Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நிவி அம்மு - மன்னவன் மஞ்சத்தில்

நிவி அம்மு – மன்னவன் மஞ்சத்தில் 14

14.

மஞ்சம் – 14

“தமிழ் இல்லையா? அதுக்கு என்ன அர்த்தம் பாட்டி? நீங்க எந்த அர்த்தத்தில் சொல்றீங்க?”
நிறைய விளக்கங்கள் சுற்றி வரும். அதில் இவன் எதையும் தவறாக புரிந்து கொள்ள கூடாது என்று நினைக்கிறான்.

“என்ன சொல்றது? தமிழ் வீடு பூட்டி கிடக்கு. குடும்பத்துடன் வீட்டை விட்டு போய் இருக்குன்னு சொல்றாங்க. எந்த அளவுக்கு உண்மை னு தெரியல.” என்றதும் அக்னி இதயமே நின்று போனது.



Advertisement

“பாட்டி இருங்க. முக்கியமா உள்ள இருக்கவளை பார்த்துக்கோங்க.” என அவசரமாக தன் புல்லட்டை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

‘தமிழ் எங்கு செல்ல போகிறான்? பாட்டி எதையாவது தப்பா கேள்வி பட்டு இருப்பாங்க.’ தனக்கு தானே பதில் சொல்லிக் கொண்டு சென்றவன் அவன் வீட்டின் முன்பு வண்டியை நிறுத்தினான்.

அங்கிருந்த பூ செடிகள் வாடி இருந்தது. வாசலில் கோலம் போடவில்லை. அதை வைத்தே கண்டு கொண்டான்.

Advertisement

‘ஒருவேளை வீட்டில் அப்பா இருக்கலாம்.’
என்ற இறுதி நம்பிக்கையாக படலை திறந்து கொண்டு உள்ளே சென்றவனை பூட்டி இருந்த கதவே வரவேற்றது.

Advertisement

இதயம் நொறுங்கி போனது அவனுக்கு.

“தமிழ் உண்மையா நீ என்னை விட்டு போய்ட்டியா?”
வாய் விட்டு கேட்டான் அந்த மூடிய கதவை பார்த்து.

“எனக்கு இருந்த இருக்க ஒரே நண்பன் டா நீ. நான் உன் கிட்ட கோபம் பட கூடாதா? இத்தனை வருடத்தில் நான் பல முறை கோபப்பட்டு இருக்கேன். அப்பெல்லாம் நீ இப்படி என்னை விட்டு போனது கிடையாது. தானா தேடி வருவ. இப்போ உண்மையா நீ என்னை விட்டு போயிட்டியா? நம்பவே முடியல.” என புலம்பியவன், தன் புடரியில் தட்டியபடி அவன் நம்பருக்கு தன் போனில் முயற்சி செய்தான். அவனுக்கு போன் போகவே இல்லை.

Advertisement

உள்ளுக்குள் நெஞ்சம் கதறியது. அவன் வெறும் நட்பு மட்டும் கிடையாது. தந்தைக்கு தந்தையாக என்னை பாதுகாத்தவன், அப்படியே குறுகி அந்த வீட்டு வாசலில் அமர்ந்தான்.

“உன்னையும், அவளையும் நான் தப்பா நினைப்பனா? எப்படி டா உன்னால அப்படி யோசிக்க முடியுது? உன் நல்ல மனசு எனக்கு தெரியாதா? நீ அவளுக்காக சண்டை போடுறது கூட என் மேல இருக்க பாசத்தில் தான்னு எனக்கு தெரியுமே. அன்னைக்கு கொஞ்சம் அவரசப்பட்டுட்டேன் டா. அது தப்பு தான். அதுக்கக்காக இப்படி பண்ணிருக்க கூடாது.” என தன்னை தானே தலையில் அடித்துக் கொண்டு புலம்பினான்.

அவன் நிலையை எதிர் வீட்டில் இருந்தவர் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர்.

“அக்னி நீ இங்க உட்கார்ந்து எதுவும் பண்ண முடியாது. தமிழ் அம்மாவுக்கு பயம் வந்துடுச்சு நீங்க ரெண்டு பேரும் தெருவில் சண்டை போட்டுகிட்டது.

அன்னைக்கு நிவேதிதா தலையில் உன் தம்பி எச்சி தண்ணி ஊத்துட்டு திமிரா பேசி இருக்கான். அதை பார்த்து தான் தமிழ் உன் தம்பியை அடிச்சான். உன் அம்மாவை அவன் எதுவும் சொல்லல. உனக்கே தமிழ் பத்தி நல்லா தெரியும். யார் கிட்டேயும் சண்டைக்கு போக மாட்டான்னு. அப்படி பட்ட பிள்ளையை நீயும் என்ன ஏதுன்னு கேட்காமல் கை நீட்டி அடிச்சிட்ட. அதுவும் நடு தெருவில் போட்டு அடிச்சு இருக்க. என்ன தான் நீங்க ரெண்டு பேரும் நல்ல பழக்கத்தில் இருந்தாலும் தமிழை பெத்தவங்களுக்கு வலிக்கும் தானே. அதுவும் ரொம்ப வருஷம் பிள்ளை இல்லாமல் தவம் வாங்கி பெத்த பிள்ளை அவன். அவனை போட்டு நீ அவங்க முன்னாடி அடிச்சா அவங்க எப்படி தாங்கிப்பாங்க? அதான் தமிழை கூப்பிட்டுகிட்டு ஊரை விட்டு போயிட்டாங்க. எங்க போறன்னு சொல்லல. கொஞ்ச நாளைக்கு தனியாக இருக்கோம். என் மகன் சந்தோஷமா இருக்கணும். தேவை இல்லாத பிரச்சனைக்கு போய் அடிபட்டு சாக கூடாதுன்னு சொல்லி தமிழ் அம்மா அழைச்சிட்டு போயிருக்கு.” என்றதும் அக்னி மனம் கனன்று எரிந்தது.

தன் மேல் கோபம் கொண்டான்

தமிழ் அப்பா, அம்மாவுக்கு தமிழ் தான் வாழ்வின் அடையாளம். பள்ளியில் கூட “என் மகனை அடிக்க கூடாது. திட்டக் கூடாது. இல்லனா என் கூடவே என் பிள்ளை இருக்கட்டும். படிக்க வேண்டாம்.” அவன் அப்பா வாத்தியாரிடம் சண்டை போடுவார்.

ஒரு வருடத்தில் மட்டும் கிடையாது. ஒவ்வொரு வருடமும் இப்படியே தான் சொல்லி சொல்லி அவனை படிக்க வைத்தனர். இதுவரை இவர்களும் அவனிடம் சத்தமாக பேசியது கிடையாது.

தலை விண்ணு விண்ணு என்று வலித்தது.

‘நான் எப்படி மறந்தேன்?’ தன்னை தானே கேட்டுக் கொண்டான்.

‘நான் கொஞ்ச நாளாக சரியில்லை. நான் நானாக இல்லை. அதனால் தான் நண்பனை இழந்தேன். எப்போதும் போல் அவனிடம் மட்டும் மறைக்காமல் உண்மையை சொல்லி இருந்தால் எங்களுக்குள் இப்படி ஒரு பிரிவு வந்து இருக்காது.’ என நினைத்துக் கொண்டான்.

உள்ளம் கசக்கி பிழியும் வலியோடு வீட்டுக்கு வர, அவன் மனைவி எச்சில் தட்டை எடுத்துக் கொண்டிருந்தாள்.

வலியோடு இது இன்னும் கூடுதல் வலியானது.

இந்த நேரத்தில் அவளுக்கு எந்த வேலையும் வைக்க கூடாது என்று தான் அவனும் விரும்புகிறான். நடப்பது அனைத்தும் அவனுக்கு எதிராக அல்லவா நடக்கிறது.

“இந்த தட்டை யார் உன் அப்பாவா எடுப்பார்?” என பரஞ்சோதி வெடுக்கென்று கேட்க, நிவேதிதா அவளை நிமிர்ந்து முறைத்தாலும், அவளோ அவளை கேவலமாக புழுவை போல் பார்த்தாள்.

அந்த பார்வை அவள் உயிரை குடித்தது.

“அக்னி வா.” என பரஞ்சோதி அழைத்த குரலில் அப்படியொரு கிண்டல்.

“யேய் அக்னி வந்துட்டான் பாரு. இந்த இடத்தை சுத்தம் பண்ணு.” என அவர் நிவேதிதா வை அதிகாரம் செய்ய அக்னி இரத்தம் கொதித்து.

“நீ போ நான் செய்கிறேன்.” என அக்னி கூறவும்,

“அண்ணா உன் பொண்டாட்டி தானே. இந்த வீட்டு மருமகள் தானே? இந்த வேலை எல்லாம் செய்யலாம். தப்பு இல்லை.” என அவன் வார்த்தைகளை அவனுக்கே திருப்பி விட்டான்.

அப்படி ஒரு திட்டத்தை அக்னியும் எதிர்பார்க்கவில்லை.

“என் பொண்டாட்டிக்கு பதில் நாம் கூட செய்யலாம் தம்பி.” என அழுத்தி கூற,

“மாமா பொம்பளை செய்ற வேலையை ஆம்பளைங்க செய்ய கூடாது. அது அசிங்கம். இதுவரை அப்பா இந்த மாதிரி பொட்டச்சி வேலை எதையும் செய்தது கிடையாது. நீங்களும் செய்ய கூடாது. எனக்கு பிடிக்கல.” என்றாள் பரஞ்சோதி.

“உனக்கு பிடிக்காததால் உன் வருங்கால புருஷன் கிட்ட சொல்லு. என் கிட்ட சொல்லாத. அமர் தெண்டாமா இருப்பான். என் பொண்டாட்டிக்கு உதவி செய்ததில் எனக்கு எந்த கேவலமும் கிடையாது. உனக்கு முதல்ல வேலை செய்ய தெரிந்ததா தானே.” என அவன் அவளை கத்திக் கொண்டிருக்க,

“எல்லாரும் ஒதுங்கி நில்லுங்க.” என நிவி கையில் இருந்த துடப்பத்தை பிடுங்கி அவரே சுத்தம் செய்தார்.

சுத்தம் செய்து முடித்தவர், தன் மகள் முன்பு வந்து நின்று, “நீ வைதேகியை மிஞ்சிட்ட.”
என்றதும் சூடாமணி முகம் சிவந்து போனது.

“அம்மா சூடாமணி உன் பொண்ணு. அவளுக்கு எதிராக பேசாத. இந்தா நிக்கிறவளை எப்படி அவளுக்கு பிடிக்கும்? சொல்லு? அவள் வயிற்றில் வளர்வது யார் பிள்ளை? நம்ம அக்னி பிள்ளையா? இல்லையே. எவன் கிட்டையோ வைத்துல வாங்கிகிட்டு தாலி ஒருத்தன் கிட்ட கட்டிகிட்டு வந்து வெட்கமே இல்லாமல் நிக்கறா. இவளை மாதிரி ஒரு அசிங்கத்தை எப்படி உன்னால யீத்துக்க முடியுது?” என சந்திரன் அங்கொரு பூகம்பத்தை உருவாக்கத் தொடங்கினார்.

இந்த பூகம்பம் உருப்பெற்று புயலாக மாறி சூறாவளி போல் அனைவரையும் ஆட்டி படைக்க போகிறது அல்லவா? இங்கு ஒரு குடும்பமும், இரு உள்ளங்களும் சிதறி சின்னா பின்னுமாக போகிறது அல்லவா?

“மாமா இத்தோட மரியாதை வாயை மூடுங்க.” என அக்னி அவர் சட்டையை பிடித்து விட, அங்கிருந்த அனைவருக்கும் பேரும் அதிர்ச்சி,

“அக்னி என்ன தப்பான பழக்கம்? விடு மாமா சட்டையை விடு. அவர் கால்ல விழுந்து மன்னிப்பு கேளு.” என சூடாமணி மகன் கையை பிடித்து விளக்க முயல. அவனோ எக்கு மரம் போல் நின்றிருந்தான்.

அவனை அசைக்க கூட முடியவில்லை.

அவன் கவனம் அவன் தாயிடம் இல்லை. அங்கு ஓரமாக கூனி குறுகி போய் நிற்கும் மனைவி மீதே இருந்தது.

அவளின் கண்ணீரு, அவள் உதட்டின் துடிப்பும் இன்னும் அவனை வெறிக் கொள்ள செய்தது.

“அண்ணா விடு. நீ வர வர மனுஷ தன்மையோடு நடந்துக்கல.” என அவனோ அண்ணனை பிடித்து இழுக்க,

அந்த இடமே போராட்ட பூமி போல் காணப்பட்டது

“விலகி போ.” என அவன் உதறியதில் பரஞ்சோதி, சூடாமணி, அமர் மூவரும் ஆளுக்கொரு மூளைக்கு சென்று விழுந்தனர்.

அமரன் இருந்த உயரத்துக்கு கையை மேல் தூக்கியபடி சுவரில் மோத, மேல மாட்டி இருந்த அவர்கள் குடும்ப புகைப்படம் அவன் தலையில் விழுந்து, கீழே பட்டென்று குப்புற விழுந்து அதிலிருந்த கண்ணாடி நொறுங்கி போனது.

சூடாமணி துடித்து போனார்.

கோபமாக எழுந்து நிவேதிதா அருகில் சென்றவர், அவள் கர்ப்பிணி என்பதையும் மறந்து “பளார்! பளார்!” என அவள் கன்னத்தில் மாறி மாறி அறைய, அவளுக்கு உதட்டில் இருந்து இரத்தம் வழிந்தது.

அக்னி அவன் மாமனை விட்டு விட்டு “அம்மா…..!” என கத்திக் கொண்டு ஓடியவன், அவளை பிடிக்கும் முன்னே அவன் நெஞ்சில் கை வைத்து தடுத்தவர், மகன் கன்னத்தில் முதல் முறை சப்பென்று அறைந்தார்.

அக்னிக்கு அந்த வலியை விட மனைவி அடி வாங்கி நிற்பது தான் வலித்தது.

சூடாமணி நிவேதிதா தலை முடியை கொத்தாக பிடித்து தர தரவென வெளியே இழுத்து வந்தார்.

“சூடாமணி… அம்மா….” என மகனும், தாயும் கத்திய எதையும் அவன் காதில் வாங்கவில்லை.

தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!