“இப்ப நான் என்ன பண்ணிட்டேன்னு…..திட்டிக்கிட்டு இருக்கீங்க….”என்று கேட்க,
“ஏன் என்ன பண்ணேனு மேடத்துக்கு தெரியாது……”என்று நக்கலாக கேட்டான் விக்ரம்.
Advertisement
“மாமாவை வீட்டுக்கு கூப்பிட்டது தப்பா….”
“ஆமானு சொன்னா என்ன செய்ய போற…..”என்றான் இடக்காக,ரவிகுமார் அன்று சுந்தரியிடம் பேசியில் அழைத்து பேசியிருக்க,அவரை வீட்டுக்கு வரும்படி கூறினாள் சுந்தரி.ரவிக்கும் மகன் எப்படி இருக்கிறான் என்று பார்க்க ஆசை அதனால் அவரும் வீட்டிற்கு வந்துவிட,வீடே அமர்களப்பட்டது.சுந்தரி அவருக்கு பார்த்து பார்த்து அனைத்தும் செய்தாள்.வெகு நாட்களுக்கு பிறகு தன் தாய் நாட்டு உணவு அதை அன்புடன் பரிமாறும் ஒரு ஜீவன் கிடைக்க ரவிக்கு அத்தனை மனநிறைவு.விக்ரம் இரண்டு முறை சுந்தரிக்கு கால் செய்து அது எடுக்கபடாமல் போகவே நேராக வீட்டிற்கு வந்துவிட்டான்.
தன் வீட்டிற்குள் தந்தையின் பேச்சும்,சிரிப்பு சத்தமும் கேட்க இவர் எங்க இங்க என்ற யோசனையுடன் வீட்டின் உள்ளே வர அங்கு சாப்பிட்டு மேஜையில் ரவி பேசியபடி சாப்பிட்டுக் கொண்டிருக்க,சுந்தரியும் சிரித்தபடி அவருக்கு பரிமாறிக் கொண்டிருந்தாள்.அதை பார்த்தவனுக்கு கண்,காது மூக்கு என்று அனைத்திலிருந்து புகை வராத குறை தான்.தன்னுடன் இத்தனை சிரித்து பேசாதவள் தந்தையுடன் பேசி சிரிக்கவும் அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை.
Advertisement
“விக்ரம்…..வாப்பா…..வா…..”என்று தந்தையின் குரலில் நிகழ்வுக்கு வந்தவன்.சுந்தரியை முறைத்தபடி வர,சுந்தரி அவனை கவனித்தால் தானே வெகுநாட்கள் கழித்து தன்னுடன் பேச ஒரு நபர் இருக்கிறார் என்பது போல ரவியுடன் பேசிக் கொண்டிருந்தாள்.ரவியும் தன் குழந்தை காலம் முதல் இளமை காலம் வரை தாய்,தந்தையுடன் இருந்த பொழுதுகளை பகிர்ந்து கொண்டிருக்க,அங்கு தனித்து விடப்பட்டவன் போல் அமர்ந்திருந்தவன் விக்ரம் தான்.தந்தை போகும் வரை தன்னை கட்டுப்படுதிக் கொண்டிருந்தவன் அவர் சென்ற பின் சுந்தரியை பிடித்துக் கொண்டான்.
Advertisement
“யாரைக் கேட்டு அவரை வர சொன்ன…..”என்று அவன் குரலில் இருந்த மாறுதலை சுந்தரி முதலில் உணரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
“சும்மா தான் வரீங்களா மாமானு கூப்பிட்டேன் வரேன்னாங்க…..ப்பா….எவ்வளவு நாளாச்சு இப்படி இருந்து இன்னைக்கு தான் ஏதோ மூச்சே வந்தது போல இருக்கு…..நீங்க எதுக்கு இன்னைக்கு சீக்கிரம் வந்துட்டீங்க…..”என்று பேசியபடியே வீட்டை ஒழுங்குபடுத்த துவங்க,விக்ரமிற்கு எங்கிருந்து தான் அத்தனை கோபம் வந்ததோ அவளை பிடித்து இழுத்து தன் அருகில் நிறுத்தியவன்.
“லுக் என் அனுமதி இல்லாம வீட்டுக்கு யாரையும் நீ கூப்பிட கூடாது….புரிஞ்சுதா…..எனக்கு இதெல்லாம் பிடிக்காது….”என்று பல்லை கடித்து கூற,சுந்தரி அவனின் செய்கையில் அதிர்ந்து நின்றுவிட்டாள்.அவள் அதிர்ந்து நிற்கவும் அவளை விடுவித்தவன் சோபாவில் முறைத்தபடி அமர,சுந்தரி தன் கைகளை தேய்த்தபடி அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.அவளிற்கு புரியவில்லை வந்தது அவனின் அப்பா அப்படியிருந்தும் ஏன் இப்படி பேசுகிறான் என்று அவள் முழித்துக் கொண்டிருக்க,
Advertisement
“ஸீ….இது ஒண்ணும் இந்தியா இல்ல…..அம்மா,அப்பா நம்மளோட இருக்க…..இது லண்டன் இங்க அவங்க லைப் அவங்க அவங்க பார்த்துப்பாங்க…..முதல்ல நீ இந்த இடத்துக்கு ஏத்த மாதிரி உன்னை மாத்திக்கோ…..புரியுதா…..”என்று கூற சுந்தரிக்கு ஒன்று மட்டும் புரிந்தது இவன் ஒரு ஆள் அண்டா பிறவி என்று.இப்படிபட்டவனிடம் கடவுள் தன்னை சிக்க வைத்துவிட்டாரே என்று வேதனை தான் படமுடிந்தது அவளாள்.
காலம் யாருக்கும் காத்திருக்காமல் கடந்திருந்தது இதோ சுந்தரி,விக்ரமின் திருமணம் நடந்து இரண்டு மாதங்கள் முடிந்துவிட்டன.இந்த இரண்டு மாதங்களில் சுந்தரிக்கு விக்ரமின் செயல்கள் ஒரளவிற்கு பிடிபட்டது.சிறு வயதிலேயே தாய்,தந்தை இருவரும் பணத்தின் பின்னே ஒடியிருக்க அதை பார்த்தே வளர்ந்தவனுக்கு பணம் மட்டும் தான் எல்லாம் என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது.அதற்காக மனிதர்களை மதிக்க தெரியாதவனும் இல்லை அவனுக்கு தேவையானவர்களை மதித்து அவர்களை தன் பேச்சு திறமையால் தன் பக்கம் வைத்துக் கொள்வான்.
அவனிடம் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை அதீத கோபம் தான் நினைத்தது நடக்கவில்லை என்றால் அவனால் அதை ஏற்று கொள்ள முடியாது அதற்கு அவன் ஆற்றும் எதிர் வினை கோபம் கோபம் மட்டுமே.சுந்தரியின் விஷயத்திலும் அது தான் நடந்திருந்தது அவள் விக்ரமை பேசவிட்டிருந்தால் இத்தனை பிரச்சனைகள் வந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் அவள் நேசனின் மீதுள்ள பாசத்தில் வார்த்தைகளை விட்டுவிட இங்கு விக்ரமின் கோபத்திற்கு அது வித்திட்டுவிட்டது.
அந்த கோபத்தை வன்மமாக மாற்றியவர் நேசன் சுந்தரியை அவனிடமிருந்து காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று அவளை அவனிடம் வசமாக சிக்க வைத்துவிட்டார்.சுந்தரி நினைத்திருந்தால் அவனிடம் போராடியிருக்க முடியும் ஆனால் அதன் பாதிப்பு மொத்தமும் தன் குடும்பத்தில் தான் விழும் என்ற காரணத்திற்காக தான் இந்த பந்திற்குள் தன்னை நுழைத்துக் கொண்டாள்.திருமணமான புதிதில் விக்ரமின் அனைத்து செயல்களும் எரிச்சல் மூட்டுவதாகவே இருந்தது.ஆனால் வசந்தியிடம் பேசியபின் அவளின் மனதில் ஒரு தெளிவு பிறந்தது.
இது தன் வாழ்வு இதை நல்லமுறையில் எடுத்து செல்ல வேண்டியது தன் கையில் உள்ளது.இந்த தெளிவு வந்த பின் விக்ரமின் செயல்களை ஒவ்வொன்றாக முதலில் ஏற்க துவங்கினாள் சுந்தரி.வீட்டில் அவனிருக்கும் நேரங்களில் அவனுடன் நட்பாக இருக்க முயற்சித்தாள் முயற்சி மட்டுமே செய்ய முடிந்தது அவளால்.அதை தான்டி அவன் அவளை நெருங்க விடவில்லை.ஒருகட்டத்தில் அதே நிலை நீடிக்க சுந்தரிக்கு தான் மூச்சு முட்டியது அதை அவனிடம் கூறவும் செய்தாள்.அதற்கு அவன் தந்த பதில் அவளை நிலைகுலை வைத்துவிட்டது.
“என்ன நான் பேசிக்கிட்டே இருக்கேன்…..நீங்க அமைதியாவே இருக்கீங்க…..”என்று கேட்க,அதுவரை லேப்டாப்பில் தலையை விட்டிருந்தவன் மெல்ல நிமிர்ந்து பார்த்தான்.
“என்ன சொல்லனும்…..”
“என்ன???”என்று சுந்தரி தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள்.இப்படி பேசுபவனிடம் என்ன பேசுவது தன்னை பிடிக்கவல்லை என்றால் ஏன் இந்த திருமணம் என்று தான் தோன்றியது சுந்தரிக்கு.சற்று நேரம் வரை தலையை தாங்கியபடி அவள் அமர்ந்திருக்க,அவன் ஏதாவது கேட்பான் என்று நினைத்திருந்தவளுக்கு ஏமாற்றம் மட்டும் மிஞ்சியது.அவன் மீண்டும் தன் வேலையை பார்க்க துவங்கிவிட்டான்.அந்த நிமிடம் அவளிற்கு கண்மண் தெரியாத கோபம் வந்தது.
“ப்ச்….நான் இங்க பேசிக்கிட்டு இருக்கேன்….நீங்க உங்க வேலையை பார்த்தீங்கன்னா என்ன அர்த்தம்…..”என்று அவன் கையில் இருந்த லேப்டாப்பை சுந்தரி பிடுங்கிவிட,
“ஏய்ய்ய்……”என்று அவன் கத்திய கத்தலில் சுந்தரிக்கு சர்வமும் ஒடுங்கிவிட்டது.
“ஓவரா அட்வான் டேஜ் எடுத்துக்காத……உனக்கு நல்லதில்ல…..”என்று அவன் விரல் நீட்டி எச்சரிக்க சுந்தரிக்கு அதுவரை கண்களில் கரைக்கட்டியிருந்த கண்ணீர் கன்னங்களில் வழிந்தது.பேச முடியவில்லை அவனிடம் நா வரண்டு விடும் போல் ஒரு உணர்வு.அவளின் கண்ணீர் விக்ரமை பாதிக்கவில்லை அவள் கையில் இருந்த லேப்டாப்பை வாங்கி கொண்டு அந்த இடத்தை விட்டு செல்ல எத்தனித்தவன் என்ன நினைத்தானோ சுந்தரியின் புறம் திரும்பி,
“லுக்…..நான் உன்கிட்ட சிரிச்சு பேசுறேன்னா உடனே அதை நீ லவ்னு நினைச்சுப்பியா….இடியட்….எனக்கு உன்னை ஆரம்பத்திலிருந்தே பிடிக்காது இது மாறப்போறதும் இல்லை….அப்பறம் ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட அதுக்கு நான் ஏற்கனவே பதில் சொல்லிட்டேன் நீ என்னோட மெடிசின்…..தட் ஸிட்……அதுக்கு மேல என்கிட்டேந்து எதையும் யூ அண்டர் ஸ்டாண்ட் எதையும் எதிர்பார்க்காத…….”என்று அழுத்தமாக உரைத்துவிட்டு சென்றுவிட,சுந்தரி தான் எதையும் சிந்திக்க முடியாமல் அமர்ந்திருந்தாள்.
வார்த்தைகள் மனிதனை வலிக்க வைக்கும் என்று அறிந்தவள் தான் ஆனால் இன்று ஏனோ மிகவும் வலித்தது.ஆசிரமத்தில் இருந்தவரை அவள் எத்தனையோ அவமானங்களை சந்திருக்கிறாள் அதை எல்லாம் தூசி போல தட்டிவிட்டுவிடுவாள் அது அவளின் இயல்பிலேயே இருந்தது.வசந்தி அவளை தத்தெடுத்த பின் அவளை எந்தவித தீ வார்த்தைகளும் தீண்டாத வாரு பார்த்துக் கொண்டார்.சுந்தரியும்,வசந்தியும் நேசனின் பொறுப்பிற்கு வந்தபின் தான் பலர் அவர்களை மதிக்கவே தொடங்கினர்.ஆனால் இன்று ஏனோ அத்தனை வலி சுந்தரிக்கு நெடு நாட்களுக்கு பின் வார்த்தைகளால் வன்மத்தை கக்கிவிட்டு சென்றவனை நினைத்து அழுகை பீறிட்டது.எங்கே அவனின் முன் அழுது இன்னும் தன்னை இறக்கி கொள்ள மனமில்லாமல் மற்றொரு அறையில் தன்னை நுழைத்துக் கொண்டாள்.
நேரம் இரவு எட்டை தொட்டிருக்க அப்போது தான் தன் வேலைகளை முடித்த விக்ரம் தன் கைகளை நெட்டி முறித்தபடி தன் ஆறடி உடலை இங்கும் அங்கும் வளைத்து தன் களைப்பை குறைத்துக் கொண்டே அறையை நோட்டம் விட அங்கு சுந்தரி இல்லை.எப்போதும் அவனுடன் தான் இருப்பாள்.அவன் வேலையாக இருந்தால் அவள் ஏதாவது ஒன்றை செய்து கொண்டு அந்த இடத்தில் தான் அமர்ந்திருப்பாள்.இன்று அவள் அமரும் இடம் வெற்றிடமாக இருக்க,
“இவ எங்க போனா……”என்று யோசித்தவனுக்கு அப்போது தான் திட்டியதே விளங்க வேகமாக அறையை விட்டு வெளி வந்து தேட தொடங்கினான்.சமையலறையில் அவள் இல்லை என்றதும் அடுத்து தோட்டம் என்று ஒவ்வொன்றாக தேடிவிட்டு வந்தவன் மாடியில் இருக்கும் மற்றொரு அறைக்கு வர அங்கு மெத்தையில் கால்களை தனக்குள் குறுக்கியபடி உறங்கியிருந்தாள் சுந்தரி.அழுத்தற்கு அடையாளமாக கன்னத்தில் தடம் இருக்க,மூக்கின் நுனி சிவந்திருந்தது.அந்த நிமிடம் விக்ரமிற்கு அவளை அப்படி பார்க்கவும் பாவமாக இருந்தது.
“ப்ச் ரொம்ப திட்டிடோம் போலையே…..இவளும் சும்மா இருக்க மாட்டா போல நானே இப்ப தான் கம்பெனி மொத்ததையும் என் பேர்ல மாத்தியிருக்கேன்…..எவ்வளவு வேலை பெண்டிங்…..”என்று தன் போக்கில் பேசிக் கொண்டிருந்தவன் அவளிடம் அசைவு தெரியவும்,அவளின் அருகில் நெருங்கி,
“அடியே….ஏன் இப்படி மோகினி மாதிரி எந்திரிச்சு…..என்னை பயமுறுத்துற…..”என்று விக்ரம் தன் நெஞ்சில் கை வைத்துக் கொண்டு பேச,சுந்தரி அவனை வெறுமையாக பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.எப்படி எதுவும் நடாவாதது போல் பேசுகிறான் என்று நினைத்தபடியே பார்த்துக் கொண்டிருக்க,அவளின் முன் கைகளை ஆட்டி,
“என்ன திரும்பவும் டிரிம்ஸா…..”என்று கேட்க,சுந்தரி பதில் ஏதும் சொல்லவில்லை.அவள் பதில் பேசாமல் இருக்கவும் அவளின் அருகில் அமர போக அவனிடமிருந்து அவள் நகர்ந்து அமர்ந்தாள்.அதை கவனித்தவன்,
“ச்சு…என்ன கோபமா….”என்றவன் அவளை இழுத்து தன் அருகில் அமர வைத்துக் கொண்டான்.சுந்தரி திமிறவெல்லாம் இல்லை அதே சமயம் அவனின் அணைப்பில் நெகிழவும் இல்லை ஒருவித இறுகிய நிலையிலேயே அவள் இருக்க,அதை உணர்ந்தவன்,
“ஓய் உனக்கு தான் என்னை பத்தி தெரியும் தான….அதுக்கு அப்பறம் ஏன் இப்படி செய்ற….அதான் கோபம் வந்துடுச்சு…..”என்று தன் செய்கையை நியாப்படுத்த முயல,
“நீங்க இப்படி தானா…..”என்றாள் குரலே எழும்பவில்லை அத்தனை அழுதிருக்கிறாள் என்று அப்போது தான் புரிந்தது விக்ரமிற்கு,
“அட என்ன உன் குரலே ஒரு மாதிரி இருக்கு….இரு நான் ஹாட் வாட்டர் எடுத்துட்டு வரேன்….”என்றவனின் கைகளை பிடித்து தடுத்தவள்,
“ம்ஹம் வேண்டாம்……எனக்கு எதுவும் வேண்டாம்…..எனக்கு தேவை பதில்…..நம்ம வாழ்க்கை இப்படி தான் போக போகுதா?????”
“……….”
“அமைதியா இருந்தா என்ன அர்த்தம்……”
“சுந்தரி…..நம்ம லவ் பண்ணி எல்லாம் கல்யாணம் பண்ணல….இது….”என்று ஏதோ ஒன்றை சொல்ல முடியாமல் நிற்க,
“சொல்லுங்க….”
“ஐ நீட் யூ……”
“அய்யோ போதும் இதே இதே வார்த்தையை சொல்லி சொல்லி என்னை தான் நீங்க பைத்தியமாக்கிட்டு இருக்கீங்க….என்னால முடியல……”என்று கலங்கியவளை வெறுமையாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் விக்ரம்.
“ஒருவேலை அது தான் உங்க நோக்கமா….”என்று சுந்தரி கூற,
“என்ன????”
“என்னை பைத்தியமாக்குறது…..”
“ஹா….ஹா…..ஹா……ஏய் என்ன இப்படியெல்லாம் யோசிக்குற…..”என்றவனுக்கு அத்தனை சிரிப்பு இப்படி சிறுபிள்ளை போல் பேசுகிறாளே என்று.
“உங்களுக்கு சிரிப்பா தான் இருக்கும் என் நிலைமை…..”என்றவள் மீண்டும் உடைந்து அழ துவங்க,
“அச்சோ….ஏய் நான் உன்னை காயப்படுத்த சொல்லல…..”என்று அவளை சமாதனாப்படுத்த,
“வேண்டாம் வேண்டாம்…..எனக்கு இங்க இருக்கவே பிடிக்கல….நான் ஊருக்கு போறேன்…..”என்று அவள் எழ அவளை பிடித்து தன் மீது போட்டுக் கொண்டவன்,
“ஏய் ரிலாக்ஸ்……நான் இன்னும் பதிலே சொல்ல அதுக்குள்ள என்ன நீ பாட்டுக்கு ஏதோதேதோ பேசிக்கிட்டே போற….”என்றவன் அவள் ஏதோ திமிறி பேச வரும் முன் அவளின் கரம் கொண்டு வாய் மூடியவன்,
“வெயிட்…..வெயிட்….என்னை பேச விடுடீ…..எனக்கு உன் மேல லவ் அதெல்லாம் இல்ல….ஆனா….எனக்கு உன் கூட இருக்க பிடிச்சிருக்கு…..ஆனா ஏன் உன்னை பிடிக்கலை அது தான் புரியல…..”என்று கூற சுந்தரி புரிந்து போனது அடுத்து அவன் என்ன கூறுவான் என்று அவனின் கைகளை தட்டிவிட்டு அவனை முறைக்க,
“இப்ப எதுக்கு நீ சந்தரமுகி மாதிரி முறைக்குற…..”
“போதும் நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் நான் கேட்கவும் வேண்டாம்……என்னை பிடிக்காதாம் ஆனா என் கூட இருக்க மட்டும் பிடிக்குமாம்…..இவன் தெளியாத பைத்தியம்….என்னையும் பைத்தியமாக்காம விட மாட்டான் போல……”என்று முணுமுணுப்புடன் கையெடுத்து கும்பிட்டவள் அந்த அறையை விட்டு வேகமாக வெளியேறிவிட்டாள்.
விக்ரமிற்கு சுந்தரியை எப்படி சமாதானபடுத்த வேண்டும் என்று தெரியவில்லை.ஏற்கனவே மனகுழப்பத்தில் இருந்தவனுக்கு இது இன்னும் குழப்பத்தை ஏற்படுத்த அடுத்த நாளே தன் மருத்துவரை சந்திக்க சென்றுவிட்டான்.