மண்டபத்தின் கூரையே அதிரும்படி ஒலித்த அந்தக் கணீர் குரலைக் கேட்டு, சண்டை போட்டுக்கொண்டிருந்த அத்தனை பேரும் ஒரு நொடி அப்படியே நின்றார்கள்!
கத்தியது வேறு யாருமல்ல… வைரக்கண்ணுவின் அப்பா பழனிச்சாமி!
வேட்டி கலைந்து, மேல் துண்டு நழுவ, கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிய நடுஹாலுக்கு வந்து நின்றார் பழனிச்சாமி. அவரது முகம் குற்ற உணர்ச்சியால் கருத்துப் போயிருந்தது.
“அப்பா! நீங்க எதுக்குப்பா இவங்களைத் தடுக்குறீங்க? நம்ம அண்ணனை ஊரை விட்டே ஓட வச்சவங்களைச் சும்மா விடக் கூடாதுப்பா!” என்று முத்து ஆவேசமாகக் கத்தினான்.
Advertisement
பழனிச்சாமி தன் மனைவியையும், பிள்ளைகளையும் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டார். “போதும்டா… சண்டையை நிறுத்துங்க! யாரும் பெரியசாமி ஐயாவையும், பார்வதி அம்மாவையும் ஒரு வார்த்தை கூடத் தப்பாப் பேசாதீங்க!”
இதைக் கேட்டதும் மீனாட்சிக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. தரையிலிருந்து எழுந்து வந்து, கணவரின் சட்டையைப் பிடித்து உலுக்கினார் மீனாட்சி!
பழனிச்சாமி தலை குனிந்தார். அவரது தொண்டை அடைத்தது. மண்டபத்தில் இருந்த அத்தனை பேர் முன்னிலையிலும், தன் மனைவியின் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தவித்தவர், உடைந்த குரலில் அந்த உண்மையை உடைத்தார்!
மண்டபமே நிசப்தமானது! காற்று கூட அசையாதது போல ஒரு அமைதி!
“எ… என்னங்க சொல்றீங்க?” மீனாட்சி நம்ப முடியாமல் கணவரின் அருகே வந்தார்.
Advertisement
ஆமா மீனாட்சி… தங்கமயிலுக்குக் கண்ணு தெரியாதுங்கிற விஷயம் எனக்கு ஏற்கனவே தெரியும்! தெரிஞ்சேதான் நான் இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிச்சேன்!”
அந்த வார்த்தைகளைக் கேட்டதும், மீனாட்சியின் தலையில் பெரிய இடி விழுந்தது போல அதிர்ச்சி! ஒரு நொடி மூச்சே நின்று போனவர், தன் நெஞ்சில் அடித்துக்கொண்டு கணவரின் மார்பில் படபடவென அடித்து அழத் தொடங்கினார்!
என்னங்க சொல்றீங்க? எல்லாருக்கும் தெரிஞ்சு, பெத்த தாயான எனக்கு மட்டும் தெரியாம போச்சே! புத்திகெட்ட மனுஷனா நீங்க?
உங்க பேச்சுக்கு மறுபேச்சு பேசாதவன் என் மகன்… ‘அப்பா எதைச் செஞ்சாலும் நம்ப நல்லதுக்குத்தான் செய்வாரு’ன்னு உங்களைத் தெய்வமா நம்புனானே… அவனைப் போய் இப்படி ஏமாத்திட்டீங்களே! உங்களுக்கு எப்படிங்க மனசு வந்துச்சு?”
மீனாட்சி கதறி அழுத சத்தத்தில், மண்டபத்தில் நின்றிருந்த அத்தனை பேரின் கண்களும் குளமாயின. தம்பிகள் முத்துவும் மாணிக்கமும் அதிர்ச்சியில் அப்படியே சிலையாக நின்றார்கள். மூன்று தங்கைகளும் “அப்பா… நீங்களாப்பா இப்படிப் பண்ணுனீங்க?” என்று வாயடைத்துப் போனார்கள்.
பழனிச்சாமி தன் மனைவியின் கைகளைப் பிடித்துக்கொண்டு, என்னை மன்னிசிட்டு மா மீனாட்சி என்று கலங்கிகொண்டே, நடந்ததை கூற ஆரம்பித்தார்.
“என்ன பண்ணச் சொல்ற மீனாட்சி? நம்ம குடும்பத்தோட நிலைமை உனக்குத் தெரியாதா? போன வருஷம் விவசாயத்துல நஷ்டம் வந்து, கடன் கொடுத்தவங்க எல்லாம் வாசல்ல வந்து நின்னு மானத்தை வாங்குனாங்க.
மூணு பொம்பளைப் பிள்ளைங்க வயசுக்கு வந்து வீட்டுல நிக்குறாங்க. முத்துவும் மாணிக்கமும் காலேஜ் படிப்பைப் பாதியில நிறுத்த வேண்டிய நிலைமை. என் மூத்த பையன் வைரக்கண்ணு ஒருத்தன் ராத்திரி பகலா வண்டி ஓட்டி உழைச்சு, எவ்வளவு கடனைத்தான் அடைப்பான்?
நம்ம குடும்பம் நடுத்தெருவுக்கு வர்ற நிலைமையில நின்னப்போ, பெரியசாமி அண்ணன்தான் என்கிட்ட வந்து இந்த விஷயத்தை பத்தி சொன்னாரு…”
பழனிச்சாமி பெரியசாமியைத் திரும்பிப் பார்த்துவிட்டு, கண்ணீரோடு தொடர்ந்தார்.
“‘இந்தா பாரு பழனிச்சாமி… என் பொண்ணுக்கு விபத்துல பார்வை போயிடுச்சு. ஊர் உலகத்துக்குத் தெரிஞ்சா, அவளை யாரும் கட்டிக்க மாட்டாங்க. உன் பையன் வைரக்கண்ணு மாதிரி ஒரு தங்கமான குணமுள்ள பையன் கையில என் பொண்ணை ஒப்படைச்சா, அவ ஆயுசுக்கும் சந்தோஷமா இருப்பா.
உன் குடும்பத்துல இருக்குற மொத்த கடனையும் நான் அடைக்கிறேன். உன் மூணு பொண்ணுங்க கல்யாணத்தையும் என் செலவுல முன்னாடி நின்னு நடத்தி வைக்கிறேன்.
உன் பிள்ளைங்க மேல் படிப்புக்கும், தொழிலுக்கும் எவ்வளவு பணம் வேணும்னாலும் நான் தர்றேன்… ஆனா, இந்த உண்மை உன் பையனுக்கோ, உன் குடும்பத்துக்கோ தெரியக் கூடாது.
தெரிஞ்சா உன் பையன் தன்மானத்துக்காக இந்தக் கல்யாணத்துக்கே சம்மதிக்க மாட்டான்’னு என் கையைப் பிடிச்சுக்கிட்டு அழுதாரு மீனாட்சி!”
மண்டபத்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் நெஞ்சை அடைத்தது. பார்வதியும் பெரியசாமியும் தலை குனிந்து கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தார்கள்.
“எனக்கு வேற வழி தெரியல மீனாட்சி! ஒரு பக்கம் என் மூத்த பையனோட வாழ்க்கை;
இன்னொரு பக்கம் என் மூணு பொண்ணுங்களோட எதிர்காலமும், நம்ம குடும்பத்தோட மானமும்! சுயநலமா யோசிச்சு, என் மூத்த பையனைப் பலி கொடுத்துட்டா, மத்த அஞ்சு பிள்ளைங்களும் கரையேறிடுவாங்கன்னு நினைச்சுத்தான்,
வீட்டுல யாருக்குமே தெரியாம, யாருக்கும் சம்மதம் இல்லாம, நானே இந்த முடிவை எடுத்தேன்!
ஆனா… என் தங்கமான புள்ளை என் மூஞ்சியிலேயே முழிக்க மாட்டேன்னு சொல்லிட்டுப் போயிட்டானே! என்னை மன்னிச்சுடு மீனாட்சி… என்னை மன்னிச்சுடு!”
என்று பழனிச்சாமி தன் மனைவியின் காலடியில் விழுந்து கதறினார்!
அந்தக் கண்ணீர் கடலுக்கு நடுவே… மண்டபத்தின் வாசலில், “பாம்… பாம்…” என்று ஒரு புத்தம் புதிய இருசக்கர வாகனத்தின் ஹாரன் சத்தம் உற்சாகமாக ஒலித்தது!
மஞ்சள் மாலையும், அதில் கட்டப்பட்டிருந்த சிறிய ரிப்பனும் காற்றில் அசைய, தன் உயிர் நண்பனுக்குத் திருமணப் பரிசாகக் கொடுப்பதற்காக, ஷோரூமில் இருந்து புதிதாக வாங்கிய பைக்கை ஓட்டிக்கொண்டு மண்டபத்து வாசலில் வந்து இறங்கினான் சுந்தர்!
“டேய் மாப்பிள்ளை! எங்கடா இருக்க? இங்க வந்து பாருடா, உனக்காக என்ன கொண்டு வந்திருக்கேன்னு!” என்று சத்தமாகச் சிரித்துக்கொண்டே மண்டபத்தின் உள்ளே அடியெடுத்து வைத்தான் சுந்தர்.
ஆனால், உள்ளே நுழைந்த அடுத்த நொடி, சுந்தரின் முகத்தில் இருந்த சிரிப்பு அப்படியே உறைந்து போனது!
மண்டபமே போர்க்களம் போல நாற்காலிகள் சிதறிக்கிடக்க, நடுஹாலில் பழனிச்சாமி தலையில் அடித்துக்கொண்டு அழுவதையும், மீனாட்சி கதறுவதையும், தம்பி தங்கச்சிகள் விம்மி அழுவதையும் பார்த்து சுந்தர் திகைத்துப் போய் நின்றான்.
எ… என்னப்பா ஆச்சு இங்க? எதுக்கு எல்லாரும் அழுதுக்கிட்டு இருக்கீங்க? மாப்பிள்ளை எங்க? டேய் வைரக்கண்ணு!” என்று சுந்தர் பதறிப்போய் கூட்டத்தை விலக்கிக்கொண்டு உள்ளே ஓடி வந்தான்.
சுந்தரை பார்த்த முத்து, ஓடி வந்து சுந்தரின் தோளைப் பிடித்துக்கொண்டு,
“என்னடா சொல்ற? ஏன்? என்ன நடந்துச்சு?” சுந்தர் நம்ப முடியாமல் கேட்க,
அதன்பிறகு, அங்கிருந்த சொந்தக்காரர்கள் மூலமாகவும், பழனிச்சாமி பேசிய வார்த்தைகள் மூலமாகவும், தங்கமயிலுவுக்குப் பார்வை இல்லை என்பதும், பெரியசாமியும் பழனிச்சாமியும் சேர்ந்து தன் நண்பனை ஏமாற்றி இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார்கள் என்பதும் சுந்தரின் காதுகளில் இடியாய் இறங்கியது!
அந்த உண்மையைக் கேட்டதும், சுந்தரின் கண்கள் நெருப்பாய் சிவந்தன! கைகள் நடுங்கின! தன் கையில் வைத்திருந்த புது பைக்கின் சாவியைத் தரையில் ஓங்கி வீசினான் சுந்தர்!
“டங்” என்ற சத்தத்தோடு அந்தச் சாவி தரையில் விழுந்து தெறித்தது.
நேராகப் பழனிச்சாமிக்கும், பெரியசாமிக்கும் முன்னால் வந்து நின்றான் சுந்தர். வயதில் பெரியவர்கள் என்ற மரியாதையையும் தாண்டி, தன் உயிர் நண்பனுக்கு நடந்த துரோகத்தைத் தாங்க முடியாத ஆத்திரம் அவனது குரலில் வெடித்தது!
பெரியசாமி ஐயா! பழனிச்சாமி அப்பா! நீங்களா இப்படிப் பண்ணுனீங்க? உங்களுக்குக் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா?” என்று சுந்தர் கேட்க,
பெரியசாமி தலை குனிந்து நிற்க, சுந்தர் பழனிச்சாமியைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டான்.
உங்களைக் கடவுள் மாதிரி நம்புன என் நண்பனோட முதுகுல இப்படிப் பச்சைத் துரோகம் பண்ணி குத்திட்டீங்களேப்பா!”
பழனிச்சாமி கண்ணீரோடு, “தம்பி சுந்தர்… என் நிலைமை…” என்று பேச ஆரம்பிக்க, சுந்தர் கையை உயர்த்தித் தடுத்தான்!
நிறுத்துங்கப்பா! எந்தக் கஷ்டமா இருந்தாலும், ஒரு வார்த்தை… ஒரே ஒரு வார்த்தை என் நண்பன்கிட்ட சொல்லியிருக்கலாம்ல? குடும்பத்துக்காகத் தன் உயிரையே கொடுக்கத் தயாரா இருக்குறவன் வைரக்கண்ணு!
நீங்க உண்மையைச் சொல்லியிருந்தா, சந்தோஷமா தாலி கட்டியிருப்பானேப்பா! இப்படி ஊர் முன்னாடி அவனை ஏமாளியா ஆக்கி, கடைசியில பெத்தவங்களையும், தம்பி தங்கச்சிங்களையும் பிரிஞ்சு அனாதை மாதிரி ஊரை விட்டே ஓட வச்சுட்டீங்களே!”
சுந்தர் திரும்பி, வாசலில் நின்றிருந்த புது பைக்கைப் பார்த்தான். அவனது கண்களில் கண்ணீர் வழிந்தது.
கல்யாணம் முடிஞ்சதும் என் நண்பன் தன் பொண்டாட்டியைப் பின்னாடி உட்கார வச்சுக்கிட்டு, ஊருக்குள்ள ராஜா மாதிரி வண்டி ஓட்டணும்னு ஆசை ஆசையா கடனை வாங்கிப் புது வண்டி வாங்கிட்டு வந்தேனே… இப்போ என் நண்பன் எங்க இருக்கான்னு கூடத் தெரியலையே!”
என்றவன், அவர்களின் மருபேச்சுக்கு காத்திராமல்,
“இங்க பாருங்க… உங்க பணமும் வேணாம், உங்க சொத்தும் வேணாம்! என் நண்பன் எங்க இருந்தாலும், அவனைத் தேடிக் கண்டுபிடிச்சு, அவனுக்குத் துணையா நான் நிப்பேன்!
அவன் சாகுற வரைக்கும் அவனைத் தனியா விட மாட்டேன்!” என்று ஆவேசமாகச் சபதம் எடுத்துவிட்டு, கீழே கிடந்த பைக் சாவியை எடுத்துக்கொண்டு, தன் நண்பனைத் தேடி மண்டபத்தை விட்டு வெளியே பாய்ந்தான் சுந்தர்!
அங்கே ஆஸ்பத்திரியில், கண்விழித்துத் தன் கையைப் பிடித்திருக்கும் கணவனை உணரும் தங்கமயிலு, தன் மனதிற்குள் புதைந்திருக்கும் அந்த விபத்தின் ரகசியத்தை உடைப்பாளா?
மயிலுவின் பார்வை பறிபோனதன் பின்னணி என்ன? நண்பன் சுந்தரும், அப்பாவின் தியாகமும் வைரக்கண்ணுவைத் தேடி வருமா? –