னகைத்தாள்.
அவ்வளவு நேரம் இருந்த பயம்… கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது.
சிறிது தூரம் நடந்த பிறகு…
நடைபாதையின் ஓரத்தில் இருந்த கடைகள் பூபதியின் பார்வையில் பட்டது.
“ஒரு நிமிஷம்…” என்று சொல்லிவிட்டு அந்தக் கடையை நோக்கி நடந்தான்.
அவன் ஏதோ வாங்கப் போவதைப் பார்த்த பிருந்தா வேகமாக பின்னால் சென்றாள்.
அவள் சொன்ன காரணத்தைக் கேட்ட பூபதிக்கு சிரிப்பு வந்தது.
“அவ்வளவுதானா?”
பூக்கடையில் இருந்த வயதான பாட்டியைப் பார்த்து,”பாட்டி… பத்து ரூபாய்க்கு ஜாதிமல்லி கொடுங்க.” எனக் கேட்டான்.
பாட்டி சிரித்தபடி ஒரு சிறிய பூச்சரத்தை நீட்டினார்.
அதை வாங்கிய பூபதி, பிருந்தாவின் கைகளில் கொடுக்காமல்…
“திரும்பு…”
“எதுக்கு?”
“திரும்பு…”
அவள் சுற்றிலும் ஒரு முறை பார்த்துவிட்டு, வெட்கத்துடன் மெதுவாகத் திரும்பி நின்றாள்.
பூபதி மிகுந்த கவனத்துடன் அவளது கூந்தலை ஒதுக்கி, அந்தச் சிறிய ஜாதிமல்லி பூச்சரத்தை வைத்தான்.
அந்த ஒரு நொடி… பிருந்தாவின் இதயம் வேகமாகத் துடித்தது.தென்றல் காற்றோடு ஜாதிமல்லியின் மணம் பரவியது.
அவள் திரும்பிப் பார்க்க…பூபதி அவளை ரசித்தபடி நின்றிருந்தான்.
“இது…”என்று அவள் தொடங்க,
அவன் மெதுவாகச் சிரித்தபடி.”இது என்னோட முதல் கிஃப்ட்.”என்றான்
அந்த வார்த்தை கேட்ட பிருந்தாவின் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்தன.
தலையைக் குனிந்தவள், பூச்சரத்தை மெதுவாகத் தொட்டுப் பார்த்தாள்.
அந்தப் பத்து ரூபாய் ஜாதிமல்லி…
உலகிலேயே விலைமதிப்பில்லாத பரிசாக அவளுக்கு மாறியிருந்தது.
நேரம் மெல்ல மெல்ல இருளத் தொடங்கியிருந்தது.
ஏரிக்கரையின் விளக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக எரிய ஆரம்பித்தன.
பிருந்தா கடிகாரத்தைப் பார்த்தவுடன் திடுக்கிட்டாள்.
“அய்யோ… நேரம் ஆகிடுச்சே!”